அந்த
கப்பலில் பதினொரு கோடீஸ்வரர்கள் பயணம் செய்தனர்.
அவர்களுடைய மொத்த சொத்துக்கள் ஏறக்குறைய 200 மில்லியன்
டாலர்கள் என்று கணக்கிட்டனர். அவர்களில் யாருக்கும்,
அவர்கள் இருந்த சூழ்நிலையில் பணம் முக்கியமானதாகவே
தோன்றவில்லை. இல்லையென்றால், அவர்கள் தங்கள்
உறவினர்களுக்கு எப்படியாவது சொல்லி பணத்தை சேமித்து
வைக்க சொல்லியிருப்பார்கள். அந்த கப்பலில் இருந்து
தப்பிய ஆறு பேர்களில் ஒருவரான Major A. H.
Peuchen of Toronto கோடீஸ்வரராவார். கப்பலில் தன்னுடைய லாக்கரில்
3,00,000 டாலர்கள் பணமாகவும், மற்றும் நகைகளையும், சொத்து
பத்திரங்களையும் வைத்திருந்தார். கப்பல் மூழ்க
தொடங்கும்போது. அவர் அந்த பணத்தையும் செல்வத்தையும்
எடுக்க திரும்பினார். ஆனால் அடுத்த வினாடி பணத்தை எடுக்க
போனவர், மூன்று ஆரஞ்சு பழங்களை மட்டும் எடுத்து கொண்டு
திரும்பினார். ‘அந்த நேரத்தில் பணத்தை எடுப்பது எனக்கு
பரிகாசமாக தோன்றியது’ என்று அவர் பின்னர் கூறினார். அந்த
நேரத்தில் அவருக்கு அந்த பணம் ஒரு பொருட்டாக
தோன்றவில்லை.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Saturday, February 16, 2013
டைட்டானிக் கப்பல் 3,00,000 டாலர்கள்
டைட்டானிக் கப்பல் 1912-ம் வருடம், ஏப்ரல்
மாதம், பனி மலையின் மீது மோதி முழுகி போனது அனைவருக்கும்
தெரியும். அதில் ஏராளமான செல்வந்தர்கள் பயணித்தனர்.
ஆனால் அந்த சோக சம்பவம் நேரிட்டபோது யாருக்கும் தங்கள்
செல்வம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
இன்று
அநேகருடைய வாழ்வின் நோக்கமே பணம் சம்பாதிக்க வேண்டும்,
சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதே. ‘பொருளாசையைக்
குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு
எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன்
அல்ல’ என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment