Tuesday, February 26, 2013

மன்னிப்பு

சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். ஓய்வுநேரத்தில் விளையாட ஜானிக்கு 'சுண்டுவில்' ஒன்றை பாட்டி கொடுத்தார்.

அடுத்த நாளே, பாட்டியின் வீட்டை சுற்றி இருக்கும் அடர்ந்த வனத்திற்கு ஜானி சென்றான். 'சுண்டுவில்லை' கொண்டு பறவை பூச்சி ஆகியவற்றை அடிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் சரியாக இலக்கை குறி பார்த்து அடிக்க முடியவில்லை.

மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பினான். அப்போது பாட்டி வளர்க்கும் வாத்து அவனது அறையில் நின்றுகொண்டிருந்தது. இதையாவது அடிக்க முயற்சிப்போமே என சுண்டுவில்லால் அதை குறி வைத்தான். இம்முறை துரதிர்ஷ்டவசமாக குறி தவறவில்லை. வாத்தினுடைய தலை நசுங்கி இறந்தது.

பெரிய தவறு செய்துவிட்டோமே என பயந்த ஜானி, யாருக்கும் தெரியாமல் வாத்தை புதைத்து விட்டான். இவை எல்லாவற்றையும் அவன் சகோதரி மேரி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடன், "நீ வாத்தை கொன்றது எனக்கு தெரியும். நான் சொல்லும்படியெல்லாம் கேட்காவிட்டால் பாட்டியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன்" என்று மிரட்டினாள்.

ஜானியும் பயத்தில் ஒப்புக்கொண்டான். பாட்டி மேரியை மாட்டுக்கு தீவணம் போட்டுவிட்டு வா என்று சொன்னார். ஜானி எனக்காக இந்த வேலையை செய்வான் என்று சொன்னாள். அப்பாவி ஜானி "நான் ஏன் செய்ய வேண்டும். உன்னை தானே சொன்னார்கள்?" என்றான். மேரி ஜானியிடம் "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். வேறு வழியின்றி ஜானி வேலையை செய்தான்.

இப்படி மேரி ஜானியை "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" "வாத்து ஞாபகம் இருக்கிறதா?" என்ற கேள்வியை கேட்டே எல்லா வேலைகளையும் செய்ய வைத்துவிடுவாள். ஜானியின் விடுமுறை மிகவும் கொடூரமாக போய்க் கொண்டிருந்தது.

ஜானியால் மேரியின் அச்சுறுத்தலை தாங்க முடியவில்லை. ஒருநாள் காலை, தனது பாட்டியிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டான். மேரி தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி அழுதான்.

பாட்டி அவனிடம் "அழாதே ஜானி, நீ அந்த வாத்தை தவறுதலாக கொன்றுவிட்டதை நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நான் உன்னை அன்றே மன்னித்துவிட்டேன். அதனால் தான் அதை பற்றி உன்னிடம் கேட்கவில்லை. இனிமேல் மேரிக்கு நீ பயப்பட வேண்டாம். " என்று ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டார்.

ஜானி, குற்ற மனப்பான்மை நீங்கி விடுமுறையை சந்தோஷமாக கழித்தான்.

_-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__-__

நண்பர்களே! இதுபோலவே குற்ற உணன்ர்வினால் சிக்கி தவிக்கும் உங்களை விடுவிக்கவே கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உங்கள் துக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டார். அவரிடம் மட்டுமே பாவத்துக்கான மன்னிப்ப் உண்டு. உண்மையாய் மனந்திரும்புவோரை அவர் மன்னித்து அனைத்துக் கொள்கிறார். மகனாய், மகளாய் ஏற்றுக் கொள்கிறார்.

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்

தாமஸ் ஆல்வா எடிசன் - நடிகர். ரஜினிகாந்த் சொன்ன கதை

நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பம்சம் அவர் நடிப்பும் ஸ்டைலும் மட்டும் அல்ல. அவர் பேசும் போது இடை இடையே சொல்லும் சிறு கதைகளும் சிறப்பு தான். அவரைப் பிடித்க்காதவர்கள் கூட அவர் சொல்லும் கதைகளை ரசிப்பது உண்டு. ஒன்று. இந்த கதைகள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துவிடும். ஒரு பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது சொன்ன கதை ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

ஒரு இரவு வேளையில் இருவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். இருவரும் அருகில் உட்கார்ந்து இருந்தனர். அதில் ஒருவர் புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருக்க மற்றொருவர் அதை கவனித்துக் கொண்டிருந்தாராம். அவர்கள் இருவரின் உரையாடல் இதோ உங்களுக்காக ரஜினி சொன்ன பாணியில் .........

நபர் 1: ஐயா வணக்கம், இருவரும் வெகு தூரம் ஒன்றாக பயணம் செய்யப்போகிறோம் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வது நல்லது. நான் ஒரு விஞ்ஞானி, உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

நபர் 2: (அமைதியான முகத்தோடு) “சொல்லிக்கொள்ளும் அளவில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை” என்று சொல்லி கையில் உள்ள புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார்.

நபர் 1: “ரொம்ப ஆர்வமா வாசிக்கிரீங்களே, அது என்ன புத்தகம். விஞ்ஞானம் அல்லது அறிவியல் சம்பந்தமான புத்தகமா” என்று கேட்டு புத்தகத்தை எட்டி பார்த்தார்.

நபர் 2: ‘இது அதை விட அறிவு நிறைந்த புத்தகம், இதன் பெயர் பரிசுத்த வேதாகமம் (HOLY BIBLE)” என்று சொல்லி மறுபடியும் வாசிப்பதில் கவனம் செயலுத்தினார்

நபர் 1: “இந்த விஞ்ஞான யுகத்துல கடவுள், வேதம் போன்ற கட்டுக் கதைகளையும், மூட நம்பிக்கைகளையும் எப்படி நம்புறீங்க. உங்கள மாதிரி ஆட்களால தான் இந்த உலகம் வளராம இருக்கு” என்று கடிந்துகொண்டார்.

நபர் 2: (முகத்தில் எந்த சபலமும் இல்லாமல் வேத புத்தகத்தை வாசித்து கொண்டே இருந்தார்)

நபர் 1: இந்த உலகம் உண்டானது முதல் இப்போ நாம் பயணம் பண்ற விமானம் வரை எல்லாமே விஞ்ஞானம் தான். இதுல கடவுளுக்கு எந்த இடமும் இல்லை. இதெல்லாம் சொன்ன உங்கள மாதிரி ஆளுக்கு புரியவாப் போகுது.

நபர் 2: (இப்போதும் எந்த பதிலும் சொல்லாமல் வேத புத்தகத்தை வாசித்துக் கொண்டே இருந்தார்)

நபர் 1: இன்னும் சில வினாடிகளில் நாம் இறங்கும் இடம் வர போகிறது , உங்க பெயர தெரிஞ்சுக்கலாமா?

நபர் 2: என் பெயர் “தாமஸ் ஆல்வா எடிசன்” என்று சொல்லி தன் பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினார்.

நபர் 1: “எடிசனா, நீங்கள்!!! நான் மனதில் உள்ளதை எல்லாம் போட்டு உடைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் ஆய்வுகூடத்திற்கு வந்து தங்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடைக்குமா?” என்று தாழ்மையோடு கேட்டார்.

எடிசன் : “நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, உங்களுக்கு கட்டாயம் அனுமதி உண்டு” என்று சொல்லி ஒரு குறிப்பிட தேதியில் வர சொன்னார்.

எடிசன் சொன்ன குறிப்பிட்ட நாளில் அவரின் ஆய்வு கூடத்திற்கு அந்த நபர் சென்றார். ஆய்வுக் கூடத்திற்கு உள்ளே சென்றதுமே அங்கு வைக்கபட்டிருந்த சூரிய குடும்பத்தின் மாதிரியைப் பிரமிப்போடு பார்த்து கொண்டிருக்கும் போது எடிசன் வந்தார்.

நபர் 1: இந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை எப்படி இவ்வளவு நேர்த்தியாக செய்தீர்கள்? இந்த அளவு நேர்த்தியை உலகில் நான் எங்குமே பார்த்தது இல்லை. இதை செய்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.

எடிசன் : “இந்த மாதிரியை நான் செய்யவில்லை.இந்த அறையை நாங்கள் கட்டி முடித்ததும் ஒரு திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நாளில் அறையை திறந்ததும் இது இருந்தது. அதனால் இது தானாகவே வந்தது என்று நினைத்துவிட்டோம்”

நபர் 2: உங்களை பெரிய விஞ்ஞானி என்று நினைத்து வந்தால் நீங்கள் சிறு பிள்ளை போல பேசுகிறீர்கள். இந்த மாதிரி எப்படி தானாக வரும். அந்த ஒரு பொருளையும் யாரோ ஒருவர் செய்தே ஆக வேண்டும் அல்லவா?

எடிசன்: இவ்வளவு விவராமாக பேசுகிற நீங்கள் எப்படி இந்த உலகம் தானாக உருவானது என்பதை நம்புகிறீர்கள். ஒரு சிறு மாதிரியே தானாக வராது என்றால் , நிஜ சூரிய குடும்பம் எப்படி தானாக வர முடியும். சிருஷ்டிப்பு இருக்குமானால் சிருஷ்டிகரும் இருந்தே தீரவேண்டும்.

இந்த கதையை சொன்ன சூப்பர் ஸ்டார் கடைசியில் உரத்த குரலில்

“IF THERE IS A CREATION THERE SHOLUD BE CREATOR AND THAT CREATOR IS GOD”
என்று கொடுத்த பஞ்ச் அருமை.

வேதத்தை நன்கு கற்றிருந்தததால் எடிசனால் தெய்வத்தை குறித்து அவரது பாணியில் சாட்சி கொடுக்க முடிகிறது. நாமும் இதுபோல் நடந்துகொள்ள முயற்ச்சிப்போம்.

(ஆதியாகமம் 1:1) “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”

(சங்கீதம் 33:6) “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது”

(சங்கீதம் 89:11) “வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்”

(சங்கீதம் 136:5) “வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.”

தேவ சமாதானம்

கப்பல் ஒன்றில் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு ப்ரயாணி மிகவும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்.

இதனை கண்ட கப்பல் தலைவன் அவரிடம் சென்று, "ஐயா, ஏன் மிகவும் சோர்வுடன் காணப்படுகிரீர்கள்?" என்று கேட்டான்.

" ஐயா! நான் ஊரிலிருந்து கொண்டு வந்த ரொட்டிகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இனி சில காய்ந்த ரொட்டி துண்டுகளே இருக்கின்றன. இதுவும் தீர்ந்த பிறகு என்ன செய்வது? எனக்கு ஒரு வழியுமே தெரியவில்லை?" என்றார் அந்த பிரயாணி சோகம் நிறைந்த குரலில்.

இதை கேட்ட கப்பல் தலைவன், அவரது பயணச் சீட்டை கேட்டு வாங்கினார். "இந்த சீட்டை வைத்திருப்பவர்களுக்கு கப்பலிலேயே உணவு வழங்கப்படும்" என்று அதில் எழுதி இருப்பதை அவருக்கு காண்பித்து, ஐயா, நீங்கள் கேட்டு இருந்தால் வகை வகையான உணவு உங்களை தேடி வந்திருக்குமே ! என்று அனுதாபப்பட்டான் கப்பல் தலைவன்.

ப்ரயாணி தனது அறியாமையை நினைத்து மிகவும் வருந்தினார்.

இதை போலவே நாமும் சில வேளைகளில் சர்வ சம்பூரராண நமது தேவனாகிய இயேசு-கிறிஸ்துவிடம் நமது தேவைகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளாமல் கஷ்டப்படுகிறோம்.

இப்பொழுதே! உங்கள் பாரங்களை அவர் மேல் வைத்து விட்டு, தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளுங்கள்.

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் ஓசியா 4:6

For more Stories:

kadambamtamil.blogspot.com

மரணப்படுக்கையில் சார்லஸ் டார்வின்

‘ஆராய்ச்சியின் காலம்’ என்ற ஒரு புத்தகத்தை சார்லஸ் டார்வின் எழுதினர். அந்தப் புத்தகத்தில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள், உலகெங்கும் விஷத்தைப்போல் விரைந்து பரவின. கோடிக்கணக்கான இளைஞர்கள் அதை பின்பற்றினார்கள்.

“மனிதர்கள் இறைவனின் படைப்பு அல்ல. இயற்கையின் படைப்பு” என்பதே அவர் அந்த புத்தகத்தில் வெளியிட்டிருந்த கொள்கையின் சாரம்! ஆனால், முடிவில் டார்வின் மரணப்படுக்கையில் இருக்கும்போது இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மனம் கசந்து அழுதார்.

ஐயோ, நான் விளையாட்டாக ஏழுதிய அந்தக் கருத்துக்கள் எத்தனை வாலிபர்களின் வாழ்க்கையை நாசமாகிவிட்டது. கடவுள் பயம் இன்றி, எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ள நான் காரணமாகி விட்டேனே! இந்த சாபங்கள் யாவும் என்றும் என்னையே சாரும்! என்றெல்லாம் அவர் சொல்லிச் சொல்லி அழுதார்.

நண்பர்களே, இறைவனுக்கு விரோதமான காரியங்களில் நீங்கள் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்கிறது,

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் (எண் 32:23).

For more Stories:

kadambamtamil.blogspot.com

பாவம் என்னை சுற்றி இருக்கிறது

கோட்டையூர் வீரவர்மன் தன்னுடைய ராஜ்யத்தை கட்டுகோப்பாக வைத்திருந்தான். எல்லையை சுற்றி அலங்கமும் அதன் மத்தியில் மன்னர் தங்கும் கொட்டையும் மிக அழகாக அமைத்திருந்தான். கோட்டையின் பின் புறம் இருந்த குளத்தில் அவ்வப்போது பொழு போக்குவான்.

ஒரு நாள் இரவு ஒரு சத்தத்தை கேட்டான். அது அவனை தூங்கவே விடவில்லை. மிகவும் எரிச்சலோடு காலையில் எழுந்து வேலைகாரர்களிடம் அந்த சத்தத்தை குறித்து விசாரித்தான். அதற்கு வேலைக்காரர்கள் "இது கோட்டைக்கு பின்புறம் உள்ள குளத்திலிருந்து வரும் தவளைகள் சத்தம். இது பனிக் காலம் ஆதலாம் அப்படி தான் சத்தமிடும்" என்றனர்.

இந்த சத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று தனது மந்திரிகளை நாடினான். மந்திரி ஒருவன் ஒவ்வொன்றாக பிடித்து நெருப்பில் போடலாம் என்றான். அப்படியே செய்ய உத்தரவிட்டான் மனனன். காரியங்கள் நடந்தது. அடுத்த இரவும் வந்தது. மீண்டும் சத்தமும் வந்தது.

மறுபடியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டினான். அப்போது ஒரு அறிவாளி மந்திரி குளத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் மாற்றிவிடலாம் அப்போது தவளை எல்லாம் ஒழிந்துவிடும் என்றான். அப்படியே செய்யுமாறு உத்தரவிட்டான். ம்ஹும் சத்தம் நின்றபாடில்லை ஆகவே மன்னன் மிகவும் கோபமடைந்தான்.

மன்னன் தனது நாட்டின் குடிகளுக்கு பொதுவான அறிவிப்பு கொடுத்தான். தவளை சத்தத்தை ஒழிப்போருக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்று பிரகடனம் செய்தான்.

ஒரு முதியவர் மன்னனிடம் வந்து, "உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும், தவளை சத்தத்திலிருந்து விடுபடவும் என்னிடம் ஒரு வழி உண்டு" என்றார். "தயவு செய்து சொல்லுங்கள்" என்றான் மனனன்.

"நீங்கள் நித்திரை செய்யும் போது உங்கள் இரண்டு காதுகளிலும் பஞ்சு சுருளை வைத்தால் போதும். எந்த சத்தமும் இல்லாமல் நல்ல நித்திரை உங்களுக்கு உடனே கிடைக்கும்" என்றார்.

இந்த கதையை வாசித்துக்கொண்டிருக்கும் எனது அருமையானவர்களே! எங்கு பார்த்தாலும் பாவம் என்னை சுற்றி இருக்கிறது என்கிறீர்களா?

குளம் என்றால் தவளை இருக்க தான் செய்யும். நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.(1 யோவான் 5:19)

நாமோ நம்முடைய கண்களையும், இருதயத்தையும், செவியையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அர்ப்பணித்து தூய ஆவியானவரோடு நாமும் இணைந்து செயல்படும் போது எல்லா பாவத்திற்கும் விலகி பரிசுத்தமாக வாழ முடியும்.

For more Stories:

kadambamtamil.blogspot.com

எல்லாம் நன்மைக்கே - கவலைபடதிருங்கள்

பல ஆண்டுகளுக்கு முன் சீன கிராமம் ஒன்றில் ஒரு வயதான விவசாயியும் அவரது மகனும் வாழ்ந்து வந்தனர். சிறு வயலையும் ஒரு குடிசையையும் தவிர அவருக்கிருந்த ஒரே சொத்து நிலத்தை உழும் குதிரை மட்டும் தான்.

ஒருநாள் அந்த குதிரை அவரை விட்டு ஓடிவிட்டது. ஆகவே, விவசாயியால் குதிரை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் போயிற்று.

அவர் மீது நல்லெண்ணம் கொண்ட கிராம மக்கள் குதிரையை இழந்து தவிக்கும் விவசாயிக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டுக்கு சென்றனர். "ஐயா! இந்த இழப்பு உங்களுக்கு துரதிர்ஷ்டவசமானது. உங்கள் இழப்புக்காக நாங்களும் வருந்துகிறோம்" என்றனர்.

தனக்கு ஆறுதல் சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொல்லிய விவசாயி "குதிரை ஓடிப் போனதை துரதிர்ஷ்டமான காரியம் என்று எப்படி சொல்கிறீர்கள், ஒருவேளை இதிலும் ஒரு அதிர்ஷ்டம் இருக்கலாமே? ஆகவே உங்கள் வேலையை பார்க்க போங்கள்" என்றார்.

இந்த பதிலை கேட்ட கிராம மக்கள், இந்த விவசாயி குதிரை தொலைந்ததில் குழம்பிப் போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டனர்.

ஒரு வாரம் கழித்து தொலைந்து போன குதிரை மற்றொரு குதிரையை கூட்டிக் கொண்டு திரும்பி வந்தது.

செய்தியறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மீண்டும் விவசாயி வீட்டுக்கு சென்றனர். " தொலைந்த குதிரை மீண்டும் வந்துவிட்டதாமே, அதுவும் இன்னொரு குதிரையையும் அழைத்து வந்திருக்கிறதாமே? இந்த அதிர்ஷ்டத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தோம்" என்றார்கள்.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொல்லிய விவசாயி, "தொலைந்து போன குதிரை மற்றொரு குதிரையையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்ததை அதிர்ஷ்டம் என்று எப்படி சொல்கிறீர்கள்? யாருக்கு தெரியும் இது துரதிர்ஷ்டமாக கூட இருக்கலாமே? உங்கள் வேலையை பார்க்க போங்கள்" என்றார்.

கடுப்பான கிராம மக்கள், இந்த கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல என்று சொல்லிக் கொண்டே வீடு திரும்பினர்.

ஒரு மாதம் கழித்து, விவசாயியின் மகன் புதிதாக வந்த குதிரையை லாயத்தில் கட்டிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குதிரை அவனுக்கு ஒரு உதை கொடுத்தது. அதில் அவனது கால் எலும்பு முறிந்தது.

வைத்தியரிடம் அழைத்து சென்று வீடு திரும்பினார் விவசாயி. செய்தி அறிந்த கிராம மக்கள், விவசாயிக்காக இல்லாவிட்டாலும் அவரது மகனுக்காக அவரை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து "துரதிர்ஷ்டவசமாக உங்களது மகன் காயப்பட்டதை அறிந்தோம். ஆகவே, இந்த துக்கத்தில் இருக்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தோம்" என்றனர்.

தனக்கும், மகனுக்கும் ஆறுதல் சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொன்ன விவசாயி " எனது மகனின் கால் முறிந்ததை துரதிர்ஷ்டம் என்று எப்படி சொல்கிறீர்கள். யாருக்கு தெரியும் ஒரு வேளை இது அதிர்ஷ்டமாக கூட இருக்கலாம்" என்று சொல்லி கதவை மூடினார்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் "இந்த கிழவனுக்கு அறிவே இல்லை. இனி யாரும் இவரது சுக துக்கத்தில் பங்கெடுக்கக் கூடாது" என்று முடிவெடுத்தனர்.

சில மாதங்களில் ஜப்பான சீனாவின் மீது போர் தொடுத்தது. ஆகவே சீன அரசு தனது நாட்டிலுள்ள திடமான இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர உத்தரவிட்டது.

விவசாயியின் கிராமத்துக்கும் இராணுவ அதிகாரிகள் வந்து எல்லா இளைஞர்களையும் வலுகட்டாயமாக தூக்கி சென்றனர். ஆனால் விவசாயியின் மகனை மட்டும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் விட்டுவிட்டனர்.

இப்போது தான் கிராம மக்களுக்கு விவசாயி சொன்ன பதிலின் அர்த்தம் புரிந்தது. துக்கத்தினால் துவண்டு போகவும் கூடாது , மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கவும் கூடாது. துக்கமும், மகிழ்ச்சியும் வாழ்வின் அங்கமே என்று உணர்ந்தனர்.

எனக்கு அருமையானவர்களே! இதுதான் வாழ்க்கை. நமது தோல்வியும், இழப்பும் நிரந்தரம் அல்ல. அதுபோலவே நமது வெற்றியும் மகிழ்ச்சியும்.

இந்த உலகில் நிலையானது தேவ அன்பும், அவரோடு நமது உறவும் மட்டுமே. ஆகவே, எதை குறித்தும் கவலைப்படாமல் தேவனுக்குள் சந்தோஷமாய் வாழுங்கள்.

அட, நம்ம ஆண்டவர் சொன்னது இப்பதான் ஞாபகம் வருது,

மத்தேயு 6:27,31 - 34
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

சபையில் ஐக்கியப்பட்டிரு

"வேத-ஒளி" நீலகிரி மலையில் இருக்கும் ஒரே ஒரு கிறிஸ்தவ ஆலயம். அதன் போதகர் அருளானந்தம் தேவனை அதிகமாய் நேசித்து அவருக்காக வாழும் உத்தம ஊழியர். அவரது தயாள குணத்தால் கிறிஸ்துவை அறியாதவர்கள் கூட அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தனர்.

அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த "சாலமன்" அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை என்று போதகருக்கு அறிவிக்கப்பட்டது. மிகவும் வேதனையுற்ற போதகர் அவனை சந்திக்க முடிவு செய்தார்.

ஒரு-நாள் மாலை அந்த ஊரை கடும்-குளிர் மூடியிருந்தது. சாலமன் தனது வீட்டில் மர கட்டைகளை எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். திடீரேனே "டக் டக்" என்று கதவை தட்டும் சத்தம் கேட்கவே, எழுந்து சென்று கதவை திறந்தான். அங்கு போதகர் நின்று கொண்டிருந்தார். போதகர் தனது வீட்டிற்கு வந்திருக்கும் நோக்கத்தை அவன் எளிதில் புரிந்து கொண்டான். "உள்ளே வாருங்கள்" என்று வரவேற்றான்.

போதகர் புன்னகையோடு உள்ளே வந்து நெருப்பினண்டை கிடத்தி இருந்த இருக்கையில் அமர்ந்தார். சாலமனும் அவர் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். போதகர் ஒன்றுமே பேசாமல், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கடந்தும் அவர் எதுவும் பேசவில்லை, 'சாலமனது' மனதில் குழப்பம் நிழலிட்டது. போதகர் நெருப்பையே தீவிரமாய் கவனித்துக் கொண்டிருந்தார். பட்டென இருக்கையிலிருந்த எழுந்த போதகர் ஒரு இடுக்கியை எடுத்து பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த ஒரு மர துண்டை தனியாக எடுத்து வைத்தார். எதுவும் பேசாமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

சாலமன் ஒன்றும் புரியாமல் தனியாக வைக்கப்பட்ட மர துண்டை கவனித்துக் கொண்டிருந்தான். தனியே வைக்கப்பட்ட மர-துண்டில் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, சிறிது நேரத்தில் பிரகாசமான அந்த மர-துண்டு மங்கி எரிய ஆரம்பித்தது, இறுதியில் அணைந்தே விட்டது.

ஆரம்பம் முதல் எதுவுமே பேசாத போதகர், தான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து இருக்கையை விட்டு எழுந்தார். அணைந்து போன அந்த மர-துண்டை மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் மர-துண்டுகளோடு வைத்தார். துரிதமாக அது பற்றி எரிந்து பிரகாசிக்க ஆரம்பித்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த சாலமனின் கண்களில் நீர் கசிந்தது.

போதகர் கதவை நோக்கி நடக்க தொடங்கினார். கதவை திறக்கும் போது , சாலமன் பின்னிருந்து "ஐயா! தங்கள் வருகைக்கும் , இந்த அக்னி உபதேசத்திற்கும் மிக்க நன்றி. வருகிற ஞாயிற்று கிழமை ஆலயத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்' என்றான்.

புன்னகை உதிர்த்து அமைதலாய் கடந்து போனார் போதகர்.

நண்பர்களே! நமக்கு இவ்வுலகில் பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகள் தேவன் நமக்கு தரும் அனுபவங்களே.

கடந்த சில வாரங்களாக ஆலயம் செல்ல தவறியதால் (அல்லது அதிக ஈடுபாட்டோடு ஆராதனைக்கு செல்லாததால்) நீங்கள் மங்கி எரிந்து கொண்டிருக்கலாம். நாளை ஆலயம் செல்ல எல்லா ஆயத்தமும் இன்றே செய்துவிடுங்கள். கிறிஸ்து உங்களை பிரகாசிக்கச் செய்வார்

** 1 John (1:7) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் 'ஒருவரோடொருவர்' ஐக்கியப்பட்டிருப்போம் **

For More Stories :
KadambamTamil.blogspot.com

நம் கண்ணில் உள்ள உத்திரம்

விமலா அன்று காலை அவள் கணவனை அவசரமாய் சமையலறைக்குள் அழைத்து, ஜன்னல் வழியே பக்கத்து வீட்டு மாமி துணி துவைப்பதை காட்டி "இந்த மாமிக்கு துவைக்கவே தெரியாது, பாருங்க ஒரு துணியாது பளிச்சுன்னு இருக்குதா? நான் பாருங்க உங்க சட்டையெல்லாம் மீன்னுற மாதிரி துவச்சு போடுறேன். இப்பவாது என்னோட அருமைய தெரிஞ்சுக்கோங்க" என்று அலட்டிக் கொண்டாள்.

எப்போதும் போல அவள் கணவன் ஒன்றும் சொல்லாமல் தலை அசைத்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான்.

சில நாள் கழித்து மீண்டும் மாமி காலையிலேயே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். உடனே விமலா கணவனை சமையலறை ஜன்னல் அருகே கூப்பிட்டு வழக்கம் போல புராணத்தை ஆரம்பித்தாள்.

இதுவே மாமூலான கதையானது. எப்போதும் போல அவள் கணவன் ஒன்றும் சொல்லமாட்டான், தலை அசைவோடு தப்பித்துக் கொள்வான். ஒரு நாள் காலை ஆச்சரியத்தோடு கணவனை அழைத்து "என்னங்க அங்க பாருங்களேன். இந்த மாமிக்கு துவைக்கவே தெரியாதே, ஆனா இன்னைக்கு துணியெல்லாம் பளிச்சுன்னு வெளுப்பா இருக்கே. என்ன சங்கதின்னு தெரியலேயே" என்று புலம்பி கொட்டினாள்.

"ஒன்னும் இல்லடி இத்தன நாள் நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடி எல்லாம் துடைக்காம தூசி படிஞ்சு கிடந்தது. நேத்து தான் சுத்தம் பண்ணுனேன். அதான் பளிச்னு எல்லாம் தெரியுது" ன்னு சொல்லி தலையில் ஒரு குட்டு வைத்தான்.

விமலாவுக்கோ தலையை சுற்றி வண்ணத்து பூச்சிகள் பறந்து போல இருந்தது.

ஆம்! எனக்கு அருமையானவர்களே கறுப்பு கண்ணாடியில் பார்க்கும் உலகமும் கறுப்பாக தானே தெரியும். நம்மில் உள்ள குறைகளை முதலில் சரி செய்வோம். நமது சுற்றுப்புறம் தானாக சுத்தம் அடைந்து விடும்.

இதையே நமது ஆண்டவரும் நமக்கு சொல்லி தந்திருக்கிறாரே,

மத்தேயு 7:3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

நன்மையே செய்யுங்கள்

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்த்ஹம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர் "பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார். நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.

எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை. நாம் கிறிஸ்துவின் சுபாவங்களை வெளிப்படுத்தாமல் நம் சுற்றத்தார் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

நம் ஆண்டவரும் கூட இதையே நம்மிடம் கேட்பாரே? ஆம்! அவர் சொன்னதை கொஞ்சம் கவனியுங்களேன்?

மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த  சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.

சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.

அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த
ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

ஹி ஹி ஹி என்று சிரித்துக் கொண்டிருக்கும் எனக்கு அருமையானவர்களே! நாமும் பிறருக்கு நன்மையே செய்தாலும் சில பல நேரங்களில் இதுபோல தான் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம். இருந்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் நன்மை செய்வோம்.

ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது,

கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

II தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்

For More stories, Please Visit

http://kadambamtamil.blogspot.in/

அன்பை பகிர்ந்தளிப்போம்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அப்போது திடீரென வந்த வெள்ளம் எறும்பை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.

உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது. இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையை சேர்ந்தது. தனக்கு உதவிய புறாவின் நல்ல குணத்தை மெச்சிக் கொண்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேடன் ஒருவன் மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் சுற்றத்தவருக்கு உதவ வேண்டும்.

வெறுமென பக்தியாக இருக்கிறேன் சொல்லிக் கொண்டு, பிறர் மீது அன்பு செலுத்தாது, மற்றவர் துயர் துடைக்காது இருப்பவரை கடவுள் ஏற்றுக் கொள்ளமாட்டார். அதனால் தான் வேதம் சொல்கிறது,

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.( யாக் 2: 15-17)

ஆகவே! நம் சுற்றத்தாரின் துயர் துடைப்போம், அன்பை பகிர்ந்தளிப்போம், மனித நேயத்தால் தேவ நேயத்தை உலகிற்கு பறை சாற்றுவோம்.

_-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-

See more at கதம்பம் [இ-இதழ்]

Sunday, February 24, 2013

FMPB - முதல் மிஷனரியான Rev.Harris Hilton

FMPB (Friends Missionary Prayer Band) என்ற மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியான Rev.Harris Hilton (வயது 75) அவர்கள் 2012 டிசம்பர் 16ம் தேதி கர்த்தருக்குள் மரித்தார். அவர் சிமெண்ட் ஃபேக்ட்டரியில் சூப்ரவைசராக பணியாற்றி, பின்பு மிஷனிரி ஊழியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். ஆசியாவிலேயே மிக அதிக மிஷனரிகளை கொண்ட ஸ்தாபனம் FMPB மிஷனரி ஸ்தாபனமாகும். டாக்டர்.சாம்கமலேசன், சகோ.P.சாமுவேல், Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் இன்னும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் FMPB மிஷனரி ஸ்தாபனம். சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPB பொது செயலாரராக பல வருடங்கள் பொறுப்பேற்று, FMPB முழுநேர ஊழியராகவும் பணியாற்றினார். 

1969ம் வருடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியமலை (சந்தனமர வீரப்பன் வாழ்ந்த அடர்த்தியான வனமாகும்) என்ற மலையில் வாழும் ஆதிவாசிகள் வசிக்கும் பணிதளத்தில் சுவிசேஷம் அறிவிக்கும் முதல்மிஷனரி பணியை FMPB தொடங்கியது. அப்போது டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நானும், முதல் மிஷனரியாக சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களுடன் அந்த மலையில் வைத்து FMPB தலைவர்களால் முதல் மிஷனரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நாங்கள் இருவரும் அங்கு பன்றி வளர்க்கும் குட்டையான குடிசைக்குள் தங்கி ஊழியம் செய்தோம். நடுவில் மிஷனரி ஊழியம் பணம் இல்லாததால் தடைப்பட்டது. நாங்களும் டேனிஷ்பேட்டைக்கே திரும்பி வந்தோம். பணம் FMPB ஸ்தாபனத்துக்கு சேரும்வரை தற்காலிகமாக சிலமாதம் மிஷனரி ஊழியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில வாரங்களில் மிஷனரி பணி மீண்டும் தொடங்கப்பட்டபோது நான் என் குடும்ப பொறுப்பு காரணமாக மிஷனரி ஊழியத்துக்கு போகாமல் பழையபடி டாக்டர் தொழில் செய்யவேண்டிய இக்கட்டான நிலை என் வீட்டில் ஏற்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஹில்டனும் வேறு சிலரும் அதே மலைக்கு மிஷனரிகளாக மறுபடியும் புறப்பட்டு சென்றனர். ஹாரிஸ் ஹில்டன் மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். அவருக்கு மனைவி, நான்கு பிள்ளைகள் உண்டு. பல கஷ்டங்களுக்கு மத்தியில் அற்புதமாக ஊழியம் செய்தார். மலையில் சபை உருவாயிற்று, ஆலயம் கட்டப்பட்டது, தேவ நாமம் மகிமைப்பட்டது.

சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்கள் வேதாகம கல்லூரிக்கு அனுப்பபட்டு ஆயராக ஆக்கப்பட்டு FMPBயின் எல்லா மிஷனரி பணிதளங்களை சந்தித்து செயல்படும் ஊழியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிஷனரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்க்கரை நோயினால் ஒருகால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மனைவியும் மரித்தார். இப்படி பல போராட்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார், நல்ல ஓட்டத்தை முடித்தார்.
2012 டிசம்பர் 16ம் தேதி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு மரண தருவாயில் டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் தன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். 

கடந்த மாதம் நான் ராஜஸ்தான் சென்றபோது டெல்லி சென்று ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சந்தித்து மரணத்துக்கு அவரை ஆயத்தப்படுத்தி ஜெபித்து வந்தது எனக்கு திருப்தியாக இருந்தது. அவருக்கோ அன்றைய என் ஜெபம் ஆத்ம பெலனாக இருந்தது. அவரின் நல்ல ஊழியத்துக்காக, அவரின் சாட்சியுள்ள ஜீவியத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அவர் பெற்ற பிள்ளைகள் நான்கு பேரும் ஊழியத்தில் இருக்கிறார்கள். மருமக்களும் ஊழியத்தை செய்கிறார்கள். அவருடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை அளிப்பாராக. ஆமென்.

Saturday, February 23, 2013

கடவுளுடைய கரத்தில் அர்ப்பணிப்போம்

ஒரு தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.

அந்த இரண்டு பப்பாளி கன்றுகளில் ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா நான் நிற்க வேண்டும்? அழுக்கான அந்த சேற்று நிலம்! அங்கு நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நடு வெயிலில் காலகாலம் வாழ வேண்டுமே என்பதை நினைத்து வேதனைப்பட்டது. எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது, ''ஐயா என்னால் அந்த வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு செய்து என்னை வீட்டுக்குள் ஓர் தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று அடம் பிடித்தது.


மற்றைய பப்பாளிக் கன்றோ தோட்டக்காரரின் விருப்பத்துக்கு இணங்கியது தோட்டக்காரனும் அடம் பிடித்த கன்றை வீட்டினுள் ஒரு தொட்டியிலும் மற்றைய கன்றை அழுக்கு நிலமான அந்த தோட்டத்திலும் நட்டுவிட்டார்.

நாட்கள் சென்றன தோட்டத்தில் வைத்த கன்று அழுக்கையும் வெயிலையும் சகித்துக்கொண்டு நன்கு புஷ்டியாக வளர்ந்தது. மற்ற கன்றோ வெயிலும், சேறும் இல்லாததைக்குறித்து சந்தோஷ ப்பட்டாலும் வெயில், பசளை என்பன போதியளவு இன்மையால் நன்கு வளர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. அதன் இலைகள் சுருண்டன, அதன் உடல் மெலிந்தது. கனி கொடுக்கும் காலமும் வந்தது. தோட்டத்தில் இருந்த பப்பாளி மரம் மிகவும் பெரிதும் இனியதுமான கனிகளைக் கொடுத்தது. வீட்டுக்குள் நின்ற பப்பாளி மரத்தால் கனி கொடுக்க முடியவில்லை. குட்டிக்குட்டி கனிகளையே கொடுக்க முடிந்தது. தன்னுடைய நிலமையையும் தன்னுடைய கனிகளையும் பார்த்து தானே வெட்கப்பட்டுக் கொண்டது.

''வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை'' என்பது இதுதான் பிரியமானவர்களே. மரத்தின் வாழ்வில் வெயிலும் சேறும் தேவை யானது போலவே மனிதனின் வாழ்வில் உபத்திரவமும் வலியும் அவசியமானது.

அழகான ஒரு கவிதையில் நான் ரசித்த வரிகள் இவை "முள்முடி இல்லாமல் பொன்முடி இல்லை, சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை"

தேவ பிள்ளையே உன் வாழ்க்கையில் தொடர் உபத்திரவமா, கலங்காதே. உபத்திரவத்தின் குகையை நீ கடந்து வரும் போது , அந்த குகையை கடந்ததற்கான பரிசுடன் இயேசப்பா உன்னை வரவேற்பார் உபத்திரவத்தின் முடிவில் ஏதோவொரு மிகப்பெரிய ஆசீர்வாதம் உனக்கு உண்டு.

ஆனி ஆஸ்கவித் - நெல்லை பார்வையற்றோர் பள்ளி

ஆனி ஆஸ்கவித் என்னும் ஆசிரியர் 1887ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிச்சை எடுப்பதற்காக வந்தான் பார்வையற்ற சிறுவன் ஒருவன்.
ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம். உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள்.
பையன் மறுமொழியாக, அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள். என்றான்.
அந்த கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கேள்வியின் தாக்கத்தால் அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.
சிறுவன் கேட்டான். பெற்றுக் கொண்டான்.
அழுகின்ற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற பழமொழி நம் ஊரில் உண்டு. அதற்காக அழாமல் இருக்கும் குழந்தை பட்டினியையே உண்டு வாழும் என்பதில்லை. பசியாற தாமதம் நேரிடலாம்.
நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே உங்களுக்கு என்ன தேவை என்பது வானகத் தந்தைக்குத் தெரியும்” என்று சொல்லும் இயேசு “கேளுங்கள் தரப்படும்” என்றும் சொல்வதில் உள்ள அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் அன்பு

பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், மழலை மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார்

“மகளே.. எனது கையைப் பிடித்துக் கொள். அப்போது விழமாட்டாய்”

மகள் சொன்னாள் ,’ இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”

தந்தைக்கு ஆச்சரியம். “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நீ பிடித்தால் என்ன ? நான் பிடித்தால் என்ன ” ஆச்சரியப்பட்ட தந்தை கேட்டார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒரு வேளை நான் கையை விட்டு விடும் வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தால், என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை விடமாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு” மகள் சொன்னாள்.

தந்தை நெகிழ்ந்தார். மகளை தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நடந்தார்.

இறைவன் சொல்கிறார்

“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கை விடுவதும் இல்லை”

இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அவருடைய கையை உதறிவிட்டு பல வேளைகளில் ஓடி விடுகிறோம்.

எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும் வரை இறைவனின் கையை விட்டு உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புகிறோம்.

வாலிபனே - உன் வாலிபத்தை குறித்து எச்சரிக்கையாய் இரு

சில இளம் பெண்கள் நன்றாகக் குடித்துவிட்டு தங்கள் தோழி ஒருத்தியை அழைத்துச்செல்ல அவள் இல்லத்திற்கு ஒரு காரில் சென்றனர். இந்தப்பெண்ணின் தாய் தன் மகளுடன் கார் வரை வந்தார். அவர்கள் எல்லோருமே மிகவும் குடித்து போதையில் இருப்பதைக்கண்டு மிகவும் வருந்தினார்கள்.

ஆனால், மகளோ தன் தோழிகளுடன் காரில் செல்லவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். அப்போது பக்தியுள்ள அந்தத்தாய் தன் மகளைப் பார்த்து ""அன்பு மகளே தேவனோடுகூட செல், அவர் உன்னைப் பாதுகாப்பார்" என்றார். ஆனால் துன்மார்க்கம் நிறைந்த அந்த இளம் பெண்ணோ தாயையும், தேவனையும் பரியாசம் செய்து ""காரில் இடமே இல்லை, வேண்டுமானால் கடவுள் காரின் பின்பகுதியில் சாமான்கள் வைக்கும் டிக்கியில் அமர்ந்து கொண்டு வரட்டும்"" என்று கேலியாக பேசினாள். பின்பு அந்தக்காரை ஓட்டிக்கொண்டு அவளுடைய குடிகாரத்தோழிகள் வேகமாக சென்றுவிட்டனர்.


சில மணி நேரத்திற்குப்பிறகு செய்தி வந்தது. அந்தப் பெண்கள் சென்ற கார் கொடிய விபத்தில் சிக்கி நொறுங்கிபோய்விட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் மரித்துவிட்டனர். அந்த கார் என்ன வகையான கார் என்பதைக்கூட கண்டுக்கொள்ள முடியாதபடி முற்றிலும் சிதைந்துவிட்டது.

ஆனால், ஆச்சரியபடத்தக்க வகையில் காரின் டிக்கிப் பகுதிமட்டும் எந்த சேதமும் இல்லாமல் நன்றாக இருந்தது! விபத்தை புலன் விசாரணை செய்த போலீசார் அப்பளமாக நொறுங்கிப்போன காரின் டிக்கிப்பகுதி மட்டும் எந்தவிதமான சேதமும் இன்றி இருந்ததைக் குறித்து மிகவும் வியப்புற்றனர்.

அது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த டிக்கியில் ஒரு கூடைக்குள் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் கூட உடையாமல் எந்த பாதிப்பும் இன்றி அப்படியே இருந்தன!வாலிபபிள்ளைகளே, நம்முடைய வார்த்தைகளில் நாம் கவனமாயிருக்கவேண்டும். இதைத்தான் வசனமும் சொல்கிறது

"மோசம் போகாதிருங்கள்; தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

லூவாலஸ் - அமெரிக்க நாத்திகர்

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை - சர்.ஜேம்ஸ் சிம்ஸன்

குளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்

"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்"

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

யாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா?

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!

Friday, February 22, 2013

கழுகுக்குச் சமானமாய்

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.
அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வர காத்திருக்கும். அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும். புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப்போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

கால்பந்தாட்டக் களத்திலும் முழங்கால்


அமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் டிம் டிபோவின் (Tim Tebow) பெயர் மிக சர்ச்சைக்குரியது. இவரை பெரிதாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள், கடுமையாக தூசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிபோ வெளிப்படையாக தனது கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை தெரிவிப்பதுதான். பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களை எப்போதுமே வெளியில் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் விஐபியாக இருப்பவர்கள் கப்சிப்பென ஒரு இரககசிய கிறிஸ்தவரை போலவே நடந்துகொள்வார்கள். ஆனால் டிம் டீபோவோ வித்தியாசமானவர். அமெரிக்கர்கள் வெறித்தனமாக ரசிக்கும் கால்பந்தாட்டக் களத்தில் கூட தலை குனிந்து தேவனை நோக்கி விண்ணப்பம் ஏறெடுக்க தயங்காதவர்.(படம்:Tim Tebow in his trademarked prayer pose.) தைரியமாக தனக்கு கிறிஸ்துவின் மீது உள்ள நம்பிக்கையை உலகுக்கு எடுத்துக்கூற துணிந்தவர். இந்த நவநாகரீக உலகில் கிறிஸ்துவுக்கான இதுபோன்ற சாட்சியங்கள் மிகவும் அபூர்வமானவை.

டிம் டிபோ ”டென்வர் பிராங்காஸ்” (Denver Broncos) அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு முறை புளோரிடா யூனிவர்சிட்டி போட்டியின் போது இவர் தனது முகத்தில் யோவான் 3:16 என வர்ணம் தீட்டிக்கொண்டு விளையாட அன்றையதினம் மட்டும் கூகிள் தேடு தளத்தில் 92 மில்லியன் தடவை “John 3:16" என்றால் என்ன என மக்கள் தேடியிருக்கிறார்கள். அந்த வசனம் இப்படியாக பிரபல்யம் அடைந்தது. தனது டிவிட்டரில் அடுக்கடுக்காக வேத வசங்களை வெளியிடுபவர் இவர்.800,000 பேர் இவரின் டிவிட்டர் ஃபாலோவர்கள். இவரின் பேஸ்புக் அக்கவுண்டில் 1.3 மில்லியன் பேர் ரசிகர்கள்.
இளவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட டிம் டிபோ கால்பந்து களத்திலிருந்து கொண்டே இப்படி பல விதங்களிலும் சுவிசேசத்தை அறிவிக்க முயன்று கொண்டு வருகிறார். இதனால் இவரை எதிர்ப்பவர்களும் பெருகியிருக்கிறார்கள்.”I hate Tim Tebow" என பேஸ்புக் பக்கங்களும் “TebowHaters.com" போன்ற தளங்களும் ஆன்லைனில் பெருகி உள்ளன.

ஜனவரி 16-ல் அமெரிக்காவில் வெளியான டைம் பத்திரிகை எழுதும் போது பொது இடத்தில் தொழகை அல்லது ஜெபம் அல்லது பிரார்த்தனை செய்வதை "Tebowing" எனலாம் என்கின்ற அளவுக்கு டிம் டிபோவின் ஆன்மீக வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

Saturday, February 16, 2013

ஆவிக்குரிய முன்னேற வேண்டும்

ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ் கிடைக்கத்தக்கதாக பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த முதலாளி இன்னும் இரண்டு நாளில் அவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார். அதன்படி, இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று பார்க்க வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? எத்தனை வாடிக்கையாளர்களை சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே ஒரு வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30 40 வாடிக்கையாளர்களை சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம் செய்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்தாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000 ரூபாய்கள'; என்றதும், ஆ! அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன் விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில் வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில் என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன் பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன். இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும் சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், ' இல்லை, அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில் உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம், உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன் பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்' என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.

டைட்டானிக் கப்பல் 3,00,000 டாலர்கள்

டைட்டானிக் கப்பல் 1912-ம் வருடம், ஏப்ரல் மாதம், பனி மலையின் மீது மோதி முழுகி போனது அனைவருக்கும் தெரியும். அதில் ஏராளமான செல்வந்தர்கள் பயணித்தனர். ஆனால் அந்த சோக சம்பவம் நேரிட்டபோது யாருக்கும் தங்கள் செல்வம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
அந்த கப்பலில் பதினொரு கோடீஸ்வரர்கள் பயணம் செய்தனர். அவர்களுடைய மொத்த சொத்துக்கள் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிட்டனர். அவர்களில் யாருக்கும், அவர்கள் இருந்த சூழ்நிலையில் பணம் முக்கியமானதாகவே தோன்றவில்லை. இல்லையென்றால், அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு எப்படியாவது சொல்லி பணத்தை சேமித்து வைக்க சொல்லியிருப்பார்கள். அந்த கப்பலில் இருந்து தப்பிய ஆறு பேர்களில் ஒருவரான Major A. H. Peuchen of Toronto கோடீஸ்வரராவார். கப்பலில் தன்னுடைய லாக்கரில் 3,00,000 டாலர்கள் பணமாகவும், மற்றும் நகைகளையும், சொத்து பத்திரங்களையும் வைத்திருந்தார். கப்பல் மூழ்க தொடங்கும்போது. அவர் அந்த பணத்தையும் செல்வத்தையும் எடுக்க திரும்பினார். ஆனால் அடுத்த வினாடி பணத்தை எடுக்க போனவர், மூன்று ஆரஞ்சு பழங்களை மட்டும் எடுத்து கொண்டு திரும்பினார். ‘அந்த நேரத்தில் பணத்தை எடுப்பது எனக்கு பரிகாசமாக தோன்றியது’ என்று அவர் பின்னர் கூறினார். அந்த நேரத்தில் அவருக்கு அந்த பணம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை.
இன்று அநேகருடைய வாழ்வின் நோக்கமே பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதே. ‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல’ என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

Wednesday, February 13, 2013

திறந்த வாசல் - விசுவாசத்தோடு திறவுங்கள்

ஒரு அரசன் தன்னுடைய அரண்மனைக்கு ஒரு பிரதம மந்திரி தேவையாயிருந்தபடியால், அதற்கான சரியான ஒரு மனிதனை தேடினார். தேடி தேடி கடைசியில் மூன்று பேரை கண்டுபிடித்து, அவர்களில் யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்களோ, அந்த மனிதனை பிரதம மந்திரியாக்க தீர்மானித்தார். அதன்படி, ஒரு கதவில் ஒரு பெரிய பூட்டை உண்டு பண்ணி அதை மாட்டி, யார் முதலில் கதவை திறக்கிறார்களோ, அவர் பிரதம மந்திரியாவார் என்று அறிவித்தார். 

அதன்படி, மூவரும் அதை திறப்பதற்கு முயற்சித்தார்கள். அவர்களில் இருவர், தங்களுக்கு தெரிந்த கணக்கு எல்லாம் போட்டு பார்த்து, எப்படி திறப்பது என்ற மண்டையை உடைத்து கொண்டிருந்தார்கள். மூன்றாவது மனிதனோ, ஒன்றும் செய்யாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதையோ யோசித்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மற்ற இருவரும் இன்னும் எப்படி திறப்பது என்று மண்டையை உடைத்து கொண்டிருந்தபடியால், இவர் போய், அந்த கதவின் கைப்பிடியை தொட்டார். உடனே கதவு திறந்துகொண்டது. இந்த கதவு பூட்டப்படவேயில்லை!
.
இந்நாளிலும் தேவன் நமக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அதை திறக்கக்கூடாதபடிக்கு, பயம், அவிசுவாசம், அறியாமை, பெருமை போன்ற அநேக பூட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் அது பூட்டப்படாமல் இருக்கிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். விசுவாசத்தோடு நாம் அதைப் போய் திறந்தால், வெற்றி, நல்ல நிலைமை, நல்ல சந்தர்ப்பங்கள் என்று அநேக காரியங்கள் காத்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையிலும், பூட்டப்பட்ட கதவுகள் இருக்கின்றனவா? விசுவாசத்தோடு திறவுங்கள்.

நன்றியுள்ள இருதயம்

வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
 
அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.

சிலுவையின் உபதேசம் - பில்லி கிரகாம்

பிரபல தேவ ஊழியரான பில்லி கிரகாம் அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்:
ரான் பாக்கர் (Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக போய் கொண்டிருந்தது. அவர் தனது சிறுவயதில் பட்ட கெட்ட அனுபவங்களால், சரியாக பேச கூடாதவராக, மற்றும் படிக்காதவராக இருந்தார். அவர் சரியான குடிகாரனாக மாறினார். சூதாட்டத்தில் பங்கு பெறுபவராக, அதைவிட மோசமாக, செய்வினை பில்லி சூனியம் போன்ற கொடிய பழக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு பஸ் டிரைவராக வேலைபார்த்தாலும், அவர் தினமும் மதுபான கடைக்கு போய், குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியை உதைப்பது வழக்கம்.
அவர் பஸ் ஓட்டுநராக இருந்த காரணத்தால், பில்லி கிரகாமின் கூட்டங்களுக்கு மக்களை கொண்டு செல்பவராக நான்கு நாட்கள் பணியாற்றினார். ஒரு நாள் வேலை முடிய மிகவும் தாமதமானபடியால், அவரால் குடிக்க முடியாமல் போனது. மிகவும் கோபத்துடன் வந்த அவரிடம் அவரது நண்பர், பில்லிகிரகாமின் கூட்டங்களுக்கு அழைத்தார். ஆனால் அவருக்கு இருந்த கோபத்தில் அந்த நண்பரை கன்னாபின்னாவென்று திட்டினார். மனைவி அவரிடம் சொன்னார்கள், ‘நான் நான்கு நாளாக அந்த கூட்டங்களுக்கு போய் வருகிறேன். கர்த்தர் கிரியை செய்தார், நான் கர்த்தரிடம் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். நீங்களும் போய் வாருங்கள்’ என அவர்களும் கூறினார்கள். ஆனால் அவரோ, முடியாது என்று மனைவியையும் நண்பரையும் இன்னும் அதிகமாக திட்டினார். ஆனாலும் நண்பர் விடாப்பிடியாக, அவரை எப்படியோ சமாதானப்படுத்தி அவருடைய கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கூட்டத்தில் இருந்த ரான், மேடைக்கு வெகு தூரத்தில் உட்கார்ந்து கேட்டு கொண்டிருந்தார். அவரது இருதயத்தில் ‘இந்த மனுஷன் சொல்கிறது எல்லாம் குப்பை’ என்று நினைத்து கொண்டே கேட்டு கொண்டிருந்தார். அந்த இரவிலே தேவன் அவரை தொட்டார். அவர் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்பணித்தார். அதன்பின் இரண்டு வருடங்கள் அவர் குடி பழக்கத்தை விட போராடினார். ஆனால் தேவன் அவரை கிருபையாக அந்த பழக்கம் மற்றும், பில்லி சூனிய கட்டுகளிலிருந்து அவரை விடுவித்தார். ஒரு நல்ல கிறிஸ்தவ பேச்சு பயிற்சியாளர் மூலம் நன்கு பேசவும் பழகி, படிக்கவும் ஆரம்பித்தார். ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து, வேதத்தை முறையாக கற்று, ஆஸ்திரேலியா முழுவதும் கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகிற வல்லமையுள்ள ஊழியராக மாறினார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ?

தேவன் மேல் உள்ள நம்பிக்கை

சந்நியாசி ஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். அன்று இரவு ஜெபத்தில், 'கர்த்தாவே இந்த ஒலிவ மரக்கன்றின் மெல்லிய வேர்கள் தண்ணீர் குடித்து பெரிதாக, இதற்கு மழை தேவை. சிறு தூரலை அனுப்பும்' என்று ஜெபித்தார். தேவன் சிறு மழையை பெய்ய செய்தார். மறுநாள் 'ஆண்டவரே, என் மரத்திற்கு சூரிய வெப்பம் வேண்டும்' என்றார். சூரியனும் பிரகாசித்தது. இப்பொழுது 'இதன் பாகங்கள் உறுதிப்பட கடும் பனி வேண்டும்' என்றார். இதோ அந்த சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்த செடி சாயங்காலத்தில் வாடிப்போனது.


 இந்த சந்நியாசி தன்னை போலொத்த மற்றொரு சந்நியாசியிடம் சென்று தன் கதையை சொன்னார். அந்த சந்நியாசி 'நானும் ஒரு சின்ன மரம் நட்டேன். இதோ பாரும் அது செழித்து ஓங்குவதை. நான் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டுவிட்டேன். அதை உண்டாக்கினவர் அதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட நன்றாக அறிவார். நான் ஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. தேவனே அதற்கு புயலோ, வெயிலோ, காற்றோ மழையோ எது தேவையோ அதை அனுப்பும். சிருஷ்டித்த நீர் அதன் தேவைகளை அறிவீர்' என்று ஜெபித்தேன் என்றார். இந்த அழகான உவமையை சார்லஸ் கவ்மேன் அம்மையார் தனது புத்தகமொன்றில் எழுதியிருந்தார்.

Friday, February 8, 2013

சகோதரர். மோகன் சி. லாசரஸ் - சாட்சி

"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர். அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14. மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்டத்தில் இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் அனுப்பிவிட, பெற்றோர்கள் பல தெய்வங்களை நோக்கி வேண்டி பார்த்தார்கள். மரண படுகையிலிருந்த அவனுடைய வாழ்வுக்கு தெய்வங்கள் என சொல்லப்படும் எவரும் பதில் கொடுக்கவில்லை. அதனால் வருத்தத்தின் ஆழத்தில் அவனது தாய் மூழ்கி இருக்க, அவனது நிலையோ பரிதபிக்க வைத்தது. சாகப்போகிறவனை கடைசியாய் பார்ப்பது போல் பார்த்து சென்றனர் அவனது உறவினர்கள். அடுத்தவர்கள் உதவியுடனேயே தனது தினசரி வாழ்வை கழித்து வந்த அச்சிறுவனை பார்க்க வந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரர் "என் மகனை கைவிட்டுவிட்டார்கள், என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வீர்களா?" என்று அவரிடம் கண்ணீரோடு கேட்டார்கள் அவனது தாய். அவர் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அவன் கேலி செய்த, மிகவும் வெறுத்த இயேசுவிடம் அந்த சகோதரர் ஜெபம் பண்ணுவதை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அவனது உணர்வுகள் தெய்வீக வல்லமை ஒன்று அந்த அறைக்குள் இறங்குவதை உணர்ந்தது. படுகையின் அருகில் யாரோ வருவதையும், பின் , அவருடைய கரம் தன்னை தொட்டதையும் உணர முடிந்தது. மின்சாரத்தை போலிருந்த தேவ வல்லமை, செயலற்று கிடந்த அவனது வலது கால் வழியாக பாய்ந்து சென்றது. அவனுள் மெலிதாய் பயம் எழும்பிற்று . அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த சகோதரர் ஜெபித்து கொண்டிருக்க, அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்த பின் அவனது இருதயம் சரியாகி இருந்தது. தனக்கு சுகமளித்த இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம் என்று அவன் மனம் சொல்லிற்று. அவன் அதை நம்பி விசுவாசித்தான். இன்று அந்த சகோதரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார். அற்புதங்கள் இன்றும் பலருக்கு தேவை. தேவனாலேயே அது சாத்தியம். தேவன் அதற்க்கு பயன்படுத்தும் பாத்திரமாய் விளங்குகிறவர் தான் சகோதரர். மோகன் சி. லாசரஸ். சந்தன பொட்டுவின் மணம் இன்று அவரிடம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இனிய நற்காந்தம் மட்டுமே அவரிடம் எவரையும் வசீகரிப்பதாய் இருக்கிறது. நண்பர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்கையை இயேசுவினிடம் ஒப்புகொடுத்தால் உங்கள் வாழ்கையையும் அவர் மாற்றி, உங்களை பல கோடி மனிதர்களுக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36 Article by : Wilson E. Paul / Wilson E. Paul http://www.zionpuram.com/?q=node/159

காதலர் தினம் - இது வாலிபர்களுக்கு மட்டும்

அன்பு தேவனின் பிள்ளைகளே, இந்த வலைப்பகுதியில்
காதலர் தினம் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். இந்த நாள் பல வாலிபர்களின் மனதில் சில மின்சார மின்னலை தட்டி செல்கிற நாள். பல கிறிஸ்தவ வாலிபர்கள் இந்த காதல் வலையில் விழ வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஓர் கூர்வாள். உங்களோடு சில வேத வசனங்களை பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது தவறல்ல என்று பல சபைகளும், கிறிஸ்தவ ஊழியகாரர்களும் உளற ஆரம்பித்து விட்டார்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. நீதிமொழிகளில் சாலலோன் உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்கிறார். என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார். கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்படும் அன்பு வாலிபர்களே, நீங்கள் காதலிப்பவர்கள் தான் தேவன் உங்களுக்கு ஏறப்படுதினார் என்று எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்? ஒரு வேளை அவர்கள் உங்களுக்கு என்று இல்லை என்றால்? வேதம் சொல்கிறது "பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்." ஜாக்கிரதை. காதலிக்கும் வாலிபர்கள் எப்படி ஜெபிப்பார்கள் என்றால்: 1. தேவனே இந்த பெண்ணை / பையனை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். என்னால் அவரை மறக்க முடியவில்லை. 2. தேவனே, இந்த பெண்ணை / பையன் என் மனதை பாதித்து விட்டான். எங்களை சேர்த்து வைத்து விடுங்கள். 3. தேவனே இந்த பெண்ணை / பையனை நான் காதலிப்பது உம் சித்தமா? (இதையே ஆயிரம் முறை கேட்பது) அதாவது, கையில் முடிவை வைத்து கொண்டு, தேவனின் சித்தை அதில் திணிக்க வைக்க துடிப்பது. சிலர் பல ஊழிகாரர்களிடமும் தங்கள் சந்தேகத்தை கேட்க துடிப்பார்கள். அதாவது, தங்கள் முடிவை யாரவது ஆதரிக்க மாட்டார்களா என்று அலைவது. "நீங்கள் செய்வது சரி" என்று யாரவது சொல்லிவிட மாட்டார்களா என்று எல்லா வாலிப கூட்டங்களிலும் கேள்வி கேட்பது. உங்கள் வாலிபத்தை விற்று விடாதீர்கள். தேவன் அழைத்தது போல "உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து..." நீ காதலிக்கும் பொது உன் முழு பலத்தையும், இருதயத்தையும், உன் சிந்தையையும் இழந்து விடுவாய். இரண்டு எஜமானுக்கு உன்னால் ஊழியம் செய்யவும் முடியாது. எட்டு கால் பூச்சி வலையில் மாட்டின "ஈ" யின் ஓடு மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும். அதன் உடம்பின் உள்ளே உள்ள அனைத்தையும் பூச்சி உறிஞ்சி எடுத்து விடும். அதை போல தான், சாத்தான் உன்னை ஊழியத்தில் வைத்திருப்பான், பெரிய காரியத்தை செய்வதை போல செய்வான், அனால் முடிவில் உன் இருதயம், உன் பலம், உன் ஆத்துமா என்று எல்லாவற்றையும் உறிஞ்சி விடுவான். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. பிரசங்கி 11 - 10,11, நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. நீங்கள் தேவனிடத்தில் நெருங்கி வாழ ஒப்புகொடுங்கள். ஆத்துமாக்களை கொள்ளைஇடுங்கள். ஊழியம் செய்யுங்கள். உங்கள் வாலிபத்தில் மகிமையான காரியங்களை செய்ய முடியும். அதை தேவனுக்கு வல்லமையாய் பயன்படுத்துகள் என்று பிரசங்கி கதறுகிறான். கடைசியாக ஒரு கருத்து உன் வாழ்க்கையில் என்றும் தேவ அன்பை பிடித்து கொள் . வாலிபத்தில் பெற்றோரை மதித்து கொள். திருமண வாழ்க்கையில் காதலை வளர்த்துக் கொள். லூக்கா 10: 16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். 25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; 31. தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 32. இந்த இரகசியம் பெரியது வாழ்த்துக்களுடன் கிறிஸ்டோ செல்வன்

Wednesday, February 6, 2013

பில்லி பிரே (Billy Bray) - மனம்திரும்பலின் மகிமை

தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy Bray) ஒருவர். இரட்சிக்கப்படும் முன் அவர் பயங்கர குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும், இருந்தார். ஒவ்வொரு இரவும், அவரது மனைவி, சாராயக்கடைக்கு சென்று அவரை அழைத்து. வருவார்களாம். ஆனால் இயேசுவின் மெய் சீடனாக மாறிய பின் இங்கிலாந்தில் ஒரு முனை துவங்கி மறுமுனை ம்ட்டும் அவரை அறியாதவர்கள் எவருமிருக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை நிச்சயம் உற்சாகப்படுத்தும். பில்லி பிரே, ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தில் நிரம்பி வழிந்தோடுவதை உணர்ந்தார். எனவே அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்துடன் நடனமாடுவார். 'நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு காலை தூக்கினவுடன் ஆண்டவருக்கு மகிமை என்றும் அடுத்த காலை தூக்கும்போது ஆமென் என்றும் என்னால் சொல்லாமல் இருக்க முடிவில்லை' என்பார். 'ஒரு பீப்பாவில் அடைத்து போட்டாலும் அதின் துவாரத்தின் வழியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவேன்' என்று கூறுவார். ஒரு சமயம் ஹக்னில் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் 'ஒரு அம்மையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என சத்தமிட்டு கொண்டே மரித்தார்கள்' என சொல்லப்பட்டது. உடனே பில்லி சந்தோஷமடைந்து, மரிக்கும் ஒருவர் அவ்விதம் துதிக்க கூடுமானால் உயிருடன் இருக்கும் நாம் தேவனை துதிக்க எவ்வளவாய் கடமைப்படடிருக்கிறோம்' என்றார். இவ்வாறு எப்போதும் தேவனை துதித்து கொண்டும் நடனமாடி கொண்டும் இருப்பதை கண்டு பைத்தியம் பிடித்தவன் என்று பலர் பரியாசம் பண்ணினார்கள். நான் பைத்தியம் பிடித்தவனில்லை என்றும் சந்தோஷத்தில் மூழ்கினவனென்றும் கூறுவார். ஒருமுறை பிளேசி என்ற இடத்திலுள்ள ஆலயத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள சபையார் தங்கள் கஷ்டங்களையும், பாடுகளையும் அவரிடம் கூறினார்கள். அவர் புன்முறுவலோடு எழுந்து கைகளை தட்டிக்கொண்டு, 'நண்பர்களே நான் காடியை ருசித்திருக்கிறேன். காடியை தேவன் எனககு மிக கொஞ்சமாகவும், தேனை மிக அதிகமாகவும் கொடுத்திருக்கிறார். எப்படியென்றால் நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்' என்றார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும் அவற்றை குறித்து கிறிஸ்தவர்கள் களிகூற வேண்டுமெனறும் கூறுவார். பில்லி ஒருவரை சந்தித்த மாத்திரத்தில் அவருடைய ஆத்துமாவை குறித்து விசாரிப்பார். இரட்சிப்படைந்து விட்டதாக கேள்விப்பட்டால், உடனே குதித்தெழும்புவார், அந்நபரை பிடித்து கொண்டு நடனமாடி அப்படியே அவரை தூக்கி சுமந்து செல்வார். ஓவ்வொரு நாள் காலையிலும் சுரங்க வேலை ஆரம்பிக்குமுன் அவர் 'ஆண்டவரே இன்று யாராவது சுரங்கத்தில் மரிப்பது உமது சித்தமாயிருந்தால் அது நானாக இருக்கட்டும், அவர்களில் யாரும் மரிக்க வேண்டாம். அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை, நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். நான் மரித்தால் உடனே உம்மிடம் வந்து விடுவேன்' என்று ஜெபிப்பார். பில்லி அநேக முறை பணத்தேவையில் கடந்து வந்தார். இருப்பினும் அவர் சோர்ந்து போனதோ, முறுமுறுத்ததோ கிடையாது. 'எனக்கு வேலை கிடைத்தால் ஆண்டவரை துதிப்பேன். இல்லாவிட்டாலும் அவரை நோக்கி பாடுவேன். என்னை ஒருபோதும் அவர் பட்டினி போட மாட்டார். பானையின் அடிமட்டத்தில் கொஞசம் மாவை கண்டிப்பாக தேவன் வைத்திருப்பார்' என்று உறுதியளிப்பார். ஆடம்பரமாக வாழ்க்கையையும், பகட்டான ஆடைகளையும் பில்லி விரும்புவது கிடையாது. 'நல்லதொரு வண்டியில் ஏறி நரகத்திற்கு போய் சேருவைத விட நடந்து சென்று பரலோகம் அடைவது மிகவும் நல்லது' என்பார்.