ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து, ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போது, விபத்தில்
சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி
இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால், இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.
அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன், பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறை, பெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு, அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இது பரலோகம், எல்லாமே இலவசம்' என்றார். பின்னர், அவர் அவர்களை சாப்பிடும் இடத்திற்க்கு கூட்டி சென்றபோது, அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு, 'நான் எவ்வளவு சாப்பிடலாம்' என்று கேட்டார், அப்போது பரி.பேதுரு, 'நான் தான் சொன்னேனே, இது பரலோகம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், கணக்கே இல்லை' என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை, சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?' என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது, கொலஸ்ட்ராலும் பெருகாது, எந்த வியாதியும வராது' என்று கூறினார்.
அதை கேட்ட கணவர், மிகவும் கோபமுற்றவராக, தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு, மிதித்து, காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி 'என்ன என்னவாயிற்று' என்று கேட்டபோது, அவர் கோபமாக, தன் மனைவியை பார்த்து, 'எல்லாம் உன்னால் வந்தது, நீ மட்டும் அந்த சாலட்டையும், கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால், பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்' என்று கூறினார்.
நாம்
மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது
நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம்
காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய்
பற்றி கொண்டிருப்பதால், கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.
No comments:
Post a Comment