மொரீஷியஸ் தீவில் அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்னறனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மடடுமே உள்ளன. அவற்றின் வயது 300 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இவைகள் பூத்து குலுங்கியும், காய் கனிகளை தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் அவை முளைக்கவில்லை. இது அறிவியல் மேதைகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகவே இதை ஒரு குழுவினர் ஆராய்ந்தனர். இறுதியியல் அவர்கள் கூறிய கருத்தாவது, 300ஆண்டுகளுக்கு முன் இந்த மொரீஷியஸ் தீவில் 'டோடு' என்ற பறவையினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. சாம்பல் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் கொழு கொழுவென்று அவைகள் காணப்படும். அப்பறவைகள் இந்த மரத்தின் பழங்களை வயிறு நிறைய சாப்பிட்டு அந்த மரத்தின் அடியிலேயே படுத்து உறங்கும். ஆள் நடமாட்டமில்லாத அக்காடுகளில் அவைகள் நிம்மதியாக வாழ்ந்தன. எந்த தொந்தரவுமின்றி வயிறு நிறைய உணவும் கிடைப்பதால், அவை பறக்க முயற்சித்ததேயில்லை உணவிற்காக வேறு இடங்களுக்கு பறந்து செல்ல வேண்டியதுமில்லை.
ஒரு நாள் போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று அத்தீவிற்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து படிப்படியாக பல கப்பல்கள் வரத்தொடங்கின. அவைகளிலிருந்தோர், பறக்கவும் தெரியாத, ஒடவும தெரியாத கொழு கொழு டோடுக்களை எளிதாய் வேட்டையாடினர். வெகு சீக்கிரத்தில் அதன் இனம் அழிந்து போனது, சரி இப்பறவைக்கும் அம்மரத்தின் இனவிருத்திக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? ஆம், உண்டு! இம்மரத்தின் பழங்களை உண்ணும் டோடு பறவைகளின் உணவு பாதையை கடந்து சென்ற விதை மட்டுமே மண்ணில் விழுந்து முளைக்கும். அதன் உணவு பாதையின் ஊக்கிகள் அவ்விதை மீது செயல்படாவிட்டால் புதிய செடிகளை உருவாக்க முடியாது என்பதை கண்டறிந்தனர். சிறகுகளிருந்தும், பறக்க தெரியாத பறவைகள் தன் இனத்தை இழந்ததோடு பிறருக்கும் நன்மை பயக்காமல் போய் விட்டது.
No comments:
Post a Comment