ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில்
வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள்
தங்கள் பேச்சை கடவுளைப்
பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர்,
‘நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன்
கூட இல்லை. ஆனால்
எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே’
என்றுக் கூறினார்.
அதற்கு அந்த விவசாயி சொனனார், ‘நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள்
அடிபட்டு ஒன்று இறந்துப்
போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்’ என்றுக் கேட்டார். அதற்கு நண்பர்,
‘தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம்
எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!’ என்றுக்
கூறினார். அப்போது விவசாயி,
‘சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து
என்று’
என்றுக்
கூறினார்.
No comments:
Post a Comment