Saturday, June 30, 2012

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து தனது கணவனுடைய இரட்சிப்புக்காக மிகுந்த கரிசனையோடு ஜெபித்து வந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களது கணவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை. அவர் எனக்கு உண்மையற்றவராகி திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் விட்டார் என்று நினைத்து ஆண்டவர் மீது வெறுப்பு ஏற்பட்டு ஜெபிப்பதை நிறுத்தி விட்டார்கள். ஆண்டவருக்காய் ஜீவிப்பதை முற்றிலுமாய் விட்டுவிட்டார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பாராதவிதமாக ரோஜர் சைமன் என்பவர் திருமதி ஹேனோவர் அவர்களை  சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்ன காரியம் அவர்களை மிகுந்த ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது. 'திரு ஹேனோவர் மரணமடைந்த நாள் அன்று நான் சாலை ஓரத்தில் நின்று யாராவது என்னை இலவசமாக காரில் ஏற்றி செல்ல மாட்டார்களா என்று காத்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் கணவர் என் சைகைக்கு இசைந்து காரை ஓரமாக நிறுத்தினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவரோடு பிரயாணம் செய்தேன். அந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இயேசுகிறிஸ்துவை குறித்தும் என்னுடைய சாட்சியையும் அவரோடு பகிர்ந்து கொண்டேன். தன்னுடைய பாவங்களை குறித்து குத்தப்பட்டவராக, மனஸ்தாப்பட்டு மனம் திரும்பினார். காரை ஓரமாக நிறுத்தினார். தன்னையும் அறியாமல் அழுதார். முழங்காலில் நின்று தான் தேவனுக்கு  விரோதமான பாவி என்பதை அறிக்கை செய்தார். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி கொண்டேன். அன்றே அவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்று அறிந்தேன். தேவனுடைய செயல் எவ்வளவு மகத்தானது என்பதை பாருங்கள். ஆண்டவர் அவரில் அன்பு கூர்ந்த காரணத்தால் அவரை இரட்சித்து, தம்மோடு சேர்த்து கொண்டார். இது எவ்வளவு பெரிய சிலாக்கியம்' என்றார்.


திருமதி ஹேனோவருக்கு மிகுந்த சந்தோஷம் ஒரு பக்கம், மிகுந்த துக்கம் மற்றொரு பக்கம். தன் கணவர் அவரது மரணத்திற்கு முன்பாக இரட்சிக்கப்பட்டு விட்டார். உண்மையிலேயே ஆண்டவர் தன் ஜெபத்தை கேட்டிருக்கிறார் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. அதே சமயத்தில் ஆண்டவரை விளங்கி கொள்ளாமல் அவரை துக்கப்படுத்தி விட்டோமே என்று கவலை ஒரு புறம். 'ஆண்டவர் எவ்வளவு உண்மையுளளவர், நான் உண்மையில்லாதவளாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராக இருந்திருக்கிறாரே' என்று மனமகிழ்ந்தார்

2 comments:

  1. Thank you for this valuable story.. Our God is true & faithful...

    ReplyDelete