டி.எல் மூடி என்ற தேவ மனிதரை
தெரியாதவர்கள் எவருமில்லை. ஒரு நாள் இரவு
தன்னுடைய ஊழியத்தை முடித்து மிகவும் களைப்புடன் தனது
ஓட்டல் அறையில்
தூங்க சென்றார். அப்போது திடீரென்று கர்த்தருடைய ஆவியானவர்
அவரோடு பேசி, 'மகனே பக்கத்து அறையில் உள்ள வாலிபனோடு
சென்று பேசு' என ஏவினார். இவரோ, 'ஆண்டவரே நான் மிகவும்
களைத்து போயிருக்கிறேன் என்பது உமக்கு தெரியாதா, காலையிலிருந்து மாலை வரை அநேக இடங்களில் உம்மை பற்றி
அறிவித்து விட்டேன்.
அந்த மனிதனை நாளை சந்தித்து உம்மை பற்றி கூறுகிறேன்' என்று சொல்லி
விட்டு, தூங்கி விட்டார். மறுபடியுமாக மூன்று முறை ஆவியானவர்
அவரிடம், 'நான் அந்த வாலிபனை இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறேன், நீ போய் பேசு' எனறார். இவரோ,
'ஆண்டவரே நான்
காலையில் போய் சொல்கிறேன்' என கூறிவிட்டு தூங்கி
விட்டார்.
.
பின்பு
அதிகாலையில் யாரோ அங்குமிங்குமாக ஓடுவது போலவும், பரபரப்பாய்
நான்கைந்து பேர் பேசி கொண்டிருக்கிற சத்தத்தையும்
கேட்டு திடுக்கிட்டு
எழுந்த மூடி அறை கதவை திறந்து பக்கத்து அறைக்கு ஓடினார். அந்த கதவை
உடைத்து கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்கும்போது அந்த வாலிபன்
தூக்கிலே தொங்கி கொண்டிருந்தான். அப்போதுதான் இரவு ஆண்டவர்
பேசினதை நினைத்து கதறி அழ ஆரம்பித்தார். உங்களுக்கும்
கூட சுவிசேஷம்
சொல்ல எத்தனையோ தருணம் ஆண்டவர் கொடுத்திருந்தும் அவரை பற்றி
சொல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது அலட்சியப்படுத்தி இருந்திருக்கலாம்.
.
No comments:
Post a Comment