பிரயன் கீத்
என்னும் 17 வயது வாலிபன் தான் எழுதிய சுயசரிதையாகிய
The Room என்ற
புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
.
'என்னுடைய தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில்
ஒரு அறையை பார்த்தேன். அந்த அறை முழுக்க சிறுசிறு
கோப்புக்களால் (Files) நிரப்பப்பட்டிருந்தது. அவற்றில் என்ன
எழுதப்பட்டிருக்கிறது என்று அறிய மிகவும் ஆவலும், அதே
சமயம் பயமும் என்னை நெருக்க, சரி படித்து தான் பார்ப்போம்
என்று ஒவ்வொரு கோப்பையும் திறந்து படிக்க ஆரம்பித்தேன்.
.
அவற்றை வாசிக்க ஆரம்பித்தபோது, என்னுடைய சிறுவயதில்
நடந்த மகிழ்ச்சியான காரியங்களும், சிலவற்றை
படிக்கும்போது, எனக்கு வெட்கமாகவும், அருவருப்பாயும்
இருந்தது. யாரும் என்னை பார்க்கிறார்களா என்று சுற்றும்
முற்றும் பார்த்து பின் தொடர்ந்து படிக்க
ஆரம்பித்தேன்.
.
அந்த கோப்புகளில் தலைப்புகளாக ' நான் ஏமாற்றிய என்
நண்பர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் கூறின பொய்கள்,
நான் ஆறுதல் படுத்தினவர்கள், என்னை சிரிக்க வைத்த
ஜோக்குகள், என் சகோதரனையும், சகோதரியையும் நான் கோபித்து
கொண்ட காரியங்கள், என் கோபத்தில் நான் செய்த காரியங்கள்,
என் பெற்றோருக்கு தெரியாமல் நான் எனக்குள்ளே முனகி கொண்ட
காரியங்கள்' போன்றவை இருந்ததை கண்டேன். இந்த 17
வருடங்களில் இத்தனை இத்தனை கோப்புகள் எப்படி
எழுதப்பட்டன?
.
'நான் இரசித்து கேட்ட பாடல்கள், என்னை
பாவத்திற்குள்ளாக்கின சிந்தனைகள்' என்ற கோப்புகளை நான்
பார்த்தபோது, இதை யாரும் பார்த்துவிடக்கூடாதே என்றும்,
இந்த அறைக்குள் யாரும் பிரவேசித்து விடக்கூடாதே என்று
மிகவும் பயத்துடன் நினைத்து கொண்டேன்.
.
கடைசியாக நான் பார்த்த கோப்பு, 'நான் சுவிசேஷத்தை
பகிர்ந்த கொண்ட நண்பர்கள்' என்ற கோப்பை பார்த்தபோது, அது
உபயோகிக்கப்படாததாக, மிகவும் புதிதாக இருப்பதை
பார்த்தபோது நான் வெட்கப்பட்டேன். மனம் நொந்து அழ
ஆரம்பித்தேன்' என்று எழுதியிருக்கிறார்.
.
இதை எழுதி இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு கார்
விபத்தில் பிரயன் மரித்து போனார்.
.
ஒருவேளை நம்முடைய வாழ்வின் கோப்புக்களை பார்க்க
நேரிட்டால், பிரயனின் கோப்புக்களை போலத்தான் இருக்குமோ
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Tuesday, July 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment