Monday, July 9, 2012

Leonardo Da Vinci வின் The Last Supper ஓவியம்

The Last Supper is a painting painted between 1496 to 1498 by Leonardo Da Vinci in the refectory of the Dominican convent of Santa Maria delle Grazie.
The Last Supper என்னும் சித்திரத்தை அல்லது ஓவியத்தை உண்டாக்கியவர் Leonardo Da Vinci என்னும் இத்தாலிய தலைச்சிறந்த ஓவியராவார். அந்த ஓவியத்தை அவர் செய்து முடிக்க 7 வருடங்களாயின. இயேசுகிறிஸ்துவும் அவரது 12 சீஷர்களும் உண்மையான மனிதர்களை மாடலாக வைத்து வரையப்பட்டனர்.
.
முதலாவது கிறிஸ்துவின் படத்தை வரைவதற்கு ஒரு மாடல் தேவைப்பட்டார்.
நூற்றுக்கணக்கான வாலிபர்கள் இதற்கென்று ஜாக்கிரதையாக தேடப்பட்டார்கள். அமைதியும் அன்பும் அழகும் நிறைந்த முகமாய், பாவத்தின் கறைகளினால் சேதப்பட்டிருக்காமல், ஒரு களங்கமில்லாத ஒரு முகத்தைத் தேடினார்கள். கடைசியில் அநேக வாரங்களுக்குப் பிறகு, 19 வயது நிரம்பிய ஒரு வாலிபனை கண்டுபிடித்தார்கள். அவனை வைத்து வின்சி, ஆறு மாதங்கள் விடாமல் தன் முழு ஆற்றலையும் செலுத்தி, இயேசுகிறிஸ்துவின் படத்தை வரைந்து முடித்தார்.
.
அதைத் தொடர்ந்து, அடுத்த ஆறு வருடங்கள், ஜாக்கிரதையாக மற்ற 11 சீஷர்களை தேர்ந்தெடுத்து, அவர்களையும் வரைந்து முடித்தார். அவர்களின் மத்தியில் ஒரு இடத்தை யூதாஸ்காரியோத்திற்காக விட்டு வைத்து, மற்ற சீஷர்களை வரைந்து முடித்தார். இப்போது யூதாஸ்காரியோத்தை வரைந்தால் அந்தப் படம் முடிவடைந்து விடும்.
.
இப்போது, யூதாஸ்காரியோத்தைத் தேடும் படலம் தொடங்கியது. டா வின்சி, இப்போது, மிகவும் கடுமையான, பாவமும் மாய்மாலமும் நிறைந்த, தன் அன்பு நண்பனை மறுதலித்து, காட்டிக் கொடுத்த, கொடூரமான முகத்திற்கான மாடலைத் தேடினார். அநேக வாரங்கள் தேடிய பிறகு, ரோம அரசின் பாதாள சிறையில் அவர் வேண்டியபடி, ஒரு மனிதன் கொலையும் குற்றங்களும் செய்து வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்கும்படி தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக செய்தி வந்தது.
.
உடனே அவர் அங்கு புறப்பட்டுச்சென்று அந்த மனிதனை, சூரிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அவன் முடிகள் சடை பிடித்ததாய் கொடுமை நிறைந்த முகத்தை அங்கு கண்டார். கடைசியில் அவருக்கு அவர் விரும்பியபடி யூதாஸ்காரியோத்திற்கு மாடலாக தகுதியான மனிதன் கிடைத்து, அந்த நாட்டு அரசனிடமிருந்து விசேஷித்த அனுமதிப் பெற்று, அந்த மனிதனை அவர் தன் அறைக்கு கொண்டு வந்து அவர் வரைய ஆரம்பித்தார்.
.
கடைசியாக, வரைந்து முடித்தப்பின் காவல்காரரிடம், ஷசரி வரைந்து முடித்தாயிற்று. இவனை மீண்டும் சிறைக்கு கொண்டு போங்கள்| என்று கூறினார்;. அப்படி அந்தக் காவலர் அவனை சங்கிலிகளால் பிணைத்து கொண்டுப் போக முற்படும்போது அந்த மனிதன் திமிறி, டா வின்சியிடம் ஓடி வந்து, ‘ஐயா என்னைத் தெரியவில்லையா?’ என்றுக் கேட்டான். அதற்கு டா வின்சி, ‘நான் உன்னைப் பார்த்ததே இல்லை, உன்னை அந்தச் சிறையில் தான் முதலில் பார்த்தேன்’ என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன் கண்களில் கண்ணீர் வழிய, “ஐயா என்னை நன்றாக பாருங்கள். நான்தான் நீங்கள் ஏழு வருடங்களுக்கு முன் கிறிஸ்துவுக்கு மாடலாக நின்ற மனிதன்” என்றுக் கூறினான். டா வின்சி அப்படியே வாயடைத்து நின்றார்.
.
ஏழு வருடங்களுக்கு முன் களங்கமில்லாத பால் வடியும் முகத்துடன், கிறிஸ்துவுக்கு மாடலாக நின்ற அதே மனிதன், பாவம் அவன் உள்ளத்தில் வந்ததால், கொலையும் குற்றமும் செய்து, உலக சரித்திரத்திலேயே மோசமான ஒரு மனிதனுக்கு ஒப்பாக மாறிவிட்டான். பாவம் வரும்போது எத்தனை மாறுதல்கள்! பாவம் நம் முகச்சாயலை மாத்திரமல்ல, நம் வாழ்வையே அழித்துப் போடுகிறது. பாவத்திற்கு எதிர்த்து போராடுவோம். பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். சாத்தானின் முகச் சாயலும், அவனுடைய எந்த காரியமும் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment