அமெரிக்காவின் நியூஜெர்சியில் 1270ஆம் ஆண்டு
பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி
விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர்
தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவரும் ஆவார்.
இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்து
விட்டார்கள். ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த
துயர சம்பவத்தை தாங்க முடியவில்லை. தான் அனாதை ஆவதற்கு
ஆண்டவர்தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து.
அப்புதியத்தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல்
வாழவும் தீர்மானித்தார்.
.
கலக்கம்
நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன்
எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி, ' உமக்காக காத்து
கொண்டிருக்கிறேன்' என்றான். 'என்னை உமக்கு தெரியுமா' என்று
கேட்டார் மரே. 'ஐயா, இயேசுவை பற்றி நான் சிறிது அறிந்து
வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு
சொல்லுவாள். எனது வீட்டில்தான் சபையாக கூடி ஆண்டவரை
ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தை பற்றி போதிக்கவோ,
பிரசங்கிக்வோ எங்களில் யாரும் கிடையாது. ஆகையால்
எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை
தாரும் என நீண்ட நாட்களாக ஜெபித்து வந்தோம். நேற்றிரவு
எங்கள் சபையில் ஒருவருடைய தரிசனத்தில், 'கப்பற்
சேதத்தில் தப்பி பிழைக்கும் குருவானவர் ஒருவரை
உங்களுக்கு ஊழியராக அனுப்பியுள்ளேன்' என இயேசுகிறிஸ்து
வெளிப்டுத்தினார். அதே போன்று நீங்கள் வந்துள்ளீர்கள்'
என்றான். இதை கேட்ட மரே அவர்கள் கர்தருடைய வழிநடத்துதலை
அறிந்து அங்கேயே தங்கி பணி செய்தார். தனக்கு வந்த பாடுகள்,
பிரச்சனைகளின் காரணத்தை இந்த தேவமனிதரால் அந்த
பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால்
அவற்றின் மத்தியிலும் தேவன் அவரை அழைத்த அழைப்பில்
உறுதியாயிருந்தார். ஏனெனில் 'தேவனுடைய கிருபைவரங்களும்,
அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே' -
(ரோமர் 11:29). மனிதன்தான் கர்த்தர் தன்னை அழைத்ததை
மறந்து அல்லது பாடுகள் போராட்டங்கள் வரும்போது அவரது
அழைப்பை அசட்டை பண்ணி விடுகிறான். ஆனால் தேவன் நம்மை
ஒருவிசை அழைத்தால் அந்த அழைப்பு என்றும் மாறாததே!
அல்லேலூயா!
No comments:
Post a Comment