இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர்.
அவர்களிடம் தரிசாய் போன விளைநிலம்
இருந்தது. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. அந்த நண்பர்கள்
நமது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்
என பேசி கொண்டனர். தக்காளி பயிரிடலாம் என யோசித்து மறுநாளே
அதற்குரிய வேலையை தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது.
முதல் விவசாயி தன் தோட்டத்தை சுற்றிலும வேலியடைத்தான். அவ்வப்போது
வந்து செடியில் நடுவில் வளரும் களைகளை பறித்து போட்டான்.
ஒவ்வொரு நாளும் கவனமாய் நீர்ப்பாய்ச்சினான். இரண்டாம் விவசாயி,
இவனுக்கு வேலையில்லை, இதற்கெல்லாம் வேலி போட்டு களை பிடுங்க
வேண்டுமா, தண்ணீர் பாய்ச்சினால் போதாதா? என்று கிண்டலாக அவ்வப்போது
முதல் விவசாயியிடம் கூறுவான். கனி தரும் காலம் வந்தது.
இரண்டு
தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும்
தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி 'நான் வேலி
அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும்
நன்றாக காய்த்திருக்கிறதுதானே, நீ வேலி அடைத்து உன் பணத்தையும்,
களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். நீ வெட்டி வேலை
செய்திருக்கிறாய்' என்று ஏளனம் செய்தான். ' தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றி விட்டது. நாளை
பறித்தால் சரியாக இருக்கும்.
ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய்
போடுவோம்' என்று பேசி கொண்டார்கள்.
.
சாக்குகளோடு
மறுநாள் அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலியடைக்காத
தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் பறிக்கப்பட்டு தோட்டமே
அலங்கோலமாக கிடந்தது. காரணம் யாரோ நெடுநாளாய் இந்த தோட்டததை
கவனித்து வந்துள்ளனர். பறிக்க சரியான நோம் பார்த்திருந்தனர். வேலியும் இல்லாததால் எந்த
சிரமுமின்று பறித்து சென்று விட்டனர். இதை
கண்டவுடன் இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை
அடைத்தது. துக்கத்தோடு திரும்பி சென்றான்.
No comments:
Post a Comment