ஒரு போர் நடந்து
கொண்டிருந்த காலத்தில், ஒரு இராணுவ அதிகாரி தன் போர்
வீரர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்வையிட
சென்றிருந்தார். அவர் எதிரிகளுக்கு எதிரான சுவர் போன்ற
ஒரு இடத்தில் நின்று கொண்டு எதிரியின் படைகளை பார்க்க
சென்றார். அப்போது அந்த இராணுவத்தை சேர்ந்த உயர்
அதிகாரிகள், 'இந்த இடத்தில் நீங்கள் குனிந்து செல்ல
வேண்டும். எதிரிகள் சுடுவார்கள்' என்று எச்சரித்தனர்.
ஆனால் அவரோ, 'ஒரு யானையே நின்றாலும் அவ்வளவு தூரத்தில்
இருந்து எதிரிகளுக்கு தெரியாது' என்று கூறியவாறு
பார்வையிட்டு கொண்டிருந்தார். அவர் சொல்லி முடிக்கவும்,
அவர் மேல் எதிரியின் ஒரு குண்டு பாய்ந்து, அந்த
இடத்திலேயே உயிர் இழக்க நேரிட்டது. எதிரியை குறித்து
அத்தனை தவறாக எடை போட்டார். அதனால் அவர் உயிருக்கே ஆபத்து
வந்தது.
.
'தன்னை
நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு
எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' என்று வேதம் நம்மை
எச்சரிக்கிறது. நீங்கள் எத்தனை
ஆவிக்குரியவர்களாயிருந்தாலும் சரி, எத்தனை சோதனைகளை
ஜெயித்தவர்களாயிருந்தாலும் சரி, வசனம் சொல்கிறது
விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்ககடவன் என்று.
சத்துருவுக்கு எதிரான நம்மை காத்து கொள்வதில் நாம்
மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ
வாழ்க்கை என்பது, ஒரு இரயிலில் போய் ஏறி, காலை வரை தூங்கி,
பின் நம் இடத்திற்கு செல்லும் சொகுசான வாழ்க்கை அல்ல.
'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;
ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற
சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச்
சுற்றித்திரிகிறான்' (1பேதுரு 5:8) என்று
வேதம் நம்மை எச்சரிக்கின்றது.
No comments:
Post a Comment