ஒரு வேடிக்கையான கதை
உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார்.
உருவாக்கி, அதனிடம் 'நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு
கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள்
தருகிறேன்' என்று கூறினார். அதற்கு காளை, 'என்னது, இத்தனை கஷ்டமான
வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம்,
வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது
வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்' என்றது. தேவனும் அதற்கு ஒத்து
கொண்டார்.
.
அடுத்ததாக அவர் ஒரு
குரங்கை உண்டாக்கினார். 'குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும்.
நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு
20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்' என்றார். அதற்கு குரங்கு,
'இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து
வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்' என்றது.
தேவனும் ஒத்து கொண்டார்.
அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி,
'நீ நாள் முழுவதும் வீட்டு
வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து
கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்'
என்றார். அதற்கு நாய் 'வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில்
இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு
பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி
தருகிறேன்' என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.
.
அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், 'நீ
ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம்
நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்'
என்றார். அதற்கு மனிதன், 'ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு
இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின
முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள்,
குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து
எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது
மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?' என்றான். தேவனும் ஒத்து
கொண்டார்.
.
அதனால் தான் நாம் முதல் 20
வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை
அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக
உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம்
குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து
வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து
கொண்டிருக்கிறோம்.
.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment