Sunday, September 30, 2012

பாடுவேன் பரவசமாகுவேன்

ஒரு தாய் எப்போதும் ‘எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே’ என்னும் பாடலை பாடி கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு கேட்டு, அவர்களுடைய சிறிய மகன் அந்தப் பாட்டின் வார்த்தைகளை மனப்பாடமாய் கற்று வைத்திருந்தான். அந்த தாயார் அவனது சிறு வயதிலேயே மரித்து போனதால், அவன் வாலிபனானபோது, அவன் வேண்டாத நண்பர்களோடு சேர்ந்து, தன் வாழ்வை கெடுத்து, குடி போதை மருந்துகள் போன்ற கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி, உயிர் போகும் நிலையில் ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு மருந்துக் கொடுக்க வந்த ஒரு செவிலி பெண், அவனது படுக்கையை ஒழுங்குப்படுத்தி கொண்டே, அந்தப் பாடலை மெதுவாக பாடிக்கொண்டு தன் வேலையை செய்துக்கொண்டிருந்தாள். அதை கேட்ட அந்த வாலிபனுக்கு, பழைய நினைவுகள் வரத்தொடங்கின. தன் தாயின் ஞாபகம் வந்து, அவன் கண்களில் கணணீர் வரத்தொடங்கியது. அந்த நர்சிடம் ‘
தயவுசெய்து, அந்தப் பாடலை எனக்காக பாடுங்கள், என் தாயார் என் சிறுவயதில் பாடுவார்கள்’ என்று கேட்டு கொண்டான். அதன்படி அந்த நர்ஸ் பாட ஆரம்பித்த போது, அந்த வரிகள் அந்த வாலிபனின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. அவனுடைய கல்லான இருதயம் உடைய ஆரம்பித்தது. அடுத்த நாள் அவனை பார்க்க வந்த போதகரிடம் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவன் இயேசுவை ஏற்றுக் கொண்டவனாக அந்நாளில்தானே மரித்துப் போனான். நாம் சும்மா இருக்கும் நேரங்களில் பாடல்களை முணுமுணுக்கும்போது அவை ஒருவேளை மற்றவர்களை தொடலாம்!
.
இசை என்பது, மனிதனின் இருதயத்தை தொடக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் மைக்கேல் ஜாக்சன் மரித்த போது, அந்த கலைஞனுடைய இசையில் எத்தனை பேர் அடிமையாய் இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம்.
.
வசனம் சொல்கிறது, ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்’ என்று. நம் இருதயத்தில் எப்போதும் கர்த்தரை துதிக்கிற கீதம் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சங்கீதம் 118:15

No comments:

Post a Comment