எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Friday, February 8, 2013
காதலர் தினம் - இது வாலிபர்களுக்கு மட்டும்
அன்பு தேவனின் பிள்ளைகளே, இந்த வலைப்பகுதியில்
காதலர் தினம் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். இந்த நாள் பல வாலிபர்களின் மனதில் சில மின்சார மின்னலை தட்டி செல்கிற நாள். பல கிறிஸ்தவ வாலிபர்கள் இந்த காதல் வலையில் விழ வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஓர் கூர்வாள்.
உங்களோடு சில வேத வசனங்களை பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது தவறல்ல என்று பல சபைகளும், கிறிஸ்தவ ஊழியகாரர்களும் உளற ஆரம்பித்து விட்டார்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. நீதிமொழிகளில் சாலலோன் உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்கிறார். என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார். கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்படும் அன்பு வாலிபர்களே, நீங்கள் காதலிப்பவர்கள் தான் தேவன் உங்களுக்கு ஏறப்படுதினார் என்று எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்? ஒரு வேளை அவர்கள் உங்களுக்கு என்று இல்லை என்றால்? வேதம் சொல்கிறது "பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்." ஜாக்கிரதை.
காதலிக்கும் வாலிபர்கள் எப்படி ஜெபிப்பார்கள் என்றால்:
1. தேவனே இந்த பெண்ணை / பையனை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். என்னால் அவரை மறக்க முடியவில்லை.
2. தேவனே, இந்த பெண்ணை / பையன் என் மனதை பாதித்து விட்டான். எங்களை சேர்த்து வைத்து விடுங்கள்.
3. தேவனே இந்த பெண்ணை / பையனை நான் காதலிப்பது உம் சித்தமா? (இதையே ஆயிரம் முறை கேட்பது)
அதாவது, கையில் முடிவை வைத்து கொண்டு, தேவனின் சித்தை அதில் திணிக்க வைக்க துடிப்பது. சிலர் பல ஊழிகாரர்களிடமும் தங்கள் சந்தேகத்தை கேட்க துடிப்பார்கள். அதாவது, தங்கள் முடிவை யாரவது ஆதரிக்க மாட்டார்களா என்று அலைவது. "நீங்கள் செய்வது சரி" என்று யாரவது சொல்லிவிட மாட்டார்களா என்று எல்லா வாலிப கூட்டங்களிலும் கேள்வி கேட்பது.
உங்கள் வாலிபத்தை விற்று விடாதீர்கள். தேவன் அழைத்தது போல "உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து..." நீ காதலிக்கும் பொது உன் முழு பலத்தையும், இருதயத்தையும், உன் சிந்தையையும் இழந்து விடுவாய். இரண்டு எஜமானுக்கு உன்னால் ஊழியம் செய்யவும் முடியாது.
எட்டு கால் பூச்சி வலையில் மாட்டின "ஈ" யின் ஓடு மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும். அதன் உடம்பின் உள்ளே உள்ள அனைத்தையும் பூச்சி உறிஞ்சி எடுத்து விடும். அதை போல தான், சாத்தான் உன்னை ஊழியத்தில் வைத்திருப்பான், பெரிய காரியத்தை செய்வதை போல செய்வான், அனால் முடிவில் உன் இருதயம், உன் பலம், உன் ஆத்துமா என்று எல்லாவற்றையும் உறிஞ்சி விடுவான்.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
பிரசங்கி 11 - 10,11, நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. நீங்கள் தேவனிடத்தில் நெருங்கி வாழ ஒப்புகொடுங்கள். ஆத்துமாக்களை கொள்ளைஇடுங்கள். ஊழியம் செய்யுங்கள். உங்கள் வாலிபத்தில் மகிமையான காரியங்களை செய்ய முடியும். அதை தேவனுக்கு வல்லமையாய் பயன்படுத்துகள் என்று பிரசங்கி கதறுகிறான்.
கடைசியாக ஒரு கருத்து
உன் வாழ்க்கையில் என்றும் தேவ அன்பை பிடித்து கொள் .
வாலிபத்தில் பெற்றோரை மதித்து கொள்.
திருமண வாழ்க்கையில் காதலை வளர்த்துக் கொள்.
லூக்கா 10:
16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்;
31. தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
32. இந்த இரகசியம் பெரியது
வாழ்த்துக்களுடன்
கிறிஸ்டோ செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment