Friday, July 20, 2012

நம்மில் யார் யார் யார்யாரோ?


நாம் எந்தப் பக்கம்?

ஒரு கடை வீதிக்கு செல்லும்போது நூறு ரூபாய் செலவு செய்வது எத்தனை எளிது
ஆனால் ஆலயத்திற்கு அந்த 100 ரூபாய் காணிக்கையாகப் போடுவது எத்தனை கடினம்
கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க உட்காரும்போது வேகமாக இரண்டு மணிநேரம் போவது எத்தனை எளிது
ஆனால் ஜெபிக்க ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பது எத்தனை கடினம்!

தன் தோழிகளுடனோ, தோழர்களுடனோ மணிக்கணக்கில் பேசுவது எத்தனை எளிது
ஆனால், ஜெபத்தில் இரண்டு வார்த்தை சொல்லி ஜெபிப்பது எத்தனை கடினம்
கிரிக்கெட்டில் ஒரு விளையாட்டு வீரன் ஒரு ஸிக்ஸர் அடித்தவுடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுவது எத்தனை எளிது
ஆனால் ஆலயத்தில் போதகர் கொஞ்ச நேரம் செய்தியை இழுத்தவுடன் அமர்ந்து கேட்பது எத்தனைக் கடினம்!
ஒரு சுவையான கதை புத்தகம் கிடைத்தவுடன் அதை படித்து முடித்துவிட்டுதான் மறு வேலை என்று தொடர்ந்து படிப்பது எத்தனை எளிது
ஆனால் வேதத்தில் ஒரு அதிகாரம் வாசிப்பது எத்தனை கடினம்!
பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர எவ்வளவு ஆசை
ஆனால் ஆலயத்தில் முதல் இடத்தில் உட்காருவது எத்தனை கடினம்!
தினம் செய்தித்தாளில் வரும் செய்திகளை நம்புவது எத்தனை எளிது
ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளை நம்புவது எத்தனை கடினம்!
கிறிஸ்துவை விசுவாசிக்காமல், எதையும் செய்யாமல் பரலோகத்திற்கு செல்ல விரும்புவது எத்தனை எளிது
ஆனால் அவரை விசுவாசிக்காமல், பரலோகம் செல்வது எத்தனை கடினம்
தேவன் மனிதனை இரட்சிப்பதற்கென்று வைத்திருக்கும் திட்டம் எத்தனை எளிது
ஆனால் அதை மனிதன் ஏற்றுக் கொள்வது எத்தனைக் கடினம்!
இலவசமாய் தேவன் தருகிற இரட்சிப்பு எத்தனை எளிது
ஆனால் அதை அறியாத மனிதன் அதற்காக ஓடிஓடி படுகிற பாடுகள்தான் எத்தனை கடினம்!
பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது எத்தனை எளிது
ஆனால், அதற்கென்று பெற்றோர் எடுத்துக்காட்டாய் வாழ்வது எத்தனைக் கடினம்

நம்மை எல்லாரும் மதிக்க வேண்டும், நம்மைக் குறித்து நன்றாக நினைக்க வேண்டும் என்று நினைப்பது எத்தனை எளிது
ஆனால், மற்றவர்களை மதித்து நடப்பதோ அவர்களைக் குறித்து நன்மையாக நினைப்பதோ எத்தனைக் கடினம்!

No comments:

Post a Comment