Thursday, September 13, 2012

பர்த்தலமேயு சீகன்பால்க் - திருமணமும் மரணமும் - பகுதி 4

திரும‌ண‌மும் குடும்ப‌ வாழ்வும்:
ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் இந்திய‌வில் அருட்ப‌ணி செய்த‌பின் சீக‌ன்பால்க் விடுமுறைக்கு ஐரோப்பா சென்றார். அங்குடென்மார்க் ம‌ன்ன‌ரை ச‌ந்தித்து த‌ன‌து வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரி ப‌ணித்திட்ட‌ங்க‌ளை விவ‌ரித்து தேவையான‌ ஆத‌ர‌வைக்கோரினார். அவ‌ரும் ஐரோப்பாவில் இந்திய‌ அருட்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் ப‌ண‌த்தொகையைத் திர‌ட்டினார்.
ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அவ‌ர் விஜ‌ய‌ம் செய்த‌போது ம‌ரியா டார‌த்தி என்ற‌ இள‌ம் பெண்ணை ச‌ந்தித்தார்.ம‌ரியாவின் க‌ல‌க‌ல‌வென்ற‌ சிரித்த‌ முக‌ அழ‌கும் ந‌ற்குண‌மும் அவ‌ரை வெகுவாய்க் க‌வ‌ர்ந்த‌ன‌. ம‌ரியாவும்சீக‌ல்பால்க்கை விரும்பி த‌ன‌து விருப்ப‌த்தை தெரிவிக்க‌ விரைவில் திரும‌ண‌ம் 1715 ம் ஆண்டு டிச‌ம்ப‌ரில்ந‌டைபெற்ற‌து. திரும‌ண‌ம் ஆன‌தும் இருவ‌ரும் ஹால‌ந்து ம‌ற்றும் இங்கிலாந்து வ‌ழியாக‌ இந்தியாவுக்கு ப‌ய‌ண‌ம்மேற்கொண்டு 1716 ம் ஆண்டு ஆக‌ஸ்ட் மாத‌ம் சென்னை வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அவ்விருவ‌ருக்கும் இந்திய‌ ம‌க்க‌ளின்அன்பான‌ வ‌ர‌வேற்பு காத்திருந்த‌து. த‌மிழ் ம‌க‌ளீர் த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை மிஷ‌ன‌ரியின் ம‌னைவியிட‌ம் த‌ய‌க்க‌மின்றிப‌கிர்ந்து ஆலோச‌னைப் பெற்ற‌ன‌ர். இவ்வித‌ம் இருவ‌ரும் ஒரு அணியாக‌ ம‌ற்ற‌ மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌ங்க‌ளோடு சிற‌ப்புமிக்க‌ அருட்ப‌ணியாற்றி வ‌ந்த‌ன‌ர்.

மிஷ‌ன் நிர்வாக‌ குழுவின் த‌வ‌றான‌ திட்ட‌ம்:
கிறிஸ்டிய‌ன் வென்ட் (Christian Went) என்ற‌ செய‌ல‌ரின் த‌லைமையில் இய‌ங்கிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழு மிஷ‌ன‌ரிக‌ளின்ந‌டைமுற‌க்கு க‌ட்டுப்பாடுக‌ளைக் கொண்டு வ‌ந்த‌து.

அவையாவ‌ன‌:
அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் கால‌த்தைப் போன்று மிஷ‌ன‌ரிக‌ள் எந்த‌ பொருள் உத‌வியுமின்றி நாடெங்கிலும்சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கித்து அருட்ப‌ணியாற்ற‌ வேண்டும். மிஷ‌ன‌ரிக‌ள் குடும்பமாக‌ ஓர் இட‌த்தில் த‌ங்கிஅருட்ப‌ணியாற்ற‌ கூடாது.

புதிதாக‌ கிறிஸ்த‌வ‌ரானோர் த‌ங்க‌ளை திருச்ச‌பையாக‌ அமைத்துக்கொண்டு த‌ங்க‌ள் சொந்த‌ செல‌வில் ஆல‌ய‌ம்ம‌ற்றும் பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ வேண்டும்.

சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டிய‌ மிஷ‌ன‌ரிக‌ள் ஆல‌ய‌ம் க‌ட்டுத‌ல், ப‌ள்ளிக‌ள் நிறுவித்த‌ல் போன்ற‌காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட‌க்கூடாது.

இப்ப‌டி த‌வ‌றாக‌ எடுத்த‌ முடிவுக‌ள் மிஷ‌ன‌ரிக‌ளுக்கும் மிஷ‌ன் செயல‌ருக்கும் இடையில் பெரும் நெருக்க‌டியைஉருவாக்கிற்று. த‌ர‌ங்க‌ம்பாடியில் ந‌ல்ல‌ வீடுக‌ளில் மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌மாக‌ வாழ்வ‌து, துற‌வியாய் வாழ்ந்த‌செய‌ல‌ருக்கு அறுவ‌றுப்பாய்த் தோன்றிற்று, விலைவாசி உய‌ர்வினால் மிஷ‌ன‌ரிக‌ள் த‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ ப‌ண‌உத‌வி குடும்ப‌ செல‌வுக‌ளை கொண்டு ச‌ந்திக்க‌ முடியாது போன‌து இவ‌ருக்கு கோப‌த்தை மூட்டின‌து.

ப‌ல‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்திட்ட‌ங்க‌ளிலும் அத‌ன் செய‌ல் முறையிலும் சீக‌ன்பால்க் ஓர் முன்னோடி மிஷ‌ன‌ரியாக‌த்திக‌ழ்ந்தார். அஞ்சாநெஞ்ச‌த்துட‌ன் த‌ன‌க்கு முன் அறிவிக்காம‌ல் மாற்றிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழுவின்கொள்கைக‌ளைக் குறித்து ச‌ட்டை செய்யாம‌ல் மிஷ‌ன‌ரி ஊழிய‌த்தின் ப‌ரிமாண‌த்தை விரிவாக்கினார். இப்ப‌டியாக‌ ப‌ல‌மிஷ‌ன‌ரி பிர‌ச்ச‌னைக‌ளில் த‌ன‌து அணுகுமுறை ச‌ரியே என்று நிரூபித்தார்.

எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தலின் மத்தியில் மிஷனரிப் பணி:
பல முன்னோடி மிஷனரிகளைப் போல சீகன்பால்க்கும் புளூட்சோவும் முடிவில்லாக் கஷ்டங்களை அனுபவித்தனர்.தரங்கம்பாதியிலிருந்த டென்மார்க் சமுதாயத்தாரின் எதிர்ப்பு, பாதிரிகளின் விரோத மனப்பான்மை, மிஷன் நிர்வாககுழுவிற்கும் இவர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கும்இருந்த கருத்து வேறுபாது மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கு அதிக பாடுகளைத் தந்தன.இருப்பினும் தான் அனுபவித்த பாடுகளின் காரணமாய் தன் அருத்பணியைக் கைவிடவில்லை.
டென்மார்க் ஆளுநரின் ஓயாத துன்புறுத்தலின் போது அவர் காட்டிய அஞ்சாமை, தளராமை நம்மை வியப்பில்ஆழ்த்துகிறது. இயேசு கிறிஸ்து மேல் சீகன்பால்க் கொண்ட திட நம்பிக்கை, மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கும்அவரது அஞ்சாமை, தியாக வாழ்க்கை ஜெர்மனியிலிருந்த நண்பருக்கு அவர் எழுதிய ஓர் கடிதத்திலிருந்துவெளிப்படுகிறது.

"எங்கள் பண இழப்பிற்கு பிறகு ஆளுநரும் அவரது இரகசிய மன்றமும் எங்களுக்கு எதிராகவும் எங்கள்திருச்சபைக்கு விரோதமாகவும் கொடுங்கோலராய் செயல்பட்டு நாங்கள் கட்டியெழுப்பிய அனைத்து பணிகளையும்திருச்சபையையும் அழித்து விடுவதாக பயமுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையில் எங்கள்ஜீவனைக் குறித்த நிச்சயமற்று மிகுந்த மனபாரத்துடன் காணப்பதுகிறோம். இருப்பினும் தேவன் எங்களைக்கைவிடாது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களைத் தேற்றி உற்சாகப்படுத்தி சத்தியத்தை எந்தவிதகலக்கமுமின்றி சந்தோஷமாய் அறிவிக்கவும் எங்கள் இரத்தத்தைச் சிந்தி அதனை உறுதிப்படுத்தவும் தயங்காமல்செயல்பத உதவுகிறார்."
 
இளமை மரணம்:
மிஷன் செயலர் வென்ட்(Went) சீகன்பால்க்கை பல இன்னல்களுக்குள்ளாக்கினார். அவருக்கு சீகன்பால்க்கின்மேல்நம்பிக்கையில்லாத்தால் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார். இது மிஷனரிப்பணியை சீகன்பால்க் தொடர்ந்துசெய்ய முடியாதபடி செய்தது. இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு அவரது அனைத்து மாமிச பெலத்தையும்குன்றச்செய்தது. இதன் விளைவாக மிஷன் நிர்வாகக் குழு செயலரால் தொடர்ந்து வந்த நெருக்கடிகளை அவரால்சமாளிக்க முடியாமற் போயிற்று. எனவே ஐரோப்பா சென்று இந்த பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரும்பினார். ஆனால் அவரது சரீர பெலன் மிகுந்தமனச்சோர்வினால் குன்றிவிடவே மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலானார். நாளுக்கு நாள் அவரது பெலவீனம்அதிகரிக்கவே ஐரோப்பா செல்லும் திட்டத்தை கைவிட்டார். தனது வாழ்வை கர்த்தரின் சித்தத்திற்குஒப்புக்கொடுத்தார். "இப்படிப்பட்ட வேதனைகளை நான் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறேன். நான் சுவிசேஷப்பணிக்கு தொண்டு புரிய எப்படியாவது ஆண்டவர் எனக்கு உதவி அனுப்புவார் என்று உறுதியாய் நம்புகிறேன்.இருப்பினும் எல்லாவற்றிலும் அவரது திருவளச் சித்தமே செய்யப்படுவதாக."


1719, பிப்ரவர் 23 ம் நாள் தமிழ் திருச்சபையோரைத் தன்படுக்கையைச் சுற்றிலும் கடைசியாக கூட்டி கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடந்திட அறிவுரை கூறினார். திடீரென தனது கண்களுக்கு முன்பாக தனது கைகளை வைத்து "என் கண்களுக்கு முன்பாக இது மிகவும் பிரகாசமாய்த் தெரிகிறது, இது சூரியன் என் முகத்தில் பிரகாசிப்பதைப் போலிருக்கிறது" என்று கூறினார். அதன்பின் அவரது இறுதி விருப்பமாக "இயேசு கிறிஸ்து என் அரண்" என்ற பாடலின் மெட்டு பியானோவில் வாசிக்கப்பட்டபோது அவர் நித்திய ஓய்வுக்குள் பிரவேசித்தார். இப்படியாக ஜெர்மனியிலிருந்த தன் நண்பனுக்கு முன்னர் எழுதியிருந்தது போல தனது சாட்சியை இரத்தத்தினால் முத்திரையிட்டார்." இளவயதாகிய 36 லேயே தனது உயிரை விட்டார்.
  
பதிமூன்று ஆண்டுகள் இந்தியாவில் பெருஞ்சேவைச் செய்த பின்பு 1719‍ம் ஆண்டில் தனது 36 ம் வயதில் சீகன்பால்க் மறுமைக்குள் சென்றார். மிகுந்த நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் மிக குறுகிய காலகட்டத்தில் அவர் கிறிஸ்துவுக்கு இந்திய மண்ணில் சாதித்த சாதனைகளை நாம் படிக்கும் போது அவைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. இந்த பூவுலகில் குறிப்பாக இந்தியாவில் கர்த்தரின் இராஜ்ஜியம் பரம்பிட நம்மை மிஷனரிப் பணிக்கு அர்ப்பணித்து ஆழமாக ஈடுபட இந்த ஆழ்ந்த ஆய்வு நம்மை அழைக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு உழைத்திடும் மக்கள் அநேகர் இன்று இந்திய மிஷனரி பணிக்கு தேவை. 

No comments:

Post a Comment