Thursday, September 13, 2012

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி - சீகன்பால்க்கின் வாழ்க்கை - பகுதி 1


இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி
இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரிபர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம்.

பிறப்பும் இளமைப் பருவமும்:
சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.

சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.

மனந்திரும்புதலின் அனுபவம்:
பால்னிட்ஸில் லத்தின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சீகன்பால்க் கோயர்லிட்ஸில் தனது 12-ம் வயதில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். அவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் அவரை கடவுளைத் தேதும்படிச் செய்து சில மாதங்களுக்குப் பிறகு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. அவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. அதன் விளைவாக அவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றலாயிற்று. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் அவரில் எழுந்தது.

கல்வியும் மிஷனரிப் பணி ஆயத்தமும்
1703 ல் இறைஇயலில் உயர்கல்வி பெற சீகன்பால்க் ஹாலே பல்கலைகழகம் வந்து சேர்ந்தார். பிலிப் ஸ்பென்னர் மற்றும் ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் மிகவும் கவரப்பட்டார். நவீன மிஷனரி இயக்கம் தோன்ற காரணமாயிருந்த பக்தி இயக்கத்திற்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்த ஸ்பென்னர் தான். பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்தி இயக்கத்தின் கல்வி மையமாகத் திகழ்ந்தது.

ஹாலேயில் கல்வி பயின்ற நாட்களில் சீகன்பால்க் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது சரீர பலவீனத்தைக் குறித்து குறிப்பிடுகையில் "நான் எங்கிருந்தாலும் என் நேசக் சிலுவை என்னைப் பின் தொடருகிறது" என்பார். இருப்பினும் அவர் அனுபவித்திருந்த இயேசு அருளிய சுவிசேஷத்தின் பெலன் அவரது எல்லாச் சரீர பெலவீனங்களிலிருந்தும் அவரைத் தூக்கி நிறுத்தியது. உண்மையிலேயே இறையியல் பயிற்சியின் கடுமையான படிப்பிற்கு ஈடுகொடுக்க அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். நல்ல முறையில் எபிரேய மொழியைக் கற்றார். மற்றவர்களுக்கு போதிக்கிற தான் ஆகாதவனாகாதபடி தன்னை காத்துக்கொள்ள அனுதினமும் ஜெபித்து தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார். அவருக்கிருந்த சரீர பெலவீனம் அவர் கருணையுடனும் மன பணிவுடனும் வாழ பெருந்துணைப் புரிந்தது.

No comments:

Post a Comment