Monday, August 13, 2012

தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்

ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை
செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.
.
ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன், ‘கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.
.
ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம், ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்றுக் கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்துக்
குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து
மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள்
தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய
வைத்தது.

No comments:

Post a Comment