Saturday, June 30, 2012

Adoniram Judson - சத்திய வேதம் பக்தரின் கீதம்

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் (Burmese Language) மொழி பெயர்ப்பதற்கு அதோனிராம் ஜட்சன் (Adoniram Judson) என்ற அருமையான மிஷனரிக்கு 20 வருடங்கள் ஆனது. 1824, இங்கிலாந்திற்கும், பர்மாவிற்கும் இடையில் நடந்த போரில் அவர் மிஷனரியாக இருந்த காரணத்தால் ஜட்சன் சிறையிலடைக்கப்பட்டார். அவரது மனைவி புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை எடுத்து, தாங்கள் இருந்த குடிசையின் தரையில் புதைத்து வைத்தார்கள். ஆனால் ஈரப்பசையின் காரணமாக, அது பூஷணம் பிடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்ட அவரது மனைவி, அதை எடுத்து, ஒரு பஞ்சில்உருட்டி, அதை ஒரு தலையணை போல செய்து, அதை சிறையிலிருக்கும் தன் கணவரிடம் கொண்டுப் போய் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த ஒன்பது மாதங்களில் ஜட்சனை இன்னும் மோசமான சிறையில், அவருடைய கால்களில் ஐந்து சங்கிலிகளால் கட்டி, அவரை மாற்றினர். அவரோடு இன்னும் நூறு பேரை அடுத்த நாள் காலையில், தூக்கிலடப்போவதாக அறிவித்தனர். அவருடைய தலையணை சிறைச்சாலையின் தலைவனுக்கு கொடுக்கப்பட்டது. அதை அறிந்த அவரது மனைவி, அதைவிட நல்ல தலையணையை கொடுப்பதாகவும், தன் கணவனது தலையணையை தனக்கு கொடுக்கும்படியாகவும் வேண்டி, அதை பெற்றுக் கொண்டார்கள்.
.
அடுத்த நாள், கர்த்தர் அவரை தூக்கிலிடாதபடி அதிசயமாயக் காத்தார். அவரை வேறோரு சிறைக்கு கொணடுச் சென்றார்கள். திரும்பவும் அவரது தலையணை அவருக்கு கிடைத்தது. ஒரு நாள், அந்த சிறையின் பாதுகாவலர் அந்த தலையணையை பிடுங்கி, அது வீணானது என்று அதை வெளியே தூக்கி எறிந்தார். அப்போது அந்தப் பக்கமாய் வந்த ஒரு கிறிஸ்தவர் அதை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது, அதில் பொக்கிஷமான வேத வாக்கியங்கள் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பாக வைத்தார். போர் முடிந்தபிறகு அந்த வேத வார்த்தைகள் பத்திரமாக இருப்பதுக்கண்டுபிடித்து, அதை அச்சிட்டனர். பத்து வருடங்சகள் கழித்து, 1834 ஆம் ஆண்டு, முழு வேதாகமமும் கடினமான மொழி என்றுச் சொல்லப்படுகிற பர்மிய மொழியில் அச்சிடப்பட்டு, வெளியாக்கப்பட்டது.
.
அடுத்த முறை உங்கள் கைகளில் வேதம் தவழும்போது, அது உஙகள் சொந்த மொழியில் வருவதற்கு எத்தனைப் பேர் எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள், எத்தனை துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும், எத்தனை இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை அறிந்து, அப்படி வேதனைகளை அனுபவித்தும் மற்றவர்கள் கர்த்தருடைய வேதத்தை காண, படிக்க வேண்டும் என்று பாடுபட்ட ஒவ்வொருவருக்காகவும் கர்த்தரை துதியுங்கள்.
.
வால்டர் என்னும் பிரஞ்சு மொழி நாத்திகன், கிறிஸ்து இல்லை, வேதம் பொய்யானது என்று தான் மரிக்கும் நாள் வரைக் கூறி வந்தான். ஆனால் மரிக்கும்போது, அவன் சொன்னான், ‘நான் தேவனாலும், மனிதர்களாலும் கைவிடப்பட்டு, என் நித்தியத்தை நரகத்தில் கழிக்கப் போகிறேனே’ என்று கதறியவனாக மரித்தான். எந்த வீட்டில் இருந்து, அவன், தேவன் இல்லை என்றுச் சொன்னானோ, அந்த வீட்டிலேயே வேதாகம சங்கம், அச்சு பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து, இலடசக்கணக்கான வேதாகமங்களை, அச்சிட்டு வெளிவரச் செய்ய தேவன் உதவி செய்தார்.

William carey

இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த மிஷனெரி வில்லியம் கேரி அவர்கள் வங்காள மொழியில் வேதத்தை மொழி பெயர்த்ததுடன், இந்தியாவில் சுவிஷேசம் பரவ அரும் பாடுபட்டார். இந்து மதம் மேலோங்கியிருந்த பகுதியில் தானே அவர் செராம்பூர் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தை நிறுவினார். இந்திய மக்களுக்கு அவர் செய்த தொண்டினை பாராட்டும் வகையில் இந்திய அரசு அவர் பெயரில் ஒரு தபால் தலையை வெளியிட்டது. ஒரு கிறிஸ்தவ மிஷனெரியின் பெயரில் ஒரு தபால் தலை வெளிவந்தது, இந்திய சரித்திரத்திலேயே முதல் முறையாகும். அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விருந்தும் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
.
அவ்விருந்தில் கலந்து கொண்ட மற்றொரு ஆங்கிலேயர் இவர் மீது பொறாமை கொண்டவராய், 'கேரியை இங்கிலாந்திலேயே எனக்கு தெரியும், அவர் ஒரு சாதாரண காலணி தயாரிப்பாளராகத்தான் இருந்தார்' என எல்லாரும் கேட்கும்படி சொன்னார். உடனே கேரி புன்முறுவலுடன், ' ஐயா நான் காலணி தயாரிப்பாளராக அல்ல, பிய்ந்த செருப்பை தைப்பவனாகத்தான் இருந்தேன்' என பணிவுடன் கூறினார்.
.
கிறிஸ்தவரல்லாதவராயினும், இயேசுகிறிஸ்துவின் மலை பிரசங்கத்தை நேசித்து வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் காந்தியடிகள். நம் நாடு சுதந்திரமடைய மறியல் நடத்திய போது, ஒரு அரசு அலுவலகத்தின் முன் தன் கூட்டத்தாரோடு படுத்திருந்தார் அவர். ஆங்கிலேயன் ஒருவன் அவருடைய வாயில் உதைக்கவே, வாய் முழுவதும் இரத்தம் கொட்டியது. அந்த நேரத்திலும், 'ஐயா உங்கள் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதா' என்று ஆங்கிலேயனிடம் கேட்டார். அவன் தலைகுனிய வேண்டிதாயிற்று.

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து தனது கணவனுடைய இரட்சிப்புக்காக மிகுந்த கரிசனையோடு ஜெபித்து வந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களது கணவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை. அவர் எனக்கு உண்மையற்றவராகி திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் விட்டார் என்று நினைத்து ஆண்டவர் மீது வெறுப்பு ஏற்பட்டு ஜெபிப்பதை நிறுத்தி விட்டார்கள். ஆண்டவருக்காய் ஜீவிப்பதை முற்றிலுமாய் விட்டுவிட்டார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பாராதவிதமாக ரோஜர் சைமன் என்பவர் திருமதி ஹேனோவர் அவர்களை  சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்ன காரியம் அவர்களை மிகுந்த ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது. 'திரு ஹேனோவர் மரணமடைந்த நாள் அன்று நான் சாலை ஓரத்தில் நின்று யாராவது என்னை இலவசமாக காரில் ஏற்றி செல்ல மாட்டார்களா என்று காத்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் கணவர் என் சைகைக்கு இசைந்து காரை ஓரமாக நிறுத்தினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவரோடு பிரயாணம் செய்தேன். அந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இயேசுகிறிஸ்துவை குறித்தும் என்னுடைய சாட்சியையும் அவரோடு பகிர்ந்து கொண்டேன். தன்னுடைய பாவங்களை குறித்து குத்தப்பட்டவராக, மனஸ்தாப்பட்டு மனம் திரும்பினார். காரை ஓரமாக நிறுத்தினார். தன்னையும் அறியாமல் அழுதார். முழங்காலில் நின்று தான் தேவனுக்கு  விரோதமான பாவி என்பதை அறிக்கை செய்தார். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி கொண்டேன். அன்றே அவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்று அறிந்தேன். தேவனுடைய செயல் எவ்வளவு மகத்தானது என்பதை பாருங்கள். ஆண்டவர் அவரில் அன்பு கூர்ந்த காரணத்தால் அவரை இரட்சித்து, தம்மோடு சேர்த்து கொண்டார். இது எவ்வளவு பெரிய சிலாக்கியம்' என்றார்.


திருமதி ஹேனோவருக்கு மிகுந்த சந்தோஷம் ஒரு பக்கம், மிகுந்த துக்கம் மற்றொரு பக்கம். தன் கணவர் அவரது மரணத்திற்கு முன்பாக இரட்சிக்கப்பட்டு விட்டார். உண்மையிலேயே ஆண்டவர் தன் ஜெபத்தை கேட்டிருக்கிறார் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. அதே சமயத்தில் ஆண்டவரை விளங்கி கொள்ளாமல் அவரை துக்கப்படுத்தி விட்டோமே என்று கவலை ஒரு புறம். 'ஆண்டவர் எவ்வளவு உண்மையுளளவர், நான் உண்மையில்லாதவளாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராக இருந்திருக்கிறாரே' என்று மனமகிழ்ந்தார்

Friday, June 29, 2012

சாது சுந்தர் சிங் - சுயத்தை வெறுப்போம்

சாது சுந்தர் சிங் அவர்கள் திபெத்தில் ஊழியம் செய்த நாட்களில், ஒரு குளிர் நாளில் திபெத்தின் மலைகள் வழியாய் அவர் போய் கொண்டிருநதார். சாயங்கால வேளையானதால் குளிர் அதிகமாகி கொண்டே வந்தது. இவரை போல திபெத்திய வழிபோக்கனொருவனும் இவருடன் சேர்ந்து கொண்டான். பனி மூடிய அம்மலை சிகரங்களில் பயங்கர குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தபடியாலும், பனிபெய்து கொண்டிருந்தபடியாலும், குளிரின் கொடுமையை தாங்காமல் தாங்கள் கருதிய ஊர்போய் சேருமுன் குளிரால் விரைத்து இறந்து போவோமென்று பயந்து கொண்டே இருவரும் நடந்தார்கள்.
.
ஓரிடத்தில் அவர்கள் வந்தபோது, ஆழமான செங்குத்தான ஒரு பள்ளத்தில் செத்தவன் போல கிடந்த ஒரு மனிதனை கண்டனர். சுந்தர் இவனையும் சுமந்து கொண்டு அவ்வூர் போவோம் என்று தன் சகபயணியிடம் கூறினார். ஆனால் அவனோ, 'நாம் உயிரோடே ஊர் போய் சேர்வதே பெரிய காரியம், அப்படி இருக்க இவனையும் தூக்கி கொண்டு செல்வதா? என்னால் முடியாது, உனக்கு இரக்கமிருந்தால் நீயே சுமந்து கொண்டு வா, நான் முன்னே போகிறேன்' என்று சுந்தரிடம் சொல்லிவிட்டு, தன் வழியே வேகமாய் நடந்தான். ஆகவே சுந்தர் தாமே அந்த மனிதனை தன் தோளின்மேல் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.  குளிரும் அதிகரித்து, இருட்டவும் ஆரம்பித்தது. தோளின் மேல் இருந்தவன் உடலும், சுந்தர் உடலும் உரசி கொண்டதால் சிறிது அனல் உண்டானது. அது வீசிக் கொண்டிருக்கும் கடுங்குளிரை தாங்கி கொள்ள  போதுமானதாயிருந்தது. அப்படி அவர் நடந்து சென்றபோது, பாதையில் ஒருவன் இறந்து கிடந்ததை பார்த்தார். அருகில் வந்தபோது, அவன், தன்னுடன் வழி நடந்து தனக்கு முன் சென்ற பயணிதான் என்று அறிந்து கொண்டார். அவன்  குளிர் தாங்காமல் இறந்து போனான். இவர்கள் இருவராய் இருந்ததினால் அனல் உண்டாகி, குளிரை தாங்க தக்க பலனை கொடுத்தது. சுமந்து வந்தவனை பக்கத்து கிராமத்தில் சேர்த்தார். 'தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை

இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்' என்ற தேவ வசனத்தோடு ஒப்பிடடு இந்த நிகழ்ச்சியை சுந்தது அடிக்கடி தன் பிரசங்கத்தில் கூறுவார்

Wednesday, June 27, 2012

இனி காலம் செல்லாது... - (வெளிப்படுத்தின விசேஷம் 10:6).

ஒரு சர் ஜேம்ஸ் ஜின் என்பவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வானிலை விஞ்ஞானி. கிரகங்களின் ஓட்டத்தை குறித்து அவர் புதிய காரியங்களை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார் சூரிய குடும்பத்தை சேர்ந்த ஒன்பது கிரகங்களும் தேவனின் நியமத்தின்படி சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை மையமாக கொண்டு முட்டை வடிவமான வட்டத்தில் ஓடி கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது நியமிக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி சுற்றுகிறது என்றும், வரவர விலகி செல்லும் தூரம் சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே வருகிறது என்றும் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

மற்றும், சூரியன் தன்னுடைய ஈர்ப்பு விசையை ஒரு நாள் முற்றிலும் இழக்குமானால் ஒன்பது கிரகங்களும், அதை சுற்றியோடும் துணை கிரகங்களும் என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவைகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஒன்றுக்கொன்று மோதியும், தீப்பற்றியும் அழியலாம், அல்லது ஓடும் வேகத்திலேயே உருகி அழிந்தும் போகலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்

Monday, June 25, 2012

ஆத்துமாவில் தைரியம்

'பலவீனனும் தன்னை பலவான் என்று சொல்வானாக' (யோவேல் 3:10)
 
ஒரு பத்து வயது சிறுமி, தாய் கொடுத்த பாலை குடித்து விட்டு, படுக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு சரியான வயிற்று வலி, தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தாள். உடனே டாக்டரிடம் போய் காட்டினார்கள். டாக்டர் அவளுக்கு அந்த வலிக்கு மருந்து கொடுத்து, சில இரத்த பரிசோதனை நடத்தினார்கள். அப்பொழுது அவர்களுக்கு தெரிய வந்தது, அவளுக்கு பாலில் இருக்கும் லேக்டுலோஸ் (Lactulose) என்னும் பொருள் அலர்ஜி என்று. அவள் இனி பால் சேர்க்கப்பட்ட எந்த பொருளையும் சாப்பிட முடியாது. ஐஸ் கிரீம், சீஸ், தயிர் என்று எந்த பொருளையும் அவளால் சாப்பிட முடியாது. அதோடு கூட அவளுக்கு அந்த அலர்ஜியினால் ஆஸ்த்துமா வியாதியும் வந்தது.

அந்த வியாதியானால், பத்து வயதில் விளையாடக்கூடிய எந்த விளையாட்டையும் அவளால் விளையாட முடியாது போனது. பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாடும்போது அவளால் பார்க்கத்தான் முடிந்தது. அவர்களோடு அவளால் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் வரை அவள் பொறுத்து பார்த்தாள். தன்னையே நொந்து கொண்டு இருந்தாள்.

ஒரு வருடம் கழித்து, அவள் முடிவு செய்தாள். 'இந்த வியாதிகள் என்னை தடுத்து நிறுத்த முடியாது, நான் போய் விளையாடுவேன், நான் மற்றவர்களை போல இருப்பேன்' என்று உறுதி எடுத்து கொண்டு, விளையாட ஆரம்பித்தாள். அவள் இருந்த நாட்டின் மிகச்சிறந்த ஓட்டபந்தய வீராங்கனையாக மாறினாள்.

சாது சுந்தர்சிங் - நற்பலன்

தமது பரம எஜமானனுக்குத் தொண்டு செய்துவந்த சாது சுந்தர் சிங் பட்ட கஷ்டங்கள். பல தரம் உண்ணத் தகுந்த உணவு கிடடாததால் காட்டில் விளையும் கனி கிழங்குகளையே புசித்து தன் பசியின் அகோரத்தைத் தணித்துக்கொண்டார். கல் நெஞ்சரான ஊரார் இராத்தங்க இடங்கொடாமல் அவரை விரட்டினதால் அடிக்கடி மரத்தடியிலேயோ இருண்ட கெபியிலேயோ படுத்து நித்திரை செய்தேன் என்றும் சாது சுந்தர் சிங் கூறியிருக்கிறார். இக்கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த நாடுகளில் விசேஷ அபாயங்கள் நிறைந்திருந்தன. 

ஆகையால் சாது சுந்தர் சிங் இரவில் இளைப்பாறச் சென்ற இடங்களில் ஒரு காட்டு மிருகமோ, பாம்போ தம்மோடு தங்கியிருந்ததைக் கண்டு திடுக்கிட்ட சமயங்கள் அநேகம். தோரியோ என்ற தாலுக்காவின் ஒரு கிராமத்தில் சுந்தர் கழித்த காலமெல்லாம் பக்கத்திலிருந்த காடுதான் அவர் உறங்குமிடமாயிற்று. அக்கிராமத்தார் அவரை அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.

ஓர் இரவு மனஞ்சோர்ந்து தேகம் களைப்புற்றவராய் சுந்தர் இருண்ட கெபிக்குள் நுழைந்து தன்னுடைய போர்வையை விரித்தபோது தன் பக்கத்தில் அயர்ந்து தூங்கின பெரிய சிவிங்கியொன்றைக் கண்டார். திகில் கொண்டெழுந்து அம்மிருகத்தின் வாயினின்று தப்புவித்த இயேசுவின் திருவடிகளைப் போற்றிக்கொண்டு சென்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரோடு இருந்தததினால் துஷ்டமிருகமொன்றும் அவருக்குத் தீங்கு செய்ததில்லை.மற்றொரு தரம் ஊராரால் துரத்துண்டு தனியே தியானம் பண்ணும்படி ஒரு பாறையின்மேல் உட்கார்ந்தார். பாறையின் அருகிலிருந்த குகைக்குள்ளிருந்து தம்மைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கருஞ்சிறுத்தையைப் நித்திரையில் ஆழ்ந்திருந்த சுந்தர் கவனிக்கவில்லை. பிறகு தாமிருந்த அபாய நிலைமையையறிந்து பயங்கொண்டபோதிலும் இதுவரை தம்மைக் காத்துவந்த தெய்வத்தின் துணையில் சார்ந்து அமைதலாய் எழுந்து கிராமத்திற்குச் சென்றார்.
இந்த அதிசயக் தகவலைக் கேட்ட ஊரார். தம்மில் பலரைக்கொன்று தின்ற இந்த துஷ்டமிருகத்திற்கு இரையாகாது தப்பின இவர் ஒரு புண்ணிய புருஷர்போலும்! இவர் சொல்லும் நன்மொழியை நாம் கேட்பதும் தகுதியே என்று நினைத்து, சுந்தரை நயந்து அவருக்குச் செவிகொடுத்தார்கள். இதைக்கண்ட சுந்தர் தேவனைத் துதித்து மனத்திடன் கொண்டார்.

Thursday, June 21, 2012

உண்மையுள்ள ஊழியக்காரன்

வருகையின் தூதன் என்னும் பத்திரிக்கையை நம்மில் அநேகர் படித்ததுண்டு. அதன் ஆசிரியரான போதகர் தேவதாசனையும் நாம் அறிவோம். வருகையின் தூதன் மொத்தம் ஏழு மொழிகளில் வெளிவந்தது.

போதகர் தேவதாசன் அவர்கள் மெல்லிய சரீரத்தை உடையவர், மேடையில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், ஓடியாடி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து எப்போதும் பிரசங்கிப்பார். அவர் 'நீங்கள் மட்டும் ஆயத்தமாவது போதாது, மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்' என்று போதிப்பார். அவர் ஒரு நிகழ்ச்சியை சொல்லி, எப்படி நாம் கர்த்தருக்காக உழைக்க வேண்டும் என்று சொல்வார். ஒரு முறை அவர் நாகர்கோவிலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் கூட்டமான மக்கள் கூடியிருந்தனர். அவர் எட்டி பார்த்தபோது, அங்கு ஒரு மாடு மாட்டு வண்டியின் பக்கத்தில் படுத்து கிடந்தது. அதன் சொந்தகாரரும் மற்ற மக்களும் அந்த மாட்டை எழுப்ப முயற்சித்தும் அது அசையவேயில்லை. அது சாகும் தருவாயில் இருந்தது. போதகர் தேவதாசன் அவர்கள், அந்த மாட்டின் கண்களை பார்த்தபோது, அந்த மாடு, 'மாட்டுகாரனே, மாட்டுக்காரனே, இத்தனை வருடங்கள் நான் உமக்கு பாரத்தை சுமந்து என்னால் இயன்றதை உமக்கு செய்து முடித்து விட்டேன். இப்போது நான் மரிக்கும் நேரம் வந்து விட்டது' என்று சொல்வதாக கண்டார். அந்த இடத்திலேதானே அவர் ஒரு தீர்மானத்தை எடுத்தவராக ஒரு ஜெபத்தை செய்தார். 'என்னுடைய கடைசி மூச்சி நிற்கும்வரை இந்த மாட்டை போல நான் உமக்கு உண்மையாக உழைக்க எனக்கு உதவி செய்யும்' என்று ஜெபித்தார்.

அதன்படியே அவர் தன் இறுதி மூச்சுவரை கர்த்தருக்காக வைராக்கியமாக உழைத்து, 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம் 13ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவர் மரிக்கும்போது, அவருக்கு வயது 100க்கும் மேல். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. தீங்கநுபவித்தும், மனத்தெளிவுள்ளவனாக, கர்த்தருடைய  ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த கடைசி நாட்களில் தேவனுடைய சுவிசேஷத்தின் நற்செய்தியை உண்மையாக எடுத்து கூறவேண்டும். போலி தீர்க்கதரிசிகளாக அல்ல, கள்ள தீர்க்கதரிசிகளாக அல்ல! தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து அவரிடமிருந்து பெற்று கொண்ட வார்த்தைகளை போதிக்கிற போதகர்கள் இந்த நாட்களில் பார்ப்பது எவ்வளவு கடினம்!

சனிக்கிழமை இரவு வரை உலக காரியங்களில் மூழ்கியிருந்து விட்டு, கடைசி நிமிஷத்தில் உட்கார்ந்து, இன்டர்நெட்டிலிருந்தும், கையில் இருக்கிற எத்தனை ரெபரன்ஸ் வேதாகமங்களையும் உருட்டி, ஏதோ ஒரு செய்தியை எடுத்து மக்களுக்கு போதித்தால் நிச்சயமாக மக்களுக்கு அது ஒரு செய்தியாக இருக்கவே முடியாது. ஏதோ வேதாகமத்தை வாசித்தது போல தான் இருக்கும். நம் தேவன் பேசுகின்ற ஆண்டவர். தமது சமுகத்தில் காலையில் ஆவலோடு மக்கள் வந்து தம்முடைய செய்திக்காக காத்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும், அந்த மக்கள் எந்த சூழ்நிலையிலிருந்தும், கஷ்டத்திலுமிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் தம்முடைய ஊழியக்காரர் மூலம் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது, அந்த ஊழியக்காரர்கள் அவருடைய வார்த்தையை கேட்காமல், அவருடைய சமுகத்தில் காத்திருக்காமல், தாங்களாக எதையாவது சொல்லும்போது, அவருடைய மனம் எத்தனை வேதனைப்படும்?

Wednesday, June 20, 2012

"i loved you before you loved me"

From her bedroom window, Rebecca eyed the children playing in the snow enviously. How she longed to play with them!
“Now, Rebecca,” she remembered her father telling her that morning. “You can’t play in the snow today.”
“Why not, Father?” Rebecca had asked. Every day, the neighborhood children gathered at a park just behind Rebecca’s house.
“Just trust me, Rebecca. It’s not what’s best for you today,” her father had replied.
At the time, Rebecca had responded by kissing her father on his cheek and assuring him that she would stay inside and read. But now she was having second thoughts.
It is beautiful outside, she thought to herself. It was true: the sun was shining brilliantly. Why wouldn’t her father let her go play? Why should she have to miss out on all the fun?
When a snowball exploded just outside her window, Rebecca decided she couldn’t stand it any longer. She simply had to go join the others!
Leaving her book on the table, Rebecca slipped outside. She tried to tell herself she was having a good time, but all the while her heart felt uncomfortable. She kept looking this way and that, fearful least her father see her.
After a few hours, Rebecca finally said her goodbyes and headed back towards the house. She wanted to be safely lodged in her room before her father came home.
Intent on getting to her room as quickly as possible, Rebecca didn’t see the mitten someone had left on the stairs until her foot slipped on it. Next thing she knew, she had fallen several stairs. To her horror, she noticed that she had hit her father’s favorite picture when she fell! A huge gash ran along the front of the picture.
Normally, Rebecca would have hurried immediately to her father after such a fall so he could doctor her up and make her feel better. But not this time. How could she face her father right now? She had disobeyed him and ruined his favorite picture! Biting her lips to keep from crying out, Rebecca grabbed the ruined picture and hobbled to her room.
For the remainder of the day, she lay in agony. Her body ached from the bruises she received on her fall. But her heart—ah, that ached worse of all! She felt certain that her father would no longer love her. She had messed up in the past, but surely this time she had gone too far! He would probably never want to speak to her again. How could he still love her?
She sobbed uncontrollably on her pillow. She had always been close to her father. They had played and studied together. They had laughed and cried together. But not now. No, she felt certain that all those wonderful times were over.
Who knows how long she would have lain thus had not her nanny come in to check on her. Rebecca’s nanny had a way about her of finding out exactly what was wrong and offering solid, wise counsel. Tonight was no exception.
“Rebecca, dear,” she said firmly, but gently. “You’ve been very wrong. But you must not continue in your wrongness by sitting here. You must go to your father with the broken picture in your hand and tell him everything.”
“Oh, but I can’t! I’m not worthy of His love!” Rebecca sobbed.
Her nanny sighed patiently. “You were no more worthy of it yesterday than today, child. Your father loves you because you’re his daughter, not because of anything you do or don’t do. Hasn’t he told you everyday since you were a little girl, ‘I love you’? Do you doubt his word? Do you really think his love is dependent on you?”
Doubt his word—that was an angle Rebecca had never thought of before. Maybe she should go see her father…yes, she must go see him, for if she didn’t, she’d never be able to rest.
So, still shaking and trembling with fear, Rebecca limped down the hall to the living room. She paused at the doorway. Her father was sitting in his favorite chair, just like he did every night. He looked up when she entered, and a smile radiating with love illuminated his face.
“Ah, you’ve come at last! I’ve been waiting. Come, sit here on my lap.” As he spoke, he opened his arms widely.
Rebecca couldn’t stand it. “Oh, you don’t understand, Father! You can’t love me anymore. I’ve been terribly wicked and-” Rebecca held up the picture frame for her father to see.
“I know, Rebecca—more than you think. I watched you go outside. I watched you fall and hit the picture frame. I saw it all.”
“You did?” Rebecca was flabbergasted. “But-but weren’t you at work?”
Her father shook his head. “I took the day off to spend some special time with you. That’s why I told you not to go outside to play. Ever since I saw you fall, I’ve been longing for you to come to me so I could bandage your wounds and help you. Won’t you come now?”
Rebecca could hardly believe her ears. Her father had planned to spend the afternoon with her…and she had missed it. Oh, what foolishness! Yet her father knew it all…and loved her anyway. Could it be? “But, Father, how can you love me now?”
Rebecca’s father smiled a smile she would never forget. “Rebecca, dear, I loved you before you were born. You’re my daughter. And I will always love you. Although sometimes your actions will result in consequences you could have avoided, nothing can ever separate you from my love. Now won’t you come and let me help you with those bruises?”
“Who shall separate us from the love of Christ? shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? As it is written, For thy sake we are killed all the day long; we are accounted as sheep for the slaughter. Nay, in all these things we are more than conquerors through him that loved us.” Romans 8:35-37

Tuesday, June 19, 2012

God's protection

 
"God is our refuge and strength, an ever-present help in trouble. Therefore we will not fear, though the earth give way and the mountains fall into the heart of the sea, though its waters roar and foam and the mountains quake with their surging." - Psalm 46:1-3 (NIV).

"Have mercy on me, O God, have mercy! I look to you for protection. I will hide beneath the shadow of your wings until this violent storm is past". - Psalm 57:1-2 (NLT).

Picture tells its story

Couldn't come out from sin? dont worry. God's grace still available for us. Today is the day to turn back to God the Lord Jesus Christ. Call Him Up and Let Him Heal Your Broken Heart..

Picture story


Monday, June 18, 2012

ஜாக்கிரதையுள்ள வேலைக்காரன்

ஒரு முறை ஒரு பெரிய கம்பெனியின் வாசலில், அங்கு வேலை செய்ய வருபவர்கள் காணும்படியாக ஒரு அறிவிப்பு தொங்க விடப்பட்டிருந்தது. அதில், 'உங்கள் வளர்ச்சியை தடை செய்து கொண்டிருந்த மனிதன் இன்று இறந்து விட்டான். அவனுக்கு கீழே இருக்கும் அறையில் இறுதி கடன்கள் செலுத்தப்படும். அதில் அனைவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள்' என்று அழைப்பு விடப்பட்டிருந்தது. அதை பார்த்த அனைவருக்கும், தங்களோடு வேலை பார்த்த ஒருவர் மரித்தது துயரமாக இருந்தாலும், யார் தங்களுடைய வளர்ச்சியை தடை செய்தது என்றும், அவனை காண வேண்டும் என்ற ஆச்சரியமும், வியப்பும் உடையவர்களாக காத்திருந்தனர். கடைசியாக அந்த அறை திறக்கப்பட்டபோது, ஒவ்வொருவராக அந்த சவப்பெட்டியை காண விரைந்தனர். சென்று பார்த்தபோது, திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அவர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை. அவர்களின் இருதயத்திற்குள் ஒரு தொடுதலை உணர்ந்தார்கள்.

அந்த பெட்டியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பார்த்தபோது, அவர்களுடைய உருவமே அந்த பெட்டியில் தெரிந்தது. அதன் அருகில் 'உங்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த யாராலும் முடியாது, உங்களை தவிர' என்று எழுதப்பட்டிருந்தது

Friday, June 15, 2012

ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth)

1927-ம் வருடம் ஸ்மித் விகிள்ஸ்வொர்த் (Smith Wigglesworth) என்னும் தேவ ஊழியர், ஒரு திறந்த சந்தைப் பகுதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் அங்கு இருந்த விளக்கு கம்பத்தின்மேல் சாய்ந்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஸ்மித் தன் பிரசங்கத்தை முடித்து விட்டு, அந்த மனிதனிடம் நேரடியாகச் சென்று, ‘என்ன, உங்களுக்கு உடம்பு சரியில்லையா’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் தன்கைகளைக் காட்டினான். அதில் ஒரு கத்தி பளபளத்தது. 

அவன் சொனனான், தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வதற்காக தான் போய்க் கொண்டிருந்ததாகவும், அப்போது ஸ்மித் அவர்கள் பேசிக் கொண்டிருந்தததைக் கேட்டதாகவும், அவர் இயேசுவின் நாமத்திலுள்ள வல்லமையைக்குறித்து கேட்டபோது அவருக்கு அந்த இடத்திலிருந்து அசைய முடியாதபடி போனதாகவும் கூறினார். அங்குதானே, இருவரும் முழங்கால்படியிட்டு, போவோர் வருவோர் நடுவே அந்த மனிதன் இயேசுவை ஏற்றுக் கொண்டார். 

பின் ஸ்மித் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, அவருக்கு வேறு ஆடைகளை கொடுத்து, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து, அந்த மனிதன் ஒரு வீடு வாங்க உதவி செய்து, அந்த மனிதனை விட்டு வேறு ஒருவனுடன் வாழ்ந்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியை மன்னித்து, தன்னோடு இருக்க அழைத்தபோது அவளும் வந்து, இருவரும் ஒன்றாக இணைந்ததாகவும், அந்த மனிதர் கர்த்தருடைய ஊழியத்தை வல்லமையாக நிறைவேற்றவும் தேவன் கிருபைச் செய்தார் என்றும் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆம் இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு.

வேதனை இல்லாத ஐசுவரியம்

ஜான் டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது. அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போகும், ஏன், கண்களின மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே, அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது. எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர், ஆனால் அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமேத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்தபடியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள். அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்புபடையினர் அவரைக் காவல் காத்தனர். ஏனென்றால் யார், எப்போது, அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால். இப்படிபட்ட பணம் தேவைதானா?
.
.
அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் அவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட செய்திதாள்கள், அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை
வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப் போயிற்று. அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்..
.
ஒருநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, ஆலயக் கட்டுமானத்திற்கும், மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி, வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம், பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த  ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர், ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தார். அல்லேலூயா!

கிருபையால் நிலைநிற்கிறோம்

ஒரு மனிதன் மரித்து பரலோகத்திற்கு சென்றார். அங்கு பரிசுத்த பேதுருவை வாசலில் கண்டார். அப்போது பேதுரு அவரை பார்த்து, “பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன் நீ பரலோகம் செல்லலாம்” என்று கூறினார்.
,
அந்த மனிதன், தான் செய்த நன்மைகளை செய்ய தொடங்கினார். “நான் ஒரே மனைவியை உடையவன். அவளோடு 50 வருடம் குடித்தனம் நடத்தினேன். அவளுக்கு மனதளவில் கூட நான் துரோகம் செய்ததில்லை” என்று கூறினார். அதற்கு பேதுரு, “ஓ, மிகவும் நல்லது. அதற்கு 3 மதிப்பெண்கள”; என்று கூறினார். “என்னது 3 மதிப்பெண்தானா?” என்று கேட்டுவிட்டு, “நான், ஒவ்வொரு வாரமும் தவறாமல், ஆலயத்திற்கு சென்றேன். என்னுடைய தசமபாகத்தை தவறாமல் சபைக்கு கொடுத்து வந்தேன்” என்று கூறினார். அப்போது பேதுரு, “வாவ், நல்ல காரியம், நிச்சயமாக அதற்கு ஒரு மதிப்பெண் தரலாம்” என்று கூறினார். “என்னது! ஒரு மதிப்பெண்தானா? சரி இதற்காகவாவது நீங்கள் அதிக மதிப்பெண்கள் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன், நான் வயதானவர்களுக்கென்று, முதியோர் இல்லம் வைத்து, அவர்களை இலவசமாக பராமரித்தேன்” என்று கூறினார். அதற்கு பேதுரு, “நல்ல காரியம் செய்தீர்கள், சரி அதற்கு இரண்டு மதிப்பெண்கள் தரலாம்” என்று கூறியபோது, அந்த மனிதர், மிகவும் சத்தமிட்டு, “ஐயோ, நான் செய்த நன்மையான காரியங்களுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் தான் கிடைக்கும் என்றால், நான் பரலோகத்திற்கு செல்லவே முடியாது, யார் தான் செல்ல முடியும்? கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நான் பரலோகம் செல்ல முடியும்!” என்று கூறினார். அதை கேட்ட பேதுரு, “நீ இப்போது உள்ளே செல்லலாம்” என்று கூறினார்.

போராயுதம் தரிப்பேன்

டெரி தன் கணவருக்கு பிறந்த நாளில் ஒரு அருமையான பரிசு கொடுக்க விரும்பினாள். அதற்காக அவள் அநேக கடைகளில் ஏறி இறங்கி, கடைசியில் ஒரு இடத்தில் அவள் தன் கணவருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று விரும்பிய பொருள் கிடைத்தது. ஆனால் அதன் விலை அவள் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தபடியால், என்ன செய்வது என்று நினைத்தவளாக இருந்தபோது, கடைக்காரர், 'பரவாயில்லை, நீ இப்போது இதை எடுத்து கொண்டு போ, ஐந்து மாதங்களுக்குள்ளாய் இதன் விலையை கொடுத்து முடித்து விடு' என்று கூறினார். ஆகவே டெரியும் கடைக்காரருக்கு நன்றி சொல்லி விட்டு, அந்த பொருளை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள்.
.
கணவரின் பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது. அவளுக்கு அதுவரை பொறுத்திருக்க முடியவில்லை. ஒரு நாள் கணவர் வேலைக்கு போகாமல் இருந்த நாளன்று அதை எடுத்து கணவருக்கு பரிசாக கொடுத்தாள். அதை வாங்கி கொண்ட கணவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் ஒரு போலீசாக இருந்தபடியால், அடுத்த நாள் அவருடைய போலீஸ் போனில் அடுத்த தெருவில் இருந்த பேங்கில் கொள்ளை நடப்பதாகவும், உடனடியாக போக வேண்டும் என்ற செய்தி வரவும், அவர் உடனே அந்த இடத்திற்கு போனபோது, அந்த கொள்ளைகாரன் காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டார். அவனை துரத்தி கொண்டு போகும்போது, ஒரு இடத்தில் அவன் காரை நிறுத்திவிட்டு, அமைதியாக இருந்தான். இவர் அவனிடத்தில் செல்வதற்கு மெதுவாக போகும்போது அவன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டான். அவரை அருகில் இருந்து சுட்டதினால் அவர் அந்த இடத்திலேயே கீழே விழுந்தார்..
அடுத்த நாள் காலையில் டெரிக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அதை கொண்டு வந்த போலீஸ் 'ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி' என்று கூறினார். கெட்ட செய்தி டெரியின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது, அதை கேட்டவுடன், டெரி நல்ல வேளை நாம் முன்பாகவே அவருக்கு பரிசை கொடுத்துவிட்டோம் என்று நினைத்து கொண்டிருந்த போது, போலீஸ் நல்ல செய்தி, அவர் ஆபத்தான நிலையில் இல்லாதபடி தப்பி விட்டார் என்பதாகும்.
.
டெரி தன் கணவருக்கு கொடுத்திருந்த பரிசு குண்டு துளைக்காத உடையாகும். அவருக்கு அவள் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தபடியால் பக்கத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டபோதும் அவர் அந்த உடையை அணிந்திருந்தபடியால் அவர் உயிர் தப்பித்தார்.

சோர்வடையா ஜெபம்

ஒரு பெண் ஒரு குருவானவரிடம் வந்து, 'ஐயா, நான் ஒவ்வொரு நாளும் ஒரு காரியத்திற்காக ஜெபித்து கொண்டிருக்கிறேன். 'கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்ளூ தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்' என்று வேதம் கூறுகிறதே, நானும் எத்தனையோ முறை ஜெபத்தில் தேவனிடத்தில் தட்டி தட்டி பார்த்து விட்டேன், ஆனால் எனக்கோ கதவு திறக்கப்படவே இல்லையே, ஏன் ஐயா' என்று கேட்டாள்.
.
அதற்கு குருவானவர், 'அம்மா, சில நேரங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும்போது, உங்கள் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, நீங்கள் போய் கதவை திறந்து பார்த்தால், யாரும் இல்லாமல் இருப்பதை பார்த்திருப்பீர்கள், பின் உங்களுக்கு தெரிய வந்திருக்கும், சில குறும்பு பிள்ளைகள் கதவை தட்டி விட்டு, ஓடி போயிருப்பதை குறித்து. அதுப்போல நாமும், கர்த்தரை நோக்கி கதவை தட்டுகிறோம், ஆனால் அவர் வந்து கதவை திறக்கும் வரை காத்திருப்பதில்லை, அதற்கு முன் அந்த குறும்பு பிள்ளைகளை போல ஓடி வந்து விடுகிறோம். நம் ஜெபத்தை தேவன் கேட்க மாட்டார், அவர் கொடுத்த வாக்குதத்தங்கள் எனக்கு அல்ல என்று நாமே தீர்மானித்து போய் விடுகிறோம். அதனால் தான் நம் ஜெபங்களுக்கு பதில் இல்லை என்று கூறினார்.
.
அதை கேட்ட அந்த பெண், 'ஆம் ஐயா, கதவை தட்டி விட்டு ஓடுகிறவர்களின் ஜெபத்தை கேட்பதாக தேவன் வாக்குதத்தம் பண்ணவில்லை, 'தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?' (லூக்கா 18:7) என்று வேதத்தில் கூறவில்லையா? நானும் அப்படி அவர் வந்து கதவை திறக்கும்வரை காத்திருந்து ஜெபிக்கபோகிறேன்' என்று கூறினாள்

பொறுமையாய்

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.

அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.

சீர்திருத்தும் வேத வசனம்

ஜான் தன்னிடமிருந்த அந்த மெஷினோடு போராடி கொண்டிருந்தான். அவனுக்கு அதை எப்படி வேலை செய்ய வைக்க முடியும் என்று தெரியவில்லை. யாராவது வந்து உதவினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். எப்படித்தான் இதை வேலை செய்ய வைப்பதோ என்று அவன் போராடி கொண்டு இருந்தபோது, அவனது அண்ணன், 'ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய்? நம் அப்பா இந்த மெஷினை உருவாக்கினபோது, இதை எப்படி ஆபரேட் செய்ய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தார் அல்லவா? அதை படித்தாயா?' என்று கேட்டான்.
.
ஜான் அதற்கு ஏன் இவன் இந்த மாதிரியான கஷ்டமான கேள்விகளை கேட்கிறான்? அந்த புத்தகத்தில் என்னுடைய பிரச்சனையை குறித்து எதுவும் எழுதப்படவில்லையே என்று நினைத்தவனாக 'ஏதோ கொஞ்சம் படித்தேன்' என்று கூறினான். அதற்கு அவனுடைய அண்ணன், 'இதை உருவாக்கினவருக்கு எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆகவே உட்கார்;நது சரியாக அதைப் படி, அப்போது உனக்கு புரியும்' என்று கூறினான்.

அதன்படி ஜான் அதை உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அவனுக்கு த்ன பிரச்சனையின் காரியங்களை குறித்தும், தன் தகப்பன் அதை உருவாக்கினதன் நோக்கமும் புரிய ஆரம்பித்தது. அந்த மெஷினை நல்லபடியாக ஆரம்பித்து வேலை செய்ய வைத்தான்.

பிரியமானவர்களே, தேவனும் நம்மிடம் நம் வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்துவதற்கான வழிமுறைகளை வேதத்தில் எழுதி வைத்துள்ளார். ஆனால் நாமோ அவற்றை படிக்காமல், எப்படி நாம் நம் வாழ்வை நடத்த வேண்டும் என்பதை அறியாதவர்களாக, நாமே நம் வாழ்வை கையில் எடுத்து கொண்டு, எப்படி நடத்துவது என்று தெரியாமல் புரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறோம்

Thursday, June 14, 2012

ஆறுதலின் தேவன்


சமீப காலத்தில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த மிக இளமையான 28 வயதே நிரம்பிய ஷரவண் குமார் என்னும் ஊழியர் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசி யெறிப்பட்டிருக்கிறார். அவர் இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்கென்று வைராக்கியமாய் ஊழியம் செய்து வந்த சகோதரனாவார். ஒரு கைக்குழந்தையோடு அநாதையாக்கப்பட்ட அவரது இளவயதின் மனைவியின் இருதயத்தில் என்னென்ன நினைவுகள் ஓடியிருக்கும்? இப்படி கொல்லப்படுவதற்காகத்தானா தாங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தோம் என்று. ஆனால், கர்த்தருக்கு ஒரு திட்டம் உண்டல்லவா? அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கீழே விழாதல்லவா?

Wednesday, June 13, 2012

வாலிபம் இயேசுவுக்கே!

ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை. ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.
அதற்கு சுந்தர்சிங் 'நான் சாதுவானதன் நோக்கம் உங்கள் நோக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. கண்ணியம் கிடைக்குமென்று நான் சாதுவாகவில்லை. உலகத்தில் இடையூறுகளின்றி சாதுவாக எளிய வாழ்க்கை நடத்தி கிருபையாய் என்னை இரட்சித்தவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்காக தம் உயிரை தந்தவருக்கு பலம் நிறைந்த என் வாலிப காலத்தில் சிறந்த ஊழியம் செய்ய வேண்டியது நியாயமல்லவா?' என்றார். இதை ஏற்க மறுத்த சந்நியாசியிடம், 'உமது சீடரில் ஒருவன், உமக்கு நன்றாய் பழுத்த மாம்பழத்தை கொடுப்பதற்கு பதிலாக சுவைமிக்க சதைப்பகுதியை உரித்து எடுத்து விட்டு, தோலும் கொட்டையுமானதை உங்களுக்கு கொடுத்தால் என்ன சொல்வீர்கள்?' என்றார். உடனே அவர், அப்படிபட்ட செய்கை மன்னிக்கப்படதக்கதல்ல, அது அவமானத்தின் உச்சநிலை' என்றார். அதற்கு சாது சுந்தர்சிங் ' நமது வாலிப பிரயாத்தை சிற்றின்பங்களில் கழித்து, பெலவீனமான கிழட்டு பிராயத்தில் எலும்புகளையும், தோலையும் கடவுளின் ஊழியத்திற்காக கொடுப்பது முட்டாள்தனமும், கடவுளை கேவலப்படுத்தும் செயலுமல்லவா?' என்றார்.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மதம் அல்லது இறைவனை தேடுதல் என்பதற்கு எந்த இடம் கொடுக்கப்படுகிறது என்று கவனித்தீர்களா? ஒருவன் வாலிப வயதில் இஷ்டம் போல் வாழ்ந்து பின்பு தோய்ந்து போன வயதான நாட்களை இறைவனுக்கென்று ஒதுக்கி வைக்கிறான். இந்த எண்ண ஓட்டத்தின் தாகத்தை நம்முடைய கிறிஸ்தவ ஐக்கியத்திலும் காணலாம். வாலிபனொருவன் தன்னை ஊழியம் செய்ய அர்ப்பணிக்கும்போது, அநேகர் அதை வினோதமான காரியமாகவே பார்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுபவித்த அந்த வாலிபனுக்கு தெரியும், வாலிபத்தின் முழு நிறைவையும் படைத்த தேவனால் மட்டுமே தரமுடியும் என்று. அதிலும் அவருக்கு ஊழியம் செய்வது போல உன்னத திருப்தி தரக்கூடியது இவ்வுலகில் ஒன்றுமில்லை.

Sunday, June 10, 2012

பெலன்


  மொரீஷியஸ் தீவில் அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்னறனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மடடுமே உள்ளன. அவற்றின் வயது 300 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இவைகள் பூத்து குலுங்கியும், காய் கனிகளை தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் அவை முளைக்கவில்லை. இது அறிவியல் மேதைகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகவே இதை ஒரு குழுவினர் ஆராய்ந்தனர். இறுதியியல் அவர்கள் கூறிய கருத்தாவது, 300ஆண்டுகளுக்கு முன் இந்த மொரீஷியஸ் தீவில் 'டோடு' என்ற பறவையினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. சாம்பல் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் கொழு கொழுவென்று அவைகள் காணப்படும். அப்பறவைகள் இந்த மரத்தின் பழங்களை வயிறு நிறைய சாப்பிட்டு அந்த மரத்தின் அடியிலேயே படுத்து உறங்கும். ஆள் நடமாட்டமில்லாத அக்காடுகளில் அவைகள் நிம்மதியாக வாழ்ந்தன. எந்த தொந்தரவுமின்றி வயிறு நிறைய உணவும் கிடைப்பதால், அவை பறக்க முயற்சித்ததேயில்லை உணவிற்காக வேறு இடங்களுக்கு பறந்து செல்ல வேண்டியதுமில்லை.



ஒரு நாள் போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று அத்தீவிற்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து படிப்படியாக பல கப்பல்கள் வரத்தொடங்கின. அவைகளிலிருந்தோர், பறக்கவும் தெரியாத, ஒடவும தெரியாத கொழு கொழு டோடுக்களை எளிதாய் வேட்டையாடினர். வெகு சீக்கிரத்தில் அதன் இனம் அழிந்து போனது, சரி இப்பறவைக்கும் அம்மரத்தின் இனவிருத்திக்கும் என்ன  சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? ஆம், உண்டு! இம்மரத்தின் பழங்களை உண்ணும் டோடு பறவைகளின் உணவு பாதையை கடந்து சென்ற விதை மட்டுமே மண்ணில் விழுந்து முளைக்கும். அதன் உணவு பாதையின் ஊக்கிகள் அவ்விதை மீது செயல்படாவிட்டால் புதிய செடிகளை உருவாக்க முடியாது என்பதை கண்டறிந்தனர். சிறகுகளிருந்தும், பறக்க தெரியாத பறவைகள் தன் இனத்தை இழந்ததோடு பிறருக்கும் நன்மை பயக்காமல் போய் விட்டது.

உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.



அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.



இதுபோலத்தான், ஒரு நோயாளியின் சரீரத்தில் எந்த ஒரு வருத்தத்தையும் உருவாக்ககூடாது என ஒரு மருத்துவர் நினைத்தால் அந்த நோயாளி ஒரு போதும் சுகமடைய முடியாது. ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்து கொள்வதும், உரிய அறுவை சிகிச்சைகளை செய்வதும் நோயாளியை வருத்தமடையவே செய்யும். இருப்பினும் சுகமடைய வேண்டுமானால் அவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அது போல நாம் என் வாழ்வில் ஒரு சிறு கஷ்டமும் வரக்கூடாது என்று எண்ணினால், நாம் ஒரு போதும் ஆவிக்குரிய வாழ்வில் பூரணமடையவே முடியாது. தேவனுடைய திட்டமும் நம் வாழ்வில் நிறைவேறவே முடியாது. பிறருக்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையும் நாம் வாழ முடியாது. ஆகவே நாம் பாடுகளை பொறுமையாய் சகித்தும், துன்பத்தில் துவண்டு விடாமலும், பொறுமையாய் தேவனிடமிருந்து ஆவிக்குரிய பாடங்களை கற்று கொள்ள பிரயாசப்பட வேண்டும்.

Tuesday, June 5, 2012

ஜீவனைக் கொடுக்கிற அன்பு

டைட்டானிக் கப்பலை (Titanic Ship) கட்டிய மனிதரிடம் ஒருவர் ‘இது எவ்வளவு பாதுகாப்பானது’ என்று கேட்டதற்கு, 'அவர் ஆண்டவர் கூட இதை முழ்கடிக்க முடியாது’ என்று ஆணித்தரமாகக் கூறினாராம். ஆனால் அந்தக் கப்பலுக்கு என்னவாயிற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் பயணம் செய்த 1528 மக்களில், ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதை திரைப்படமாக எடுத்து, Leonardo Caprice யை ஹீரோவாக சித்தரித்திருந்தார்கள். ஆனால் அந்தக் கப்பலில் இருந்த உண்மை ஹீரோவைப் பற்றிதான் இன்றுப் பார்க்கப் போகிறோம்.


ஜான் ஹார்ப்பர் (John Harper) என்னும் அருமையான மனிதர் கிறிஸ்தவ பெற்றோருக்கு 1872-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது 13ஆவது வயதில் கர்த்தரை ஏற்றுக்கொண்டு, நான்கு வருடங்கள் கழித்து, கர்த்தரைக்குறித்து
அறிவிக்க ஆரம்பித்தார். அவருக்கு திருமணமாகி, மனைவி நான்கு வருடங்களுக்குள் மரித்துப் போனார்கள். அவர்களுக்கு நீனா (Nina) என்னும் பேர் கொண்ட அருமையான பெண் குழந்தை இருந்தது.

ஹார்ப்பர், மூடிபிரசங்கியாரின் ஆலயத்தில் பேசுவதற்காக சிக்காகோவிற்கு (Chicago) அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அவரும் அவருடைய பிள்ளை நானாவும் டைட்டானிக் கப்பலில் ஏறினார்கள். எதிர்பாராத விதமாக, பனிமலையின்மீது மோதி கப்பல் மூழ்க ஆரம்பித்த போது, அவர் தனது மகள் நானாவை உயிர்காக்கும் (Life Boat) படகில் ஏற்றிவிட்டு, 'நான் உன்னை ஒரு நாள் காண்பேன்' என்றுச் சொல்லி, அனுப்பி வைத்தார். அவருக்கும் படகில் போக இடமிருந்தாலும், அவர் மற்ற மக்களை காக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டு, தன் மகளை அனுப்பிவைத்தார். பின் மரண பயத்தோடு இருந்த மக்களிடம் வந்து, ' பெண்களும், சிறுபிள்ளைகளும், இரட்சிக்கப்படாதவர்களும், முதலில் உயிர்காக்கும் படகில் ஏறுங்கள்' என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும்போதே கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில் இருந்து பயணிகள், கீழே ஐஸ் தண்ணீர்ரில் குதிக்க ஆரம்பித்தார்கள். அதில் ஹார்ப்பரும் ஒருவராவார்.


அந்த நடுங்கும் குளிரிலும் ஹார்ப்பர், மக்கள் அந்த குளிரில் உறைந்து மரிக்குமுன்னே, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஆரம்பித்தார். அப்போது, ஒரு இளம் வாலிபன், அங்கிருந்த ஒரு கட்டையின் மேல் ஏறி தப்பும்படி போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டார். அவனிடம், 'நீ இரட்சிக்கப்பட்டாயா? என்றுக் கேட்டார்'. அவன் இல்லை என்றுக் கூறினான். உடனே தன் மேலே இருந்த உயிர்காப்பு மிதவை ஆடை (Life Jacket) எடுத்து, அந்த வாலிபனுக்கு கொடுத்து. 'என்னைவிட உனக்குத்தான் அது தேவை' என்றுக் கூறிவிட்டு, மற்ற பயணிகளுக்கு சத்தியத்தைச் சொல்லச் சென்றார். பின் மீண்டும் அந்த வாலிபனிடம் வந்து, அவனுக்கு சத்தியத்தைச் சொல்லி, கிறிஸ்துவுக்குள் அவனை வழிநடத்தினார். அன்று மூழ்கின 1528 பேரில் ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதில் அந்த வாலிபனும் ஒருவன்.



நான்கு வருடங்கள் கழித்து, அந்த ஆறுப்பேரையும் சேர்த்து நடந்தக் கூட்டத்தில் அந்த வாலிபன் கண்ணீரோடு எழுந்து நின்று, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், ஹார்ப்பர் எப்படி அந்த பனிநீரிலும், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறினார் என்பதையும், அவர் நீந்த முடியாமல் கடைசியில் பலவீனமடைந்து, தண்ணீரில் மூழ்கும் நேரம் வந்தபோது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறிக் கொண்டே மூழ்கியதையும் நினைவு கூர்ந்து கதறினான். மற்றவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற எப்படியாவது உயிர் காப்பாற்றும் படகை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் மற்றவர்களுக்கு கொடுத்து, தனது உயிரையும் கொடுத்த அற்புத மனிதரை ஹாலிவுட் படமெடுக்காமலிருக்கலாம், ஆனால், பரலோகத்தில் அவருக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.



ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. ஆமென். நிச்சயமாகவே ஹார்ப்பர் ஒரு அற்புத ஹீரோதான்.

Monday, June 4, 2012

கர்த்தரின் கரத்தில் நம் காலங்கள்

ஆந்திராவில் மிகவும் கஷ்டப்படுகிற ஏழைக்குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குடும்பத்தில் ஒரு வாலிபனுக்கு மட்டும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பல வருடங்கள் கழித்து திரும்பவும் தனது சொந்த ஊராகிய ஆந்திராவுக்கு வந்தான். ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும் அந்த ஊரில் இல்லை. தனிமை உணர்வு அவனுக்கு வாழ்க்கையின் மீது மிகுந்த கசப்பையும் வெறுப்பையும் கொடுத்தது. எனவே பக்கத்தில் உள்ள ஒரு காட்டிற்கு சென்று ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்யும் முடிவோடு சென்றான். கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி, கயிற்றில் அவர் உடம்பு தொங்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குதிரையில் அந்த காட்டு பக்கம் ஒரு ஜமீன் வந்தார். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த காட்டுப்பகுதியில் எதிர்பாராதவிதமாக வந்து கயிற்றில் தொங்கி கொண்டிருந்த அவன் உயிரை காப்பாற்றினார். பின்பு ஊருக்குள் வந்து வேலை செய்து பிழைக்க ஆரம்பித்தான். இந்த சயமத்தில் சபை போதகர் ஒருவருடன் இவனுக்கு நெருங்கிய சிநேகம் கிடைத்தது. அவர் மூலமாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கொடுக்கிற பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்று கொண்டு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். திருமணம் செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையில் வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் போதகருடன் ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்தான்.



வருடங்கள் ஓடியது. இப்பொழுது அந்த வாலிபன் வயதான முதியவராய் ஆகி இருந்தார். அவருக்கு குறிப்பிட்ட அளவு சொத்து இருந்தது. ஆனால் அவருக்குப்பின் அதை அனுபவிக்க குடும்ப உறவுகள் யாரும் இல்லை. இதை அறிந்த ஒரு வாலிபன் ஒரு நாள் காலையில் அவரை தந்திரமாக ஒரு குறிப்பிட்ட பாழடைந்த கிணற்றிக்கு அழைத்து சென்றான். அவர் எதிர்ப்பாராத நேரத்தில் அவரை அந்த கிணற்றிற்குள் தள்ளிவிட்டு ஓடி விட்டான். உள்ளே விழுந்த அந்த முதியவர் கிணற்றிற்குள் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்து தொங்கினார். காலையில் இருந்து மாலை வரை இடையிடையே 'என்னை காப்பாற்றுங்கள்' என்று சத்தமிட்டு கொண்டே இருந்தார். நேரமாக நேரமாக அவருக்கு நம்பிக்கை குறைந்து இனி யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள் என்று வேதனைப்பட ஆரம்பித்தார். இருந்தாலும் இன்னும் சிறிது நேரம் கூப்பிட்டு பார்ப்போம் என்று மறுபடியும் சத்தம் போட ஆரம்பித்தார். காத்தருடைய பெரிதான கிருபையால் இந்த முறை அந்த கிணற்றை கடந்து போன ஒருவருடைய காதில் அவருடைய சத்தம் விழுந்தது. கிணற்றை எட்டி பார்த்த அவர் அந்த முதியவருடைய பரிதாப நிலையை பார்த்து வேகமாக ஊருக்குள் சென்று ஏராளமான ஜனங்களை அழைத்து சென்று அந்த முதியவரை காப்பாற்றினார். பின்பு அந்த முதியவரை கிணற்றில் தள்ளிவிட்ட வாலிபனை ஊரார் எல்லாரும் சேர்ந்து உதை உதை என்று உதைத்தனர். இன்றைக்கும் அந்து முதியவர் எண்பது வயது நிறைந்தவராக பல மாநிலங்களுக்கு ஊழியத்திற்கு கர்த்தருடைய கிருபையால் கடந்து செல்கிறார். இவ்வாறு தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தில் அவர், தேவன் எப்படி இரண்டு முறை மரணத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார் என்பதையும், இன்னமும் ஆண்டவர் தன்னை கொண்டு என்ன செய்ய முன்குறித்திருக்கிறாரோ அதை செய்து முடிக்கும் வரைக்கும் மரணம் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஏனென்றால் தன்னுடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது எனவும் பகிர்ந்து கொண்டார்.

Sunday, June 3, 2012

1972ம் வருடம் - கிறிஸ்தவர்க்ள எரிக்கப்பட்ட இடத்தில்

http://bible.org/illustration/hatred-preserves-pain 

Chaplain Kenny Lynch conducts services north of Hwachon, Korea, for men of 31st Regt. August 28, 1951. Pvt. Jack D. Johnson.கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரை பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும்;, சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர்.
.
ஜப்பானியர்கள் கொரியாவை கைபற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனெரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ஞாயிற்று கிழமைகளில் ஆராதனைகளை முழுவதும் நிறுத்திய ஜப்பானியர், முக்கியமான போதகர்களை சிறையில் அடைத்தனர். அதில் ஒரு போதகர் மாத்திரம் தான் இருந்த இடத்தின் காவல் துறை அதிகாரியிடம் அடி;ககடி போய், தன் சபையை ஒரு ஞாயிறு ஆராதனையை மாத்திரம் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டே இருந்தார். அவருடைய தொல்லையை பொறுக்காமல், அந்த அதிகாரி ஒரு ஞாயிறு ஆராதனைக்கு அனுமதித்தார். உடனே வேகமாக செய்தி பரவியது. இதுவரை ஆராதனைக்கு செல்ல முடியாமல் இருந்த கிறிஸ்தவர்கள், அனுமதி கிடைத்தவுடன், சூரியன் உதிக்குமுன், குடும்பமாக ஆலயத்திற்கு சென்று, காத்திருந்து, நேரமான உடன், கதவுகளை அடைத்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தனர்.


கொரிய சபை மக்கள் மிகவும் அழகாக பாடுபவர்கள். அவர்களின் பாடல் சத்தம் மூடியிருந்த கதவுகளையும் மீறி வெளியே அழகாக ரீங்காரமிட ஆரம்பித்தது. அவர்கள் உம்மண்டை கர்த்தரே என்னும் பாடலை பாட ஆரம்பித்தபோது, வெளியே இருந்த ஜப்பானிய அதிகாரி ஒருவன் தன் படைக்கு உத்தரவிட ஆரம்பித்தான். ஆலயத்தின் பின்புறம் இருந்தவர்கள், கதவுகள் திறக்கப்படும் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் அறியவில்லை, அந்த ஆலயம் முழுவதும் மண்ணெண்ணையால் ஜப்பானியர் முழுக்கி கொண்டிருக்கிறார்கள் என்று. பின் அதன் மேல் நெருப்பை வீசி, புகை வர ஆரம்பித்த போதுதான், உள்ளே இருப்பவர்களுக்கு தங்கள் ஆலயம் நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே உள்ளே இருந்தவர்கள் ஜன்னலின் வழியாக தப்பும்படி வெளியே போக துடித்த போது, வெளியே இருந்த ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மேல் பாய்ந்தது.


போதகருக்கு தெரிந்தது, தனக்கும் தன் சபையினருக்கும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று. வெளியே கொரியர்கள் தங்கள் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அநீதியை கண்டு கொண்டிருக்க, போதகர், இந்த பாடல் வரிகளை பாட ஆரம்பித்தார், உடனே சபையாரும் அவருடன் இணைந்து, தங்கள் கண்களுக்கு முன் நெருப்பு கொழுந்து விட்டு எரிய தங்கள் கூரைகீழே விழுந்து அனைவரும் மடிவதற்கு முன் பாடினார்கள், But drops of grief can ne'er repay the debt of love I owe: Here, Lord, I give myself away 'Tis all that I can do! At the cross, at the cross Where I first saw the light, And the burden of my heart rolled away -- It was there by faith I received my sight, And now I am happy all the day. அவர்கள் பாடியதை வெளியே இருந்த ஜப்பானியரும், கொரியர்களும் கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடியபடியே மறுமைக்கு கடந்து சென்றார்கள்.



எரிந்து போனவர்களின் சடலங்களை எடுத்து சுத்தம் பண்ணுவது எளிது, ஆனால் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த வேதனையையும், வெறுப்பையும் எடுத்து விடுவது எளிதல்ல. அதுவும் மரித்தவர்களின் உறவினர்கள் ஜப்பானியரின் மீது கொண்டிருந்த வெறுப்பு அதை அணைப்பது என்பது மிகவும் அரிதானதாக மாறியது.



வருடங்கள் கடந்தன. கிறிஸ்தவர்க்ள எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டது.அதை காணும்போதெல்லாம் கொரியர்களின் உள்ளங்களில் ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு அதிகமாய் கொழுந்து விட்டு எரிந்தது. கிறிஸ்தவர்களாயிருந்தாலும், உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கும் கிறிஸ்துவின் சமாதானம் அவர்களது உள்ளத்திலிருந்த வெறுப்பினால் மறைந்து போயிருந்தது. ஆனால் அது அப்படியே இருக்கவில்லை.



1972ம் வருடம் ஜப்பானிலிருந்து ஒரு போதக குழு கொரியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அந்த ஞாபகார்த்த மண்டபத்திற்கு வந்த போது, தங்கள் மூதாதையர் செய்த குற்றத்தை கண்டார்கள். அவர்களுக்கும் அந்த செய்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், தங்கள் நாடு தப்பிதம் செய்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியுடன், தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று, தங்கள் கூட இருக்கும் விசுவாசிகளிடம் நடந்த விஷயங்களை கூறி, பணம் சேகரித்து, திரும்ப வந்து, கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டினார்கள். அது திறக்கப்படும் நாளிலே அனைவரும் கூடி, அந்த ஆலயத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்து, ஆராதனை முடியும் தருவாயில், ஒருவர் எழுந்து,  அந்த எரிந்து போன கிறிஸ்தவர்கள் பாடிய இரண்டு பாடல்களையும் மீண்டும் பாடுவது, அவர்களை நினைவு கூருவது போலிருக்கும் என்று கூற, உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என பாடலை பாட ஆரம்பித்தார்கள். பாடி முடித்து, சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில் (At the cross at the cross where I first saw the light) என்ற பாடலை பாடும்போது, ஜப்பானிய போதகர்களின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர்கள் தங்கள் கொரிய நண்பர்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு தங்களை மன்னிக்குமாறு கெஞ்ச ஆரம்பித்தார்கள். கொரியர்களின் இருதயம் கரையவில்லை, ஆனாலும் விடாமல் ஜப்பானியர்கள் கேட்டு கொண்டிருந்தபோது, அந்த பாடலின் அர்த்தத்தை அவர்கள் கேட்டு கொண்டிருந்தபோதுதானே, கர்த்தர் கொரியர்களின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். ஒரு கொரிய சகோதரன், ஜப்பானிய சகோதரனின் கரங்களை பிடித்தார். அதை கண்ட மற்றவர்களும் ஒருவரை யொருவர் கட்டிபிடித்து கொண்டு கதற ஆரம்பித்தனர். அத்தனை நூற்றாண்டுகளாக இருந்த பகைமை மறைந்து கிறிஸ்துவின் அன்பு பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஜப்பானியரின் மன்னிப்பின் கண்ணீரும், கொரியர்களின் மன்னித்ததன் கண்ணீரும் கலந்து, அந்த இடம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியது.

Saturday, June 2, 2012

மாரநாதா - நமது ஆண்டவர் வருகிறார் (Our Lord comes)

சர் எர்னஸ்ட் ஷேக்லடன் (Sir Ernest Shackleton) என்பவர் கடலில் சென்று, பகுதிகளை ஆராய்பவர் தென் பகுதியை சென்று ஆராய்வதற்கு சென்றபோது, தன்னுடைய மனிதர்களில் சிலரை யானை தீவு (Elephant Island) என்னுமிடத்தில் விட்டு விட்டு, தான் திரும்ப வந்து அவர்களை கூட்டி கொண்டு போவதாக சொல்லிவிட்டு, மற்ற சில பேருடன் ஆராய்வதற்காக சென்றார். ஆராய்ந்து முடித்துவிட்டு, திரும்ப மற்றவர்களை அழைத்து செல்வதற்காக திரும்பும்போது, பெரிய பெரிய பனி மலைகள் அவர் அங்கு செல்வதற்கு தடை செய்வதை கண்டார். என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது, அந்த மலைகளில் அதிசயவிதமாக ஒரு வழி திறக்கப்பட்டு, அவர் மற்றவர்களிடம் வந்து சேர்ந்தார். அங்கு அவர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள். உடனே அவருடன் வந்து கப்பலில் ஏறினார்கள். அவர்கள் ஏறினவுடன் அவர்கள் இருந்த இடம் (எல்லாம் பனிகட்டியாக இருந்தது) அப்படியே நொறுங்கி விழுந்தது. அதை கண்ட எர்னஸ்ட் அவர்கள், 'நல்ல வேளை நீங்கள் தயாராக இருந்தீர்கள், இல்லாவிட்டால் கடலில் விழுந்து மரித்து போயிருப்பீர்கள்' என்று கூறினார். அப்போது அவர்கள் 'நீரில் பனி விலகினவுடனே, நீர் இன்று வருவீர் என்று நாங்கள் எதிர்ப்பார்த்து, நாங்கள் எங்கள் உடைமைகளை எடுத்து தயாராக இருந்தோம், நீங்கள் வந்தவுடனே உங்களை எதிர்கொண்டு வந்தோம்' என்றார்கள்.

நாம் ெசய்யக்கூடிய எளிய ஊழியம்

ஒரு சுவிேசஷ துண்டு பிரதி மாெபரும் எழுப்புதைல உண்டாக்கியது. ஒன்பது மிஷெனரிகைள உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்ைதயும ெபற ெசய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அைத படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா? ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பைர பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்ேபாதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த Dr. John Scudder துண்டு பிரதி! அதின்தைலப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்'. கண்டதும் ைகயில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்ைவ இேயசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்ைன ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். அவர் தனது ஏழு மகன்கைளயும் இரண்டு மகள்கைளயும் மிஷெனரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 ேபர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கேள!

ஜான் ஸ்கடரின் ேபத்திதான் நம் ேவலூரில் C.M.C. மருத்துவமைனைய நிறுவி மருத்துவ பணிேயாடு, சுவிேசஷ பணிையயும் ெசய்த ஐடா ஸ்கடர் அம்ைமயார் ஆவார். தைலமுைற தைலமுைறயாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணிைய ெசய்து வருமாயின் அது சரித்திரத்திேலேய சிறந்த உதாரணம் தாேன! ஒரு ைகபிரதி ஒருவைர மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்காேனார் இரட்சிப்பின் பாைதயில் கடந்து வந்துள்ளனர்.

ஒரு ைகப்பிரதி ஒரு தைலமுைறயினைரேய மிஷெனரிகளாக உலகிற்கு தர காரணமாயிருந்துள்ளது, என்றால் நீங்களும், இந்த எளிய ஊழியத்ைத ெசய்யலாேம

வேதனை இல்லாத ஐசுவரியம்

ஜான் டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது. அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போகும், ஏன், கண்களின மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே, அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது. எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர், ஆனால் அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமேத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்தபடியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள். அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்பு படையினர் அவரைக் காவல் காத்தனர். ஏனென்றால் யார், எப்போது, அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால். இப்படிபட்ட பணம் தேவைதானா?
.
.அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் அவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட செய்திதாள்கள், அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப் போயிற்று. அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்..
.
ஒருநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, ஆலயக் கட்டுமானத்திற்கும், மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி, வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம், பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர், ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தார். அல்லேலூயா!