Tuesday, September 30, 2014

உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )

அந்தரத்தில் தொங்கும் பூமி



அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக கிரேக்கர்கள் நம்பி வந்தனர். ஆரியர்களோ ஒரு பெரிய யானை  இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர். 

ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.

அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)
 
நன்றி: HI CHRISTIANS

Monday, September 29, 2014

உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )


நன்றி: HI CHRISTIANS
உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.



கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. 

எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.

விலையுயர்ந்த வைரம் - ஜெபிக்கிற ஜெபங்கள்

பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, 'நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே' என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது.
.
நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. மரம் மண்ணுக்குள் புதைந்து போனது. பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது. ஒருநாள் சாலையமைப்பதற்காக ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர். இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு, ஜொலிக்கிற வைரமாக மாறினது.

பிரியமானவர்களே, நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம். இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி, உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும்.

Sunday, September 28, 2014

பிரயாணம் செய்யம் சூரியன்- ( வேதாகம அறிவியல்-04 )



நன்றி: HI CHRISTIANS
 

சூரியன் வினாடிக்கு 200மைல் வேகத்தில் நகர்ந்தால் நட்சத்திர மண்டலததைச் சுற்றிவர 250 கோடி வருஷங்களாகும். மற்ற கோடிக் கணக்கான சூரியன்களோடு நம் சூரியனும் அதிவேகமாய் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது.

"அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அதுதன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாள னைப் போலிருந்து பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
அது வானங் களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு அவைகளின் மறு முனை வரைக்கும் சுற்றி ஓடுகிறது. அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை” (சங் 19.4-6) என்று வேதாகமம் கூறுகிறது.

வேதாகம உண்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டே இருக்கிறது. என்று இக்கால விஞ்ஞானிகள் பெற்றிருக்கும் அறிவை அக்கால வேதாகம எழுத்தாளர்கள் எப்படி அறிந்திருந்தார்கள்?

Saturday, September 27, 2014

கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும். ( வேதாகம அறிவியல் - 03 )



நன்றி: HI CHRISTIANS
 

கர்ப்பத்தில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும், வேத வார்த்தையில் குறிப்பிடப்பட்ட அவ்வந்த நாட்களிலே, கர்த்தரின் 7 பண்டிகைகளையும் தன் கர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறார். இப் பண்டிகைகள் யூத பண்டிகைகள் அல்ல கர்த்தரின் பண்டிகைகளாயிருக்கின்றன. இவை வருடந்தோறும் சந்ததி சந்ததியாக சபை கூடி அவ்வந்த பரிசுத்த நாட்களில் அனுசரிக்கப்பட வேண்டிய பண்டிகைகளாயிருக்கின்றன. (
லேவி 23.21) 3500 வருடங்களுக்கு முட்பட்ட காலத்தில் கர்ப்பத்தில் வளரும் கருவுக்கும், கர்த்தரின் பண்டிகைகளுக்குமிடையிலான இத் தொடர்பை எவரும் அறிந்திருக்கவில்லை. இன்று கூட கிறிஸ்தவ வைத்தியர், தாய்மார் அறியாத ஒரு மறைபொருளாய் இவ் அபூர்வமான உண்மை காணப்படுகின்றது.
கர்த்தர் தாமே இப்பண்டிகைகளை அனுசரிக்கும் படி மேசேயிடம் கட்டளை யிட்டார். இதிலிருந்து ஒரு சிருஷ்டிகர். இருக்கிறாரென்றும், அவா் கருவிலிருந்து கல்லறை மாத்திரமாக ஆண் பெண் இரு பாலாருடைய வாழ்க்கைச் சக்கரத்தை பரிபலிக்கிறாரென்றும் அறிந்து அவதானத்தை தம் யூத வேர்களண்டை தேவன் திரும்ப முனைகிறார்.
சோலா லெவிட் எனப்பட்ட உரு யூதன் புதிய பெற்றோருக்கு ஆலேசனை வழங்கும் முகமாக எழுத முனைந்த ஒரு நாவலுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பொழுதே இவ்வுண்மை வெளிப்பட்டது. சோலா லெவிட் ஒரு வைத்தியரை நாடிச் சென்று கருத்தரிப்பு முதல் பிள்ளை பிறக்கும் வரைக்கும் கருவிலே உருவாகும் மாற்றங்களைக் குறித்து வினாவினார். அவ் வைத்தியரும் விளக்கம் கொடுக்க முன் வந்தார்.
சில படங்களைக் காட்டியவாறே “முதலாவது மாதத்தின் 14ம் நாள் முட்டை உருவாகிறது” என்றார் உடனே சோலா லெவிட் யூதனாய் இருந்ததால், சரியாக இத்திகதியிலேயே பாஸ்கா பண்டிகை தன் வீட்டில் அனுசரிக்கப்படுவது இவருக்கு ஞபகம் வந்தது.(லேவி-23:5) தன் வீட்டு மேசையிலே பண்டிகை நாளன்று வைக்கப்படும் சுடப்பட்ட முட்டையும் ஞபகத்திற்கு வந்தது.
வைத்தியர் தொடர்ந்து இம்முட்டை உருவான 24 மணிநேரத்திற்குள் விந்தை சேர்ந்து கருத்தரிக்க வேண்டும். அல்லாவிட்டால் வெளியேறிவிடும் என்று கூறினார். உடனே சோலாவுக்கு புளிப்பில் அப்பப்பண்டிகையும், கோதுமை மணியானது நிலத்திலே விழுந்து சாக வேண்டும் என்ற வசனமும் ஞபகத்திற்கு எட்டியது. அது செத்தால் மாத்திரமே பயிர் வளர்ந்து அது அறுவடை செய்யப்பட்டு கர்த்தருக்கு முதற்பலனாக செலுத்த முடியும். (லேவி. 23.6)
மேலும் அவ் வைத்தியர் “கருக்கட்டிய முடடையானது 2-6 நாட்களுக்கிடையில் கருப்பையின் சுவரிலே ஒட்டி வளரதத்தொடங்கும்” என்று விளக்கினார். முதற்பலன் பண்டிகையும், பாஸ்கா பண்டிகை கெண்டாடப்பட்டு 2-6 நாட்களுக்கு அனுசரிக்கப்டுகிறது.
அடுத்ததாக அவ் வைத்தியர் வளர்ந்த ஒரு கருவின் படத்தைக் காட்டினார். சிசுவின் தலை, கை, கால், விரல்கள் அனைத்தும் அதிலே தென்பட்டது. “வளாத்தியின் 50ம் நாளிலே இவ்வாறான உருவத்தை சிசு பெற்று மனுசஷாயலாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.” இம்மாத்திரமாய் கருவில் வளர்வது வாற்பேயா, வாத்தா என்று செல்லிட முடியாதென்றும் வைத்தியர் கேலியாச் சொன்னார். உடனே சோலாவுக்கு பாஸ்காவின் 50ம் நாளிலே கொண்டாடப்படும் பெந்தக்கொஸ்து பண்டிகை ஞபகம் வந்தது. (லேவி.23.16)
7ம் மாத கருவின் படத்தை அடுத்ததாய்க் காண்பித்து “7ம் மாதத்தின் 1ம் நாளிலே குழந்தையின் செவிப்புலன் பூரணப்படுகிறது, ஓசைகளை சிசு உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. என்றார். வைத்தியா் அதே தினமே எக்காளப்பண்டிகை கொண்டாடப்படுவதை சோலா உணர்ந்து கொண்டார். (லேவி.23.27)
தொடர்ந்து வைத்தியர் “7ம் மாதத்தின் 10ம் நாள், குழந்தை தன்னைத் தானே போஷிக்கும் வண்ணமாக, தாயின் ஈமோகுளோபின் சிசுவுடையதாக மாற்றப்படுகின்றது.” என்றார். இது பாவ நிவர்த்திப் பண்டிகை. அதி பாரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே இரத்தம் கொண்டு செல்லப்படும் தினம் என்று சோலா அறிந்து கொண்டார். (லேவி. 23.27)
7ம் மாதம் 15ம் நாளிலே குழந்தையின் சுவாசப்பை பரிபூரணப்பட்டு தன்னியக்கம் பெறுகிறது. இதற்கு முன் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை சுவாசிக்க சிரமப்படும் என்றார். வைத்தியர். இதுவே கூடாரப் பண்டிகை தேவாலயத்தில் தேவ மகிமை தங்கும் நாள் தேவாவியானவரின் மகிமை நிரம்பும் நாளாகவும் அனுசரிக்கப்படும் பண்டிகை (லேவி-23:24) புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க பாஷையிலே சுவாசமும் பரிசுத்தாவியும் ஒரே சொல்லினால் அழைக்கப்படுகின்றது.
குழந்தை 9ம் மாதத்தின் 10 நாள் பிறக்கின்றது. பிறந்து 8ம் நாளில் யூத குழந்தைகள் விருத்தசேதனம் பண்ணப்படுகின்றன. சரியாக “ஹனூக்கா” பண்டிகை கொண்டாடப்படும் நாள் இது. பஸ்காவின் பின் 9ம் மாதத்தின் 10ம் நாள். (சங்கீதம். 139. 14)