விமலா
அன்று காலை அவள் கணவனை அவசரமாய் சமையலறைக்குள் அழைத்து, ஜன்னல் வழியே
பக்கத்து வீட்டு மாமி துணி துவைப்பதை காட்டி "இந்த மாமிக்கு துவைக்கவே
தெரியாது, பாருங்க ஒரு துணியாது பளிச்சுன்னு இருக்குதா? நான் பாருங்க உங்க
சட்டையெல்லாம் மீன்னுற மாதிரி துவச்சு போடுறேன். இப்பவாது என்னோட அருமைய
தெரிஞ்சுக்கோங்க" என்று அலட்டிக் கொண்டாள்.
எப்போதும் போல அவள் கணவன் ஒன்றும் சொல்லாமல் தலை அசைத்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான்.
சில நாள் கழித்து மீண்டும் மாமி காலையிலேயே துணி துவைத்துக்
கொண்டிருந்தாள். உடனே விமலா கணவனை சமையலறை ஜன்னல் அருகே கூப்பிட்டு வழக்கம்
போல புராணத்தை ஆரம்பித்தாள்.
இதுவே மாமூலான கதையானது. எப்போதும்
போல அவள் கணவன் ஒன்றும் சொல்லமாட்டான், தலை அசைவோடு தப்பித்துக் கொள்வான்.
ஒரு நாள் காலை ஆச்சரியத்தோடு கணவனை அழைத்து "என்னங்க அங்க பாருங்களேன்.
இந்த மாமிக்கு துவைக்கவே தெரியாதே, ஆனா இன்னைக்கு துணியெல்லாம் பளிச்சுன்னு
வெளுப்பா இருக்கே. என்ன சங்கதின்னு தெரியலேயே" என்று புலம்பி கொட்டினாள்.
"ஒன்னும் இல்லடி இத்தன நாள் நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடி எல்லாம் துடைக்காம
தூசி படிஞ்சு கிடந்தது. நேத்து தான் சுத்தம் பண்ணுனேன். அதான் பளிச்னு
எல்லாம் தெரியுது" ன்னு சொல்லி தலையில் ஒரு குட்டு வைத்தான்.
விமலாவுக்கோ தலையை சுற்றி வண்ணத்து பூச்சிகள் பறந்து போல இருந்தது.
ஆம்! எனக்கு அருமையானவர்களே கறுப்பு கண்ணாடியில் பார்க்கும் உலகமும்
கறுப்பாக தானே தெரியும். நம்மில் உள்ள குறைகளை முதலில் சரி செய்வோம். நமது
சுற்றுப்புறம் தானாக சுத்தம் அடைந்து விடும்.
இதையே நமது ஆண்டவரும் நமக்கு சொல்லி தந்திருக்கிறாரே,
மத்தேயு 7:3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன்
கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5
மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு
உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment