யூத சிறுமி ஒருத்தி, ஒரு கிறிஸ்தவ
கூட்டத்திற்குச் சென்று இரட்சிக்கப்பட்டாள். தான் பெற்ற இரட்சிப்பின்
சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தன் பெற்றோருக்கும் வந்து சொன்னாள்.
தகப்பனின் முகம்
கொடூரமானது. கோபத்தை கொப்பளித்து, கிறிஸ்துவை
மறுதலிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டாள். அவளோ தனது விசுவாசத்தில் உறுதியாயிருந்தாள். இதைக்கண்டு சகிக்க முடியாத
அவ்வைராக்கியமான யூத தகப்பன்
தன் மகளை இரத்தம் வடியுமளவிற்கு அடித்தான். அவள் ஆடைகள்
இரத்தத்தால் கறையானது. காயத்தின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் தன் தாயை அழைத்தாள். தான் அடிபட்டபோது அணிந்திருந்த
ஆடையையும் ஒரு கத்தரிக்கோலையும் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டாள். 'இது எதற்கு மகளே' என்று தாய்
கேட்டபோது, ' அம்மா என்
ஆடையில் இரத்த கறைபட்ட இடத்தை வெட்டிஎடுத்துக்கொண்டு அதை ஆண்டவரிடம் கொடுத்து, நானும்
உமக்காக இரத்தம்
சிந்தினேன்' என்பேன் என்று புன்னகையோடு சொல்லி தன் கண்களை
மூடினாள்.
தியாகமற்ற ஒரு சாதாரணமான கிறிஸ்தவ வாழ்வை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டாம். கிறிஸ்துவின் மேலுள்ள ன்பினால் நம்மை சுட்டெரிக்கப்படவும் ஒப்புக்கொடுக்கும் ஒரு அசாதாரண வாழ்வுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
தியாகமற்ற ஒரு சாதாரணமான கிறிஸ்தவ வாழ்வை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டாம். கிறிஸ்துவின் மேலுள்ள ன்பினால் நம்மை சுட்டெரிக்கப்படவும் ஒப்புக்கொடுக்கும் ஒரு அசாதாரண வாழ்வுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
No comments:
Post a Comment