ஒரு முறை ஒரு பெரிய கம்பெனியின் வாசலில், அங்கு
வேலை செய்ய வருபவர்கள் காணும்படியாக ஒரு அறிவிப்பு தொங்க
விடப்பட்டிருந்தது. அதில், 'உங்கள் வளர்ச்சியை தடை செய்து
கொண்டிருந்த மனிதன் இன்று இறந்து விட்டான். அவனுக்கு
கீழே இருக்கும் அறையில் இறுதி கடன்கள் செலுத்தப்படும்.
அதில் அனைவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு
அழைக்கப்படுகிறீர்கள்' என்று அழைப்பு
விடப்பட்டிருந்தது. அதை பார்த்த அனைவருக்கும், தங்களோடு
வேலை பார்த்த ஒருவர் மரித்தது துயரமாக இருந்தாலும், யார்
தங்களுடைய வளர்ச்சியை தடை செய்தது என்றும், அவனை காண
வேண்டும் என்ற ஆச்சரியமும், வியப்பும் உடையவர்களாக
காத்திருந்தனர்.
கடைசியாக அந்த அறை திறக்கப்பட்டபோது, ஒவ்வொருவராக
அந்த சவப்பெட்டியை காண விரைந்தனர். சென்று பார்த்தபோது,
திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அவர்களால் ஒன்றுமே பேச
முடியவில்லை. அவர்களின் இருதயத்திற்குள் ஒரு தொடுதலை
உணர்ந்தார்கள்.
அந்த பெட்டியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பார்த்தபோது, அவர்களுடைய உருவமே அந்த பெட்டியில் தெரிந்தது. அதன் அருகில் 'உங்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த யாராலும் முடியாது, உங்களை தவிர' என்று எழுதப்பட்டிருந்தது

No comments:
Post a Comment