Monday, August 13, 2012

மனுஷரை பிடிக்கிறவர்கள்

ஒரு மீன் பிடிக்க சொல்லி கொடுக்கும் ஆசிரியர், சாம் என்னும் வாலிபன்  மாத்திரம் அதிக மீன்களை பிடித்து வருவதையும், மற்ற மாணவர்கள் நான்கு அல்லது ஐந்து மீன்களை மாத்திரம் பிடிப்பதையும்
கண்டார்.

ஓவ்வொரு முறையும் சாம் மாத்திரம் படகு நிறைய புதிதாய் பிடிக்கப்பட்ட  மீன்களை பிடித்து வருவதை கண்ட அந்த ஆசிரியர், அவனிடம் சென்று, 'நீ மாத்திரம் எப்படி அத்தனை மீன்களை  பிடிக்கிறாய்? '  என்று கேட்டார். அப்போது சாம் நாளை தன்னோடு வந்து பார்க்குமாறு கேட்டு கொண்டான்.  அடுத்த நாள் காலையில் அந்த ஆசிரியர் அந்த மாணவனோடு படகில் சேர்ந்து கொண்டார். நடு ஏரியில்
படகை நிறுத்தியவுடன், அந்த ஆசிரியர் நன்கு சாய்ந்து  உட்கார்ந்து கொண்டு சாம் என்ன செய்ய போகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தார்.

சாம் ஒரு எளிய முறையை கையாள ஆரம்பித்தான்.  தன்னிடம் இருந்த ஒரு டைனமெட் குச்சியை எடுத்து, பற்ற வைத்து காற்றில் வீசினான்.  அது எடுத்து  வீசியவுடன், அதனுடைய விளைவு அந்த ஏரியில்
மோதி உடனே அநேக மீன்கள் செத்து ஏரியில் மிதந்தன. உடனே சாம், தன்னுடைய வலையை வீசி அந்த
மீன்களை பிடித்து, படகில் கொட்டினான். இதை கண்ட ஆசிரியருக்கு அதிர்ச்;சியாக இருந்தது. ' நீ எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்?  உன்னை போலீசில் பிடித்து  கொடுக்க போகிறேன்'  என்று கத்த ஆரம்பித்தார்.

சாமோ, திரும்பவும் ஒரு டைனமெட் குச்சியை எடுத்து,  பற்ற வைத்து, காற்றில் எறிந்து விட்டு, மெதுவாக
ஆசிரியரிடம்,  ' நீங்கள் நாள் முழுக்க உட்கார்ந்து குறை சொல்லி கொண்டு இருக்க போகிறீர்களா? அல்லது படகு நிறைய மீன்களை பிடிக்க போகிறீர்களா?'  என்று கேட்டான்.

கிறிஸ்தவர்களுக்குள் இந்த இரண்டு காரியங்களே காணப்படுகிறது. நாள் முழுக்க அந்த ஊழியக்காரர்
இப்படி, அந்த ஊழியக்காரர் அப்படி என்று குறை சொல்லி  கொண்டு உட்கார்ந்திருக்கிறோமா? அல்லது இயேசு கிறிஸ்து சொன்னது போல மனுஷரை பிடிக்கிறவர்களாக  இருக்க போகிறோமா? 

No comments:

Post a Comment