மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில்
வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை. அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களில் கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிறபடியால், எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து, ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள்
போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள். யாராவது இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவு இந்த மரங்களை எக்கச்சக்கமாக நட்டு, பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள்
நாடுகளை அழகுபடுத்தியிருக்கிறார்கள்.
சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு லெவல் இல்லாமல் வளர்ந்து, ஒரு புதரை போல காட்சியளிக்கும். வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிய வாய்ப்புண்டு. நம் நாட்டிலும், செடிகளை ஒழுங்காக கத்திரித்து
விடாதபடியால், கன்னாபின்னாவென்று வளர்ந்து பார்க்கவே அலங்கோலமாய் காணப்படுகிற இடங்கள் அநேகம் உண்டு. செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகள் சரியாக வளராதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக்கொளகின்றன.
கவலையும் அதைப்போலத்தான், அந்த களைகளைப் போல, அதை ஆரம்பத்திலேயே கிள்ளி
எறியாவிட்டால், அது வேர்படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக்கூடியதாக உள்ளது
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment