வியட்நாமில் நடந்த
போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு
சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை
காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால்
அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய
பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு
கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும்
அழைத்திருந்தார்கள்.
.
அந்த
கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக
வந்ததுமன்றி, நன்கு
குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு
பொருட்களை அநாயசமாக
சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக
ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு
முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக
குடும்பத்திற்கு ஒரு நன்றியைக்
கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே,
அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத
மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று
கதறினார்கள்.
.
இன்று
நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்?
தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதைஒரு
முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா?
No comments:
Post a Comment