பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி
தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய
வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் 'உன் சுடிதார் இவ்வளவு
நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக
இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு
ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன்
என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து கொள். ஒரு நாள் இயேசு
உனக்கு போன் பண்ணி
என்னுடைய வீட்டிற்கு வா என்று சொல்கிறார். நாம் இருவரும்
ஒரு இடத்திற்கு
செல்ல வேண்டுமென்கிறார். அவருடன் செல்ல நீ எவ்வித ஆடையணிவாயோ
அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடையணி' என்றார். அதை
தொடர்ந்து அவர் கூறியதாவது,
.
'நீங்கள்
எப்படிப்பட்ட ஆடையணிந்து இயேசுவை பார்க்க முடியுமோ அப்படிப்பட்ட
ஆடையே அணியுங்கள். இயேசுவோடு நடக்கும்போது இப்படிப்பட்ட
ஆடையை அணியக்கூடாது என்று உங்கள் மனச்சாட்சி உறுத்துமென்றால் அப்படிப்பட்டதை அணிய வேண்டாம். சில பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? மகளே, நீ சபைக்கு
போகும்போது தகுதியாக ஆடை அணிந்து கொள், வேலைக்கு போகும்போது
நீ விரும்பியபடி ஆடை அணி என்கின்றனர். இதற்கு என்ன பொருள்?
வேலைக்கு போகும்போது இயேசு உன்னுடன் வருவாரா என்பதை பற்றி
எல்லாம் கவலையில்லை என்பதுதானே! வேலைக்கு போகும்போது
இயேசு உன்னுடன் வர வேண்டாமா?' என கூறினார்.
No comments:
Post a Comment