ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை தன் மாணவிகளிடம், இன்று உலகத்தின் காணப்படும் ஏழு அதிசயங்களை குறித்த எழுதும்படி சொன்னார்கள். ஒவ்வொரு பிள்ளையும் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் உலகின் ஏழு அதிசயங்களையும் தாஜ்மகால், சீன சுவர், எகிப்தின் பிரமீடுகள்.. என்று எழுத ஆரம்பித்தார்கள். எல்லாரும் எழுதி கொடுத்தபின்னும், ஒரு மாணவி மாத்திரம் தரவில்லை. ஆசிரியை அந்த மாணவியிடம் சென்று 'ஏன் இன்னும் முடிக்கவில்லை' என்று கேட்டபோது, அவள் சொன்னாள், 'அவை மிகவும் அதிகமாய் இருப்பதால் என்னால் எழுதி முடிக்க முடியவில்லை' என்று சொன்னாள். அப்போது ஆசிரியை கேட்டார்கள், 'நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம் சொல்' என்று சொன்னார்கள். அப்போது அவள் சொன்னாள், 'நான் நினைக்கிறேன், உலகின் ஏழு அதிசயங்கள், நம்மால் காண முடிவது, நம்மால் உணர முடிவது, கேட்க முடிவது, தொட முடிவது, சிரிக்க முடிவது, ருசிக்க முடிவது, அன்பு கூற முடிவது என்று நினைக்கிறேன்' என்று கூறினாள். அது எவ்வளவு உண்மை!
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment