Sunday, September 30, 2012

ஊழியத்தில் பயம் வேண்டாம்

மத்திய ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளுக்குள் இன்னும் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வந்து, இங்குள்ளவர்களை கொல்வதும், சித்திரவதை செய்வதும் சகஜமான செயல்களாகி விட்டன. ஆனால் கர்த்தரின் மக்கள் ஜெபிக்கும்போது, தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இந்த நாள் வரை பாதுகாக்கிற தேவனாக இருக்கிறார்.
.
ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று எண்ணத்தோடு வந்தனர். அந்த இரவு நேரத்தில் ஒரு இளம் போதகரின் வீட்டிற்கு கைகளில் இயந்திர துப்பாக்கிகளுடன், உள்ளே நுழைந்து, போதகரும் அவருடைய குடும்பமும் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் துப்பாக்கியை காட்டி, கொல்லபோவதாக மிரட்டினார்கள். அப்போது அந்த போதகர், 'எங்களை கொல்லுங்கள், ஆனால் அதற்கு முன் நாங்கள் குடும்பமாக ஜெபிக்க எங்களை அனுமதியுங்கள்' என்று கேட்டு கொண்டார். சரி, எப்படியும் இவர்கள் மரிக்கத்தானே போகிறார்கள் என்று அந்த வீரர்களும் அனுமதித்தனர்.
.
அதன்படி, அந்த போதகரின் குடும்பத்தினர் ஒருவரோடொருவர் கைகளை கோர்த்து கொண்டு, முழங்கால்படியிட்டு, தேவனிடம் இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும் என்று ஜெபிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அப்படி ஊக்கத்தோடு ஜெபித்து எழுந்த போது, அந்த கொடியவர்கள் யாரையும் காணவில்லை, அவர்கள் வீட்டிலிருந்து மட்டுமல்ல, அந்த கிராமம் முழுவதிலுமிருந்து அவர்கள் ஓடி விட்டிருந்தனர். போதகரின் குடும்பத்திற்கும்  மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்றுமட்டும் அறிந்திருந்தார்கள்.
.
சில மாதங்கள் கழித்து, ஒரு பொதுவான இடத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டுட்சி மற்றும் ஹிட்டு என்னும் இரண்டு இடங்களிலிருந்தும் ஜனங்கள் வந்திருந்தார்கள். அதில் அந்த இளம் போதகர், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை விவரித்து, அதிசயமாக தன் குடும்பமும், தன் கிராமத்திலிருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தாங்கள் யாருக்கும் இதுவரை என்ன நடந்தது என்று புரியவில்லை என்றும், கர்த்தர் ஏதோ பெரிய காரியத்தை செய்தார் என்று மாத்திரம் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.
.
அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மனிதன் எழுந்து நின்று, 'உமக்கு தெரியுமா? அந்த இரவில் உம்மையும், உம்முடைய கிராமத்தில் உள்ளவர்களையும் கொல்வதற்காக வந்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் வீட்டில் நுழைந்து உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் சுடுவதற்காக இயந்திர துப்பாக்கியை குறிவைத்தேன். அப்போது நீங்கள் ஜெபிக்க அனுமதி கேட்டீர்கள். நாங்களும் அனுமதித்தோம், நீங்க்ள ஜெபித்து கொண்டிருந்தபோது, திடீரென்று உங்கள் அனைவரையும் சுற்றி ஒரு அக்கினி சுவர் எழும்பியது. அதிலிருந்து எழும்பிய ஜீவாலைகளினால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் காண முடியவில்லை. அந்த அக்கினியின் வெப்பத்தினால், நீங்களும் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள் என்று நாங்கள் தீர்மானித்து, உங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினோம். வெளியே ஓடி வந்து பார்த்த போது, உங்கள் வீடு முழுவதும் அக்கினியால் சூழ்ந்திருந்ததே ஒழிய எரிந்து போகவில்லை.
அந்த அதிசயத்தை பார்த்த நாங்கள், பயந்து, உங்கள் கிராமத்தை விட்டே வெளியே ஓடி வந்து விட்டோம். பின் நான் அதை குறித்து சிந்தித்த போது, அந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல, அது உங்கள் தேவனிடமிருந்து உங்களை காப்பதற்காக அனுப்பப்பட்ட அக்கினி! அன்றையதினம் உங்களை காப்பாற்றின உங்கள் தேவனை பற்றி அறிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன். நான் இந்த போர், கொலை கொள்ளை யாவற்றிலிருமிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். உங்களை காத்த அந்த வல்லமையுள்ள தேவனை குறித்து அறிந்து அவருக்கு என்னை கொடுக்க வந்துள்ளேன்' என்று கூறினான்.

பாடுவேன் பரவசமாகுவேன்

ஒரு தாய் எப்போதும் ‘எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே’ என்னும் பாடலை பாடி கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு கேட்டு, அவர்களுடைய சிறிய மகன் அந்தப் பாட்டின் வார்த்தைகளை மனப்பாடமாய் கற்று வைத்திருந்தான். அந்த தாயார் அவனது சிறு வயதிலேயே மரித்து போனதால், அவன் வாலிபனானபோது, அவன் வேண்டாத நண்பர்களோடு சேர்ந்து, தன் வாழ்வை கெடுத்து, குடி போதை மருந்துகள் போன்ற கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி, உயிர் போகும் நிலையில் ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு மருந்துக் கொடுக்க வந்த ஒரு செவிலி பெண், அவனது படுக்கையை ஒழுங்குப்படுத்தி கொண்டே, அந்தப் பாடலை மெதுவாக பாடிக்கொண்டு தன் வேலையை செய்துக்கொண்டிருந்தாள். அதை கேட்ட அந்த வாலிபனுக்கு, பழைய நினைவுகள் வரத்தொடங்கின. தன் தாயின் ஞாபகம் வந்து, அவன் கண்களில் கணணீர் வரத்தொடங்கியது. அந்த நர்சிடம் ‘
தயவுசெய்து, அந்தப் பாடலை எனக்காக பாடுங்கள், என் தாயார் என் சிறுவயதில் பாடுவார்கள்’ என்று கேட்டு கொண்டான். அதன்படி அந்த நர்ஸ் பாட ஆரம்பித்த போது, அந்த வரிகள் அந்த வாலிபனின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. அவனுடைய கல்லான இருதயம் உடைய ஆரம்பித்தது. அடுத்த நாள் அவனை பார்க்க வந்த போதகரிடம் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவன் இயேசுவை ஏற்றுக் கொண்டவனாக அந்நாளில்தானே மரித்துப் போனான். நாம் சும்மா இருக்கும் நேரங்களில் பாடல்களை முணுமுணுக்கும்போது அவை ஒருவேளை மற்றவர்களை தொடலாம்!
.
இசை என்பது, மனிதனின் இருதயத்தை தொடக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் மைக்கேல் ஜாக்சன் மரித்த போது, அந்த கலைஞனுடைய இசையில் எத்தனை பேர் அடிமையாய் இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம்.
.
வசனம் சொல்கிறது, ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்’ என்று. நம் இருதயத்தில் எப்போதும் கர்த்தரை துதிக்கிற கீதம் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சங்கீதம் 118:15

Wednesday, September 26, 2012

ஆத்தும ஆதாயம்


ஆகாதென்று தள்ளின கல்லே..........

1968-ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ்சர்லாந்து நாட்டின் கைகெடிகாரங்கள் (Wrist Watches) மிகவும் புகழ் பெற்றவையாயிருந்தன. உலக பங்கு சந்தையில், 68 சதவீதமும் பங்கு விற்பனையிலும் 80 சதவீதம் லாபத்திலும் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின், பங்கு விற்பனையில் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் அந்நாட்டின் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர்.
இன்று கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள், கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz) வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
இந்த மின்னணுக்களால் படிகத்தை வைத்து, கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள், அதை உலக அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த போது, ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால், இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்கு தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது

Sunday, September 23, 2012

கோபம் நிஷ்டூரமுள்ளது

அமெரிக்காவில் நடந்த மனதை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம் இது. புதிதாக வாங்கியுள்ள அழகிய காரை தன் மனைவியிடம் காண்பிப்பதற்காக அவளை வெளியே அழைத்து வந்தார் ஒரு கணவர். அங்கே அவர்களது நான்கு வயது மகன் ஒரு சுத்தியலை வைத்து அந்த காரில் அடித்து கொண்ருந்தான். அதைக் கண்ட தகப்பன் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார். அந்த சுத்தியலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது விரல்களில் ஒரு அடி அடித்தார். அவனது கை விரல்கள் நொறுங்கி போயின.
.
அவர் கோபம் குறைந்த போது தன் மகனுக்கு தான் ஏற்படுத்திய தீங்கிற்காக வருத்தப்பட்டார். உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனது நொறுங்கிய விரல்களின் எலும்புகளை பொருத்த முடியவில்லை. அவனது விரல்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மகன் மயக்கம் தெளிந்து கண் திறந்தபோது, அருகிலிருந்த தகப்பனை பார்த்து, 'அப்பா, உங்கள் காரில் கீறல் உண்டுபண்ணினதற்கு என்னை மன்னித்து விடுங்கள்' என்றான். தகப்பனின் உள்ளம் நொறுங்கியது. பின்பு தன் தகப்பனை பார்த்து, 'என் கை விரல்கள் திரும்பவும் எப்போது வளரும்' என்று கேட்டான். அவனது வார்த்தைகளை தகப்பனுடைய உள்ளத்தை மேலும் உடைத்தது. நேராக வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.
.
'உக்கிரம் கொடுமையுள்ளது: கோபம் நிஷ்டூரமுள்ளது (நீதிமொழிகள் 27:4)

Thursday, September 20, 2012

இவன் மறித்தும் உயிரோடு இருக்கிறான்

இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் யாகோ என்பது ஒரு பழங்குடி ஜாதியாகும். அந்த ஜாதி மக்கள் மிகவும் பின் தங்கிய மக்களாவார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டனர். அந்த யாக்கோ ஜாதியில் பிறந்த ஒக்கஞ்சி என்பவர் கர்த்தரை ஏற்று கொண்டார். அவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பிழைப்புக்காக அவர் தனது ஊரை விட்டு, வேறொரு ஜாதியினர் வாழும் இடத்திற்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த மக்கள் தங்களை உயர்ந்த ஜாதியென்றும், யாகோ பழங்குடியினரை அற்பமாகவும் நினைப்பவர்கள்.
.
அவருக்கு முதலாளியாக மன்ஸிஜோ என்பவன் இருந்தான். அந்த மன்ஸிஜோ, ஒக்கஞ்சி யாகோ இனத்தை சேர்ந்ததால் மிகவும் அவரை வெறுத்தான். அவரை வேலையை விட்டு நீக்கி விட வேண்டும் என்று மிகவும் அவர் மேல் வெறுப்பு காட்டி வந்தான். ஆனால் ஒக்கஞ்சியோ தன் வேலையை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்து வந்தார்.
.
ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர் ஒருவர் வந்து, ஒக்கஞ்சியிடம், 'மன்ஸிஜோ உன்னை வேலையிலிருந்து எடுக்க மிகவும் முயற்சித்து கொண்டிருக்கிறான்' என்று கூறினார். அதற்கு ஒக்கஞ்சி, 'நான் என்ன செய்வேன், என் மனைவியும் குடும்பமும் என்ன செய்ய முடியும்' என்று கேட்டு கொண்டிருந்த போது, மற்ற தொழிளாளர்களும் அங்கு வந்து, யாகோ இனத்தை கேலி செய்து பேச ஆரம்பித்தார்கள்.
.
அப்போது அங்கு ஒரு டிரக்கில் வந்த மன்ஸிஜோ 'இங்கு என்ன கூட்டம்? வேலை செய்யாமல் எல்லாரும் பேசி கொண்டிருக்கிறீர்கள்?' என்று கூறிக்கொண்டிருந்தபோது, ஒக்கஞ்சியை அங்கு கண்டு, 'ஓ, நீதான் எல்லாவற்றிற்கும் காரணமா, நாளையிலிருந்து உனக்கு வேலையில்லை' என கூறினான். ஒக்கஞ்சி என்ன சொன்னாலும் அது அவன் காதில் விழவில்லை.
.
அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை அனைவரும் சேர்ந்து வெட்டி கொண்டிருந்தார்கள். ஒக்கஞ்சி, 'அந்த மரத்தின் பெரிய கிளையை வெட்டி விட்டு, பின் மரத்தை வெட்டினால்தான் சரி, இல்லாவிட்டால் அது திசைமாறி விழுந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும்' என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை அசட்டை செய்து, அவர்கள் தொடர்ந்து மரத்தை வெட்டி கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஒக்கஞ்சியை பார்த்து, 'டிரக்கில் உள்ள கடப்பாறையை சீக்கிரம் கொண்டுவா' என்று கத்தினான். அதை எடுக்க போன ஒக்கஞ்சி, அதில் மன்ஸிஜோ உறங்கி கொண்டிருப்பதையும், திடீரென மரம் முறிந்து, திசைமாறி, டிரக்குக்கு நேராக விழுவதையும் கண்டார். நொடிபொழுதும் தாமதிக்காமல், மன்ஸிஜோவை இழுத்து கீழே வீசி தானும் சேர்ந்து உருண்டார்.
.
பலத்த சத்தத்தோடு மரம் கீழே விழுந்தது. மற்றவர்கள் இந்த இருவரும் மரித்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டிருந்தபோது, இருவரும் சிறு காயங்களோடு வெளியே வருவதை கண்டார்கள். ஒக்கஞ்சி, 'இயேசுவே உமக்கு நன்றி' என்று கூறுவதை கவனித்த மன்ஸிஜோவின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்! ஏன்? ஏன்? ஏன்? என்று!.
'ஒக்கஞ்சி, உன்னால் எப்படி முடிந்தது? என் உயிரை பாதுகாக்க வேண்டும்
என்கிற எண்ணம் உனக்குள் எப்படி வர முடியும்? நானோ உன்னை
இதுவரை முழுப்பகையாய் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறேனே' என்று
கேட்டபோது, ஒக்கஞ்சி, 'நாம் சத்துருக்களாயிருக்கும்போதே இயேசுகிறிஸ்து
நம்மை நேசித்தார். நான் அவரை வணங்குகிறேன். அவர் நிமித்தம் அப்படி
செய்தேன்' என்று கூறினார். அதற்கு மன்ஸிஜோ, 'நான் வேறு ஜாதியாச்சே,
ஏன் அப்படி, நீ ஓடி தப்பியிருக்க முடியும், ஆயினும் உன் உயிரை காக்க
விரும்பாமல், உன் சத்துருவின் உயிரை காத்தாயே' என்று கூறினபோது,
ஒக்கஞ்சி, 'கிறிஸ்துவுக்கு எல்லா ஜாதிகளும் ஒன்றுதான். அவர் சகல
ஜாதிகளுக்காகவும் தம் உயிரை கொடுத்தார். அவருடைய இரடசிப்பு
அனைவருக்கும் தேவை' என்று கூறினார். அப்போது மன்ஸிஜோ,
ஒக்கஞ்சியின் கரங்களை பிடித்து கண்ணீர் வடித்து, 'என்னை மன்னித்துவிடு,
நானும் உன் இரட்சகரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்' என்று
கூறினான்.
.
பிரியமானவர்களே, உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச்
சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் என்று
இயேசுகிறிஸ்து கூறினார். இதை செய்வது கடினமானாலும், கிறிஸ்து
நமக்குள் இருந்தால் நிச்சயமாக அதை நாம் செய்ய முடியும்.

உன் இருதயத்தைக் காத்துக்கொள்

இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் தரிசாய் போன விளைநிலம் இருந்தது. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. அந்த நண்பர்கள் நமது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசி கொண்டனர். தக்காளி பயிரிடலாம் என யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையை தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது. முதல் விவசாயி தன் தோட்டத்தை சுற்றிலும வேலியடைத்தான். அவ்வப்போது வந்து செடியில் நடுவில் வளரும் களைகளை பறித்து போட்டான். ஒவ்வொரு நாளும் கவனமாய் நீர்ப்பாய்ச்சினான். இரண்டாம் விவசாயி, இவனுக்கு வேலையில்லை, இதற்கெல்லாம் வேலி போட்டு களை பிடுங்க வேண்டுமா, தண்ணீர் பாய்ச்சினால் போதாதா? என்று கிண்டலாக அவ்வப்போது முதல் விவசாயியிடம் கூறுவான். கனி தரும் காலம் வந்தது.

இரண்டு தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும் தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி 'நான் வேலி அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும் நன்றாக காய்த்திருக்கிறதுதானே, நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். நீ வெட்டி வேலை செய்திருக்கிறாய்' என்று ஏளனம் செய்தான். ' தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றி விட்டது. நாளை பறித்தால் சரியாக இருக்கும். ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய் போடுவோம்' என்று பேசி கொண்டார்கள்.
.
சாக்குகளோடு மறுநாள் அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலியடைக்காத தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் பறிக்கப்பட்டு தோட்டமே அலங்கோலமாக கிடந்தது. காரணம் யாரோ நெடுநாளாய் இந்த தோட்டததை கவனித்து வந்துள்ளனர். பறிக்க சரியான நோம் பார்த்திருந்தனர். வேலியும் இல்லாததால் எந்த சிரமுமின்று பறித்து சென்று விட்டனர். இதை கண்டவுடன் இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தோடு திரும்பி சென்றான்.

கோதுமை மணியானது............

இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் யாகோ என்பது ஒரு பழங்குடி ஜாதியாகும். அந்த ஜாதி மக்கள் மிகவும் பின் தங்கிய மக்களாவார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டனர். அந்த யாக்கோ ஜாதியில் பிறந்த ஒக்கஞ்சி என்பவர் கர்த்தரை ஏற்று கொண்டார். அவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பிழைப்புக்காக அவர் தனது ஊரை விட்டு, வேறொரு ஜாதியினர் வாழும் இடத்திற்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த மக்கள் தங்களை உயர்ந்த ஜாதியென்றும், யாகோ பழங்குடியினரை அற்பமாகவும் நினைப்பவர்கள்.
.
அவருக்கு முதலாளியாக மன்ஸிஜோ என்பவன் இருந்தான். அந்த மன்ஸிஜோ, ஒக்கஞ்சி யாகோ இனத்தை சேர்ந்ததால் மிகவும் அவரை வெறுத்தான். அவரை வேலையை விட்டு நீக்கி விட வேண்டும் என்று மிகவும் அவர் மேல் வெறுப்பு காட்டி வந்தான். ஆனால் ஒக்கஞ்சியோ தன் வேலையை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்து வந்தார்.
.
ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர் ஒருவர் வந்து, ஒக்கஞ்சியிடம், 'மன்ஸிஜோ உன்னை வேலையிலிருந்து எடுக்க மிகவும் முயற்சித்து கொண்டிருக்கிறான்' என்று கூறினார். அதற்கு ஒக்கஞ்சி, 'நான் என்ன செய்வேன், என் மனைவியும் குடும்பமும் என்ன செய்ய முடியும்' என்று கேட்டு கொண்டிருந்த போது, மற்ற தொழிளாளர்களும் அங்கு வந்து, யாகோ இனத்தை கேலி செய்து பேச ஆரம்பித்தார்கள்.
.
அப்போது அங்கு ஒரு டிரக்கில் வந்த மன்ஸிஜோ 'இங்கு என்ன கூட்டம்? வேலை செய்யாமல் எல்லாரும் பேசி கொண்டிருக்கிறீர்கள்?' என்று கூறிக்கொண்டிருந்தபோது, ஒக்கஞ்சியை அங்கு கண்டு, 'ஓ, நீதான் எல்லாவற்றிற்கும் காரணமா, நாளையிலிருந்து உனக்கு வேலையில்லை' என கூறினான். ஒக்கஞ்சி என்ன சொன்னாலும் அது அவன் காதில் விழவில்லை.
.
அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை அனைவரும் சேர்ந்து வெட்டி கொண்டிருந்தார்கள். ஒக்கஞ்சி, 'அந்த மரத்தின் பெரிய கிளையை வெட்டி விட்டு, பின் மரத்தை வெட்டினால்தான் சரி, இல்லாவிட்டால் அது திசைமாறி விழுந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும்' என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை அசட்டை செய்து, அவர்கள் தொடர்ந்து மரத்தை வெட்டி கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஒக்கஞ்சியை பார்த்து, 'டிரக்கில் உள்ள கடப்பாறையை சீக்கிரம் கொண்டுவா' என்று கத்தினான். அதை எடுக்க போன ஒக்கஞ்சி, அதில் மன்ஸிஜோ உறங்கி கொண்டிருப்பதையும், திடீரென மரம் முறிந்து, திசைமாறி, டிரக்குக்கு நேராக விழுவதையும் கண்டார். நொடிபொழுதும் தாமதிக்காமல், மன்ஸிஜோவை இழுத்து கீழே வீசி தானும் சேர்ந்து உருண்டார்.
.
பலத்த சத்தத்தோடு மரம் கீழே விழுந்தது. மற்றவர்கள் இந்த இருவரும் மரித்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டிருந்தபோது, இருவரும் சிறு காயங்களோடு வெளியே வருவதை கண்டார்கள். ஒக்கஞ்சி, 'இயேசுவே உமக்கு நன்றி' என்று கூறுவதை கவனித்த மன்ஸிஜோவின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்! ஏன்? ஏன்? ஏன்? என்று!
.
'ஒக்கஞ்சி, உன்னால் எப்படி முடிந்தது? என் உயிரை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் உனக்குள் எப்படி வர முடியும்? நானோ உன்னை இதுவரை முழுப்பகையாய் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறேனே' என்று கேட்டபோது, ஒக்கஞ்சி, 'நாம் சத்துருக்களாயிருக்கும்போதே இயேசுகிறிஸ்து  நம்மை நேசித்தார். நான் அவரை வணங்குகிறேன். அவர் நிமித்தம் அப்படி செய்தேன்' என்று கூறினார். அதற்கு மன்ஸிஜோ, 'நான் வேறு ஜாதியாச்சே, ஏன் அப்படி, நீ ஓடி தப்பியிருக்க முடியும், ஆயினும் உன் உயிரை காக்க விரும்பாமல், உன் சத்துருவின் உயிரை காத்தாயே' என்று கூறினபோது, ஒக்கஞ்சி, 'கிறிஸ்துவுக்கு எல்லா ஜாதிகளும் ஒன்றுதான். அவர் சகல ஜாதிகளுக்காகவும் தம் உயிரை கொடுத்தார். அவருடைய இரடசிப்பு அனைவருக்கும் தேவை' என்று கூறினார். அப்போது மன்ஸிஜோ, ஒக்கஞ்சியின் கரங்களை பிடித்து கண்ணீர் வடித்து, 'என்னை மன்னித்துவிடு, நானும் உன் இரட்சகரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்' என்று கூறினான்.
.
பிரியமானவர்களே, உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். இதை செய்வது கடினமானாலும், கிறிஸ்துநமக்குள் இருந்தால் நிச்சயமாக அதை நாம் செய்ய முடியும்.

இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்

டி.எல் மூடி என்ற தேவ மனிதரை தெரியாதவர்கள் எவருமில்லை. ஒரு நாள் இரவு தன்னுடைய ஊழியத்தை முடித்து மிகவும் களைப்புடன் தனது ஓட்டல் அறையில் தூங்க சென்றார். அப்போது திடீரென்று கர்த்தருடைய ஆவியானவர் அவரோடு பேசி, 'மகனே பக்கத்து அறையில் உள்ள வாலிபனோடு சென்று பேசு' என ஏவினார். இவரோ, 'ஆண்டவரே நான் மிகவும் களைத்து போயிருக்கிறேன் என்பது உமக்கு தெரியாதா, காலையிலிருந்து மாலை வரை அநேக இடங்களில் உம்மை பற்றி அறிவித்து விட்டேன். அந்த மனிதனை நாளை சந்தித்து உம்மை பற்றி கூறுகிறேன்' என்று சொல்லி விட்டு, தூங்கி விட்டார். மறுபடியுமாக மூன்று முறை ஆவியானவர் அவரிடம், 'நான் அந்த வாலிபனை இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறேன், நீ போய் பேசு' எனறார். இவரோ, 'ஆண்டவரே நான் காலையில் போய் சொல்கிறேன்' என கூறிவிட்டு தூங்கி விட்டார்.
.
பின்பு அதிகாலையில் யாரோ அங்குமிங்குமாக ஓடுவது போலவும், பரபரப்பாய் நான்கைந்து பேர் பேசி கொண்டிருக்கிற சத்தத்தையும் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மூடி அறை கதவை திறந்து பக்கத்து அறைக்கு ஓடினார். அந்த கதவை உடைத்து கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்கும்போது அந்த வாலிபன் தூக்கிலே தொங்கி கொண்டிருந்தான். அப்போதுதான் இரவு ஆண்டவர் பேசினதை நினைத்து கதறி அழ ஆரம்பித்தார். உங்களுக்கும் கூட சுவிசேஷம் சொல்ல எத்தனையோ தருணம் ஆண்டவர் கொடுத்திருந்தும் அவரை பற்றி சொல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது அலட்சியப்படுத்தி இருந்திருக்கலாம்.
.

கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழ்வு

வாலிபர்கள் மத்தியில் பகுதி நேரமாக ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் மற்றவர்களிடம் பழகும்போது கிறிஸ்துவின் சாயலை பிரதிபலித்து வாழ பிரயாசமெடுப்பார். ஒரு முறை அவரது காரை ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. வழக்கமாக செல்லும் கடையின் மெக்கானிக் ஊரில் இல்லாதபடியால் ஒரு புதிய கடைக்கு சென்று காரை ரிப்பேர் செய்து தரும்படி மெக்கனிக்கிடம் கூறினார். அவர் நிமிர்ந்துக் கூட பார்க்காமல் அலட்சியமாய் சாவியை வாங்கி கொண்டு, 'சரி சரி உடனே முடியாது, நாளை பார்க்கலாம்' என்று கூறினார். மறுநாள் சென்றபோது சரியான பதிலை கூறாமல், அடுத்த நாள் வரும்படி கூறினார். அந்த ஊழியர் தன் நண்பரிடம், அந்த மெக்கானிக் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறினார். அதற்கு நண்பர், 'நீங்கள் இப்படி அமைதியாய் இருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான், கடிமனாய் பேசினால் சீக்கிரமாய் வேலையை முடித்து கொடுப்பான்' என்று கூறினார்.
.
இவரும் மறுநாள் போய் அந்த மெக்கானிக்கை நன்கு திட்டவேண்டுமென்று
நினைத்து கொண்டு போனார். ஆனால் அவரை பார்த்தவுடன், மெக்கானிக் சிரித்துக் கொண்டே, சாவியை எடுத்து கொடுத்து, 'வண்டியை எடுத்து செல்லலாம் சார்' என்றார். மேலும் மெக்கானிக், 'கொஞ்ச நாட்களுக்கு முன்பதாக என் மனைவி கிறிஸ்தவளாக மாறி விட்டாள். என்னையும் ஆலயத்திற்கு வரும்படி அழைக்கிறாள். கிறிஸ்தவர்கள் அன்பானவர்கள், பொறுமையானவர்கள் என்று சொல்லுவாள். உங்கள் காரில் வசனத்தை பார்த்ததும், நீங்களொரு கிறிஸ்தவர் என்று அறிந்து கொண்டேன். ஆம், உண்மையிலேயே என் மனைவி கூறிய பொறுமையை உங்களிடம் கண்டேன், நானும் ஒரு கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன்' என்றார். காரில் அமர்ந்த தேவ மனிதர், 'ஆண்டவரே, என்னை மன்னியும், நான் என் கோபத்தையும், கடின வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்தியிருந்தால், அவர் உம்மிடம் வருவது தடைப்பட்டிருக்குமே எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை பிரதிபலிக்க உதவி செய்யும்' என்று ஜெபித்து கடந்து சென்றார்.

Thursday, September 13, 2012

இராபர்ட் கால்டுவெல் - பகுதி 2

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்-பாகம் 2

-முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவு பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் 'தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.


"திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே..." இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Dr. Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதே யெனினும் பொருந்தும் "(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் ...." தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.(தமிழ்வரலாறு, ப.33) எனவும் 'கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 4 எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.


கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளை யெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் 'வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் 'லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக (யஷ்விஜுலிஸ்ரீ) கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.


கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்." இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

உதவிய நூல்கள் : 1. இரா.பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்
2. கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி
3. வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்
4. கால்டுவெல் நூல்கள்
5. பாவாணர் நூல்கள்
மின்னஞ்சல்: muelangovan@gmail.com


இராபர்ட் கால்டுவெல் - பகுதி 1

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் -முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன। காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.


வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தியும் தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, 1875 ) எனும் நூல் ஆகும்.



தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள 'கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று 'கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் 'பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டி யிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புக்கொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது.

சென்னைக்கு வந்ததும் 'துருவர்' (Mr. Drew) எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலான வற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி­சன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார். நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் (Tracy) அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 2 தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது...

பர்த்தலமேயு சீகன்பால்க் - திருமணமும் மரணமும் - பகுதி 4

திரும‌ண‌மும் குடும்ப‌ வாழ்வும்:
ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் இந்திய‌வில் அருட்ப‌ணி செய்த‌பின் சீக‌ன்பால்க் விடுமுறைக்கு ஐரோப்பா சென்றார். அங்குடென்மார்க் ம‌ன்ன‌ரை ச‌ந்தித்து த‌ன‌து வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரி ப‌ணித்திட்ட‌ங்க‌ளை விவ‌ரித்து தேவையான‌ ஆத‌ர‌வைக்கோரினார். அவ‌ரும் ஐரோப்பாவில் இந்திய‌ அருட்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் ப‌ண‌த்தொகையைத் திர‌ட்டினார்.
ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அவ‌ர் விஜ‌ய‌ம் செய்த‌போது ம‌ரியா டார‌த்தி என்ற‌ இள‌ம் பெண்ணை ச‌ந்தித்தார்.ம‌ரியாவின் க‌ல‌க‌ல‌வென்ற‌ சிரித்த‌ முக‌ அழ‌கும் ந‌ற்குண‌மும் அவ‌ரை வெகுவாய்க் க‌வ‌ர்ந்த‌ன‌. ம‌ரியாவும்சீக‌ல்பால்க்கை விரும்பி த‌ன‌து விருப்ப‌த்தை தெரிவிக்க‌ விரைவில் திரும‌ண‌ம் 1715 ம் ஆண்டு டிச‌ம்ப‌ரில்ந‌டைபெற்ற‌து. திரும‌ண‌ம் ஆன‌தும் இருவ‌ரும் ஹால‌ந்து ம‌ற்றும் இங்கிலாந்து வ‌ழியாக‌ இந்தியாவுக்கு ப‌ய‌ண‌ம்மேற்கொண்டு 1716 ம் ஆண்டு ஆக‌ஸ்ட் மாத‌ம் சென்னை வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அவ்விருவ‌ருக்கும் இந்திய‌ ம‌க்க‌ளின்அன்பான‌ வ‌ர‌வேற்பு காத்திருந்த‌து. த‌மிழ் ம‌க‌ளீர் த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை மிஷ‌ன‌ரியின் ம‌னைவியிட‌ம் த‌ய‌க்க‌மின்றிப‌கிர்ந்து ஆலோச‌னைப் பெற்ற‌ன‌ர். இவ்வித‌ம் இருவ‌ரும் ஒரு அணியாக‌ ம‌ற்ற‌ மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌ங்க‌ளோடு சிற‌ப்புமிக்க‌ அருட்ப‌ணியாற்றி வ‌ந்த‌ன‌ர்.

மிஷ‌ன் நிர்வாக‌ குழுவின் த‌வ‌றான‌ திட்ட‌ம்:
கிறிஸ்டிய‌ன் வென்ட் (Christian Went) என்ற‌ செய‌ல‌ரின் த‌லைமையில் இய‌ங்கிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழு மிஷ‌ன‌ரிக‌ளின்ந‌டைமுற‌க்கு க‌ட்டுப்பாடுக‌ளைக் கொண்டு வ‌ந்த‌து.

அவையாவ‌ன‌:
அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் கால‌த்தைப் போன்று மிஷ‌ன‌ரிக‌ள் எந்த‌ பொருள் உத‌வியுமின்றி நாடெங்கிலும்சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கித்து அருட்ப‌ணியாற்ற‌ வேண்டும். மிஷ‌ன‌ரிக‌ள் குடும்பமாக‌ ஓர் இட‌த்தில் த‌ங்கிஅருட்ப‌ணியாற்ற‌ கூடாது.

புதிதாக‌ கிறிஸ்த‌வ‌ரானோர் த‌ங்க‌ளை திருச்ச‌பையாக‌ அமைத்துக்கொண்டு த‌ங்க‌ள் சொந்த‌ செல‌வில் ஆல‌ய‌ம்ம‌ற்றும் பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ வேண்டும்.

சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டிய‌ மிஷ‌ன‌ரிக‌ள் ஆல‌ய‌ம் க‌ட்டுத‌ல், ப‌ள்ளிக‌ள் நிறுவித்த‌ல் போன்ற‌காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட‌க்கூடாது.

இப்ப‌டி த‌வ‌றாக‌ எடுத்த‌ முடிவுக‌ள் மிஷ‌ன‌ரிக‌ளுக்கும் மிஷ‌ன் செயல‌ருக்கும் இடையில் பெரும் நெருக்க‌டியைஉருவாக்கிற்று. த‌ர‌ங்க‌ம்பாடியில் ந‌ல்ல‌ வீடுக‌ளில் மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌மாக‌ வாழ்வ‌து, துற‌வியாய் வாழ்ந்த‌செய‌ல‌ருக்கு அறுவ‌றுப்பாய்த் தோன்றிற்று, விலைவாசி உய‌ர்வினால் மிஷ‌ன‌ரிக‌ள் த‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ ப‌ண‌உத‌வி குடும்ப‌ செல‌வுக‌ளை கொண்டு ச‌ந்திக்க‌ முடியாது போன‌து இவ‌ருக்கு கோப‌த்தை மூட்டின‌து.

ப‌ல‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்திட்ட‌ங்க‌ளிலும் அத‌ன் செய‌ல் முறையிலும் சீக‌ன்பால்க் ஓர் முன்னோடி மிஷ‌ன‌ரியாக‌த்திக‌ழ்ந்தார். அஞ்சாநெஞ்ச‌த்துட‌ன் த‌ன‌க்கு முன் அறிவிக்காம‌ல் மாற்றிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழுவின்கொள்கைக‌ளைக் குறித்து ச‌ட்டை செய்யாம‌ல் மிஷ‌ன‌ரி ஊழிய‌த்தின் ப‌ரிமாண‌த்தை விரிவாக்கினார். இப்ப‌டியாக‌ ப‌ல‌மிஷ‌ன‌ரி பிர‌ச்ச‌னைக‌ளில் த‌ன‌து அணுகுமுறை ச‌ரியே என்று நிரூபித்தார்.

எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தலின் மத்தியில் மிஷனரிப் பணி:
பல முன்னோடி மிஷனரிகளைப் போல சீகன்பால்க்கும் புளூட்சோவும் முடிவில்லாக் கஷ்டங்களை அனுபவித்தனர்.தரங்கம்பாதியிலிருந்த டென்மார்க் சமுதாயத்தாரின் எதிர்ப்பு, பாதிரிகளின் விரோத மனப்பான்மை, மிஷன் நிர்வாககுழுவிற்கும் இவர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கும்இருந்த கருத்து வேறுபாது மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கு அதிக பாடுகளைத் தந்தன.இருப்பினும் தான் அனுபவித்த பாடுகளின் காரணமாய் தன் அருத்பணியைக் கைவிடவில்லை.
டென்மார்க் ஆளுநரின் ஓயாத துன்புறுத்தலின் போது அவர் காட்டிய அஞ்சாமை, தளராமை நம்மை வியப்பில்ஆழ்த்துகிறது. இயேசு கிறிஸ்து மேல் சீகன்பால்க் கொண்ட திட நம்பிக்கை, மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கும்அவரது அஞ்சாமை, தியாக வாழ்க்கை ஜெர்மனியிலிருந்த நண்பருக்கு அவர் எழுதிய ஓர் கடிதத்திலிருந்துவெளிப்படுகிறது.

"எங்கள் பண இழப்பிற்கு பிறகு ஆளுநரும் அவரது இரகசிய மன்றமும் எங்களுக்கு எதிராகவும் எங்கள்திருச்சபைக்கு விரோதமாகவும் கொடுங்கோலராய் செயல்பட்டு நாங்கள் கட்டியெழுப்பிய அனைத்து பணிகளையும்திருச்சபையையும் அழித்து விடுவதாக பயமுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையில் எங்கள்ஜீவனைக் குறித்த நிச்சயமற்று மிகுந்த மனபாரத்துடன் காணப்பதுகிறோம். இருப்பினும் தேவன் எங்களைக்கைவிடாது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களைத் தேற்றி உற்சாகப்படுத்தி சத்தியத்தை எந்தவிதகலக்கமுமின்றி சந்தோஷமாய் அறிவிக்கவும் எங்கள் இரத்தத்தைச் சிந்தி அதனை உறுதிப்படுத்தவும் தயங்காமல்செயல்பத உதவுகிறார்."
 
இளமை மரணம்:
மிஷன் செயலர் வென்ட்(Went) சீகன்பால்க்கை பல இன்னல்களுக்குள்ளாக்கினார். அவருக்கு சீகன்பால்க்கின்மேல்நம்பிக்கையில்லாத்தால் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார். இது மிஷனரிப்பணியை சீகன்பால்க் தொடர்ந்துசெய்ய முடியாதபடி செய்தது. இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு அவரது அனைத்து மாமிச பெலத்தையும்குன்றச்செய்தது. இதன் விளைவாக மிஷன் நிர்வாகக் குழு செயலரால் தொடர்ந்து வந்த நெருக்கடிகளை அவரால்சமாளிக்க முடியாமற் போயிற்று. எனவே ஐரோப்பா சென்று இந்த பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரும்பினார். ஆனால் அவரது சரீர பெலன் மிகுந்தமனச்சோர்வினால் குன்றிவிடவே மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலானார். நாளுக்கு நாள் அவரது பெலவீனம்அதிகரிக்கவே ஐரோப்பா செல்லும் திட்டத்தை கைவிட்டார். தனது வாழ்வை கர்த்தரின் சித்தத்திற்குஒப்புக்கொடுத்தார். "இப்படிப்பட்ட வேதனைகளை நான் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறேன். நான் சுவிசேஷப்பணிக்கு தொண்டு புரிய எப்படியாவது ஆண்டவர் எனக்கு உதவி அனுப்புவார் என்று உறுதியாய் நம்புகிறேன்.இருப்பினும் எல்லாவற்றிலும் அவரது திருவளச் சித்தமே செய்யப்படுவதாக."


1719, பிப்ரவர் 23 ம் நாள் தமிழ் திருச்சபையோரைத் தன்படுக்கையைச் சுற்றிலும் கடைசியாக கூட்டி கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடந்திட அறிவுரை கூறினார். திடீரென தனது கண்களுக்கு முன்பாக தனது கைகளை வைத்து "என் கண்களுக்கு முன்பாக இது மிகவும் பிரகாசமாய்த் தெரிகிறது, இது சூரியன் என் முகத்தில் பிரகாசிப்பதைப் போலிருக்கிறது" என்று கூறினார். அதன்பின் அவரது இறுதி விருப்பமாக "இயேசு கிறிஸ்து என் அரண்" என்ற பாடலின் மெட்டு பியானோவில் வாசிக்கப்பட்டபோது அவர் நித்திய ஓய்வுக்குள் பிரவேசித்தார். இப்படியாக ஜெர்மனியிலிருந்த தன் நண்பனுக்கு முன்னர் எழுதியிருந்தது போல தனது சாட்சியை இரத்தத்தினால் முத்திரையிட்டார்." இளவயதாகிய 36 லேயே தனது உயிரை விட்டார்.
  
பதிமூன்று ஆண்டுகள் இந்தியாவில் பெருஞ்சேவைச் செய்த பின்பு 1719‍ம் ஆண்டில் தனது 36 ம் வயதில் சீகன்பால்க் மறுமைக்குள் சென்றார். மிகுந்த நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் மிக குறுகிய காலகட்டத்தில் அவர் கிறிஸ்துவுக்கு இந்திய மண்ணில் சாதித்த சாதனைகளை நாம் படிக்கும் போது அவைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. இந்த பூவுலகில் குறிப்பாக இந்தியாவில் கர்த்தரின் இராஜ்ஜியம் பரம்பிட நம்மை மிஷனரிப் பணிக்கு அர்ப்பணித்து ஆழமாக ஈடுபட இந்த ஆழ்ந்த ஆய்வு நம்மை அழைக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு உழைத்திடும் மக்கள் அநேகர் இன்று இந்திய மிஷனரி பணிக்கு தேவை. 

பர்த்தலமேயு சீகன்பால்க் - பகுதி 3

திருமறைத் தமிழாக்கம்:
திருமறைத் தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திருச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம் பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக் கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம் நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம் வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம் பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை பெற்றது.


தமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது:
சீக‌ன்பால்க் மொழியாற்ற‌ல் பெற்ற‌வ‌ராயிருந்தார். அவ‌ர் இந்தியா வ‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திலேயே த‌ள‌ர்ப‌ட‌மாய் த‌மிழைப் பேசிய‌தைக் க‌ண்ட‌ த‌மிழ‌ர் மெய்சிலிர்த்த‌ன‌ர். ந‌ல்ல‌ த‌மிழ் ஆசிரிய‌ர்க‌ளின் நூற்க‌ளை அனுதின‌மும் ப‌டித்தார். ந‌ல்ல‌ ஆழ்ந்த‌ வாக்கிய‌ அமைப்புக‌ளை ம‌றுப‌டியும் ப‌டித்து ம‌ன‌தில் ப‌தித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்ச‌ரிப்பையோ ப‌ல‌முறைச் சொல்ல‌ அவ‌ர் அலுத்த‌தே இல்லை. இந்த‌ அய‌ராது உழைப்பின் உய‌ர்வாக‌ த‌மிழில் இல‌க்க‌ண‌ நூலை அவ‌ர் த‌யாரிக்க‌ முடிந்த‌து. அவ‌ர் ஹாலே ப‌ட்ட‌ண‌த்தில் 1715 ல் ஆண்டு இந்த‌ இல‌க்க‌ண‌ நூல் அச்ச‌க‌ப் ப‌ணியை நேர‌டியாக‌ க‌ண்காணித்தார். இப்ப‌டி த‌மிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரிக‌ள் த‌மிழ் மொழியை எளிதில் க‌ற்க‌ பெரிதும் உத‌வி புரிந்தார்.

திரும‌றைக் க‌ல்லூரி நிறுவ‌ப்ப‌ட்ட‌து:
சீக‌ன்பால்க் தொலைத் தூர‌ப் பார்வையுட‌ன் எதிர்கால‌த்தை நினைவிற் கொண்டு வ‌ருங்கால‌ திருச்ச‌பைத் த‌லைமைத் துவ‌த்திற்காக‌ இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ வேண்டுமென‌ உண‌ர்ந்தார். இந்த‌ த‌ரிச‌ன‌த்துட‌ன் எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் த‌ர‌ங்க‌ம்பாடியில் தான் முத‌ன் முத‌லில் இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை இறையிய‌லை இந்தியாவில் புக‌ட்டிய‌து. அநேக‌ர் கிராம‌ ந‌ற்செய்தி ம‌ற்றும் போத‌க‌ அருட்ப‌ணிக்காக‌ இங்கு ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இப்பயிற்சிக்காக‌ த‌மிழ் திருச்ச‌பையை சேர்ந்த‌ ம‌க்க‌ளை மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னும் பொறுப்புட‌னும் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.
பின்ன‌ர் வ‌ந்த‌ மிஷ‌ன‌ரிக‌ளும் சீக‌ன்பால்க்கினால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌யிற்சி முறைக‌ளைக் கையாண்ட‌ன‌ர். இத‌ன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து ம‌த‌த்திலிருந்து கிறிஸ்த‌வ‌ரான‌ ஆரோன் என்ப‌வ‌ர் த‌மிழ் லுத்த‌ர‌ன் திருச்ச‌பையின் முத‌ல் போத‌க‌ராய் போத‌காபிஷேக‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அருட்ப‌ணிக்காக‌ ப‌யிற்றுவிக்க‌ ஒரு மிஷ‌ன‌ரிக்கு த‌னிப் பொறுப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு ஒதுக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென்று சீக‌ன்பால்க் மிஷ‌ன் த‌லைமைக்கு ப‌ரிந்துரையும் செய்தார்.

இளைஞ‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிப் ப‌ள்ளி துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து:
தொல‌தூர‌ நோக்கோடு வாலிப‌ர்க‌ளை ஆசிரிய‌ப் ப‌ணிக்கும் போத‌க‌ப் ப‌ணிக்கும் சீக‌ன்பால்க் ப‌யிற்றுவித்தார். இந்த‌ நோக்க‌த்திற்காக‌ கிறிஸ்த‌வ‌ வாலிப‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல்ல‌ங்க‌ளிலிருந்து பிரித்தெடுக்க‌ப்ப‌ட்டு காப்ப‌க‌ங்க‌ளில் த‌ங்க‌ வைத்து க‌ல்வியும் ப‌யிற்சியும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌ வாலிப‌ர்க‌ளுக்கு உண‌வு, உறைவிட‌ம், உடுக்க‌ துணிக‌ள் கொடுத்து ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌ட்ட‌து. திருச்ச‌பைக‌ளிலும் பாட‌க‌ சாலைக‌ளிலும் இவ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌து. ஏனையோருக்கு குடிய‌மைப்பு நிர்வாக‌த்தில் உய‌ர்ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட்டு பொருளாதார‌ தாழ்வு நிலையிலிருந்த‌ கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ங்க‌ள் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
இல‌க்கிய‌ப் ப‌ணி வ‌ள‌ர்ச்சி அடைத‌ல்:
1713 ம் ஆண்டு ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலிருந்து மூன்று எழுத்து வ‌டிவ‌மைப்பும் அச்சு இய‌ந்திர‌மும்மிஷ‌ன‌ரிப்ப‌ணிக்கென‌ த‌மிழ‌க‌த்திற்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ் எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ ஒரு அச்ச‌க‌த‌தைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில‌ எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ அச்ச‌க‌மும் அச்சுத்தாளுட‌ன் வ‌ந்துசேர்ந்த‌து. இந்த‌ வ‌ச‌திக‌ளைக் கொண்டு த‌மிழ் இல‌க்கிய‌ப் ப‌ணி வெகுவாய் விரிவுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை மொழியாக்கம்பெற்று அச்சிடப்பட்டு, இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் விரிவான முறையில்விநியோகிக்கப்பட்டது.

கடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்:
சீகன்பால்க் டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும் தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள் தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின் பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது.

சீகன்பால்க் சிறையிலிடப்ப‌டுதல்:
டென்மார்க் குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன் கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம் சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச் சென்றான்.

ஆளுநர் ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும் செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ விசாரிக்க‌ப்ப‌ட‌வோ இல்லை. அவ‌ரை கேட்ட‌போது இயேசுகிறிஸ்துவைப் போன்று அமைதியாய் இருந்தார். இறுதியாக‌ அவ‌ரைக் கைது செய்து சிறையில‌டைக்க‌ ஹாஸிய‌ஸ்உத்த‌ர‌விட்டார்.

மிக‌வும் கொடூர‌மாக‌ வெப்ப‌மிகுந்த‌ அறையில் சீக‌ன்பால்க் சிறைவைக்க‌ப்ப‌ட்டார். அவ‌ர‌து சிறைக் கோட்டைச‌மைய‌ல‌றைக்கு அடுத்து அமைக்க‌ப்ப‌ட்டு ச‌மைய‌ல‌றை வெப்ப‌மும் சூரிய‌ வெப்ப‌மும் அவ‌ரை வெகுவாய்வாட்டிய‌து. அவ‌ர‌து ச‌க‌ மிஷ‌ன‌ரியாகிய‌ புளூட்சோ அவ‌ரை ச‌ந்திக்க‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. எழுத‌ பேனாவும்காகித‌மும் கூட‌ அவ‌ருக்கு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ர் த‌ன‌து திரும‌றை த‌மிழாக்க‌த்தை தொட‌ர‌முடியாம‌ற் போயிற்று.

அமைதியினால் அவ‌ர‌து மிஷ‌ன‌ரிப் ப‌ணி பார‌மும் வாஞ்சையும் அவிக்க‌ப்ப‌ட‌வும், த‌னிமையின் கொடுமையும்கொடும் வெப்ப‌மும் அவ‌ர் உட‌லிலிருந்த‌ நோய் எதிர்ப்பு த‌ன்மையையும் பெல‌னையும் முற்றிலும் அழித்துபோட‌வும் எதிரிக‌ள் ச‌தி செய்த‌ன‌ர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீக‌ன்பால்க்கும் துவ‌ண்டு போகாதும‌ன‌தைரிய‌த்துட‌ன் பாட‌லாலும் ஜெப‌த்தாலும் சிறையைத் தூய்மைப்ப‌டுத்தினார்.
இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் திர‌ள் ஹாஸிய‌ஸ்ஸிற்கு எதிராக‌ எழும்பிய‌தால் சிறைத‌ண்ட‌னையை நீண்ட‌நாள் அவ‌ர்நீடிக்க‌ முடிய‌வில்லை. சீக‌ன்பால்க்கின் மேல் பொதும‌க்க‌ள் வைத்திருந்த‌ பாச‌ம், ம‌திப்பு, ம‌ரியாதைக்குஅள‌வில்லை. 1709 ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத‌ சிறைவாச‌த்தின் பிற‌கு சீக‌ன்பால்க் விடுத‌லைச்செய்ய‌ப்ப‌ட்டார். சிறையிலிருந்து வெளிவ‌ந்த‌வுட‌ன் ப‌ல‌ மாறுத‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. சிறையில் அவ‌ர் அனுப‌வித்த‌பாடுக‌ள் தேவ‌ன் அவ‌ருக்கு ந‌ன்‌மை ப‌ய‌க்கும்ப‌டி செய்தார். அவ‌ர் பொதும‌க்க‌ளின் மிகுந்த‌ம‌ரியாதைக்குரிய‌வ‌ரானார்.

பர்த்தலமேயு சீகன்பால்க் - பகுதி 2

மிஷனரிப் பணி அழைப்பு

சீகன்பால்க்கின் இறையல் பயிற்சி நாட்களில் திருச்சபை போதக அருட்பணிக்குப் பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மிஷனரி அருட்பணியில் அவர் கொண்டிருந்த பேராவலும் அதற்கு அவர் செய்த அர்ப்பணிப்பும் மற்ற பணிகளின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாது மறுப்பு செய்ய உதவின.
நான்காம் பிரடெரிக் மன்னை தென்னிந்தியக்குடி அமைப்பிற்கு மிஷனரிகளை அனுப்பி கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அருட்பணியாற்றிட பேராவல் கொண்டிருந்தார். இளைஞனாய் ஹாலேயில் இறைஇயல் பயின்றுக் கொண்டிருந்த சீகன்பால்கிற்கு மிஷனரி அழைப்பு மன்னர் சார்பில் அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த அழைப்பினால் அவர் இறைஇயல் கல்வியை அப்போது தான் ஆரம்பித்திருந்ததாலும் அவரது உடல்நிலை மோசமாயிருந்ததாலும் அவரது வாலிபம் மிஷனரி அழைப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயாராக இல்லை. அவர் மிஷனரி அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சற்று தயக்கம் காட்டியதற்கு காரணமே அவரால் மிஷனரி பணியை நன் முறையில் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணமே தவிர அது தீர்வான மறுப்பில்லை. பின்னர் அந்த அழைப்பை தூர தேசத்தில் அருட்பணி செய்யும் படியாக இறைவனே தந்த அழைப்பாக எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும் ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பனேகனுக்கு அனுப்பப்பட்டது. அரசாணையின்படி இந்த இரு இறைஇய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் லூத்த‌ர‌ன் பேராய‌ரால் குரு அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌‌ன‌ர். பின்னர் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ அர‌ச‌ மாளிகைக்கு அழைத்த‌ன‌ர்.
அப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிகளின் நூலின் அடிப்ப‌டையில் ஓர் சிற‌ப்பு செய்தியை ம‌ன்ன‌ரின் குடும்ப‌த்திற்கு சீக‌ன்பால்க் அளித்தார். அந்த‌ நாள் முத‌ல் அர‌ச‌ குடும்ப‌த்துட‌ன் மிகுந்த‌ ந‌ட்பு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் வ‌ரை அந்த‌ ந‌ட்பு தொட‌ர்ந்த‌து. ப‌ல‌ தேச‌ங்க‌ளைக் குறித்து சிந்தித்த‌ப் பின்ன‌ர் இந்தியாவிற்கு மிஷ‌ன‌ரிக‌ளை அனுப்ப‌ பிர‌டெரிக் ம‌ன்ன‌ர் தீர்மானித்தார். புளூட்சோ, சீக‌ன்பால்க்கை விட‌ ச‌ற்று திற‌மை குறைந்த‌வ‌ராக‌யிருந்த‌ப‌டியால் அவ‌ர் பின்ன‌ணியில் தான் செய‌ல்ப‌ட்டார். இருப்பினும் இவ்விருவ‌ரும் ஒன்றுப‌ட்டு ஒரு ந‌ல்ல‌ மிஷ‌ன‌ரி அணியாக‌த் திக‌ழ்ந்த‌ன‌ர்.


த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ருகை

இள‌ம் மிஷ‌ன‌ரிக‌ளான‌ சீக‌ன்பால்க்கும் புளுட்சோவும் 1706ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் த‌மிழ்நாட்டின் காயிதேமில்ல‌த் மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ந்து சேர்ந்த‌னர். த‌ர‌ங்க‌ம்பாடியில் டென்மார்க் குடிய‌மைப்பு ஆளுந‌ரும் ம‌ற்றும் ஐரோப்பிய‌ போத‌க‌ர்க‌ளும் மிஷ‌ன‌ரிக‌ளுக்கு ந‌ல்வ‌ர‌வு அளிக்க‌வில்லை. த‌ர‌ங்க‌ம்பாடிக்கு வ‌ர‌ அனும‌தியாம‌ல், மூன்று நாட்க‌ள் க‌ப்ப‌லில் த‌ங்கும் நிர்ப‌ந்த‌த்தை ஆளுந‌ர் ஏற்ப‌டுத்தினார். ப‌ட்ட‌ண‌த்திற்குள் வ‌ந்த‌ பிற‌கும் ச‌ந்தைவெளியில் ப‌ல‌ம‌ணிநேர‌ம் கொளுத்தும் வெயிலில் அதிகாரிக‌ளால் கைவிட‌ப்ப‌ட்ட‌ நிலையில் எங்கே த‌ங்குவ‌தென‌ திகைத்து நின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை யாரும் ச‌ட்டை ப‌ண்ண‌வில்லை.
அனைத்து சூழ்நிலைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் செய‌ல்ப‌ட்ட‌ன‌. டென்மார்க் அர‌ச‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒற்ற‌ர்க‌ள் என்று ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை ச‌ந்தேகிக்க‌லாயின‌ர். ஆனால் அதைரிய‌ப்ப‌டாது இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை முத‌ல் மிஷ‌ன‌ரிக‌ள் அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் துன்ப‌ங்க‌ளையும் ச‌கித்த‌ன‌ர். பின்ன‌ர் அடிமைக‌ளாக‌ எண்ண‌ப்ப‌ட‌ இந்திய‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் சென்று த‌ங்கின‌ர். ம‌னித‌னால் கைவிட‌ப்ப‌ட்டும் தேவ‌னால் நெகிழ‌ப்ப‌ட‌வில்லை


இந்த‌ கொடூர‌ எதிர்ப்புக‌ள் ம‌த்தியிலும் த‌ன‌து அருட்ப‌ணியாள‌ருக்கு உத‌வி செய்ய‌ ஆண்ட‌வ‌ர் ஆய‌த்த‌ப்ப‌டுத்தி வைத்திருந்தார். அவ‌ர்க‌ள் ப‌ட‌கிலிருந்த‌போது முத‌லிய‌ப்பா என்ற‌ இந்திய‌ இளைஞ‌ன் அவ‌ர்களுக்கு உத‌வியாயிருக்க‌ முன் வ‌ந்தான். அத்துட‌ன் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றிய‌ ஜெர்மானிய‌ ப‌டைவீர‌ர் அவ‌ருக்கு ப‌க்க‌ப‌ல‌மும் ப‌ண‌ உத‌வியும் அளிக்க‌ முன் வ‌ந்த‌ன‌ர். விரைவில் வெகு விம‌ரிசையாக‌ சீக‌ன்பால்க் த‌ன் மிஷ‌ன‌ரிப்ப‌ணியை ஆர‌ம்பித்தார்.

இந்திய குழந்தைகளுக்கு தங்கும் வசதி கொண்ட பள்ளிகூடம் நிறுவினார்:
இந்திய அடிமைகளோடு மிஷனரிகள் வாழ்ந்தபடியால், அவர்கள் மத்தியில் தங்கள் முதல் அருட்பணியை ஆரம்பித்தனர். குடியமைப்பில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் இல்லங்களில் பணியாற்றிய இம்மக்களின் ஏழ்மை சீக‌ன்பால்க்கை மிகவும் ஈர்த்தது.
முதல் மிஷனரிப் பள்ளி இந்த அடிமை மக்களின் குழ்ந்தைகளுக்காக ஆரம்பமாயிற்று. ஜெர்மானியில் பிராங்கே என்பவரின் மாதிரியைப் பின்பற்றி அநாதை குழந்தை காப்பகத்தை ஏற்படுத்தினார். இந்த அடிமைக் குழந்தைகளை அவர்களது ஐரோப்பிய காப்பாளரிடம் கிரயம் கொடுத்து வாங்கி பின்பு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ நெறிப்படி வளர்ந்து வந்தார். இந்த இளஞ் சிறுவர்களுக்கு கல்வி புகட்டி, பயிற்சி அளித்து வருங்கால நற்செய்திப் பணிக்கு பயன்பதுத்த வேண்டும் என்பதே அவர் திட்டம்.

இந்திய கிறிஸ்தவர்களுக்காக கட்டிய முதல் ஆலயம்:
இந்திய திருச்சபையின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு சீக‌ன்பால்க்குக்கு இருந்தது. அவரது அருட்பணி பலனளித்து 1707-ல் ஆண்டு மே 12-ம் நாள் போர்த்துகீசிய மொழி பேசும் 5 இந்தியர்கள் இயேசுவை இரட்சகராக அறிக்கைப் பண்ணி, திருமுழுக்குப் பெற்று இயேசுவில் தங்களுக்கிருந்த மகிழ்ச்சியை அறிக்கையிட்டனர். விரைவில் தங்களுக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்தியதின் தேவையை உண்ர்ந்தனர். அவர்கள் ஐரோப்பியர் ஆலயங்களில் உட்காரத் தயங்கினர். இந்தியருக்கென தனி ஆலயம் அமைக்கும் திட்டத்தை வெகுவாய் ஆட்சேபித்து, ஆலயம் கட்ட இடம் தர ஐரோப்பிய ஆளுநர் மறுத்தார்.


இருப்பினும் ஆதரவு இல்லாமையால் ஆலயம் கட்டும் திட்டம் நின்று விடவில்லை. விரைவிலேயே ஓர் இடம் கிடைத்து ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்ட பணம் குறைவு பட்ட போது மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் பகுதியை கொடுத்தும் ஸ்தல மக்கள் உதவி செய்தும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707-ம் ஆண்டு 14-ம் நாள் இந்திய கிறிஸ்தவர்கள் பேரானந்திக்க ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பெருகிய போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது எருசலேம் என்ற பேராலயமாக 1717-ம் ஆண்டு பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. இதுவே இன்றும் லூத்தரன் திருச்சபையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராமத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது:

கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் சீகன்பால்கிற்கு மிகுந்த ஆவலும் வாஞ்சையும் இருந்தது. இவர்கள் எவ்வித பயமும் கவலையுமின்றி தங்கள் இறைவணக்கத்தைச் செய்து வந்தனர். இவர்களுக்கு நற்செய்தியை திறம்பத அறிவிக்க தமிழ் மொழியையும் மக்களின் கலாச்சாரத்தையும் சீகன்பால்க் கற்றறிருந்து அவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு புரிந்து கொண்டார்.

சீகன்பால்க் தனது நேரத்தை மொழி கற்றல், திருமறை மொழியாக்கம், குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளியை பராமரிதல் போன்றவற்றிற்கு செலவழித்ததோடு தூர இடங்களில் காணப்பட்ட கிராமங்களுக்கும் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் செய்தார். சென்னைக்கும் கடலூருக்கும் அவர் விஜயம் செய்தபோது கிராமங்களைச் சந்தித்து வழியில் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை அந்தணர்களோடு விவரித்தும் தாழ்ந்த ஜாதியினருக்கு அறிவித்தும் வந்தார். போதுமான ஆன்மீக வழிநடத்துதல் இல்லாமலிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தனது அருட்பணியைச் செய்தார்.

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி - சீகன்பால்க்கின் வாழ்க்கை - பகுதி 1


இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி
இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரிபர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம்.

பிறப்பும் இளமைப் பருவமும்:
சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.

சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.

மனந்திரும்புதலின் அனுபவம்:
பால்னிட்ஸில் லத்தின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சீகன்பால்க் கோயர்லிட்ஸில் தனது 12-ம் வயதில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். அவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் அவரை கடவுளைத் தேதும்படிச் செய்து சில மாதங்களுக்குப் பிறகு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. அவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. அதன் விளைவாக அவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றலாயிற்று. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் அவரில் எழுந்தது.

கல்வியும் மிஷனரிப் பணி ஆயத்தமும்
1703 ல் இறைஇயலில் உயர்கல்வி பெற சீகன்பால்க் ஹாலே பல்கலைகழகம் வந்து சேர்ந்தார். பிலிப் ஸ்பென்னர் மற்றும் ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் மிகவும் கவரப்பட்டார். நவீன மிஷனரி இயக்கம் தோன்ற காரணமாயிருந்த பக்தி இயக்கத்திற்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்த ஸ்பென்னர் தான். பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்தி இயக்கத்தின் கல்வி மையமாகத் திகழ்ந்தது.

ஹாலேயில் கல்வி பயின்ற நாட்களில் சீகன்பால்க் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது சரீர பலவீனத்தைக் குறித்து குறிப்பிடுகையில் "நான் எங்கிருந்தாலும் என் நேசக் சிலுவை என்னைப் பின் தொடருகிறது" என்பார். இருப்பினும் அவர் அனுபவித்திருந்த இயேசு அருளிய சுவிசேஷத்தின் பெலன் அவரது எல்லாச் சரீர பெலவீனங்களிலிருந்தும் அவரைத் தூக்கி நிறுத்தியது. உண்மையிலேயே இறையியல் பயிற்சியின் கடுமையான படிப்பிற்கு ஈடுகொடுக்க அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். நல்ல முறையில் எபிரேய மொழியைக் கற்றார். மற்றவர்களுக்கு போதிக்கிற தான் ஆகாதவனாகாதபடி தன்னை காத்துக்கொள்ள அனுதினமும் ஜெபித்து தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார். அவருக்கிருந்த சரீர பெலவீனம் அவர் கருணையுடனும் மன பணிவுடனும் வாழ பெருந்துணைப் புரிந்தது.

புனித மார்டின் லூத்தர் - பகுதி 4

பழைய ஏற்பாட்டில் பாபிலோனிலிருந்த யூதர்களைவெளிக்கொணர்ந்து எருசலேம் வந்தடைய வழிநடத்திய தீர்க்கன், நெகேமியா. பாபிலோனியச் சிறைப்பிடிப்புக்குப் பின்னர், இடிந்த ஆலயத்தை கட்டிஎழுப்பவும், யேகோவா ஆராதனையைப் புதுப்பித்துநிலைநிறுத்தவும் எழுந்தவர் நெகேமியா.

“பிரசங்கிகளின் இளவரசன்” என லூத்தர் அழைக்கப்படுகிறார். நரகின் வாயடைக்கும் நாவன்மை பெற்றவர் அவர். அவரது பிரசங்கங்கள் மட்டுமே 100தொகுப்புகளைத் தாண்டிவிட்டன. பாபிலோனியச்சிறையிருப்பிற்குப் பின் யூதர்களின் ஆலயத்தைத்திரும்பவும் கட்டிய நெகேமியாவைப் போன்றவர்லூத்தர்! இவ்விருவருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்களாகவே காட்சியளித்தனர். அந்நிய இனத்தவளாகிய தன் மனைவியை விலக்கிவிட மறுத்த யூதன்ஒருவனை நெகேமியா கைநீட்டி அறைந்த செய்தியைபழைய ஏற்பாட்டில் வாசிக்கலாம். லூத்தர் ஒருவரையும்அடிக்கவில்லைதான்... ஆயினும், தனது பேச்சாலும்,எழுத்தாலும் போப்பின் ஆதிக்கத்தை ஆட்டங்காணவைத்துவிட்டார்.சாத்தானின் முகத்தில் நிறையவே மையடித்துவிட்டார், லூத்தர். மறுமலர்ச்சியாளனாய் வாடிநந்த தமதுவாடிநவில் 100 தொகுப்பு நூல்களையும், ஆயிரமாயிரம்பிரசங்கங்களையும் நமக்களித்துள்ளார். அவர் ஜெர்மனியில் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, ஓர் மாபெரிய காவியப்பணி!

கடைசி வார்த்தைகள்!!

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

புனித மார்டின் லூத்தர் - பகுதி 3

ஜெர்மன் மொழியில் வேதம்.

லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.

ஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாக, ஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால், அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்து, பின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.

சாத்தான் மீது ‘ மை’ போர்!

அப்போதுதான், மார்ட்டின் லூத்தர், ஜெர்மானியமொழியில் வேதத்தை மொழிபெயர்க்கும் மறக்கவியலா மாபெரும் வேலையைத் தொடங்கியிருந்தார்.தனக்கு வந்துள்ள ஆபத்தை தெள்ளத்தெளிவாய்உணர்ந்த சாத்தான் மிக உக்கிரமடைந்தான். அவன்இரவு பகலாய் லூத்தரின் அமைதியைக் கெடுக்கமுயன்றான். பொறுமையிழந்த மார்ட்டின் லூத்தர்கடைசியில் தனது மைப் புட்டியை எடுத்து அவன்மீதுவீசினார். இன்றும் அந்த மை கறையைச் சுவரில்காணலாம். ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தேவனது வார்த்தையே பிசாசுக்கு மரண அடி!

கி.பி. 150இல் மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன்-இத்தாலிய மொழிபெயர்ப்புக்குப் பிறகு, மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் செய்யப்பட்ட வேத மொழிபெயர்ப்பு இதுவே. மற்ற மொழியாக்கங்களெல்லாம்இந்த அற்புத மொழிபெயர்ப்பின் நகல்களேயாகும்.

1522இல் புனித மார்ட்டின் விட்டன்பர்குக்குத்திரும்பினார். இங்குதான் வேதத்தின் அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்.ஜேம்ஸ் அரசர் ஆங்கில மொழியாக்கத்தின் (King James Version) 75 சதவீதம், ஆங்கிலேய மறுமலர்ச்சியாளர் வில்லியம் டிண்டேலின் கைவேலைதான். அந்தடிண்டேல் இங்குதான் மார்ட்டின் லூத்தரைச் சந்தித்துஅவரிடமிருந்து நிறைய எடுத்தெழுதிக் கொண்டார்.டிண்டேல் வேதத்தின் ஓரக்குறிப்புகள் அப்படியே லூத்தரின் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. கற்றறிந்தஸ்பானியர்கள் அநேகர் ஜெர்மானிய மொழியைக்கற்றிருந்ததால், மார்ட்டின் லூத்தரின் பாணி ஸ்பானிய மொழி பெயர்ப்புகளிலும் படிந்தது.

கன்னியாஸ்திரியாவது வேடிக்கையா?

கறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகி, சில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோது, அவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியே, இந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை. கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிர, காப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர். புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.இருண்ட, அடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்து, லூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா, 1525ல்லூத்தரின் மனைவியானார். மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்ல, நான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்.

விட்டன்பர்கில் ‘ஒரு மனித சேனை!’

அவர் புரட்சியாளர், வேத மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர், வெளியீட்டாளர், அச்சடிப்பவர், பிரசங்கியார், அன்புநிறைக் கணவன், நான்கு குழந்தைகளின்ஆசைத் தகப்பன். கைகளினாலேயே அச்சுப்பணிமுழுவதும் செய்ய வேண்டிய கடின நாட்களிலேயே,அவரது எழுத்துக்கள் 100 தொகுதிகளைத் தாண்டிவிட்டன.

சரித்திரத்திலேயே, மிகவும் விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான். 95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயே, அவரைக் கொல்லச் சதி செய்து “போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதிக்கக்கூடும். 63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்

புனித மார்டின் லூத்தர் - பகுதி 2

மீட்பைக் காசுக்கு விற்ற நிலை.
புனித மார்டின் லூத்தர் - பகுதி 2

சந்தைவெளிச் சரக்கைப்போல இறைவனின் இலவசப் பரிசாகிய மீட்பை காசுக்கு விற்கவும் வாங்கவும்முடியும் என்ற போதனையே புனித மார்ட்டின் லூத்தரின் எரிச்சலைக் கிளப்பியது. டெட்செல் என்ற ‘பாவமன்னிப்புச்சீட்டு விற்பனையாளர்’ ஒவ்வொரு நகரமாகச் சென்று பலமாக முரசறைந்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார். கூட்டம் கூடும்போது, ‘பாவம்செய்யும் உரிமம்’ காசுக்கு விற்கப்படும். விட்டன்பர்க்நகருக்கு டெட்செல் வருவதாகக் கேள்விப்பட்ட லூத்தர், “வரட்டும், அவனது முரசில் துளையிடுவேன்”என்று சவால் விடுத்தார்.

பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனை 1500ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் போர்ஜியா என்ற போப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. புனித பேதுருவின் பேராலயம் கட்ட தேவையான பணம் சேகரிக்க நிர்ப்பந்தம் வந்தபோது, பாவமன்னிப்பு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. எந்தப்பாவமானாலும்—கொலை, விபச்சாரம், பொய், களவு,ஆணையிடுதல், எதுவானாலும்—சரி; செய்த பாவங்கள் மட்டுமல்ல செய்யப்போகும் பாவங்களும் மன்னிக்கப்பட்டன.

நயாபைசாவுக்கு நாலு கத்தரிக்காய்ப் போல இரட்சிப்பு சந்தையில் மலிந்து கிடந்தது. தேவனின் இலவசப் பரிசை ஏளனமான சந்தைப் பொருளாய் மாற்றியதுதான் லூத்தரின் பொறுமையை இழக்கச்செய்த கடைசி அடி! பத்தாம் லியோ எனும் ரோமாபுரி அரசன் லூத்தரைப் பார்த்து கர்ஜித்து, திருச்சபையை அக்டோபர் 2005விட்டு விலக்கிவைக்கும் ஆணையை அனுப்பியதோடு, 60 நாட்களுக்குள் ரோமாபுரி வந்து விளக்கமளிக்கவும், அப்படி வராவிட்டால் நெருப்பில் மடியும்தண்டனையறிவிப்பையும் அனுப்பிவைத்தான்.

இந்த சலசலப்புகளை சட்டைசெய்யாத லூத்தர்,1520ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று விட்டன்பர்க்நகரின் வாசலுக்கு வெளியே போப்பின் ஆணையையும், Decretals of clement VI, the Summa Angelica... the Chrysposus of Dr. Eck, இன்னும்பிற ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்.

அந்த நாளிலிருந்து மகா பாபிலோன் மீது ஊற்றப்பட்ட தேவகோபம் அதனை எரித்து முடிக்குமளவும் நின்றபாடில்லை. ‘ஞானி’ என்று பெயர் பெற்ற, விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எலெக்டர்ஃப்ரெட்ரிக், போப்பின் கோபத்திலிருந்து மார்ட்டின்லூத்தரைப் பாதுகாத்தார்.

மார்ட்டின் லூத்தர், புகழ்பெற்ற Worms என்றஇடத்திற்கு 1521இல் வந்தார். அங்கே சார்லஸ்சக்கரவர்த்தி முன்னிலையிலும் அரசின் பிரதானிகள்முன்னிலையிலும் தனது நிலையை விளக்கி நியாயப்படுத்தினார். அவரது கருத்துக்களைத் தவறெனஒத்துக்கொள்ளும்படி மார்ட்டின் லூத்தரை அவர்கள்கேட்டபோது, அவரது காலத்தை வென்றுநிற்கும் பதில் இதுதான்: “தங்களுக்குள்ளாகவே வேறுபட்டகருத்துக்களைக் கூறியும், தவறான கருத்துக்களைஅடிக்கடி பரிமாறியும் வரும் போப் மற்றும் ஏனையமன்றங்கள் முன்பாக என் விசுவாசத்தைக் கைவிட்டுமண்டியிட முடியாது. வேதத்தின் சாட்சியால் நான்தவறென்று நிரூபிக்கப்பட்டாலொழிய என்னுடையவிசுவாசத்திலிருந்து பின்வாங்க முடியாது; பின்வாங்கவும் மாட்டேன். இந்த நிலைதான் என் இறுதிநிலை (Here I stand); தேவனே! எனக்கு உதவிடும்,ஆமென்!”

Worms இல் மார்ட்டின் லூத்தர் தங்கியிருந்தவேளையில், சார்லஸ் சக்கரவர்த்தியின் ஸ்பானியவீரர்கள் உண்டு பண்ணின கலவரம் கொஞ்சநஞ்சமல்ல.மார்ட்டின் லூத்தர் 1520இல் எழுதிய சபையின் பாபிலோனியச் சிறைப்பிடிப்பு என்ற நூலின் அனைத்துப்பிரதிகளையும் அழித்துவிடும்படியாக நடவடிக்கை எடுத்தனர். அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ சபையின்மேல் 1000 ஆண்டுகளாக ரோமாபுரி செலுத்திவந்த ஆதிக்கத்தை, யூதர்களின் எழுபது ஆண்டுபாபிலோனிய அடிமைத்தனத்திற்கு ஒப்பிட்டு எழுதியிருந்தார். இந்த அடிமைத்தனம் விரைவில் ஒழியும் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தம் ஆரம்பித்துவிட்டதெனவும் லூத்தர் உணர்ந்திருந்தார்.காலங்களின் அடையாளங்களை சாத்தானும் அறிவான். தனது கட்டுரைகள் சரியானவையே Worms நகரில் மார்ட்டின் லூத்தர் வாதிட்டுக் கொண்டிருந்த வேளையில் ஸ்பானிய இராணுவத்தினர் அவரது புத்தகத்தின் பிரதிகளை பறிமுதல் செய்யவும்,சுட்டெரித்துப் பொசுக்கவும் வீடுவீடாய் நுழைந்தனர்.

நான்கு உலக சாம்ராஜ்யங்களில் முதல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாய் 5ஆம் சார்லஸ் விளங்கினார். உலக சரித்திரத்திலேயே மிகப் பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை அவரது செங்கோல் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் லூத்தரின் பேனா முனையோ அதனைவிடக் கூர்மையாய் இருந்தது. இறைவனின் சீர்திருத்தத்தை எதிர்த்து நின்றால் இல்லாமற் போய்விடுவாய் என லூத்தர் 5ஆம் சார்லஸை எச்சரித்தார்.அப்படியே, அவர் தோல்வியும் கசப்புமுற்ற மனிதனாய்மடிந்தார்.

புனித மார்டின் லூத்தர் - பகுதி 1

புனித மார்டின் லூத்தர் - பகுதி 1
1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அன்றுதான்,புனித மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர்க் தேவாலயக்கதவினில் ஆணியறைந்தார்.அதுவே, உலக வரலாற்றின்மிகப்பெரிய கிறிஸ்தவப்புரட்சியின் ஆணிவேரும்,ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கான ஆரம்ப ஒலியலையுமா விளங்கிற்று!

மாமனிதர், டாக்டர் லூத்தர் 1483ஆம் ஆண்டுநவம்பர் 10ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள ஈல்பன்((Eisleben) எனும் ஊரில் ஜான் லூத்தருக்கும்,மார்கரெட் லூத்தருக்கும் மகனாய்ப் பிறந்தார். அதுஓர் ஏழைக் குடும்பமாயினும், சிறுவன் லூத்தருக்கோ(புனித கொலம்பாவைப்போல) நன்கு பாடும் குரல்இருந்தது. அநேக வேளைகளில் அவரது பாடல்தான்அக்குடும்பத்திற்கு இரவு உணவைச் சம்பாதித்தது.
லூத்தர் பிறந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகவே ஜான்காபோட் உலகின் புதிய பகுதியைக் கண்டுபிடித்தார்.லூத்தரின் மறுமலர்ச்சிக்குச் சாத்தான் கொணரும்தாக்குதலின் உக்கிரம் ஐரோப்பாவில் பயங்க

ரமாயிருக்கும் என முன்னறிந்த தேவன்தாமே, சீர்திருந்தும் கிறிஸ்தவர்க்கென்று இவ்வாறு புதிய உலகை ஏற்படுத்தினார் எனலாம்.


ஒருமுறை, மின்னலின் தாக்குதலில் மயிரிழையில்தப்பின லூத்தர், துறவியாவேன் எனப் பொருத்தனை செய்து கொண்டார். உலகை வெறுத்து ஒரு துறவியர்இல்லத்தில் தன்னை அடைத்துக் கொள்வதால் தேவனுக்குப் பணிவிடை செய்வதாய் நம்பினார். ஆயினும்,அந்த மடத்தின் கனத்த மதில்களுக்கு தன் உள்ளத்தில் எரியும் இச்சைகளை எழாமல் தடுக்கும் வலுவில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டார். சுயக்கட்டுப்பாடு, உபவாசம், உறங்காதிருத்தல், சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்ளுதல் போன்றமுயற்சிகளும் தனக்குள் சமாதானம் கொண்டுவர இயலாதவை என அறிந்த அவரது உள்ளம் குழம்பித்தவித்தது.


ஒருநாள், மிகவும் தற்செயலாய், அம்மடத்திலுள்ள பாழடைந்த ஒரு பழைய அறையில், ஒரு வேதப் புத்தகத்தைக் கண்டெடுத்தார். ஜெர்மானிய மொழிபெயர்ப்பான அந்த வேதப்புத்தகம், மொழியறிஞர்களே புரிந்துகொள்ளக்கூடிய இலத்தீன் மொழியில் இருந்தது.அதிர்ஷ்டவசமாக, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் மார்ட்டின் லூத்தர் சிறப்பான புலமைப் பெற்றிருந்தார்.


புத்திசாலியான மார்ட்டின், கற்றுக்கொள்ளும்ஆர்வத்திலும் வேகத்திலும் மற்ற மாணவரைவிடச்சிறந்து விளங்கினார். 1508ஆம் ஆண்டு இறையியல்பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.


1510இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த அவர் ரோமாபுரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்டலூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக் கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல்ஒன்றைக்கேட்டார். அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது.இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” எனரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.