Friday, June 15, 2012

வேதனை இல்லாத ஐசுவரியம்

ஜான் டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது. அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போகும், ஏன், கண்களின மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே, அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது. எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர், ஆனால் அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமேத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்தபடியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள். அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்புபடையினர் அவரைக் காவல் காத்தனர். ஏனென்றால் யார், எப்போது, அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால். இப்படிபட்ட பணம் தேவைதானா?
.
.
அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் அவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட செய்திதாள்கள், அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை
வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப் போயிற்று. அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்..
.
ஒருநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, ஆலயக் கட்டுமானத்திற்கும், மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி, வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம், பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த  ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர், ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தார். அல்லேலூயா!

No comments:

Post a Comment