Sunday, October 28, 2012

ஜெப ஜீவியம்

ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, 'டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்' என்றார். இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ், 'அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி நிமிடங்களில இந்த உலகிற்காக ஜெபிப்பதில் செலவிட விரும்புகிறேன்' என்றார். ஒரு சில நிமிடங்களில் முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக தான கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைபிடித்தார்.

கேளுங்கள் தரப்படும்

.
நமது சர்வ வல்லமையுள்ள தேவன் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாகவே காணப்படுகிறார்.

கிரேக்க பேரரசன் அலெக்ஸாண்டர், தனக்கு பிரியமான ஒரு தளபதிக்கு அரசு நிதியிலிருந்து பணம் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்று கொள்ள உரிமை வழங்கியிருந்தார். ஒரு சமயம் அந்த தளபதிக்கு மிகவும் பெருந்தொகை தேவைப்பட்டது. அதற்கான ஒரு பண ஓலையை நிதித்துறை அதிகாரியிடம் கொடுத்தார். 'மன்னரை சந்தித்து அவர் அனுமதியை பெறும்வரை அவ்வளவு பெருந்தொகையை உமக்கு தர இயலாது' என கைவிரித்து விட்டார் நிதித்துறை அதிகாரி.
.
மன்னரை சந்தித்த நிதித்துறை அதிகாரி, 'தளபதி மிகவும் பெருந்தொகைக்கான பண ஓலையை என்னிடம் தந்துள்ளார்' என்று சொல்ல, 'நீர் அந்த ஓலைக்கு மதிப்பளித்தீரா? என்று அலெக்ஸாண்டர் கேட்டார். 'இல்லை, தொகை பெரிய அளவில் இருந்தததால் மன்னரின் அனுமதிபெறும்வரை தர இயலாது என கூறி விட்டேன்' என்றார் நிதி அதிகாரி. மன்னருக்கு கடும்கோபம் வந்து விட்டதை கண்டு அவர், 'அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதால் குற்றம் வந்து விடுமோ என்று பயந்தேன்' என்றார். அதற்கு அலெக்ஸாண்டர், 'இவ்வளவு பெரிய தொகையை கேட்பதின் மூலம், தளபதி என்னையும் எனது பேரரசையும் எவ்வளவாய் கனப்படுத்தியிருக்கிறார் தெரியுமா? அப்படியிருக்க நீர் என்னை மட்டுப்படுத்தியது போல் அல்லவா இருக்கிறது' என அலெக்ஸாண்டர் அதிகாரியை கண்டித்தார்.

அதை விட எனக்கு என்ன வேண்டும்?

ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு கலந்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது வழக்கம். ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, பொது குளியலறையில், அங்கு தண்ணீரை சூடுபடுத்தும் தொழிலாளி இருப்பதை கண்டார். முன்பு இப்போதிருக்கும் ஹீட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலிருந்த நிலைமை. அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசி, அந்த மனிதனை அவருக்கு பிடித்து போயிற்று. தினமும் அவர் அவனுடன் வந்து பேசி போவது வழக்கானது. ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் 'நான் தான் இந்த நாட்டு மன்னர்' என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான். மன்னர் அவன் தன்னிடமிருந்து பொருள், வசதிகளை கேட்க போகிறான் என்று நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. அப்போது மன்னர், 'நான் மன்னர், எது வேண்டுமானாலும் நீ கேள், உனக்கு நான் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதன், 'மன்னரே, நான் ஒரு மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் என்னிடம் தினமும் வந்து, உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே, அதை விட எனக்கு என்ன வேண்டும்?' என்று கண்ணீர் மல்க கேட்டான்.

தேவனுக்கு சாதாரணமானவர்களே தேவை

1850 ஜனவரி 6ஆம் தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. புனிப்புயலில் சிக்கிய வாலிபனொருவன் தன்னை காத்துக் கொள்ள அருகிலிருந்த ஆலயத்திற்குள் ஓடினான். அங்கு மாலை ஆராதனை நடந்து கொண்டிருநதது. அன்று போதகர் இல்லாததால் சபை அங்கத்தினரான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்தி கொண்டிருந்தார்.  அவர் செய்தியளிக்க ஆரம்பித்தார். அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்ன காரியம் 'என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்பதே. பனிப்புயலுக்கு தப்ப ஓடி வந்த வாலிபன் கதவுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு செய்தியை கேட்க எந்த விருப்பமும் இல்லை.

தையல்காரர் பிரசங்க பீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி 'வாலிபனே இயேசுவை நோக்கிப்பார் என்று கூறினார். அவர் படித்தவருமல்லபிரசங்கியாருமல்ல மிக சாதாரண மனிதர்தான். ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய் வல்லமையோடு அசாதாரணமாக பிரசங்கித்தார். அநேகர் இருந்த அந்த இடத்தில் குறிப்பாய் தன்னை பார்த்து சொன்ன அந்த செய்தி அந்த வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை நோக்கி பார் என்ற சத்தம் அவனுடைய இருதயத்தில் தொனித்து கொண்டே இருந்தது.  முடிவில் அவன் இயேசுவை நோக்கினான். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமாஅவர்தான் C. H. ஸ்பர்ஜன். (C. H. Spurgeon)  பின் நாட்களில் பிரசங்க ஊழியத்தில் தேவனால் மிகவும் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்று விளங்கினார்.

படிப்பறிவில்லாத தையல்காரரை கொண்டு தேவன் தேசத்திற்கு மிகப்பெரிய ஊழியராகிய ஸ்பர்ஜனை எழுப்பினார். அதுபோல இயேசுவோடு ஊழியம் செய்த அவருடைய சீஷர்களில் அநேகர் படிப்பறிவற்ற மீனவர்களே. தேவன் தனது பணியினை செய்ய திறமையுள்ளவர்கள் அனுபவமிக்கவர்கள் இவர்களை மட்டும் தெரிந்தெடுப்பதில்லை. தாழ்ந்த சிந்தையும்உண்மையான இருதயமும் உள்ள சாதாரண மக்களையே தேடுகிறார். ஆம் அசாதாரணமானவைகளை செய்ய தேவனுக்கு சாதாரணமானவர்களே தேவை.

முழங்கால்களால் சாதிக்க முடியும்

ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார்.
.
அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, 'ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?' என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர், 'ஐயா கடினமான பாறையை உடைக்கும்போது. முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்' என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார்.
.
உண்மைதான், முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்! வேதத்திலே தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாம் ஜெபித்து வெற்றி கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும்போது, மிகுந்த பெலனை பெற் முடியும். முழங்கால் ஜெபம் பல தடைகற்களை தகர்த்து வெற்றி பெற செய்யும்.

Thursday, October 18, 2012

ஏன் ஆலயததிற்கு செல்ல வேண்டும்?

ஒரு போதகர் தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்துஅவர் வராததால்அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர்தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டுஅவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து அவர் ஒரு கரண்டியை எடுத்துஎரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன் சாம்பல் பூத்து போய்அப்படியே அடங்கி அணைந்து போனது.

பின்னர் அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன்மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்துநெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்என்று கூறினார்.

ஜெபமும் வெட்டுக்கிளியும்


நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில்  வெட்டுக்கிளிகளைக் குறித்து,  ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்

என்ன நடந்தாலும் நம்புவேன்


அநேக வருடங்களுக்கு பிறகு தன் மனைவி கர்ப்பவதியானது குறித்து ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மனிதர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் தன் கூட வேலை செய்யும் சக ஊழியர்களிடம்,  'என் மனைவி கர்ப்பம் தரித்திரிக்கிறாள். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டார்' என்று சந்தோஷத்தோடு சொன்னபோது, ஒரு சிலர் 'தேவனிடம் பிள்ளையை கேட்டீரோ' என்று அவரை பரிகசித்தனர்.

பிள்ளை பிறந்தபோது, அந்த பிள்ளைக்கு Down Syndrome என்னும் பிறப்பிலேயே காணப்படும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகப்பன், தன் விடுமுறை கழிந்து முதலாம் நாள் வேலையில் சேர்ந்துபோது, எப்படி தன் கூட வேலை செய்பவர்களை சந்திப்பது? கர்த்தரிடம் கேட்டு பெற்று கொண்ட பிள்ளையாயிற்றே, ஆனால் இப்படி குறையோடு பிற்நததை குறித்து கேலி செய்வார்களே என்று நினைத்தவராக, கர்த்தாவே எனக்கு அவர்களுக்கு பதில் சொல்ல நல்ல ஞானத்தை தாரும் என்று ஜெபித்தபடி தன் வேலையில் சேர்ந்தார். அவர் நினைத்தபடியே, ஒருவர் அவரிடம் வந்து, 'உனக்கு ஆண்டவர் இப்படிப்பட்ட பிள்ளையைதான் கொடுத்தாரா' என்று கிண்டலாக கேட்டார். அப்போது என்ன பதில் சொல்வது என்று திகைத்தவராக ஒரு சில நிமிடம் மௌனமாக ஜெபித்த அவர், பின் தைரியமாக, 'நல்லவேளை உனக்கு அப்படிப்பட்ட பிள்ளையை தேவன் கொடுக்காமல், எனக்கு கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன்' என்று கூறினார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

பரலோகம் போக ஆசை

ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போதுவிபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால் இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.

அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன்பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறைபெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு,  'இது பரலோகம்எல்லாமே இலவசம் என்றார். பின்னர்அவர் அவர்களை சாப்பிடும்  இடத்திற்க்கு கூட்டி சென்றபோது அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு 'நான் எவ்வளவு சாப்பிடலாம்என்று கேட்டார்அப்போது பரி.பேதுரு 'நான் தான் சொன்னேனேஇது பரலோகம்எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்கணக்கே இல்லை என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?'  என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு  'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது,  கொலஸ்ட்ராலும் பெருகாது எந்த வியாதியும வராதுஎன்று கூறினார்.

அதை கேட்ட கணவர் மிகவும் கோபமுற்றவராக தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு மிதித்து காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி  'என்ன என்னவாயிற்று என்று கேட்டபோது அவர் கோபமாக தன் மனைவியை பார்த்து,  'எல்லாம் உன்னால் வந்தது,  நீ மட்டும் அந்த சாலட்டையும்,  கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால் பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்  என்று கூறினார்.

நாம் மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம் காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய் பற்றி கொண்டிருப்பதால்கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.

மாமியார் பிரச்சனை


புதிதாய் திருமணமான தன் மகளை பார்க்க ஒரு தாய் அவர்கள் தங்கியிருந்த பண்ணைக்கு சென்றிருந்தார்கள். போனவுடனே, அந்த இடம் முழுவதையும் தான் பார்வையிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த விவசாய கணவர் தன்னால் இயன்ற மட்டும் அந்த மாமியாரோடு தோழமையோடு இருக்க பார்த்தார். ஆனால் அவர்களோ, முரண்டு பண்ணி,  எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். தேவையில்லாத ஆலோசனைகளையும்  சொல்லி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அப்படியே பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள் கட்டியிருந்த லாயத்திற்கு வந்தார்கள். அப்போது ஒரு குதிரை அந்த மாமியாரின் தலையில் ஓங்கி எட்டி உதைத்ததால் அவர்கள் தலை உடைபட்டு, அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.

சிலநாட்கள் கழித்து,  நடந்த அடக்க ஆராதனையில் வந்த ஒவ்வொருவரிடமும் அந்த தம்பதியினர் பேசி கொண்டிருந்தனர், அப்போது,  அந்த அடக்க ஆராதனையை நடத்திய போதகர்,  அந்த கணவரிடம் யாராவது பெண் வந்து பேசினால்,  அவர் ஆம் என்பது போல தலையை ஆட்டி பேசுவதையும்,  யாராவது ஆண் வந்த பேசினால்,  இல்லை என்று தலையை ஆட்டி ஏதோ பேசுவதையும் வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்துவிட்டு,  மெதுவாக அந்த கணவரிடம் சென்று 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அப்போது அந்த கணவர், 'என்னிடம் பெண்கள், பாவம், என்ன ஒரு வருத்தமான செய்தி என்று சொல்லும்போது நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் ஆண்கள் வந்து என்னிடம் அந்த குதிரையை வாடகைக்கு கொடுக்க முடியுமா?  என்று கேட்டபோது,  அவர்களுக்கு இல்லை, ஒரு வருடத்திற்கு அந்த குதிரையை தொடர்ந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்'  என்று சொன்னார்.

கிறிஸ்தவ மாமியார் மருமகள் இடையே எந்த பிரச்சனையும் வர நாம் அனுமதிக்கக் கூடாது. எந்த நாத்தனார் பிரச்சனையும் வர நாம் அனுமதிக்க கூடாது. முடிந்தவரை சமாதானமாயிருக்க முயற்சிக்க வேண்டும். மாமியாருக்கு ஏற்ற கடமைகளை செய்யும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பது குடும்பத்திற்கு நல்லது. நிச்சயமாக நகோமி தன்னைவிட்டு பிரியாத அந்த மருமகளான ரூத்தை ஆசீர்வதித்திருப்பார்கள். அதனால் உலகமே புகழும் வணங்கும் தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவை தன் சந்ததியில் பெற்று பெரிய பாக்கியத்தை ரூத் பெற்றார்கள்.

சாது சுந்தர் சிங் - தியானங்கள்


'ஆன்மீக வாழ்க்கைத் தியானங்கள்என்ற புத்தகத்தில் சாது சுந்தர் சிங்  மூன்று வகையான கிறிஸ்தவர்களைக் குறித்து எழுதுகிறார்.  அவற்றை இன்று தியானிப்போம்.

ஞானி ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது வழியிலே மூன்று வகையான நபர்களை சந்திக்கிறார். 

அவர் சந்தித்த முதலாம் நபர் மிகவும் சோர்ந்து போனபவராய் பயத்தில் நடுங்கிக் கொண்டு காணப்பட்டார்.  அவர் அந்த கிறிஸ்தவரிடம் நீ ஏன் இப்படி காணப்படுகிறார் என்று வினவினார்.  அவன் 'நான் ஒருவேளை நரகத்திற்கு சென்றுவிடுவேனோ என்ற பயம் என்னை ஓயாமல் வாட்டுகிறது. என்றார்.  அதற்கு ஞானி, 'தேவ பயத்திற்கு பதிலாக பிசாசுக்கென்று ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நரகத்திற்கு பயப்படுகிறாயே உன் நிலை எவ்வளவு பரிதாபமானது நீ கர்த்தரை தேடுவது உண்மையானதல்ல நரகத்திற்கு தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஏதுவாகவே பார்க்கிறாய் என்றார். 

இரண்டாவது கிறிஸ்தவனை சந்தித்தார்.  அவனும் வருத்தத்துடன் காணப்பட்டான்.  ஞானி காரணம் கேட்டதற்கு 'மோட்சானந்தமும்இளைப்பாறுதலும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன் என்றான்.  அதற்கு ஞானி 'படைத்தவரின் ஆச்சரியத்தையும் அன்பையும் எண்ணாமல் மோட்சத்தை அடைய வேண்டுமென்று மட்டும் நீ தேவனை வணங்குவது வெட்கப்படத்தக்கது என்றார்.

பின்பு மிகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்த மூன்றாவது கிறிஸ்தவனைக் கண்டார்.  மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று அவனிடம் வினவியபோது 'என் இரட்சிப்பின் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறேன். அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்.  அவர் என்மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி எண்ணி வியந்து பூரிக்கிறேன்.  அதனால் என் இருதயம் எப்போதும் அவர் அன்பினாலும்பிரசன்னத்தினாலும் நிரம்பி என்னை ஆனந்த கிறிஸ்தவனாக மாற்றிற்று என்றான்.

மாவீரன் அலெக்ஸாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி அறியாதவர்கள் யாரும் சரித்திரம் படித்தவர்களாக இருக்க முடியாது. தனது இள வயதில் மேசிடோனியாவின் அரசனான அவர், உலகத்தையே தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தாகத்தோடு செயல்பட்டவர். பத்து வருடங்களில் உலகத்தை வென்று கொண்டே வந்தவர். அப்படி அவர் ஜெயித்து கொண்டே வந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் பேசும் மொழிகளை குறித்தும், அவர்களுடைய கலாச்சாரங்களை குறித்தும் அவர் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் வெற்றி எடுக்கும் நாடுகளில் எந்த மொழியில் பேசுவது, எப்படி செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அதன்படி, அவர் தான் வெற்றி கொள்ளும் நாடுகளில் காலனிகளை அமைத்து, அங்கு கிரேக்க கலாச்சாரங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.
 
இந்த காரியங்கள் தேவனால் நியமிக்கப்பட்டது என்ற அலெக்சாண்டருக்கு தெரியாது. அவர், தான் உலகத்தையே வென்று, எல்லாரையும் தன் காலின் கீழ் கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தார்.
தனது திட்டத்தின்படி காலனிகளில் அவர் கிரேக்க மொழியை கற்று கொடுக்க திட்டங்கள் தீட்டி, அதன்படி அவர் ஆட்களை கொண்டு அந்த இடங்களில் கிரேக்க மொழியை கற்று கொடுத்து, மக்கள் அதை பயில ஆரம்பித்தனர். அதனால் தான் செல்லும் இடங்களில் கிரேக்க மொழியில் பேச முடியும் என்பது அவர் எண்ணம். மட்டுமல்ல, அந்த நாடுகளில் முக்கிய பாதைகளையும் அவர் உண்டாக்க ஆரம்பித்தார். தான் பயணம் செல்லும்போது, தனக்கு வசதியாக இருக்கும் என்று காடுகளை வெட்டியும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளை இணைக்கும் பாதைகளை போட ஆரம்பித்தார். அவர் தான் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த காரியங்களை செய்தார். ஆனால் சர்வ ஞானியான நம் தேவன் அவற்றை குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார்.
அதன்படி, தனது 33 ஆவது வயதில் தான் மரிக்கும்முன், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான முக்கிய இரண்டு பணிகளை அவர் செய்து முடித்திருந்தார். அதாவது மொழி, மற்றும் நாடுகளுக்கு செல்வதற்கான சரியான பாதைகள்! கிறிஸ்துவுக்கு முன் 356 ஆம் ஆண்டு பிறந்த அவர், ராஜாதி ராஜாவின் சுவிசேஷம் பரவுவதற்கான பாதையை செம்மையாக்கினவராய் மாறினார். அவர் தான் செய்வது எதற்காக என்று அறியாதபடி செய்தார். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அவற்றை தமது குமாரனை உலகத்திற்கு அனுப்புவதற்கான நோக்கத்தை உலக மக்கள் அறியும்படியாக அதை தமக்கு சாதகமாக்கினார்.

Thursday, October 11, 2012

ஞானமற்றவர்களைப்போல நடவாமல்

1887-ம் வருடம் இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன் பணியாளிடம் 20 டாலரை கொடுத்துகாய்கறி வாங்கி வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டுஅந்த 20 டாலர் பணத்தைகடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த போதுஅதை வாங்கிய பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்றுஇந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று. ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும்ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு,  திரும்ப அந்த நோட்டை பார்த்தபோதுஅதிலிருந்த மை கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லிஅவர்கள் இம்மானுவேலின் வீட்டை பரிசோதித்தபோதுவீட்டின் மேல் அட்டிகையில்அவர் கள்ள நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது. அப்படியிருக்கும்போதுஅவர் இந்த 20 ரூபாய் நோட்டை கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு காரியம் என்றால்அவர் 20 டாலர் நோட்டை வரைவதற்கும்அந்த 16,000 டாலர் படத்தை வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.

ஏம்பா! உங்க ஆசைக்கு அளவே இல்லயா?

இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து,   'ஏன் என்ன ஆயிற்று'  என்று கேட்டார். அப்போது மற்றவர்,  'உனக்கு தெரியுமா,  மூன்று வாரத்திற்கு முன் என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு போனார்' என்று கூறினார். அப்போது மற்றவர், 'சந்தோஷமான செய்திதானே'  என்றபோது, அவர்,  'இன்னும் கேள், இரண்டு வாரத்திற்கு முன்,  எனக்கே தெரியாத ஒரு உறவினர் என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறார்' என்றதும், 'அடேயப்பா, இன்னும் ஏன் சோகமாய் இருக்கிறாய்'   என்றதற்கு, அவர் 'இந்த வாரம் யாரும் மரித்து என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையே' என்று கூறினார்.

ஐயோ சாரி!!!

மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர் கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள்உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும்மிளகுபொடி  இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே என்ன செய்வது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டிஅதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம்இப்;படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண் 'ஐயோ சாரி! மன்னியுங்கள்என்று சொல்லி விட்டுமிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்துஉப்பு பாட்டிலிலும்உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.

எப்படிப்பட்ட ஆடையணிய வேண்டும்????

பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் 'உன் சுடிதார் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன் என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து கொள். ஒரு நாள் இயேசு உனக்கு போன் பண்ணி என்னுடைய வீட்டிற்கு வா என்று சொல்கிறார். நாம் இருவரும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்கிறார். அவருடன் செல்ல நீ எவ்வித ஆடையணிவாயோ அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடையணி' என்றார். அதை தொடர்ந்து அவர் கூறியதாவது,
.
'நீங்கள் எப்படிப்பட்ட ஆடையணிந்து இயேசுவை பார்க்க முடியுமோ அப்படிப்பட்ட ஆடையே அணியுங்கள். இயேசுவோடு நடக்கும்போது இப்படிப்பட்ட ஆடையை அணியக்கூடாது என்று உங்கள் மனச்சாட்சி உறுத்துமென்றால் அப்படிப்பட்டதை அணிய வேண்டாம். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? மகளே, நீ சபைக்கு போகும்போது தகுதியாக ஆடை அணிந்து கொள், வேலைக்கு போகும்போது நீ விரும்பியபடி ஆடை அணி என்கின்றனர். இதற்கு என்ன பொருள்? வேலைக்கு போகும்போது இயேசு உன்னுடன் வருவாரா என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை என்பதுதானே! வேலைக்கு போகும்போது இயேசு உன்னுடன் வர வேண்டாமா?' என கூறினார்.

Wednesday, October 10, 2012

உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஒரு காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. அந்த யானை எப்பொழுதும் மற்ற பறவைகளோடும், மிருகங்களோடும் தன்னை ஒப்பிட்டு பார்த்து, மனம் சோர்ந்து போகும். அதன் முகம் கவலையினாலும் துக்கத்தினாலும் நிறைந்திருக்கும். ஒரு நாள் சிட்டுக்குருவி உயர எழுந்து பறந்து போவதை பார்த்தவுடன் அந்த யானைக்கு தாங்க முடியாத துயரம் வந்து விட்டது, 'எனக்கு சிறகுகள் இல்லையே, ஆகாயத்தில் பறப்பதற்கு' என்று தேம்பி தேம்பி அழுதது. உணவு சாப்பிடக்கூட விருப்பமில்லை.
.
அங்கே ஒரு அருமையான நைட்டிங்கேல் பறவை இனிமையாக பாடிக் கொண்டிருந்தது. யானைக்கு
இன்னும் கவலை அதிகரித்து விட்டது. 'இந்த பறவைகளெல்லாம் இவ்வளவு அழகாக பாடுகிறதே எனக்கு மட்டும் பாடுகிற தாலந்தை தரவில்லையே, கடவுள் ஓர வஞ்சனை செய்து விட்டாரே' என்று தேம்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் ஒரு வண்ணத்துப்பூச்சி அழகாக மலரின் மேல் அமர்ந்த தேனை உறிஞ்சி சுவைத்து கொண்டிருந்தது. யானை அதை கண்டதும் 'வண்ணத்துப்பூச்சுக்கு மட்டும் தேவன் சுவையான உணவை கொடுத்திருக்கிறார். ஆனால் நானோ சுவையற்ற மரங்களையும், இலைகளையும் சாப்பிட்டு காலத்தை தள்ளி கொண்டு இருக்கிறேனே' என்று புலம்பியது.
.
புள்ளி மான்கள் துள்ளி ஓடுவதை யானை கண்டவுடன் 'ஐயோ அழகிய புள்ளி மான்களின் நிறம் எனக்கு இல்லையே, வேகமாய் ஓட மெல்லிய கால்கள் இல்லையே' என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்தியது. அங்கே எறும்புகள் பூமிக்கடியில் சென்று வருவதை பார்த்து தனக்கு பூமிக்கு அடியில் சென்று வர வழியில்லையே எனறு அழுது கொண்டே இருந்தது. கடைசியில் அந்த யானை மிகவும் மெலிந்து பெவீனப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. அப்பொழுது காட்டிலுள்ள மிருகங்களும், பறவைகளும் அந்த யானையிடம் வந்து 'யானையாரே, கர்த்தர் உங்களுக்கு எவ்வளவு வல்லமையும், பெலனையும் தந்திருக்கிறார். எவ்வளவு வலிமையான பெரிய கால்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, தந்தம் எவ்வளவு விலையேற பெற்றது, சிருஷ்டிப்பிலே நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எண்ணி பாருங்கள். உங்களை குறித்து 'யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்களே' என்று தேற்றின. அப்போழுதுதான் கர்த்தர் தனக்கு கொடுத்த மேன்மையை அந்த யானை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தது. கர்த்தருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தது.

தாயார் ஒரு ஜெப வீராங்கனை

சீனாவில் எழுப்புதலுக்கு காரணமாயிருந்த ஹட்சன் டெய்லர் என்ற ஊழியரை  குறித்து அநேகருக்கு தெரியும். அவருக்கு ஜெபிக்கும் தாயார் இருந்தார் என்றும், அவர்களுடைய ஜெபத்தினால் அவர் இரட்சிக்கப்பட்டார் என்றும் ஒருவேளை நாம் அறிந்திருக்கலாம். அந்த முழு சம்பவமும் நாம் அறிந்திருப்பது நமது குடும்பங்களையும் தேவன் ஆசீர்வதிப்பதற்கு ஏதுவாக அமையும்.ஹட்சனின் தாயார் ஒரு ஜெப வீராங்கனை. அவர்கள் எப்போதும் ஹட்சன் ஒரு பெரிய தேவ ஊழியராக வேண்டும் என்று ஜெபித்து வந்தார்கள். ஆனால் ஹட்சன் தனது 15ஆவது வயதில் ஒரு பேங்கில் வேலைக்கு சேர்ந்து, ஜெபிக்க மறந்து, கிறிஸ்தவர்களை கேலி கிண்டல் செய்து, தேவனற்றவராகவே வாழ்ந்து வந்தார். அது அவருடைய தாயாருக்கு மிகவும் வருத்தமாகவே இருந்து வந்தது. ஹட்சனுக்கு இரண்டு வயது இளைய சகோதரி அமிலியா இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் ஹட்சனை குறித்து அவர் இரட்சிக்கப்பட வேண்டுமே என்ற பாரம் இருந்தது. தொடர்ந்து அவர்களும் ஜெபித்து வந்தார்கள்.
.
ஒரு முறை ஹட்சனின் தாயார் அவர்களுடைய தோழியை சந்திக்க 70 மைல் தூரம் கடந்து செல்ல வேண்டி வந்தது. அவர்கள் போய் சேர்ந்த அன்று மதியம் அவர்களுடைய உள்ளத்தில் ஹட்சனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று உந்துதல் பெற்றார்கள். உடனே அவர்கள் உள்ளே சென்று, கதவை தாழிட்டு, கர்த்தரிடம் ஹட்சனுக்காக மன்றாட தொடங்கினார்கள். ஆத்தனை தூரத்தில் தன் மகன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்று அறியாதவர்களாக, அவனுக்காக ஊக்கமாய் ஜெபித்து கொண்டிருந்தார்கள்.
.
அதே மதிய வேளையில் ஹட்சன் அந்த நாளில் அவருக்கு வேலை இல்லாமல் விடுமுறை தினமாக இருந்தபடியால், தன் தகப்பனின் அறைக்குள் சென்று ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தேட சென்றார். அப்பொழுது அவருக்கு 'எல்லாம் முடிந்தது' என்ற கிறிஸ்தவ கைப்பிரதி கிடைத்தது. அதை படிக்க ஆரம்பித்த ஹட்சனோடு ஆவியானவர் இடைபட ஆரம்பித்தார். தேவனாலே அன்றி தன்னால் எதையும் செய்ய முடியாதென்றும், தேவனை தன் முழு இருதயத்தோடும் நேசிக்கவும், விசுவாசிக்கவும் மாத்திரமே செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்தவராக, அப்போதே அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணித்தார். தன் பாவங்களை அறிக்கையிட்டு, புது மனிதனாக வெளிவந்தார்.
.
அவருடைய தாயார் ஜெபித்த அதே மதிய வேளையில் தானே இந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த தாயார் ஜெபித்து முடித்து, தேவன் தன் ஜெபத்தை கேட்டார் என்ற உறுதியுடன் கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்கள்.
.
ஹட்சன் தன் புதிய அனுபவத்தை தன் சகோதரி அமிலியாவிடம் சொல்லி, 'அம்மாவிற்கு இப்போது இதை தெரியப்படுத்தாதே, அவர்கள் வரும்போது நானே அவர்களிடம் சொல்வேன்' என்று கூறினார். சகோதரியும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவன் தன் சகோதரனை சந்தித்ததற்காக அவரை துதித்தார்கள்.
.
இரண்டு வாரம் கழித்து அவருடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஹட்சன் அவர்களுக்கு எதிர்கொண்டோடி வரவேற்றார். அவர் எதுவும் சொல்ல ஆரம்பிக்கிறதற்கு முன்பே அவருடைய தாயார், 'மகனே எனக்கு தெரியும், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று. நான் ஏற்கனவே கர்த்தருக்கு அதற்காக நன்றி செலுத்தி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். ஹட்சனுக்கு புரியவில்லை, ஒருவேளை அமிலியாதான் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து, 'அமிலியா உங்களுக்கு தெரிவித்தாளா?' என்று கேட்டார். அதற்கு தாயார், 'இல்லை, தேவனே என் இருதயத்தில் நீ இரட்சிக்கப்பட்ட அன்று மதியமே எனக்கு கூறினார்' என்று சொன்னார்கள். 'நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 23:23). ஆமென்.

Monday, October 8, 2012

நாம் எதற்காக மரிக்க இருக்கிறோம்?

பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது.
.
கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: 'கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் கட்சிக்கு கொடுத்து விடுகிறோம். பொழுதுபோக்குகளாகிய படம், கச்சேரி, நடனம், ஆகியவற்றிற்கு செல்ல நேரமோ, பணமோ எங்களுக்கு கிடையாது. உலகம் முழுவதும் கம்யூனிச (கடவுள் இல்லை என்கிற கொள்கை) மயமாக்க வேண்டுமென்பதே எங்கள் ஒரே இலட்சியம். கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது. அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு நோக்கமும், இலட்சியமும் உண்டு. அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எங்கள் ஆசா பாசங்களை அடக்கி கட்டுப்படுத்துகிறோம். நான் என் உயிரினும் மேலாக வாஞ்சிப்பது என் கட்சி கொள்கையின் வளர்ச்சியையே. அதன் முன் என் உணவு எல்லாம் பெரிதாக தோன்றவில்லை. என் கொள்கையின் மீதுள்ள என் பிடி நாளுக்கு நாள் இறுகுகிறதே அன்றி தளருவதில்லை. நான் இப்போதே சிறைவாசம் செல்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை பலியாக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் ஆகவே எனனை மறந்து விடு' என எழுதியிருந்தான். அதை பில்லிகிரஹாம் படித்த போது பல கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் சூடேறியது.
.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கும், உயிரை பணயம் வைப்பதற்கும் வைராக்கியமாய் இருப்பார்களானால், கிறிஸ்தவர்களாகிய நாம் மகிமையின் ஆண்டவருக்காய் எவ்வளவு அதிக அன்புடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்! கிறிஸ்துவின் மீது வாஞ்சையுள்ள ஒரு மனிதனின் நோக்கமெல்லாம் ஒன்றே, அது தேவனை பிரியப்படுத்துவதுதான். அவன் இருந்தாலும், இறந்தாலும், சுகமாய் இருந்தாலும், சுகவீனமாய் இருந்தாலும், பணக்காரனாயினும், ஏழையாயினும், புகழப்பட்டாலும், இகழப்பட்டாலும், கனமடைந்தாலும், கனவீனமடைந்தாலும் எதை குறித்தும் கவலைப்படாமல், ஒன்றிற்காக மட்டும் அவன் நெருப்பாய் எரிவான். அது தேவனை பிரியப்படுத்தி, அவரது மகிமையை வளர செய்வதே ஆகும். எரிந்து  பிரகாசிக்கையில் சாம்பலாகி விட்டாலும், பரவாயில்லை, அதுதான் அவன் செய்து முடிக்கும்படி தேவன் அவனுக்கு நியமித்த வேலை என்று அறிந்து மகிழ்ச்சியடையவான்.
.

Sunday, October 7, 2012

கோதுமை மணி

போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்படடு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் என்னும் புத்தகத்தை வைத்து, அநேக மூடநம்பிக்கைகளுக்குள் நடத்தி இருக்கிறீர். இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும். மறுதலித்தால் நீரும் உம்முடைய குடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர்.
.
அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் சாவதை விரும்பவில்லை’ என்று கதற ஆரம்பித்தனர். அதை கேட்ட தகப்பனின் இருதயம் கரைந்தது. தன் இரு கைகளையும் தூக்கி, ‘நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையை .. என்று ஆரம்பித்தபோது, பக்கத்திலிருந்த அவரது மனைவி, ‘அப்பா, நீங்கள் கர்த்தரை மறுதலிக்காதீர்கள்!’ என்று கூறிவிட்டு, பிள்ளைகளிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இன்று இரவு நாம் அனைவரும் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் விருந்து சாப்பிடப் போகிறோம்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்கள். பின், ‘In the sweet by and by’ என்னும் பாடலை பாட ஆரம்பித்தார்கள். போதகரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து பாட, கம்யூனிசவாதிகள் அவர்கள் மேல் மண்ணை போட ஆரம்பித்தார்கள். மண் அவர்களுடைய கழுத்தளவு வரும்வரை
அவர்கள் பாடினார்கள். அப்படியே அவர்கள் குடும்பமாக மறுமைக்கு கடந்து சென்றார்கள். அந்நேரத்தில் தேவன் அவர்களை விடுவிக்கவில்லை. ஆனால், அதை பார்த்து கொண்டிருந்த அத்தனை பேரும் அவர்கள் முகத்திலிருந்த ஒளியை கண்டு கிறிஸ்தவர்களாக மாறினர்.
.
‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:24:25)

Friday, October 5, 2012

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

டேல் கேலோவேய் (Dale Galloway) என்பவர் தாம் எழுதிய புத்தகத்தில்ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் அவர் ஆலயத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெரிய ஆலயத்தின் ஒரு திறந்த ஜன்னல் வழியாக ஒரு சிறு பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக அந்த பறவை பறந்து திரிந்தது. பின்னர்சற்று நேரம் கழித்துஅது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியை தேடியது. சற்று தாழ்வாக வந்துபோதுஅந்த சகோதரன் அதை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது.

அவர் அந்த பறவை பறந்த இடத்திற்கெல்லாம்கூடவே சென்றார். ஆனால் அந்த பறவை அவர் கைகளில் சிக்காமல்தானே வெளியே போக வழியை தேடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வர்ணமிட்ட கண்ணாடி ஜன்னலில்அதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து,  அங்கு போய் மேலே வேகமாக மோதியபோதுஅடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த அந்த சகோதரன் நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால்நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால் நீயோ என் கையில் வராமல் உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய் கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்து இப்போது என் கையில் கிடைத்திருக்கிறாய்’  எனக் கூறி ஜன்னலை திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்துவிடுதலையோடு பறந்து சென்றது.
அப்போது அவர் சில வருடங்களுக்கு முன் தான் எப்படி உடைந்து போனவராக குழப்பம் நிறைந்தவராக என்ன செய்வது எங்கே செல்வது என்று திகைத்திருந்த வேளையில் கர்த்தரின் கரத்தில் விழுந்தபோதுஅவர் அவருடைய இருதயத்தின் புண்களை காயம் கட்டிஅவரை பாவத்திலிருந்து விடுதலையாக்கிஅவர் அறியாத உயரத்தில் கொண்டுபோய் விட்ட தயவை நினைத்து கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்.

நீங்கள் விசேஷித்தவர்கள்

சாலையோரத்தில் இருந்து மரமொன்றில் இரண்டு அடைக்கலான் குருவிகள் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தன. ஒன்று கேட்டது ஏன் இந்த மக்கள் கூட்டம் எப்போதும் கவலையோடே அங்கும் இங்கும் அலைகிறார்கள்? எனக்கொன்றும் புரியவில்லை’  என்றது. மற்றொன்று கூறியது உன்னையும்  என்னையும் மறக்காமல் அனுதினமும் பிழைப்பூட்ட ஒரு பரமபிதா இருப்பது போல இவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் இப்படி கவலையோடு இருக்கிறார்கள்’  என்றது. இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மரத்தாலும் அமைதியாய் இருக்க முடியவில்லை. அதுவும உரையாடலின் இடையில் இணைந்து கொண்டது குருவி நண்பர்களே! நானும் பல வருஷமா இதே இடத்தில் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்கள் தேவையில்லாததற்கெல்லாம் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது. என்னையும்கீழே இருக்கிற குட்டி புல்பூண்டுகளையுமே அழகா உடுத்துவிக்கிறவர் இவர்கள் தேவையை சந்திக்க மாட்டாரா என்ன?  இவர்கள் நம்மைப் போல கடவுளை நம்ப மாட்டார்களோ என்னவோ’  என்றது. பார்த்தா அப்படித்தான் தெரியுது’  என்று சொல்லி எல்லாம் சிரித்தன. குருவிகள் மரத்திடம் விடைபெற்றுக் கொண்டு தேவனால் தங்களுக்கு ஆயத்தமாக்கப்பட்ட உணவை உண்ண பறந்து சென்றன.

சின்ன சின்ன காரியங்களிலும் உண்மை - Billy Graham

உலகப்புகழ் பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரஹாமின் மகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் தந்தை ஒரு சின்ன ஆலயத்திற்கு போதகராயிருந்தும் எப்படி உலகளவில் பெரிய சுவிசேஷகராக மாறினார்?  என்பதே அந்த கேள்வி.  பில்லிகிரஹாமின் மகன் சொன்ன பதில், ‘என் தந்தை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே வீட்டிலும் இருப்பார். சின்ன சின்ன காரியங்களிலும் அவரிடம் காணபட்ட உண்மையே இந்த உயர்வுக்கு காரணம்’  என்றாராம்.

மற்றவர்களை குறைசொல்லுதல்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர்குமாரிடம் வீட்டு வேலை (home work) நோட்டை கொண்டு வரச் சொன்னார். அவன் சொன்னான், 'ஐயா நான் செய்யவில்லைஎன்று. ஆசிரியர் கேட்டார்ஏன் செய்யவில்லை என்றுஅப்போது அவன் சொன்னான், 'எங்கள் வீட்டு டெலிவிஷன் மிகவும் சத்தமாயிருந்தபடியால்என்னால் நீங்கள் கொடுத்த வேலையை செய்ய முடியவில்லைஎன்று சொன்னான். அப்போது ஆசிரியர்,  'ஏன்நீ யாரிடமாவது சத்தத்தை குறைக்க சொல்லியிருக்கலாமேஎன்று சொன்னபோது, 'யாரும் அப்போது வீட்டில் இல்லை ஐயாஎன்று பதிலளித்தான்

கவன குறைவு

ஒரு ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் கேர் வார்டில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 11 மணிக்கு ஒரு படுக்கையில் இருந்த நோயாளிகள் மரித்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான நோயாயிருந்தாலும் அந்த படுக்கையில் வருகிற ஒவ்வொருவரும் மரித்தனர். இது ஒரு மாதத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தது. யாருக்கும் புரியவில்லை,  ஏன் அந்த நேரத்தில் அப்படி நடக்கிறது என்று.
    
ஆகவே உலக அளவில் சிறந்த ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களும்எல்லா டாக்டர்களும் நர்சுகளும் அந்த வார்டிற்கு முன்பு கூடியிருந்தனர். எப்படியாவது இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என உறுதியுடன் எல்லாரும் அமைதியாக காத்திருந்தனர். சிலர் சிலுவைகளையும்வேத புத்தகத்தையும் ஒருவேளை பிசாசின் தந்திரமாய் இருந்தால் அதை விரட்ட வேண்டும் என்று நினைத்து தயாராக காத்திருந்தனர்.

சரியாக 11 மணியானதுஎல்லாரும் என்ன நடக்குமோ என்று காத்திருந்த போதுஅந்த வார்டை சுத்தம் செய்கிற கிளீனர் வந்து அந்த படுக்கையில் இருந்த நோயாளி சுவாசிக்கிற மெஷினின் பிளக்கை பிடுங்கி விட்டுதன் மெஷினின் பிளக்கை சொருகி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

இந்த கதை ஒருவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்,  ஆனால்இது வெளிப்படுத்தும் ஒரு கருத்து சக்தி இல்லாவிட்டால்அதன் முடிவு மரணமே!

ஏழு அதிசயங்கள்

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை தன் மாணவிகளிடம் இன்று உலகத்தின் காணப்படும் ஏழு அதிசயங்களை குறித்த எழுதும்படி சொன்னார்கள். ஒவ்வொரு பிள்ளையும் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் உலகின் ஏழு அதிசயங்களையும் தாஜ்மகால் சீன சுவர்எகிப்தின் பிரமீடுகள்..  என்று எழுத ஆரம்பித்தார்கள். எல்லாரும் எழுதி கொடுத்தபின்னும் ஒரு மாணவி மாத்திரம் தரவில்லை. ஆசிரியை அந்த மாணவியிடம் சென்று 'ஏன் இன்னும் முடிக்கவில்லை என்று கேட்டபோது அவள் சொன்னாள் 'அவை மிகவும் அதிகமாய் இருப்பதால் என்னால் எழுதி முடிக்க முடியவில்லைஎன்று சொன்னாள். அப்போது ஆசிரியை கேட்டார்கள்,  'நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம் சொல்என்று சொன்னார்கள். அப்போது அவள் சொன்னாள், 'நான் நினைக்கிறேன்உலகின் ஏழு அதிசயங்கள் நம்மால் காண முடிவது நம்மால் உணர முடிவது கேட்க முடிவது தொட முடிவது சிரிக்க முடிவது,  ருசிக்க முடிவது அன்பு கூற முடிவது என்று நினைக்கிறேன் என்று கூறினாள். அது எவ்வளவு உண்மை!