ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு
மனிதன் தன் வாழ்நாளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி
கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ் கிடைக்கத்தக்கதாக
பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு
வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த
முதலாளி இன்னும் இரண்டு நாளில் அவன் எப்படி வேலை
செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார். அதன்படி,
இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று
பார்க்க வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு
லாபம் சம்பாதித்தாய்? எத்தனை வாடிக்கையாளர்களை
சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே
ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே
ஒரு வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30 40
வாடிக்கையாளர்களை சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு
வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே ஒரு
வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம்
செய்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்தாய்?' என்று
கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000 ரூபாய்கள'; என்றதும், ஆ!
அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன்
விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த
மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை
விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில்
வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில்
என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன்
பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின்
ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை
எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று
சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய
கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு
தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன்.
இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும்
சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு
சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை
காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், ' இல்லை,
அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில்
உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம்,
உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன்
பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்'
என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார
நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.
No comments:
Post a Comment