ரான் பாக்கர்
(Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக
போய் கொண்டிருந்தது. அவர் தனது சிறுவயதில் பட்ட கெட்ட
அனுபவங்களால், சரியாக பேச கூடாதவராக, மற்றும்
படிக்காதவராக இருந்தார். அவர் சரியான குடிகாரனாக
மாறினார். சூதாட்டத்தில் பங்கு பெறுபவராக, அதைவிட மோசமாக,
செய்வினை பில்லி சூனியம் போன்ற கொடிய பழக்கங்களிலும்
ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு பஸ் டிரைவராக
வேலைபார்த்தாலும், அவர் தினமும் மதுபான கடைக்கு போய்,
குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியை உதைப்பது
வழக்கம்.
அவர் பஸ்
ஓட்டுநராக இருந்த காரணத்தால், பில்லி கிரகாமின்
கூட்டங்களுக்கு மக்களை கொண்டு செல்பவராக நான்கு நாட்கள்
பணியாற்றினார். ஒரு நாள் வேலை முடிய மிகவும்
தாமதமானபடியால், அவரால் குடிக்க முடியாமல் போனது.
மிகவும் கோபத்துடன் வந்த அவரிடம் அவரது நண்பர்,
பில்லிகிரகாமின் கூட்டங்களுக்கு அழைத்தார். ஆனால்
அவருக்கு இருந்த கோபத்தில் அந்த நண்பரை
கன்னாபின்னாவென்று திட்டினார். மனைவி அவரிடம்
சொன்னார்கள், ‘நான் நான்கு நாளாக அந்த கூட்டங்களுக்கு
போய் வருகிறேன். கர்த்தர் கிரியை செய்தார், நான்
கர்த்தரிடம் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். நீங்களும்
போய் வாருங்கள்’ என அவர்களும் கூறினார்கள். ஆனால் அவரோ,
முடியாது என்று மனைவியையும் நண்பரையும் இன்னும் அதிகமாக
திட்டினார். ஆனாலும் நண்பர் விடாப்பிடியாக, அவரை
எப்படியோ சமாதானப்படுத்தி அவருடைய கூட்டத்திற்கு
அழைத்து சென்றார்.
கூட்டத்தில்
இருந்த ரான், மேடைக்கு வெகு தூரத்தில் உட்கார்ந்து
கேட்டு கொண்டிருந்தார். அவரது இருதயத்தில் ‘இந்த மனுஷன்
சொல்கிறது எல்லாம் குப்பை’ என்று நினைத்து கொண்டே
கேட்டு கொண்டிருந்தார். அந்த இரவிலே தேவன் அவரை தொட்டார்.
அவர் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்பணித்தார். அதன்பின்
இரண்டு வருடங்கள் அவர் குடி பழக்கத்தை விட போராடினார்.
ஆனால் தேவன் அவரை கிருபையாக அந்த பழக்கம் மற்றும், பில்லி
சூனிய கட்டுகளிலிருந்து அவரை விடுவித்தார். ஒரு நல்ல
கிறிஸ்தவ பேச்சு பயிற்சியாளர் மூலம் நன்கு பேசவும் பழகி,
படிக்கவும் ஆரம்பித்தார். ஒரு வேதாகம கல்லூரியில்
சேர்ந்து, வேதத்தை முறையாக கற்று, ஆஸ்திரேலியா முழுவதும்
கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகிற வல்லமையுள்ள ஊழியராக
மாறினார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ?
No comments:
Post a Comment