'பலவீனனும் தன்னை பலவான் என்று
சொல்வானாக' (யோவேல் 3:10)
ஒரு பத்து வயது சிறுமி, தாய் கொடுத்த பாலை குடித்து விட்டு, படுக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு சரியான வயிற்று வலி, தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தாள். உடனே டாக்டரிடம் போய் காட்டினார்கள். டாக்டர் அவளுக்கு அந்த வலிக்கு மருந்து கொடுத்து, சில இரத்த பரிசோதனை நடத்தினார்கள். அப்பொழுது அவர்களுக்கு தெரிய வந்தது, அவளுக்கு பாலில் இருக்கும் லேக்டுலோஸ் (Lactulose) என்னும் பொருள் அலர்ஜி என்று. அவள் இனி பால் சேர்க்கப்பட்ட எந்த பொருளையும் சாப்பிட முடியாது. ஐஸ் கிரீம், சீஸ், தயிர் என்று எந்த பொருளையும் அவளால் சாப்பிட முடியாது. அதோடு கூட அவளுக்கு அந்த அலர்ஜியினால் ஆஸ்த்துமா வியாதியும் வந்தது.
அந்த வியாதியானால், பத்து வயதில் விளையாடக்கூடிய எந்த விளையாட்டையும் அவளால் விளையாட முடியாது போனது. பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாடும்போது அவளால் பார்க்கத்தான் முடிந்தது. அவர்களோடு அவளால் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் வரை அவள் பொறுத்து பார்த்தாள். தன்னையே நொந்து கொண்டு இருந்தாள்.
ஒரு வருடம் கழித்து, அவள் முடிவு செய்தாள். 'இந்த வியாதிகள் என்னை தடுத்து நிறுத்த முடியாது, நான் போய் விளையாடுவேன், நான் மற்றவர்களை போல இருப்பேன்' என்று உறுதி எடுத்து கொண்டு, விளையாட ஆரம்பித்தாள். அவள் இருந்த நாட்டின் மிகச்சிறந்த ஓட்டபந்தய வீராங்கனையாக மாறினாள்.
No comments:
Post a Comment