அமெரிக்காவில் நடந்த மனதை நெகிழ வைக்கும்
உண்மை சம்பவம் இது. புதிதாக வாங்கியுள்ள அழகிய காரை தன்
மனைவியிடம் காண்பிப்பதற்காக அவளை வெளியே அழைத்து
வந்தார் ஒரு கணவர். அங்கே அவர்களது நான்கு வயது மகன் ஒரு
சுத்தியலை வைத்து அந்த காரில் அடித்து கொண்ருந்தான்.
அதைக் கண்ட தகப்பன் கோபத்தின் எல்லைக்கே சென்று
விட்டார். அந்த சுத்தியலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது
விரல்களில் ஒரு அடி அடித்தார். அவனது கை விரல்கள்
நொறுங்கி போயின.
.
அவர் கோபம் குறைந்த போது தன் மகனுக்கு தான்
ஏற்படுத்திய தீங்கிற்காக வருத்தப்பட்டார். உடனே அவனை
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள்
எவ்வளவோ முயன்றும் அவனது நொறுங்கிய விரல்களின்
எலும்புகளை பொருத்த முடியவில்லை. அவனது விரல்களை அகற்ற
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மகன் மயக்கம் தெளிந்து கண்
திறந்தபோது, அருகிலிருந்த தகப்பனை பார்த்து, 'அப்பா,
உங்கள் காரில் கீறல் உண்டுபண்ணினதற்கு என்னை மன்னித்து
விடுங்கள்' என்றான். தகப்பனின் உள்ளம் நொறுங்கியது.
பின்பு தன் தகப்பனை பார்த்து, 'என் கை விரல்கள்
திரும்பவும் எப்போது வளரும்' என்று கேட்டான். அவனது
வார்த்தைகளை தகப்பனுடைய உள்ளத்தை மேலும் உடைத்தது. நேராக
வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.
.
'உக்கிரம் கொடுமையுள்ளது: கோபம் நிஷ்டூரமுள்ளது (நீதிமொழிகள் 27:4)
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment