அநேக
வருடங்களுக்கு பிறகு தன் மனைவி கர்ப்பவதியானது குறித்து ஒரு கம்பெனியில்
வேலை செய்யும் ஒரு மனிதர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் தன் கூட வேலை
செய்யும் சக ஊழியர்களிடம், 'என் மனைவி கர்ப்பம் தரித்திரிக்கிறாள். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டார்' என்று சந்தோஷத்தோடு சொன்னபோது, ஒரு சிலர் 'தேவனிடம் பிள்ளையை கேட்டீரோ' என்று அவரை பரிகசித்தனர்.
பிள்ளை பிறந்தபோது, அந்த பிள்ளைக்கு Down Syndrome என்னும் பிறப்பிலேயே காணப்படும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகப்பன், தன் விடுமுறை கழிந்து முதலாம் நாள் வேலையில் சேர்ந்துபோது, எப்படி தன் கூட வேலை செய்பவர்களை சந்திப்பது? கர்த்தரிடம் கேட்டு பெற்று கொண்ட பிள்ளையாயிற்றே, ஆனால் இப்படி குறையோடு பிற்நததை குறித்து கேலி செய்வார்களே என்று நினைத்தவராக, கர்த்தாவே எனக்கு அவர்களுக்கு பதில் சொல்ல நல்ல ஞானத்தை தாரும் என்று ஜெபித்தபடி தன் வேலையில் சேர்ந்தார். அவர் நினைத்தபடியே, ஒருவர் அவரிடம் வந்து, 'உனக்கு ஆண்டவர் இப்படிப்பட்ட பிள்ளையைதான் கொடுத்தாரா' என்று கிண்டலாக கேட்டார். அப்போது என்ன பதில் சொல்வது என்று திகைத்தவராக ஒரு சில நிமிடம் மௌனமாக ஜெபித்த அவர், பின் தைரியமாக, 'நல்லவேளை உனக்கு அப்படிப்பட்ட பிள்ளையை தேவன் கொடுக்காமல், எனக்கு கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன்' என்று கூறினார். இது உண்மையில் நடந்த சம்பவம்.
No comments:
Post a Comment