ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதைல உண்டாக்கியது. ஒன்பது மிஷெனரிகைள உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அைத படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா?
ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது
நண்பைர பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தைலப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்' கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வையே இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். அவர் தனது ஏழு மகன்கைளயும் இரண்டு மகள்கைளயும் மிஷெனரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரதுகுடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கேள! ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமைனைய நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடரம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவைர மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர்.
தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளைகளை 'நீங்கள் உலகெமங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடைமயுள்ளது. ஊழியம் என்றதும் நம் நினைவிற்கு வருவது மேடை ஏறி மைக் பிடித்து பிரசங்கிப்பது மட்டும் தான். இதை நினைத்ததும் நாம் 'ஜயா நான் மிகவும் பயந்தாங்கோளி நமககெல்லாம் இந்த ஊழியம் செய்ய முடியாது' என முடிவு கட்டி, இது முழு நேர ஊழியர்களின் வேலை என ஒதுங்கி விடுகிறோம். நாம் தேவனுக்காக நம்மால் இயன்ற ஏதாவெதான்றை செய்யும்படி அழைக்கபட்டிருக்கிறோம். வேதம் சொல்கிறது, 'நீ செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதே முழு பலத்தோடு செய்' என்று. ஆம் நாம் செய்யும் காரியம் சிறியேதா, பெரியேதா, பிரம்மாண்டமானேதா, அற்பமானதோ எதுவாயினும் அதை முழு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்ய வேண்டும். அதையே தேவன் எதிர்ப்பார்க்கிறார்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment