மீட்பைக் காசுக்கு விற்ற நிலை.
புனித மார்டின் லூத்தர் - பகுதி 2 |
சந்தைவெளிச் சரக்கைப்போல இறைவனின் இலவசப் பரிசாகிய மீட்பை காசுக்கு விற்கவும் வாங்கவும்முடியும் என்ற போதனையே புனித மார்ட்டின் லூத்தரின் எரிச்சலைக் கிளப்பியது. டெட்செல் என்ற ‘பாவமன்னிப்புச்சீட்டு விற்பனையாளர்’ ஒவ்வொரு நகரமாகச் சென்று பலமாக முரசறைந்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார். கூட்டம் கூடும்போது, ‘பாவம்செய்யும் உரிமம்’ காசுக்கு விற்கப்படும். விட்டன்பர்க்நகருக்கு டெட்செல் வருவதாகக் கேள்விப்பட்ட லூத்தர், “வரட்டும், அவனது முரசில் துளையிடுவேன்”என்று சவால் விடுத்தார்.
பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனை 1500ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் போர்ஜியா என்ற போப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. புனித பேதுருவின் பேராலயம் கட்ட தேவையான பணம் சேகரிக்க நிர்ப்பந்தம் வந்தபோது, பாவமன்னிப்பு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. எந்தப்பாவமானாலும்—கொலை, விபச்சாரம், பொய், களவு,ஆணையிடுதல், எதுவானாலும்—சரி; செய்த பாவங்கள் மட்டுமல்ல செய்யப்போகும் பாவங்களும் மன்னிக்கப்பட்டன.
நயாபைசாவுக்கு நாலு கத்தரிக்காய்ப் போல இரட்சிப்பு சந்தையில் மலிந்து கிடந்தது. தேவனின் இலவசப் பரிசை ஏளனமான சந்தைப் பொருளாய் மாற்றியதுதான் லூத்தரின் பொறுமையை இழக்கச்செய்த கடைசி அடி! பத்தாம் லியோ எனும் ரோமாபுரி அரசன் லூத்தரைப் பார்த்து கர்ஜித்து, திருச்சபையை அக்டோபர் 2005விட்டு விலக்கிவைக்கும் ஆணையை அனுப்பியதோடு, 60 நாட்களுக்குள் ரோமாபுரி வந்து விளக்கமளிக்கவும், அப்படி வராவிட்டால் நெருப்பில் மடியும்தண்டனையறிவிப்பையும் அனுப்பிவைத்தான்.
இந்த சலசலப்புகளை சட்டைசெய்யாத
லூத்தர்,1520ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று விட்டன்பர்க்நகரின் வாசலுக்கு
வெளியே போப்பின் ஆணையையும், Decretals of clement VI, the Summa
Angelica... the Chrysposus of Dr. Eck, இன்னும்பிற ஆவணங்களையும்
தீயிட்டுக் கொளுத்தினார்.
அந்த நாளிலிருந்து மகா பாபிலோன் மீது ஊற்றப்பட்ட தேவகோபம் அதனை எரித்து முடிக்குமளவும் நின்றபாடில்லை. ‘ஞானி’ என்று பெயர் பெற்ற, விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எலெக்டர்ஃப்ரெட்ரிக், போப்பின் கோபத்திலிருந்து மார்ட்டின்லூத்தரைப் பாதுகாத்தார்.
மார்ட்டின் லூத்தர், புகழ்பெற்ற
Worms என்றஇடத்திற்கு 1521இல் வந்தார். அங்கே சார்லஸ்சக்கரவர்த்தி
முன்னிலையிலும் அரசின் பிரதானிகள்முன்னிலையிலும் தனது நிலையை விளக்கி
நியாயப்படுத்தினார். அவரது கருத்துக்களைத் தவறெனஒத்துக்கொள்ளும்படி
மார்ட்டின் லூத்தரை அவர்கள்கேட்டபோது, அவரது காலத்தை வென்றுநிற்கும் பதில்
இதுதான்: “தங்களுக்குள்ளாகவே வேறுபட்டகருத்துக்களைக் கூறியும், தவறான
கருத்துக்களைஅடிக்கடி பரிமாறியும் வரும் போப் மற்றும் ஏனையமன்றங்கள்
முன்பாக என் விசுவாசத்தைக் கைவிட்டுமண்டியிட முடியாது. வேதத்தின்
சாட்சியால் நான்தவறென்று நிரூபிக்கப்பட்டாலொழிய
என்னுடையவிசுவாசத்திலிருந்து பின்வாங்க முடியாது; பின்வாங்கவும் மாட்டேன்.
இந்த நிலைதான் என் இறுதிநிலை (Here I stand); தேவனே! எனக்கு
உதவிடும்,ஆமென்!”
Worms இல் மார்ட்டின் லூத்தர் தங்கியிருந்தவேளையில், சார்லஸ் சக்கரவர்த்தியின் ஸ்பானியவீரர்கள் உண்டு பண்ணின கலவரம் கொஞ்சநஞ்சமல்ல.மார்ட்டின் லூத்தர் 1520இல் எழுதிய சபையின் பாபிலோனியச் சிறைப்பிடிப்பு என்ற நூலின் அனைத்துப்பிரதிகளையும் அழித்துவிடும்படியாக நடவடிக்கை எடுத்தனர். அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ சபையின்மேல் 1000 ஆண்டுகளாக ரோமாபுரி செலுத்திவந்த ஆதிக்கத்தை, யூதர்களின் எழுபது ஆண்டுபாபிலோனிய அடிமைத்தனத்திற்கு ஒப்பிட்டு எழுதியிருந்தார். இந்த அடிமைத்தனம் விரைவில் ஒழியும் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தம் ஆரம்பித்துவிட்டதெனவும் லூத்தர் உணர்ந்திருந்தார்.காலங்களின் அடையாளங்களை சாத்தானும் அறிவான். தனது கட்டுரைகள் சரியானவையே Worms நகரில் மார்ட்டின் லூத்தர் வாதிட்டுக் கொண்டிருந்த வேளையில் ஸ்பானிய இராணுவத்தினர் அவரது புத்தகத்தின் பிரதிகளை பறிமுதல் செய்யவும்,சுட்டெரித்துப் பொசுக்கவும் வீடுவீடாய் நுழைந்தனர்.
நான்கு உலக சாம்ராஜ்யங்களில் முதல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாய் 5ஆம் சார்லஸ் விளங்கினார். உலக சரித்திரத்திலேயே மிகப் பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை அவரது செங்கோல் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் லூத்தரின் பேனா முனையோ அதனைவிடக் கூர்மையாய் இருந்தது. இறைவனின் சீர்திருத்தத்தை எதிர்த்து நின்றால் இல்லாமற் போய்விடுவாய் என லூத்தர் 5ஆம் சார்லஸை எச்சரித்தார்.அப்படியே, அவர் தோல்வியும் கசப்புமுற்ற மனிதனாய்மடிந்தார்.
No comments:
Post a Comment