Thursday, October 18, 2012

சாது சுந்தர் சிங் - தியானங்கள்


'ஆன்மீக வாழ்க்கைத் தியானங்கள்என்ற புத்தகத்தில் சாது சுந்தர் சிங்  மூன்று வகையான கிறிஸ்தவர்களைக் குறித்து எழுதுகிறார்.  அவற்றை இன்று தியானிப்போம்.

ஞானி ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது வழியிலே மூன்று வகையான நபர்களை சந்திக்கிறார். 

அவர் சந்தித்த முதலாம் நபர் மிகவும் சோர்ந்து போனபவராய் பயத்தில் நடுங்கிக் கொண்டு காணப்பட்டார்.  அவர் அந்த கிறிஸ்தவரிடம் நீ ஏன் இப்படி காணப்படுகிறார் என்று வினவினார்.  அவன் 'நான் ஒருவேளை நரகத்திற்கு சென்றுவிடுவேனோ என்ற பயம் என்னை ஓயாமல் வாட்டுகிறது. என்றார்.  அதற்கு ஞானி, 'தேவ பயத்திற்கு பதிலாக பிசாசுக்கென்று ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நரகத்திற்கு பயப்படுகிறாயே உன் நிலை எவ்வளவு பரிதாபமானது நீ கர்த்தரை தேடுவது உண்மையானதல்ல நரகத்திற்கு தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஏதுவாகவே பார்க்கிறாய் என்றார். 

இரண்டாவது கிறிஸ்தவனை சந்தித்தார்.  அவனும் வருத்தத்துடன் காணப்பட்டான்.  ஞானி காரணம் கேட்டதற்கு 'மோட்சானந்தமும்இளைப்பாறுதலும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன் என்றான்.  அதற்கு ஞானி 'படைத்தவரின் ஆச்சரியத்தையும் அன்பையும் எண்ணாமல் மோட்சத்தை அடைய வேண்டுமென்று மட்டும் நீ தேவனை வணங்குவது வெட்கப்படத்தக்கது என்றார்.

பின்பு மிகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்த மூன்றாவது கிறிஸ்தவனைக் கண்டார்.  மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று அவனிடம் வினவியபோது 'என் இரட்சிப்பின் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறேன். அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்.  அவர் என்மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி எண்ணி வியந்து பூரிக்கிறேன்.  அதனால் என் இருதயம் எப்போதும் அவர் அன்பினாலும்பிரசன்னத்தினாலும் நிரம்பி என்னை ஆனந்த கிறிஸ்தவனாக மாற்றிற்று என்றான்.

3 comments:

  1. i wish this site,please sent more sadhu sudar singh Visions of The Spiritual World in tamil please sent me sadhupaulstephen@gmail.com

    ReplyDelete
  2. god bless your family and this site

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே,
      தங்கள் கருத்துகளுக்கும், வாழ்துதளுக்கும் மிகவும் நன்றி. நீங்கள் எங்கள் வலை தளத்தில் இணைந்து கொண்டீர்கள் என்றால் 'எனக்கு பிடித்த கதை'களை உடனடியாக பெற்று கொள்ளலாம். தொடர்ந்து இப்பகுதியில் வளம் வாருங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.

      Delete