Saturday, August 25, 2012

தியாக ஊழியம் - Doug Nichols

டோக் நிக்கோலஸ் (Doug Nichols) என்பவர் இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தார். அவர் இந்திய மொழியை கற்க ஆரம்பித்த போது அவருக்கு காச நோய் (Tuberculosis)  பிடித்தது. அதனால் அவர் ஒரு டிபி சானிடோரியத்தில் இருக்க நேர்ந்தது. அந்த இடம் மிகவும் அழுக்காகவும் அசுத்தமாகவும் இருந்தது. அநேக வியாதியஸ்தர்களும் இருந்தனர். அந்த இடத்தில் அந்த நோயாளிகளுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு அவர்களுக்கு சுவிசேஷ கைபிரதிகளை கொடுக்க ஆரம்பித்தார்.

அவர் அப்படி கொடுக்க ஆரம்பித்த போது அதை ஒருவரும் வாங்க முன்வரவில்லை. புத்தகங்களை கொடுத்தால் அதையும் யாரும் வாங்கவில்லை. அவர்களுகடைய மொழி தெரியாததால் அவர்களோடு பேசவும் முடியவில்லை. ஆகவே மிகவும் சோர்ந்து போனார். அவருக்கு இருந்த வியாதியினால் அவர் வெளியே செல்லவும் முடியாத நிலை உள்ளே இருப்பவர்களுக்கும் அவர் பிரயோஜனமற்றவராய் வாழ்நாளை கடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் இரவு இரண்டு மணியளவில் அவர் டிபி வியாதியினால் இரும ஆரம்பித்து தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். அப்போது அவர் தூரத்தில் ஒரு வயதான மனிதர் தன் படுக்கையில் இருந்து எழுந்தரிக்க முயற்சித்து முடியாமல் தவித்து பிறகு தன் படுக்கையில் மீண்டும் விழுந்து அழுதபடியே படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். அந்த மனிதர் மிகவும் தளர்ந்து பெலவீனமாய் இருந்தபடியால் அவரால் எழுந்து பாத்ரூமுக்கு போக  முடியவில்லை. அதனால் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து அதனால் அங்கிருந்த நர்சுகள் அவரிடம் முகம் சுழித்து மற்ற நோயாளிகள் அதனால் வரும் துர் நாறற்த்தினால் அவரை இழிவாக பேசுவதையும் நிக்கோலஸ் பார்த்தார்.

அடுத்த நாள் மீண்டும் அவர் இரவில் இரும ஆரம்பித்தபோதுஅந்த வயதான மனிதர் மீண்டும் எழுந்தரிக்க ஆரம்பித்து முடியாமல் தேம்ப ஆரம்பித்தார். அப்போது நிக்கோலஸ் தன் படுக்கையை விட்டு எழுந்து அந்த வயதான மனிதரிடம் போய் அவரை ஒரு குழந்தையை போல் தூக்கி பாத்ரூமிற்கு கொண்டு சென்றுஅவர் சிறுநீர் கழிக்க உதவி செய்து மீண்டும் அவரை படுக்கையில் கொண்டு வந்து கிடத்தினார். அப்போது அந்த வயதான மனிதர்அவரை பிடித்து முத்தமிட்டு நன்றி என்று சொல்வதை கண்டார்.


அடுத்த நாள் காலையில் மற்ற நோயாளிகள் அவரிடம் வந்துஅவர் கொடுத்த கைபிரதிகளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தனர். அவரிடம் தேவனை குறித்த விளக்கங்களை கேட்க ஆரம்பித்தனர். அங்கிருந்த டாக்டர்களும் நர்சுகளும் நோயாளிகளும் அவர் அங்கு இருந்த நாட்களில் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டனர்.

அவர் செய்த ஒரே ஒரு காரியம்அந்த வயதான மனிதரை பாத்ரூமிற்கு கொண்டுசென்றது தான். அதை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால்அதை யாரும் செய்ய முன்வரவில்லை. ஏனென்றால் அன்பு அந்த இடத்தில் இல்லை.

அவர் அங்கு தன் கைபிரதிகளை கொடுத்து செய்ய முடியாதததைபெரிய பிரசங்கத்தை கொண்டு செய்ய முடியாதததை தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து செய்ய முடியாததை ஒரு சிறிய தியாகமாக செய்த காரியம் செய்ய வைத்தது. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்துஅவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

This article by Alan Smith, Senior Pastor of the Helen Street Church of Christ in Fayetteville, North Carolina. You can visit his site at http://www.TFTD-online.com 

No comments:

Post a Comment