எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Thursday, August 2, 2012
பாக்கஸ் - முழங்காலில் நிற்க ஆரம்பிப்போம்
ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான
பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார்.
மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில்
நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை
மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர்
சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய
நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, 'டாக்டர் சொன்னதை
என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்' என்றார். இன்னும் அரைமணி
நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று
டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ்,
'அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து
முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி
நிமிடங்களில இந்த உலகிற்காக ஜெபிப்பதில் செலவிட
விரும்புகிறேன்' என்றார். ஒரு சில நிமிடங்களில்
முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல
வருடங்களாக தான கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர்
பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல்
கடைபிடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment