Monday, September 29, 2014

உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )


நன்றி: HI CHRISTIANS
உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.



கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. 

எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.

No comments:

Post a Comment