Friday, August 31, 2012

அதிசய​ வேதாகமம்

வேதததில் உள்ள மொத்த அதிகாரங்கள் -- 1189.
பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் -- 929.

புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் -- 260.
அதிக வ்சனங்கள் உள்ள அதிகாரம் -- சங்கீதம் 119.

குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் -- சங்கீதம் 117.
மத்திய அதிகாரம் -- சங்கீதம் 118.

சங்கீதம் 118 க்கு முன்புள்ள அதிகாரங்கள் -- 594 .
சங்கீதம் 118 க்கு பின்புள்ள அதிகாரங்கள்-- 594 .

மொத்த அதிகாரங்கள்  1188 (594+594)+1(மத்திய அதிகாரம்)=1189.
மத்திய வசனம் --  சங்கீதம் 118:8.

சங்கீதம் 118:8 -- கர்த்தர் மேல் பற்றுததலாய் இருப்பதே நலம்

சிறிய  வசனம்  யோவான் 11:35
பெரிய​ வசனம் --    எஸ்தர் 8:9.

வேதத்தில் உள்ள அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட வருடம் 1227 A.D

பெரிய​ வார்த்தை - Maher-shalal-hash-baz (ஏசாயா 8:1).

மற்றவர்களை குற்றவாளிகலாக பார்க்காதீர்கள்

ஒரு வாலிப பெண், ஒரு சபைக்கு சென்றபோது, கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தையால் தொடப்பட்டு இரட்சிக்கப்பட்டாள். அவளது கடந்த காலம் மிகவும் பாவம் நிறைந்ததாக இருந்தது. குடிப்பழக்கத்திலும், போதை மருந்து மற்றும் மற்ற கெட்டப்பழக்கங்களிலும் ஈடுபட்டிருந்தாள். ஆனால் கர்த்தரை ஏற்று கொண்டப்பின் அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, புதிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள்.
.
கர்த்தருக்குள் வளர்ந்து, அவருடைய ஊழியத்தையும் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அந்த சபையின் போதகரின் மகன் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார்கள். அதை கேள்விப்பட்ட சபையின் மக்கள், தங்கள் போதகருடைய மகனுக்கு கடந்த வாழ்வில் பலதரப்பட்ட பாவத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூடாது என்று தடை செய்ய ஆரம்பித்தனர். சபையில் பெரும் பிரச்சனை கிளம்பியது. அந்த பெண் தன்னால் சபையில் இத்தனை பிரச்சனை வருகிறதே என அழ ஆரம்பித்தாள். அப்போது போதகரின் மகனுக்கு தன் மனைவியாக வர இருக்கிற பெண்ணை அவர்கள் அனைவரும் தவறாக பேசுவதை கேட்க பொறுக்கவில்லை.
.
அந்த போதகரின் மகன் எழுந்து 'இப்போது நீங்கள் என் மனைவியாகப் போகும் பெண்ணை குறித்து சந்தேகப்படவில்லை, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை குறித்தே சந்தேகப்படுகிறீர்கள். நீங்கள் அவளுடைய பாவங்கள் முற்றிலும் கழுவப்பட்டது என்று விசுவாசிக்காமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை குறித்தே சந்தேகப்படுகிறீர்களே, பின் நீங்கள் எப்படி உங்கள் பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் மன்னிக்கப்பட்டதென்று விசுவாசிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதை கேட்ட சபை மக்களின் இருதயம் குத்தப்பட்டது. தங்கள் தவறை உணர்ந்தார்கள்.
.
ஆம், தேவன் நம் பாவங்களை மன்னித்திருக்க, மன்னிக்கப்பட்ட மற்றொரு பாவியை தங்களை விட மோசமானவள், அவள் சாதாரண வாழ்வு வாழ தகுதி அற்றவள் என்று நாம் நியாயந்தீர்க்க நமக்கு என்ன நியாயம் இருக்கிறது? மற்றவர்களை நியாயந்தீர்க்க நாம் யார்? கொடிய பாவிகளாயிருந்த நம்மையும் தேவன் மன்னித்தாரே!
.
ஒரு வேளை, பாவம் செய்தவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறி கொண்டு போய் கொண்டிருக்கலாம், ஆனால் குறை சொல்கிறவர்கள் குறை சொல்லி சொல்லியே இன்னும் மன்னிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகவே தீர்த்துக் கொண்டு, கர்த்தருடைய பார்வையில் தாங்களே குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்!
.
ஒரு ஊழியக்காரர் தன் கூட்டத்தை முடித்த பிறகு, அவரிடம் ஜெபிப்பதற்கு ஏராளமான பேர் ஒரு கியூவில் நின்று ஜெபிக்க வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆவியானவர் அந்த ஊழியரிடம், பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறித்து, 'இந்த பெண் இந்த பாவம் செய்து விட்டு உன்னிடம் ஜெபிக்க வந்து கொண்டிருக்கிறாள்' என்று உணர்த்தினார். ஊழியர் தொடர்ந்து ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்து கொண்டே இருந்தார். கடைசியில் அந்த பெண்ணின் முறை வந்தபோது, ஆவியானவர் அவரிடம், 'இந்த பெண்ணை அவளுடைய பாவத்தை குறித்து ஒன்றும் சொல்லாதே' என்று எச்சரித்தாராம். அப்படியே அவரும் ஒன்றும் சொல்லாமல் சாதாரணமாக ஜெபித்து அனுப்பி விட்டாராம். பின் அவர் தேவனிடத்தில் ' ஏன் ஆண்டவரே, அந்த பெண் வரும்போது என்னிடம் இந்த பாவம் செய்தாள் என்று கூறினீர், ஆனால் ஜெபிக்க வரும்போதோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று ஏன் கூறினீர்' என்று கேட்டாராம். அதற்கு ஆவியானவர், 'அவள் வரிசையில் நிற்கும்போது பாவத்தோடு நின்று கொண்டிருந்தாள். ஆனால் வரிசையில் வரும்போது, என்னிடம் தன் பாவத்தை மன்னித்து விடும்படி ஜெபித்து, மன்றாடினாள். நானும் அவள் பாவத்தை மன்னித்து விட்டேன், பின் நீ அதை குறித்து அவளிடம் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்?' என்று கேட்டாராம். இது உண்மையில் நடந்த சம்பவம்.

நன்றி மறந்த இருதயம்

வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
.
அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.
.
இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதைஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா?

Sunday, August 26, 2012

மரண பரியந்தம் உண்மையாய் ஊழியம் செய்

அமெரிக்காவில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து ஐரோப்பாவிற்கு தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்தவர் ஜேம்ஸ் ஹில்லர். தன் இனம், பெற்றோர், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் விட்டு மிஷனெரியாக ஐரோப்பாவிற்கு புறப்பட்ட போது அவருக்கு வயது 20தான். ஐரோப்பாவிலே இயேசுகிறிஸ்துவை பற்றி கூறினாலே பயங்கர சித்திரவதைதான். இருப்பினும் தேவன் மேல் அவர் வைத்த பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளியது. அவருடைய சுவிசேஷப்பணி ஆரம்பமானது.
.
எப்பக்கமும் எதிர்ப்பு. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஒருநாள் எதிர்ப்பாளர்கள் வந்து அவரது இரு கால்களையும் துண்டித்தனர். இனி நீ எங்கும் போய் இயேசுவை குறித்து சொல்லக்கூடாது என்று எச்சரித்து சென்றனர். ஜேம்ஸோ மனம் தளராமல் கைப்பிரதிகளை எழுதி வெளியிட்டார். கைப்பிரதி ஊழியம் அநேகரது உள்ளத்தை மாற்றியது. இதையும் அறிந்த கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் எந்தவித இரக்கமும் இல்லாமல், அவரது இரு கைகளையும் துண்டித்தனர்.
.
எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போவதில்லை என்ற விசுவாசத்தில் உறுதியாய் நின்றார் ஜேம்ஸ். தனது இரண்டு கால்களையும், கைகளையும் இழந்த நிலையிலும், அவரது வைராக்கியம் மிகுந்த பிரசங்கத்தின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டனர். இதனால் கொதிப்படைந்த கிறிஸ்தவ எதிர்பபாளர்கள் இவனை என்ன செய்யலாம் என யோசித்து, அவரது நாவினை துண்டித்து விட்டனர். அவரால் இப்போது பேசவும் முடியாதபடி இருந்த அவரை ஒரு பொது இடத்தில் காட்சிப் பொருளாக வைத்து, கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களுக்கு எச்சரிக்கையாக வைத்தனர்.
.
அநேகர் அவரது கை கால்கள் நாவு இல்லாத உடலை பார்த்தே இரட்சிக்கப்பட்டனர். அநேக இடங்களில் இரகசிய ஜெபக்கூட்டஙகள் ஆரம்பிக்கப்பட்டன. நாட்கள் நகர்ந்தன. ஜேம்ஸ் ஐரோப்பா தேசத்தில் இரத்த சாட்சியாய் மரித்தார். அப்பொழுது அவருக்கு வயது 30 தான். அவரது அவயவங்களற்ற ஜீவனற்ற உடல் இருந்த இடத்தில் ஒரு சிறிய வசன அட்டையிருந்தது. அதை எதிர்ப்பாளர்களின் தலைவன் கண்டெடுத்த வாசித்தான். அதில், 'நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூறுகிறோனோ, அவ்வளவு குறைவாய் உங்களால் அன்பு கூறப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காக செலவு பண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்' (2கொரிந்தியர் 12:15) என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது, அதை வாசித்த எதிர்ப்பாளன் தொடப்பட்டான். மனமுடைந்தான், இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.
.
பிரியமானவர்களே, நமக்கு ஈவாக கிடைத்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை யாருக்காக அர்ப்பணிக்க போகிறோம்? ஒரு மரத்தை வெட்டிப்போட்டு, பின்னர் நான்கு நாட்கள் கழித்து அதை பார்த்தால் அது மீண்டும் பிழைத்து சிறு சிறு தளிர்கள் அதில் வளர்ந்திருக்கும். ஆனால் மனிதர்களாகிய நமக்கோ ஒரே வாழ்வுதான். நம்மை படைத்த தேவனுக்கு நாம் என்ன கொடுக்க போகிறோம், நம்மையா? நம் பொருளையா? நம் நேரத்தையா? நம் வாழ்க்கையையா?

Saturday, August 25, 2012

நம் தேவனுக்கென்று சரித்திரம் படைப்போம் - Telemachus


 
நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த டெலிமாக்கஸ் (Telemachus) என்னும் கிறிஸ்தவர் தனது கிராமத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழித்துஅமைதியான வாழ்க்கையை கர்த்தருக்குள் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தேவன் அவரிடம் நீ ரோமுக்கு போ என்று சொல்வதை கேட்டார். அந்த சத்தத்திற்கு செவிகொடுத்துரோமிற்கு நடந்தே செல்ல ஆரம்பித்தார். அநேக நாட்கள் நடந்தபிறகு அவர் அந்த நகரத்தை சென்றடைந்தார். அந்நேரத்தில் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  ஒரு பெரும் கூட்டம் கொலோசியம் என்னும் ரோம நாட்டின் பெரிய அரங்கத்திற்குள் சென்றது. அவர்களை தொடர்ந்துஅவரும் அவர்களுடன் உள்ளே சென்றார். அந்நாட்டின் மன்னரின் முன் கிளாடியேட்டர்ஸ் (Gladiators)  என்பவர்கள் மரிக்கபோகும் நாங்கள் உமக்கு வந்தனம் செய்கிறோம்;  என்று கூறுவதை பார்த்தார். அந்த கிளாடியேட்டர்ஸ் என்பவர்கள்கொலைகுற்றம் செய்தவர்கள்,  அடிமைகள். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு மற்றவர் மடியுமட்டும் போராடுவார்கள். சில நேரங்களில் சிங்கம் புலிகளோடும் போராட வேண்டி இருக்கும். அவர்கள் அப்படி போராட ஆரம்பிப்பதை கண்ட டெலிமாக்கஸ் 'இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள்'  என்று கூச்சலிட்டு சொன்னார்.
 
அவர்களோ நிறுத்தாமல்விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர்அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி,  இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த கூட்டத்தினர்,  அது ஏதோ ஜோக்  (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
 
ஆனால் அது உண்மை என்று அறிந்த போது,  அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன்அவரை தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில் இரத்தம் பாய சரிந்தார். முற்றவர்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின் நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே மரித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில்ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
 
கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின்,  அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம் எப்படி நடந்தது,  ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!

நம் தேவனுக்கென்று சரித்திரம் படைப்போம் - Telemachus

 
நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த டெலிமாக்கஸ் (Telemachus) என்னும் கிறிஸ்தவர் தனது கிராமத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழித்துஅமைதியான வாழ்க்கையை கர்த்தருக்குள் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தேவன் அவரிடம் நீ ரோமுக்கு போ என்று சொல்வதை கேட்டார். அந்த சத்தத்திற்கு செவிகொடுத்துரோமிற்கு நடந்தே செல்ல ஆரம்பித்தார். அநேக நாட்கள் நடந்தபிறகு அவர் அந்த நகரத்தை சென்றடைந்தார். அந்நேரத்தில் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  ஒரு பெரும் கூட்டம் கொலோசியம் என்னும் ரோம நாட்டின் பெரிய அரங்கத்திற்குள் சென்றது. அவர்களை தொடர்ந்துஅவரும் அவர்களுடன் உள்ளே சென்றார். அந்நாட்டின் மன்னரின் முன் கிளாடியேட்டர்ஸ் (Gladiators)  என்பவர்கள் மரிக்கபோகும் நாங்கள் உமக்கு வந்தனம் செய்கிறோம் என்று கூறுவதை பார்த்தார். அந்த கிளாடியேட்டர்ஸ் என்பவர்கள்கொலைகுற்றம் செய்தவர்கள் அடிமைகள். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு மற்றவர் மடியுமட்டும் போராடுவார்கள். சில நேரங்களில் சிங்கம் புலிகளோடும் போராட வேண்டி இருக்கும். அவர்கள் அப்படி போராட ஆரம்பிப்பதை கண்ட டெலிமாக்கஸ் 'இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு சொன்னார்.
 
அவர்களோ நிறுத்தாமல்விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர்அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த கூட்டத்தினர் அது ஏதோ ஜோக்  (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
 
ஆனால் அது உண்மை என்று அறிந்த போது அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன்அவரை தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில் இரத்தம் பாய சரிந்தார். முற்றவர்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின் நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே மரித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில்ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
 
கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின் அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம் எப்படி நடந்தது ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!

தியாக ஊழியம் - Doug Nichols

டோக் நிக்கோலஸ் (Doug Nichols) என்பவர் இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தார். அவர் இந்திய மொழியை கற்க ஆரம்பித்த போது அவருக்கு காச நோய் (Tuberculosis)  பிடித்தது. அதனால் அவர் ஒரு டிபி சானிடோரியத்தில் இருக்க நேர்ந்தது. அந்த இடம் மிகவும் அழுக்காகவும் அசுத்தமாகவும் இருந்தது. அநேக வியாதியஸ்தர்களும் இருந்தனர். அந்த இடத்தில் அந்த நோயாளிகளுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு அவர்களுக்கு சுவிசேஷ கைபிரதிகளை கொடுக்க ஆரம்பித்தார்.

அவர் அப்படி கொடுக்க ஆரம்பித்த போது அதை ஒருவரும் வாங்க முன்வரவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அதையும் யாரும் வாங்கவில்லை. அவர்களுகடைய மொழி தெரியாததால் அவர்களோடு பேசவும் முடியவில்லை. ஆகவே மிகவும் சோர்ந்து போனார். அவருக்கு இருந்த வியாதியினால் அவர் வெளியே செல்லவும் முடியாத நிலை உள்ளே இருப்பவர்களுக்கும் அவர் பிரயோஜனமற்றவராய் வாழ்நாளை கடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் இரவு இரண்டு மணியளவில் அவர் டிபி வியாதியினால் இரும ஆரம்பித்து தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். அப்போது அவர் தூரத்தில் ஒரு வயதான மனிதர் தன் படுக்கையில் இருந்து எழுந்தரிக்க முயற்சித்து முடியாமல் தவித்து பிறகு தன் படுக்கையில் மீண்டும் விழுந்து அழுதபடியே படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். அந்த மனிதர் மிகவும் தளர்ந்து பெலவீனமாய் இருந்தபடியால் அவரால் எழுந்து பாத்ரூமுக்கு போக  முடியவில்லை. அதனால் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து அதனால் அங்கிருந்த நர்சுகள் அவரிடம் முகம் சுழித்து மற்ற நோயாளிகள் அதனால் வரும் துர் நாறற்த்தினால் அவரை இழிவாக பேசுவதையும் நிக்கோலஸ் பார்த்தார்.

அடுத்த நாள் மீண்டும் அவர் இரவில் இரும ஆரம்பித்தபோதுஅந்த வயதான மனிதர் மீண்டும் எழுந்தரிக்க ஆரம்பித்து முடியாமல் தேம்ப ஆரம்பித்தார். அப்போது நிக்கோலஸ் தன் படுக்கையை விட்டு எழுந்து அந்த வயதான மனிதரிடம் போய் அவரை ஒரு குழந்தையை போல் தூக்கி பாத்ரூமிற்கு கொண்டு சென்றுஅவர் சிறுநீர் கழிக்க உதவி செய்து மீண்டும் அவரை படுக்கையில் கொண்டு வந்து கிடத்தினார். அப்போது அந்த வயதான மனிதர்அவரை பிடித்து முத்தமிட்டு நன்றி என்று சொல்வதை கண்டார்.


அடுத்த நாள் காலையில் மற்ற நோயாளிகள் அவரிடம் வந்துஅவர் கொடுத்த கைபிரதிகளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தனர். அவரிடம் தேவனை குறித்த விளக்கங்களை கேட்க ஆரம்பித்தனர். அங்கிருந்த டாக்டர்களும் நர்சுகளும் நோயாளிகளும் அவர் அங்கு இருந்த நாட்களில் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டனர்.

அவர் செய்த ஒரே ஒரு காரியம்அந்த வயதான மனிதரை பாத்ரூமிற்கு கொண்டுசென்றது தான். அதை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால்அதை யாரும் செய்ய முன்வரவில்லை. ஏனென்றால் அன்பு அந்த இடத்தில் இல்லை.

அவர் அங்கு தன் கைபிரதிகளை கொடுத்து செய்ய முடியாதததைபெரிய பிரசங்கத்தை கொண்டு செய்ய முடியாதததை தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து செய்ய முடியாததை ஒரு சிறிய தியாகமாக செய்த காரியம் செய்ய வைத்தது. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்துஅவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

This article by Alan Smith, Senior Pastor of the Helen Street Church of Christ in Fayetteville, North Carolina. You can visit his site at http://www.TFTD-online.com 

கவலைப்படாதிருங்கள்

மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில்  வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை. அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களில் கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிறபடியால், எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து,  ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள்  போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள். யாராவது இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவு இந்த மரங்களை எக்கச்சக்கமாக நட்டு, பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள்  நாடுகளை அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு லெவல் இல்லாமல் வளர்ந்து, ஒரு புதரை போல காட்சியளிக்கும். வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிய வாய்ப்புண்டு. நம் நாட்டிலும், செடிகளை ஒழுங்காக கத்திரித்து  விடாதபடியால், கன்னாபின்னாவென்று வளர்ந்து பார்க்கவே அலங்கோலமாய் காணப்படுகிற இடங்கள் அநேகம் உண்டு. செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகள் சரியாக வளராதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக்கொளகின்றன.

கவலையும் அதைப்போலத்தான், அந்த களைகளைப் போல, அதை   ஆரம்பத்திலேயே கிள்ளி  எறியாவிட்டால், அது வேர்படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக்கூடியதாக உள்ளது

Thursday, August 23, 2012

வினோத பழக்கம்


தெற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் வாழும் பழங்குடியினருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்த முடியாவிட்டால், சூரியன் உதிக்குமுன்னர் அந்த தீவில் உள்ள மரத்தை வெட்டுபவர்கள் அந்த மரத்தின் மேல் ஏறி கொண்டு, திடீரென்று உரத்த சத்தத்தில் ஒரே நேரத்தில் கத்துவார்களாம். அப்படி தொடர்ந்து 30 நாள் கத்துவார்களாம். அப்படி கத்தும்போது, அந்த மரம் அப்படியே செத்து போய் கீழே விழுந்து விடுமாம்.

Sunday, August 19, 2012

தேவனை நம்புங்கள், பிரட்சணை சிறியதாகிவிடும்.

ஒருமுன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன் நாட்டு மக்களிடம் சிக்கலான கேள்விகளை கேட்டு, அதற்கு பதிலளிக்கும் திறமைசாலிகளுக்கு பொன்னும், பொருளும் பரிசளித்து வந்தார். ஒருமுறை தன் சிங்காசனத்திற்கு முன் ஒரு கோடு ஒன்றை வரைந்து அதை தொடவோ, அழிக்கவோ செய்யாமல் அக்கோட்டை சிறியதாக்க வேண்டும் என்றார். கேட்டவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர்.
.
அவ்வரசனிடம் ஒரு மதிநுட்பம் நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். அவர்
அரசனிடம் வந்து, 'என்னால் இக்கோட்டை அழிக்காமல் சிறியதாக்க முடியும்' என்றார். எல்லோரும் மிக ஆச்சரியமாய் இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
அவர் ஒரு எழுதுகோலை எடுத்து அந்த கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தார். பின்பு அரசனை நோக்கி, 'அரசே, நான் வரைந்த பெரிய கோட்டினால் உங்கள் கோடு சிறியதாகி விட்டது பார்த்தீர்களா?' என்றார். அரசர் அவரது மதிநுட்பத்தை பார்த்து வியந்து பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார்.

காலத்தை பிரயோஞனப்படித்திக்கொள்

ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவைர தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, நீங்கள் செய்த பரிசோதைனகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா? ' என்று கேட்டார். அப்போது நோயாளி, ' முதலில் எனக்கு கெட்ட செய்தியை  சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், ' நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயா, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, இதை விட மோசமான செய்தி, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், ' இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.


Friday, August 17, 2012

விசுவாசம் சோதிக்கப்படும்


 ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பானென்றும், அந்த காரியம் எப்படி தேவேனாடு சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள  போவதாக சொல்லி போனார்கள்.

அதன்படி, ஒரு வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பைத அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்து கொண்டிருந்தேபாது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து, சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான் நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம் மாறும்' என்று கூறினார்.

அப்போது அந்த சகோதரி 'அவர் உட்கார்ந்து’ என்ற இடத்தை நினைவு கூர்ந்து, அந்த தட்டானிடம், “நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில் காட்ட வேண்டுமா”  என்று கேட்டதற்கு, அவர், “ஆம், அந்த வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வைர நான் இங்கு உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன் மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற் சேதமாகி போய் விடும்” என்று கூறினார்.

அதை கேட்ட அந்த சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், ‘நீர் எப்படி இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவர்? ’ என்று கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில் தெரியும்' என்று கூறினார்.

சிறிய​ ஊழியம், ஆச்சரிய அதிசயம் Dr,John Scudder

ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதைல உண்டாக்கியது. ஒன்பது மிஷெனரிகைள உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அைத படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா?
 
ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பைர பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தைலப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்' கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வையே இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். அவர் தனது ஏழு மகன்கைளயும் இரண்டு மகள்கைளயும் மிஷெனரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரதுகுடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கேள! ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமைனைய நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடரம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவைர மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர்.

தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளைகளை 'நீங்கள் உலகெமங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடைமயுள்ளது. ஊழியம் என்றதும் நம் நினைவிற்கு வருவது மேடை ஏறி மைக் பிடித்து பிரசங்கிப்பது மட்டும் தான். இதை நினைத்ததும் நாம் 'ஜயா நான் மிகவும் பயந்தாங்கோளி நமககெல்லாம் இந்த ஊழியம் செய்ய முடியாது' என முடிவு கட்டி, இது முழு நேர ஊழியர்களின் வேலை என ஒதுங்கி விடுகிறோம். நாம் தேவனுக்காக நம்மால் இயன்ற ஏதாவெதான்றை செய்யும்படி அழைக்கபட்டிருக்கிறோம். வேதம் சொல்கிறது, 'நீ செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதே முழு பலத்தோடு செய்' என்று. ஆம் நாம் செய்யும் காரியம் சிறியேதா, பெரியேதா, பிரம்மாண்டமானேதா, அற்பமானதோ எதுவாயினும் அதை முழு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்ய வேண்டும். அதையே தேவன் எதிர்ப்பார்க்கிறார்

Wednesday, August 15, 2012

என்னங்க, குடும்பத்துல பிரட்சனை கண்டிப்பா வரும்

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து
உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய
ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள்
இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து
இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - (பிலிப்பியர் 4:6-7).

ஒரு முறை ஒரு இராஜா தன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அதன்படி, ஒரு அமைதியான, அந்த படத்தை பார்த்தவுடன் சமாதானம் வரத்தக்கதாக அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து காட்ட வேண்டும். அநேகர் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இறுதியில் இரண்டு ஓவியங்கள் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டது.
.
அதில் ஒரு ஓவியத்தில் அமைதியான ஒரு ஏரி, அதை சுற்றிலும் அழகான மரங்கள், அதற்கு பின்னால் நீல நிற மலைகள், அவை கண்ணாடியை போல அந்த ஏரியில் பிரதிபலித்தன. மேலே நீல நிற வானில் தவழ்ந்து செல்லும் மேகங்கள் என மிகவும் அருமையாக, அழகாக அந்த சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. யார் அதை பார்த்தாலும், இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று சொல்லும்படியாக இருந்தது.
.
மற்ற ஓவியம், இதிலும் மலைகள் இருந்தன, ஆனால் அவை கரடுமுரடாக,
ஒழுங்காக இல்லாமல் இருந்தது. வானத்திலிருந்து மழை கொட்டி கொண்டிருந்தது. மின்னல்கள் வானத்தை கிழித்து கொண்டிருந்தன.
மலையின் நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி, அதில் நீர் ஆக்ரோஷமாக பாய்ந்து
கொண்டிருந்தது. இந்த படத்தில் அமைதி என்று சொல்வதற்கு இடமே
இல்லை. அதை ராஜா பார்த்து கொண்டிருந்தபோது, அந்த நீர்வீழ்ச்சியின்
பக்கத்தில் ஒரு பாறையின் இடுக்கில் ஒரு பறவை தன் கூட்டை
கட்டியிருந்தது. அந்த நீர்வீழ்ச்சியின் ஓசைகளுக்கும், பாய்ச்சலுக்கும் நடுவில்
அந்த கூட்டை கட்டியிருந்த பறவை தன் குஞ்சுகளுடன் அமைதியாக
அமர்ந்திருந்தது.
.
இராஜா இரண்டாவது படத்தையே முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தார். ஏன்
தெரியுமா, அத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில் அந்த பறவை தன்
கூட்டை கட்டி, அங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறதே அதுவே
உண்மையான அமைதியாகும் என முடிவெடுத்து அந்த படத்திற்கே முதல்
பரிசை கொடுத்தார்.

Tuesday, August 14, 2012

வேடிக்கையான கதை - தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள். அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான். அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான். கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை. ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான். மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
.
அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது. அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள். அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள். மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

Monday, August 13, 2012

தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்

ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை
செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.
.
ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன், ‘கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.
.
ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம், ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்றுக் கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்துக்
குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து
மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள்
தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய
வைத்தது.

Martin Luthur - சரித்திரம் ஆரம்பித்த கதை


ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர், அந்த அழகிய குரல், இக்கடும் குளிரில் பாடினால் கெட்டுவிடுமே எனறு எண்ணி, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.

சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் ஏழ்மையானவரென்றும், தனக்கு உடையோ உணவோ கொடுக்க இயலாதவர் என்றும் கூறினான். இதைக் கேட்ட அத்தம்பதியினரின் இருதயம் நெகிழ்ந்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் தூங்கிய பிறகு, அவர்கள், தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்த போது, தங்கள் முடிவை தெரிவித்த போது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்து, ஒரு பாதிரியும் ஆக்கினார்கள். அநதப் பாதிரி வேறு யாருமில்லை, புரட்சி செய்து புரோட்டஸ்டண்ட் என்னும் பிரிவை உண்டாக்கி, உலகத்தை கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

குயவனுடைய கரத்தில் உள்ள களிமண்

ஒரு கணவனும் மனைவியும் ஒரு அழகான கலைபொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார்கள். அங்கு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது காப்பி குடிக்கும் கிண்ணங்கள்; அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கிண்ணம் மிகவும் இவர்களை கவர்ந்தது. அதை வாங்கும் நோக்கத்துடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் கிண்ணம் அவர்களோடு பேச ஆரம்பித்தது.

இப்போது நீங்கள் பார்க்கிற நான் ஆரம்பத்தில் இதுப் போல இல்லை. நான் வெறும் சிவப்பான களிமண்ணாகத்தான் இருந்தேன். என்னை உருவாக்கின குயவனார் என்னை உருட்டி திரும்ப திரும்ப அடித்து என்னை மெதுவாக்கினார். நான் அவரிடம்போதும் என்னை விட்டு விடுங்கள், என்று கெஞ்சினேன். அவர் இன்னும் முடியவில்லை என்றார். பிறகு என்னை திரிகையிலே போட்டு சுற்ற ஆரம்பித்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நான் என்னை விட்டுவிடும் என்று கதறினேன். ஆனால் அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின் தனக்கு பிடித்தமான ஒரு பாத்திரமாக என்னை உருவாக்கி, என்னை நெருப்பில் இட்டார். எனக்கு தாங்க முடியாத உஷ்ணம், என்னை வெளியே எடுத்துப் போடும் என்று கதறினேன். அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின்னர் என்னை எடுத்து குளிர்ச்சியாக்கும்படி வெளியே வைத்தார். அப்பா! என்ன ஒரு விடுதலை! நான் குளிர்ந்து கொண்டிருக்கும்போதே என்மேல் படங்களை வரைய ஆரம்பித்தார். பின் நான் மூச்சு விடுவதற்குள் திரும்பவும் என்னை நெருப்பில் இட்டு காய வைத்தார். அது முன் இருந்ததுப் போல அல்ல, இரண்டு மடங்கு சூடு அதிகம். நான் அவரிடம் கெஞ்சினேன், கதறினேன், அழுதேன் இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என்று நான் என் நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், அவர் என்னை வெளியே கொண்டு வந்து ஆற வைத்தார். இன்னும் என்னச் செய்யப்போகிறாரோ என்று மிகவும் அஞ்சியிருந்த நேரத்தில், என்னிடம் ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டி, ‘பார் உன்னைப் பார்என்றார். நான் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை நானா அது என்று. அத்தனை அழகாய் மாறிவிட்டேன். பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார்: ‘நான் உன்னை தட்டி உருட்ட ஆரம்பித்தபோது உனக்கு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் நான் உன்னை அப்படியே விட்டிருந்தால் நீ காய்ந்துப் போயிருப்பாய். உன்னை திருகியில் வைத்து சுற்றும்போது உனக்கு தலை சுற்றியிருக்கும் ஆனால் நான் அதை செய்யாதிருந்தால் நீ உதிர்ந்திருப்பாய். உன்னை நெருப்பில்இட்டு காய வைக்காதிருந்திருநதால் நீ காய்ந்து கடினமாகாதிருந்திருப்பாய். இத்தனைக்கும் பிறகு நீ இப்போது நான் விரும்பும் பாத்திரமாக வனைந்து உருவாக்கப்படடிருக்கிறாய்என்றுக் கூறினார் என்றது”.

from : http://tamilgospel.blogspot.com

ஊழியத்தில் மன்னிக்க​ கற்றுக்கொள்ளுங்கள்

கோரி டென் பூம் என்பவர் தனது தந்தை சகோதரி பெட்ஸியுடன் ஹாலந்தில் வசித்து  வந்தார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஹிட்லர் ஐரோப்பிய யூதர்களை துன்றுத்த
ஆரம்பித்தான். ஆயிரமாயிரமான யூதர்களை நச்சுவாயு கூண்டுக்குள் அடைத்து கொலை செய்தான்.
பூம் அவர்களின் குடும்பம் அப்படித் தவித்த யூதர்களை தங்கள் வீட்டிற்குள்  அடைக்கலம் கொடுத்து,  ஆதரித்தனர்.

இதைக் கேள்வியுற்ற ஹிட்லரின் ராணுவம் மூவரையும் கைது செய்து, 'கான்சன்ட்ரஷன் கேம்ப்’  என்னும் கேம்பில் வைத்து  வாதை செய்தனர்.  அவர்களது தந்தை சிறிது காலத்தில் மரித்தார்.  அதற்கு பின்பு இளவயதான கோரியும் அவரது சகோரியான பெட்ஸியும் அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. காவலர்கள் முன்பு நிர்வாணமாய நடக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அடிகளும் உதைகளும், உணவு தராமல் சித்தரவதை செய்யப்பட்டனர். இவற்றை தாங்கமுடியாமல்  பெட்ஸி மரித்தார்கள். கோரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தபடியினால், எல்லாவற்றையும் பொறுமையாக சகித்து,  நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்.

உலகப் போர் முடிந்து,  கோரி விடுதலையாக்கப்பட்டார். அதன்பின் அவர்  ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் சென்று கிறிஸ்துவின் அன்பையும்,  தான் நாசிக்  கேம்பில் பட்ட பாடுகளை விவரித்து, கிறிஸ்துவின் அன்பினால் தான் நிலைநிற்பதாகவும் கூறினார்.  மியூனிச் என்னுமிடத்தில் நடந்தக் கூட்டத்தில், அவர் இயேசுகிறிஸ்துவின் அனபையும் அவரது மனனிப்பையும், நமது பாவங்களை
கடலின் ஆழத்தில் எறிந்து பின் அதை அவர்  நிளைப்பதில்லை என்றும், தான் பட்ட  கஷ்டங்களையும் மனதுருக கூறிமுடித்து,  நாமும் மன்னிக்கிறவாகளாக இருக்க வேண்டும் என்றும்,  அதுவே சந்தோஷமான வாழ்விற்கு வழி என்றும் கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைவரின்  கண்களிலும் கண்ணீர். அநேகர் அவரை சூழ்ந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று  அவர் ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்தார்.

அந்த முகம் அவருக்குத் தெரிந்த முகமாயிருந்தது. உடனே ஞாபகம் வந்தது. நாசிக் கேம்பில் தானும்
தன் சகோதரியும்பட்ட பாடுகளும், தன் சகோதரியை எவ்வித இரக்கமுமின்றி கொடூரமாகக் கொன்ற கொலைப்பாதகன் இவன்தான் என்ற நினைவுகளும் எழுந்தன. இப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அம்மனிதன், நீங்கள் இன்றுக் கொடுத்த மன்னிப்பின் செய்திக்காக நன்றி. நீங்கள் நாசிக் கேம்பைப் பற்றிச் சொன்னீர்கள். நான்  அதில் ஒரு தலைவனாக் இருந்தேன். இப்போதோ  நான் ஒரு கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்து என் பாவங்களை மன்னித்து விட்டார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?’  என்றுக் கேட்டான்.

கோரி அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள். ஆயிரமாயிரமான நினைவுகள்  அவர்களது உள்ளத்தில் பளிச்சிட்டது. தன் தகப்பன் மற்றும் தன் சகோதரியின் மரணத்திற்கு காரணமான மனிதன், தான் பட்ட
எண்ணற்ற இன்னல்களுக்கு காரணமான மனிதன் தன் முன்னே நிற்கிறான், என்கிற வெறுப்பும் அருவெறுப்பும் அவர் மனதில் தோன்றியது.

சற்று நேரத்திற்கு முன்புதான் மன்னிப்பைக்  குறித்துக் பேசினார்கள். இப்போது மன்னிக்க  முடியாத நிலை. அமைதியாக தேவனிடம் தனக்கு வேண்டிய சத்துவத்தையும் அந்த மனிதனை
மன்னிக்கும் மன வலிமையையும் தாரும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபிக்கும்போதே ஆவியானவர் அவர்களில் கிரியை செய்ய  ஆரம்பித்தார். அந்த நாசிக் காவலனின் கரங்களைப்-
பிடித்து, “சகோதரனே உங்களை  என் முழு இதயத்தோடும் மன்னிக்கிறேன்”  என்று கண்கலங்க கூறினார்க்ள.

எப்பேற்ப்பட்ட மனிதனையும்  மன்னிக்க தேவன் கிருபை மிகுந்தவராயிருக்கிறார். ஆனால் மனிதர்களாகிய நாம்  மன்னிக்க மிகுந்த  தயக்கம் காட்டுகிறோம.; கோரியைப் போன்று தன்னை இந்த அளவு பாதித்த மனிதனை மன்னிக்க முடியுமென்றால், நாம் மன்னிக்க எந்த மனிதனுடைய தப்பிதங்களும் தடையாக இருக்க முடியாது.

மனுஷரை பிடிக்கிறவர்கள்

ஒரு மீன் பிடிக்க சொல்லி கொடுக்கும் ஆசிரியர், சாம் என்னும் வாலிபன்  மாத்திரம் அதிக மீன்களை பிடித்து வருவதையும், மற்ற மாணவர்கள் நான்கு அல்லது ஐந்து மீன்களை மாத்திரம் பிடிப்பதையும்
கண்டார்.

ஓவ்வொரு முறையும் சாம் மாத்திரம் படகு நிறைய புதிதாய் பிடிக்கப்பட்ட  மீன்களை பிடித்து வருவதை கண்ட அந்த ஆசிரியர், அவனிடம் சென்று, 'நீ மாத்திரம் எப்படி அத்தனை மீன்களை  பிடிக்கிறாய்? '  என்று கேட்டார். அப்போது சாம் நாளை தன்னோடு வந்து பார்க்குமாறு கேட்டு கொண்டான்.  அடுத்த நாள் காலையில் அந்த ஆசிரியர் அந்த மாணவனோடு படகில் சேர்ந்து கொண்டார். நடு ஏரியில்
படகை நிறுத்தியவுடன், அந்த ஆசிரியர் நன்கு சாய்ந்து  உட்கார்ந்து கொண்டு சாம் என்ன செய்ய போகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தார்.

சாம் ஒரு எளிய முறையை கையாள ஆரம்பித்தான்.  தன்னிடம் இருந்த ஒரு டைனமெட் குச்சியை எடுத்து, பற்ற வைத்து காற்றில் வீசினான்.  அது எடுத்து  வீசியவுடன், அதனுடைய விளைவு அந்த ஏரியில்
மோதி உடனே அநேக மீன்கள் செத்து ஏரியில் மிதந்தன. உடனே சாம், தன்னுடைய வலையை வீசி அந்த
மீன்களை பிடித்து, படகில் கொட்டினான். இதை கண்ட ஆசிரியருக்கு அதிர்ச்;சியாக இருந்தது. ' நீ எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்?  உன்னை போலீசில் பிடித்து  கொடுக்க போகிறேன்'  என்று கத்த ஆரம்பித்தார்.

சாமோ, திரும்பவும் ஒரு டைனமெட் குச்சியை எடுத்து,  பற்ற வைத்து, காற்றில் எறிந்து விட்டு, மெதுவாக
ஆசிரியரிடம்,  ' நீங்கள் நாள் முழுக்க உட்கார்ந்து குறை சொல்லி கொண்டு இருக்க போகிறீர்களா? அல்லது படகு நிறைய மீன்களை பிடிக்க போகிறீர்களா?'  என்று கேட்டான்.

கிறிஸ்தவர்களுக்குள் இந்த இரண்டு காரியங்களே காணப்படுகிறது. நாள் முழுக்க அந்த ஊழியக்காரர்
இப்படி, அந்த ஊழியக்காரர் அப்படி என்று குறை சொல்லி  கொண்டு உட்கார்ந்திருக்கிறோமா? அல்லது இயேசு கிறிஸ்து சொன்னது போல மனுஷரை பிடிக்கிறவர்களாக  இருக்க போகிறோமா?