1850 ஜனவரி 6ஆம்
தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. புனிப்புயலில் சிக்கிய
வாலிபனொருவன் தன்னை காத்துக் கொள்ள அருகிலிருந்த ஆலயத்திற்குள் ஓடினான்.
அங்கு மாலை ஆராதனை நடந்து கொண்டிருநதது. அன்று போதகர் இல்லாததால் சபை
அங்கத்தினரான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்தி கொண்டிருந்தார். அவர் செய்தியளிக்க ஆரம்பித்தார். அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்ன காரியம், 'என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்' என்பதே.
பனிப்புயலுக்கு தப்ப ஓடி வந்த வாலிபன் கதவுக்கு பின்புறமாக நின்று
கொண்டிருந்தான். அவனுக்கு செய்தியை கேட்க எந்த விருப்பமும் இல்லை.
தையல்காரர் பிரசங்க பீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி, 'வாலிபனே இயேசுவை நோக்கிப்பார்' என்று கூறினார். அவர் படித்தவருமல்ல, பிரசங்கியாருமல்ல, மிக
சாதாரண மனிதர்தான். ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய் வல்லமையோடு
அசாதாரணமாக பிரசங்கித்தார். அநேகர் இருந்த அந்த இடத்தில் குறிப்பாய் தன்னை
பார்த்து சொன்ன அந்த செய்தி அந்த வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை
நோக்கி பார் என்ற சத்தம் அவனுடைய இருதயத்தில் தொனித்து கொண்டே இருந்தது. முடிவில் அவன் இயேசுவை நோக்கினான். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமா? அவர்தான் C. H. ஸ்பர்ஜன். (C. H. Spurgeon) பின் நாட்களில் பிரசங்க ஊழியத்தில் தேவனால் மிகவும் வல்லமையாக பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்று விளங்கினார்.
No comments:
Post a Comment