ஒரு ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் கேர் வார்டில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 11 மணிக்கு
ஒரு படுக்கையில் இருந்த நோயாளிகள் மரித்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு
எந்த விதமான நோயாயிருந்தாலும் அந்த படுக்கையில் வருகிற ஒவ்வொருவரும்
மரித்தனர். இது ஒரு மாதத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தது. யாருக்கும்
புரியவில்லை, ஏன் அந்த நேரத்தில் அப்படி நடக்கிறது என்று.
ஆகவே உலக அளவில் சிறந்த ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களும், எல்லா
டாக்டர்களும் நர்சுகளும் அந்த வார்டிற்கு முன்பு கூடியிருந்தனர்.
எப்படியாவது இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என உறுதியுடன் எல்லாரும்
அமைதியாக காத்திருந்தனர். சிலர் சிலுவைகளையும், வேத புத்தகத்தையும் ஒருவேளை பிசாசின் தந்திரமாய் இருந்தால் அதை விரட்ட வேண்டும் என்று நினைத்து தயாராக காத்திருந்தனர்.
சரியாக 11 மணியானது, எல்லாரும் என்ன நடக்குமோ என்று காத்திருந்த போது, அந்த வார்டை சுத்தம் செய்கிற கிளீனர் வந்து அந்த படுக்கையில் இருந்த நோயாளி சுவாசிக்கிற மெஷினின் பிளக்கை பிடுங்கி விட்டு, தன் மெஷினின் பிளக்கை சொருகி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
No comments:
Post a Comment