Willian Bordon |
வில்லியம் போர்டன் (William Borden) என்னும் மிஷனரி,
உயர்ந்த கல்வி கற்றவரும், பணக்காரருமாயிருந்தார். ஆனால்
அவர் அந்த உலக செல்வங்களையெல்லாம் துச்சமாக எண்ணி,
இஸ்லாமியர் மத்தியில் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக
எகிப்து நாட்டிற்கு சென்றார். அங்கு அவர் தனக்கென்று ஒரு
கார் கூட வாங்காமல் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம்
ஊழியத்திற்காக கொடுத்து, உற்சாகமாக அங்கு எகிப்தில்
ஊழியம் செய்து வந்தார். ஆனால், அங்கு இருந்த நான்கே
மாதங்களில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் Spinal card Meningitis
என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டு, தனது 25ஆவது வயதில்
அங்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவரது சடலம்
அங்கு எகிப்து நாட்டில் புதைக்கப்பட்டது.
.எகிப்தை மிகவும் சிறு வயதில் ஆண்ட King Tutankhamen சாகும் போது
King Tutankhamen |
அப்படியே மூன்று நான்கு தங்கத்தாலான குகைகளுக்குள் உள்ளே
வைக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் தங்கள் அரசன் அங்கு தன் வாழ்வை சந்தோஷமாய் கழிக்கும்படியாக அதை அவர்கள் அமைத்திருந்தனர். 1922ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter) என்பவர் அதைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் 3000 ஆண்டுகள் அது அப்படியே வைக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு பேருடைய கல்லறைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?
Howard Carter |
.
அரசன் டுட்டுவின் (King Tut) வாழ்க்கை சோகமானது. ஏனெனில் மிகவும்
தாமதமாக அவன் கண்டுக் கொண்டான், தான் கொண்டு வந்திருந்த எந்த
தங்கமும் செல்வமும் தன்னால் எங்கும் கொண்டு போக முடியாது, அதனால்
எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை. ஆனால் மற்றவரோ ‘
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்;
அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்
கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை’ என்ற சத்தியத்தை அறிந்தவராக தன்
பொக்கிஷத்தை பரலோத்தில் சேர்த்து வைத்தார். அதனால் தன் நித்தியத்தை
வெற்றியாக முடிவு செய்தவராக அவர் நித்தியநித்தியமாக வாழ்கிறார்.
No comments:
Post a Comment