சர் எர்னஸ்ட்
ஷேக்லடன் (Sir Ernest Shackleton) என்பவர் கடலில் சென்று, பகுதிகளை
ஆராய்பவர் தென் பகுதியை சென்று ஆராய்வதற்கு சென்றபோது,
தன்னுடைய மனிதர்களில் சிலரை யானை தீவு (Elephant Island)
என்னுமிடத்தில் விட்டு விட்டு, தான் திரும்ப வந்து
அவர்களை கூட்டி கொண்டு
போவதாக சொல்லிவிட்டு, மற்ற சில பேருடன் ஆராய்வதற்காக சென்றார்.
ஆராய்ந்து முடித்துவிட்டு, திரும்ப மற்றவர்களை அழைத்து செல்வதற்காக
திரும்பும்போது, பெரிய பெரிய பனி மலைகள் அவர் அங்கு செல்வதற்கு
தடை செய்வதை கண்டார். என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது, அந்த மலைகளில் அதிசயவிதமாக ஒரு வழி திறக்கப்பட்டு, அவர் மற்றவர்களிடம் வந்து சேர்ந்தார்.
அங்கு அவர்கள் ஆயத்தமாய்
இருந்தார்கள். உடனே அவருடன் வந்து கப்பலில் ஏறினார்கள். அவர்கள்
ஏறினவுடன் அவர்கள் இருந்த இடம் (எல்லாம் பனிகட்டியாக இருந்தது)
அப்படியே நொறுங்கி விழுந்தது. அதை கண்ட எர்னஸ்ட் அவர்கள், 'நல்ல
வேளை நீங்கள் தயாராக இருந்தீர்கள், இல்லாவிட்டால் கடலில்
விழுந்து மரித்து போயிருப்பீர்கள்' என்று கூறினார்.
அப்போது அவர்கள்
'நீரில் பனி விலகினவுடனே, நீர் இன்று வருவீர் என்று
நாங்கள் எதிர்ப்பார்த்து, நாங்கள் எங்கள் உடைமைகளை எடுத்து
தயாராக இருந்தோம்,
நீங்கள் வந்தவுடனே உங்களை எதிர்கொண்டு வந்தோம்' என்றார்கள்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment