எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Thursday, October 11, 2012
ஐயோ சாரி!!!
மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
அவர்களுடைய I.Q.
140 க்கு மேல் இருக்கும்.
சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள்.
அவர்களில் சிலர், கூட்டம் முடிந்தபிறகு
சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள், உப்பு இருந்த பாட்டிலில்
மிளகு பொடியும், மிளகுபொடி இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை
கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே, என்ன செய்வது என்று
யோசித்து, யோசித்து, கடைசியில் ஒரு முடிவுக்கு
வந்தார்கள். அதன்படி, ஒரு பேப்பர் டவலில் உப்பை
கொட்டி, அதை மாற்றுவது என்று
முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம், இப்;படி பாட்டில்கள் மாறி
இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண், 'ஐயோ சாரி!
மன்னியுங்கள்' என்று சொல்லி
விட்டு, மிளகு பொடியில் இருந்த
மூடியை எடுத்து, உப்பு
பாட்டிலிலும், உப்பில் இருந்த மூடியை
எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த
அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment