புதிதாய் திருமணமான தன் மகளை பார்க்க ஒரு தாய் அவர்கள் தங்கியிருந்த பண்ணைக்கு சென்றிருந்தார்கள். போனவுடனே, அந்த
இடம் முழுவதையும் தான் பார்வையிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த
விவசாய கணவர் தன்னால் இயன்ற மட்டும் அந்த மாமியாரோடு தோழமையோடு இருக்க
பார்த்தார். ஆனால் அவர்களோ, முரண்டு பண்ணி, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். தேவையில்லாத ஆலோசனைகளையும் சொல்லி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அப்படியே பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள்
கட்டியிருந்த லாயத்திற்கு வந்தார்கள். அப்போது ஒரு குதிரை அந்த மாமியாரின்
தலையில் ஓங்கி எட்டி உதைத்ததால் அவர்கள் தலை உடைபட்டு, அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.
சிலநாட்கள் கழித்து, நடந்த அடக்க ஆராதனையில் வந்த ஒவ்வொருவரிடமும் அந்த தம்பதியினர் பேசி கொண்டிருந்தனர், அப்போது, அந்த அடக்க ஆராதனையை நடத்திய போதகர், அந்த கணவரிடம் யாராவது பெண் வந்து பேசினால், அவர் ஆம் என்பது போல தலையை ஆட்டி பேசுவதையும், யாராவது ஆண் வந்த பேசினால், இல்லை என்று தலையை ஆட்டி ஏதோ பேசுவதையும் வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்துவிட்டு, மெதுவாக அந்த கணவரிடம் சென்று 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அப்போது அந்த கணவர், 'என்னிடம் பெண்கள், பாவம், என்ன
ஒரு வருத்தமான செய்தி என்று சொல்லும்போது நான் ஆம் என்று சொன்னேன். ஆனால்
ஆண்கள் வந்து என்னிடம் அந்த குதிரையை வாடகைக்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டபோது, அவர்களுக்கு இல்லை, ஒரு வருடத்திற்கு அந்த குதிரையை தொடர்ந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்' என்று சொன்னார்.
கிறிஸ்தவ
மாமியார் மருமகள் இடையே எந்த பிரச்சனையும் வர நாம் அனுமதிக்கக் கூடாது.
எந்த நாத்தனார் பிரச்சனையும் வர நாம் அனுமதிக்க கூடாது. முடிந்தவரை
சமாதானமாயிருக்க முயற்சிக்க வேண்டும். மாமியாருக்கு ஏற்ற கடமைகளை
செய்யும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பது குடும்பத்திற்கு
நல்லது. நிச்சயமாக நகோமி தன்னைவிட்டு பிரியாத அந்த மருமகளான ரூத்தை
ஆசீர்வதித்திருப்பார்கள். அதனால் உலகமே புகழும் வணங்கும் தெய்வமாகிய
இயேசுகிறிஸ்துவை தன் சந்ததியில் பெற்று பெரிய பாக்கியத்தை ரூத்
பெற்றார்கள்.
No comments:
Post a Comment